Monday, 19 January 2015

ஆகாயத்தில் ஒரு ஒளி (பகுதி - 37)


ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற தொடரின் வாயிலாக இன்று நாம் அறிந்துகொள்ளக் கூடிய இறைவெளிப்பாட்டின் தீர்க்கதரிசனம் 37-ம் பகுதியாகும். இந்த 37-ம் தீர்க்கதரிசனம் இறைவெளிப்பாட்டின் போது இந்த பூமியில் நிகழக்கூடிய சம்பவங்களைப்பற்றிய குறிப்புகளை நமக்கு வெளிப்படுத்துகின்றன.

அதாவது இந்திய தேசத்தில் அதுவும் தமிழ்நாட்டில் மட்டுமே இறைவன் தனது முழு வெளிப்பாட்டையும் நிகழ்த்துவார் என்றும், அவரின் வெளிப்பாடு முழுமையாக நிகழ்வதற்கு முன்பே அனைத்து ஞானிகளும், சித்தர்களும், மகான்களும் தமிழகத்தில் குறிப்பாக இறைவன் அவதரிக்கும் அந்த புண்ணிய பூமியில் தாங்களாகவே முன்வந்து  கோவில் கொண்டு காத்திருப்பார்கள் என்றும், அவர்கள் அனைவரும் இறைவனுக்கு தொண்டு செய்யவும், மக்களை இறைவனை அறியும்படி செய்யவும் தமது முயற்சிகளை அம்மண்ணில் செய்திட காத்திருப்பார்கள் என்று 37-ம் தீர்க்கதரிசனம் இறைவனின் அவதாரக் குறிப்பை தெளிவுபட கூறுகிறது.




இந்த இந்திய தேசத்தில், அதுவும் நமது தமிழ்நாட்டில் அவதாரம் மேற்கொள்ளும் அந்த இறைவனின் திருப்பெயர்ஆதிசக்திஎன்றும், அவர் ஆணாகவும், பெண்ணாகவும் கலந்த ஆதியும், அந்தமும் இல்லாத ஜோதி வடிவானவர் என்றும், இந்த உலகத்தின் தாய் என்றும், இந்த பூமி தோன்றிய நாள் முதல் இப்பூமியில் அவதரித்த அனைத்து அவதாரங்களுக்கும் “மூலம்” இவரே என்று தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.


அன்னை ஆதிசக்தியானவர் அகில உலகத்தின் தாய் என்றும், இவரே ஆக்கல், காத்தல், அழித்தல் என்ற முத்தொழிலுக்கும் உரிய அவதாரங்களின் தாய் என்றும், இவரே ஆதிமூலம், ஆதிபராசக்தி, மகாமேரு என்றும் ஞானிகளாலும், மகான்களாலும், தீர்க்கதரிசிகளாலும் அழைக்கப்பட்டவர் என்றும், இவரின் அவதாரக்காலம் என்பது தற்போதைய காலம் என்றும், இக்காலத்தின் தோற்றத்திற்கே சத்தியயுகம் என்றும், சத்திய யுகத்தின் முதல் பிரஜாதிபதி இவரே என்றும் 37-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.

இந்திய தேசம் மட்டுமின்றி அனைத்து தேச மக்களும் இனி இவரையே முதற்கடவுளாக போற்றி வணங்கும்படியான தெய்வீக சுப நிகழ்வுகள் பல உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் நிகழும் என்றும், இவரின் வருகையைப் பற்றி இப்பூமியில் இதற்குமுன் அவதரித்த அனைத்து கடவுளின் நிலைகளும் இப்புவியில் தமது மக்களுக்கு அறிவிக்கும் உன்னதமான ஒரு அற்புதம் நடக்கும் என்று 37-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது.

ஆதிசக்தி

ஆதி - முன்தோற்றம், சக்தி -  அதனை படைக்கும் மாபெரும் ஆற்றல். இதுவே இதன் பொருள். இவ்வுலகின் அனைத்து தோற்ற மூலங்களுக்கும் சக்தியாக இருந்து, அதன் இயக்கங்கள் வழியே இவ்வுலகத்தில் உள்ள அனைத்து படைப்புகளையும் உருவாக்கியவர். இவரையே இவ்வுலகில் மக்கள் பல்வேறு பெயர்களில் மாற்றி, மாற்றி வணங்கி வருகின்றனர். இப்பூமியின் புனிதமும், சத்தியமும், அதன் நிலைப்பாட்டையும், அதன் இயக்கத்தினையும், அதன் மறுசீரமைப்பையும் இவரே கவனித்து வருபவர். இவரே இவ்வுலகத்தின் விடிவெள்ளி. மனித தோற்றத்திற்கு முன்முதல் ஆதாரம் இவரே ஆவார். அதனால்தான் யோகங்கள் இவரை ஆதாரச்சக்தி என்று அழைக்கின்றன என 37-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.

இந்திய தேசமே மகாபொக்கிஷம் நிறைந்த பூமியாக மாறும் உன்னதமான சூழல் இந்த 37-ம் தீர்க்கதரிசனம் நிகழும் காலத்தில் நிகழ உள்ளதாக (ஏற்பட) 37-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.

அன்னை வருவாள், தனது ஆதரவு கரத்தாள் மக்களை அரவணைத்து காத்திடுவாள்... அவளின் வருகையை உலக மக்கள் இந்திய தேசத்திலிருந்து காணும் ஒரு அற்புதமான நிகழ்வு விரைவில் நடக்க உள்ளதாக 37-ம் தீர்க்கதரிசனம் மேலும் ஒரு குறிப்பை தருகின்றது.


இந்திய தேசம் அன்னை ஆதிசக்தியைபாரத மாதாஎன்று பெயரிட்டு அழைக்கும் அச்சமயத்தில், இந்திய தேசத்தில் தமிழகத்தில் உலகமே வியந்து நோக்கும் அளவிற்கு அன்னை ஆதிசக்திக்கு ஒரு மாபெரும்ஆலயத்தைஉலகமக்கள் ஒன்றிணைந்து உருவாக்குவார்கள் என்றும், இச்சமயத்தில் பிரபஞ்சம் வியக்கும் அதிசயமாக இந்த ஆலயத்தை பார்க்கவும், அன்னை ஆதிசக்தியை வணங்கவும் பிற கிரகத்தில் உள்ளவேற்றுகிரகவாசிகள்இங்கு வருவார்கள் என்ற வியப்பூட்டும் செய்தியை 37-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது.

-- இன்னும் தொடரும் --
ஆசிரியர்.  ஸ்ரீ யோகேஸ்வரன்

குறிப்பு :- இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை. வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்கவேண்டும். இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது. இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்டவெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள் ஒளியாக பிரகாசிக்கும்.

No comments:

Post a Comment