“ஆகாயத்தில் ஒரு ஒளி” என்ற வருங்கால தீர்க்கதரிசனத்தில் இன்று நாம் காணும் தீர்க்கதரிசனத்தின் 42-ம் பகுதி ஆகும். இந்த 42-ம் தீர்க்கதரிசனப் பகுதி இவ்வுலகில் நடக்க கூடிய முக்கிய நிகழ்வுகளின் ஒரு தொகுப்பு பகுதியாகும்.
வருங்காலம் என்பது கடந்து கொண்டு இருக்கும் நிகழ்காலத்தின் அடுத்த நிகழ்வுகளைப் பற்றி இங்கு அறிந்துகொள்ள வேண்டிய முக்கிய குறிப்புகளின் தொகுப்பே அதுவென்று 42-ம் தீர்க்கதரிசனம் கூறுகிறது. அந்த வகையில் இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் நிகழ்கால தாதாக்களாக உள்ள பயங்கரவாதிகளுக்கு இக்காலம் போதாத காலமென்றும், இறைவனின் நியாயத்தீர்ப்புகள் இவர்கள் மீது இறங்கிட உள்ளதாக 42-ம் தீர்க்கதரிசனம் ஒரு குறிப்பை தருகின்றது.
இங்கிலாந்து பகுதியில் ஒரு பயங்கர தாக்குதல் நிகழலாம் என்றும், அதன் முன்னெச்சரிக்கைகள் அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு தெரிந்திருப்பினும் அது நிகழக்கூடிய ஒரு சம்பவம் என்று 42-ம் தீர்க்கதரிசனம் ஒரு குறிப்பை தருகிறது. “கார்க்கஸ் நிகேவ்ஸ்” என்கிற சொல்லில் அது மறைந்துள்ள பகுதி என்று 42-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கு வெளிப்படுத்துகின்றது.
இறைக்கு எதிரான அரபு நாடுகளில் இறைவனின் தீர்க்கதரிசனங்கள் மெய்பட உள்ளதாகவும், அதன்படி அங்குள்ள ஜமாத்களில் ஒரு சில சம்பவங்களும் அதைத்தவிர பயங்கரமான விளைவுகளும் மனித இனத்தால் நடைபெற உள்ளதாக 42-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகிறது.
சுழலும் நிலையில் உள்ள ஒரு கட்டிடம் தீவிரவாத அமைப்புகளால் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும் என்றும், இந்த சம்பவத்தின் பிண்ணனியில் பல தீவிர அமைப்புகள் ஒன்றிணைந்து கூட்டு சதி செய்துள்ளதை அந்நாடு கண்டறியும் என்றும், இதற்கு உலக பாதுகாப்பு அமைச்சகம் தனது கண்டனத்தை முழுமையாக தெரிவிக்கும் என்றும், அச்சமயத்தில் அமெரிக்காவின் உளவு ஸ்தாபனம் உலகத்திற்கே ஒரு எச்சரிக்கையை செய்யும் என்றும், அதை கேட்கும் அனைத்து நாடுகளும் சற்று பீதிக்குள் உள்ளாகும் என்று 42-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தெரிவிக்கின்றது.
கடல் தேசத்து நாடுகளில் ஒரு சில நாடுகள் தங்களின் கடல் பயணத்தின்போது அதிசயமாக பல வண்ணங்களை கொண்ட மிதக்கும் வான் ஊர்திகளை காண்பார்கள் என்றும், இதனால் உலக நாடுகளுக்கு இடையே ஒரு வியப்பான செய்தி பரிமாற்ற தொடர்பு ஏற்படும் என்று 42-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது.
இந்திய வான் எல்லைப்பகுதியில் திடீரென்று ஒரு விமானம் பறந்து செல்லும் என்றும், அதனை விரட்டியடிக்கும் நிகழ்வு இந்திய தேசத்தில் நடக்கும் என்றும், அதன் அருகில் செல்லும்போதுதான் அது விமானம் அன்று, ஒரு பறக்கும் தட்டு என்று இந்திய மக்கள் அறிவார்கள் என்று 42-ம் தீர்க்கதரிசனம் ஒரு குறிப்பை தருகின்றது.
மக்கள் தேசத்தில் வாழும் ஒவ்வொரு இந்திய குடிமகனின் பங்கு இந்திய தேசத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று ஒவ்வொரு குடிமகனும் உணர வேண்டும் என்றும், இந்திய திபெத் எல்லைபகுதியில் இந்திய மக்களை கொண்டே சீன அரசு தனது எல்லை தாண்டிய ஊடுருவலை செய்ய ஆரம்பிக்கும் என்றும், இந்திய மண்ணை காக்க வேண்டிய நாம், அண்டை நாட்டுக்கு துணை போவதை இந்திய அரசு கண்டு திகைப்படையும் என்றும், இதனால் அங்கு ஒரு பதட்டமான சூழல் திடீரென்று ஏற்படும் என்றும், மக்கள் புரட்சி படை ஒன்றை சீன அரசு மறைமுகமாக உருவாக்கி வைத்திருப்பதை இந்திய இராணுவம் கண்டறிந்து திகைப்படையும் என்றும், அன்றுமுதல் இந்திய சீன எல்லையில் நமது பாதுகாப்பு பணிகள் தீவிரமடைய வேண்டும் என்றும் 42-ம் தீர்க்கதரிசனம் ஒரு குறிப்பை தீவிரப்படுத்துகிறது.
காலம் சென்ற ஒரு அரசியல்வாதியின் வாரிசு ஒருவர் பல கலவரங்களுக்கு முக்கிய காரணமாக தமிழகத்தில் இருப்பார் என்றும், அவரின் நடவடிக்கைகள் திகைப்பூட்டும் விதத்தில் இருக்கும் என்றும், நமது தமிழக அரசு அதனை கண்டறிந்து அவரை கைது செய்யும் ஒரு நிகழ்வு உடனே நடக்க உள்ளதாக 42-ம் தீர்க்கதரிசனம் ஒரு சிறப்பு குறிப்பை இங்கு தெரிவிக்கின்றது.
முறை தவறிய காதலால் ஏற்படும் பல்வேறு சம்பவங்கள் தற்போது தமிழகத்தில் அதிகமாக நடக்கும் என்றும், அதற்கு கலாச்சார சீர்கேடே காரணம் என்று பல்வேறு சமூக அமைப்புகள் அறை கூவல்விடும் சமயத்தில் தமிழகத்தில் அதிர்ச்சியான ஒரு சம்பவம் நடைபெறும் என்றும், இதனால் மக்களிடையே பயமும், அச்சமும் ஏற்படும் என்றும், இது ஒரு சாதாரண நிகழ்வாக இனி மக்கள் எடுத்துக்கொள்ளக் கூடாது என்று நீதித்துறை எச்சரிக்கை செய்யும் என்றும், அன்றுமுதல் பள்ளி, கல்லூரிகளில் புதுமையான, புரட்சியான ஒரு கட்டுபாட்டை தமிழக அரசு எடுக்கும் என்றும், இது மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெறும் என்று 42-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.
“மாமல்லபுரம்” கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய குறிப்பு என்றும், அதன் சுற்று வட்டார பகுதியில் இனி வினோத சம்பவங்கள் மக்கள் மத்தியில் நிகழும் என்றும் 42-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.
சேலம் ஊத்துமலையில் திடீரென்று ஒரு அதிசயம் நடைபெறும் என்றும், அதனை காண தமிழகம் மட்டுமின்றி பிற மாநில மக்களும் காணவரும் சமயத்தில் அதன் அருகே உள்ள மற்றொரு மலையில் தெய்வீக அதிசயம் ஒன்று உடனே நிகழும் என்றும், அதனை தொடர்ந்து சேலத்தில் உள்ள அனைத்து மலைகளிலும் தொடர்ச்சியாக பல அதிசயங்கள் நடக்கும் என்றும், இது அனைத்து ஊடகங்களிலும் முன்னணி செய்திகளாக இடம் பெறும் என்றும், இது முருகப்பெருமானின் அற்புதங்களாக இருக்கும் என்று 42-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு தெய்வீகக் குறிப்பை இங்கு தெரிவிக்கின்றது.
--
இன்னும்
தொடரும்
--
ஆசிரியர்.
ஸ்ரீ
யோகேஸ்வரன்
குறிப்பு :- இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை. வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்கவேண்டும். இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது. இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்டவெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள் ஒளியாக பிரகாசிக்கும்.
No comments:
Post a Comment