Friday, 16 January 2015

ஆகாயத்தில் ஒரு ஒளி (பகுதி – 36)



“ஆகாயத்தில் ஒரு ஒளி” என்ற வருங்கால தீர்க்கதரிசனப் பகுதியில் இன்று நாம் தெரிந்து கொள்ள வேண்டிய தீர்க்கதரிசனம் 36-ம் தீர்க்கதரிசனப் பகுதியாகும். பொதுவாக தீர்க்கதரிசனங்கள் துவங்கும் நேரமும், அது முடிவடையும் நேரமும் ஒருவருக்கு தெரியக்கூடாது என்பது கடவுளின் கோட்பாடாகும். ஆனால் தீர்க்கதரிசனத்தால் மக்கள் தங்கள் வாழும் சூழ்நிலையில் நிகழும் இடர்பாடுகளை கண்டு விழிப்படைந்து, அதனால் எச்சரிக்கையுடனும், சில பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் தங்களை காப்பாற்றிக் கொள்ள முயல வேண்டும் என்பதும் கடவுளின் கோட்பாடாகும்.

இன்று 36-வது தீர்க்கதரிசனத்தில் பின்வரும் குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. அதாவது உலகத்தின் தலையெழுத்தை மாற்றக்கூடிய ஒரு மாபெரும் அழிவுச் சம்பவம் இந்த உலகின் வரைபடத்தில் தென்துருவப்பகுதியில் தற்போது நிகழக்கூடும் என்றும், அங்கு ஏற்படும் பனிப்புயலால் பாதி தேசமே காணாமல்போகும் என்றும் 36-வது தீர்க்கதரிசனம் தனது குறிப்பை இங்கு வெளிப்படுத்துகின்றது. மலையேறும் ஒரு குழு இந்த பனிப்புயலில் சிக்கி மரணத்தை சந்திப்பார்கள் என்றும், அந்த புயல் ஓய்ந்தபின் அவர்களை தேடும் முயற்சியில் ஒரு குழு ஈடுபடும் என்றும், அவர்கள் முதலில் உலகத்திலேயே அதிசயமான ஒரு மனித இனத்தை அங்கு கண்டறிவார்கள் என்று 36-ம் தீர்க்கதரிசனம் மேலும் ஒரு குறிப்பை தருகின்றது.


மத்திய வடகிழக்கு ஆசியாவில் மாபெரும் அழிவுச்சம்பவம் ஒன்று இந்த   36-ம் தீர்க்கதரிசனம் வெளியிடப்பட்ட நாளிலிருந்து 40 நாட்களுக்குள் நடந்து முடியும் என்றும், இந்த அழிவுச்சம்பவத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிப்பு அடையும் என்று 36-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.

இந்திய தேசத்தின் துணைக்கண்டத்தில் ஒரு மாபெரும் பூமி சம்பந்தப்பட்ட அரிய நிகழ்வு நடக்க போவதாகவும், அங்கு அகழ்வராய்ச்சி மேற்க்கொள்ளும் அளவிற்கு பல அரிய சம்பவங்கள் நிகழும் என்று 36-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.

மக்களின் பொருளாதார மேம்பாடு என்பது அவர்கள் செய்யும் தொழிலிலும், அவர்கள் ஈட்டும் வருமானத்திலும் உள்ளது என்றும், அவ்வாறு இந்திய மக்கள் ஈட்டும் வருமானத்திலிருந்து அரசு பெறும் வரி சதவீதத்தை மத்திய அரசு கணிசமான அளவு தளர்த்தும் என்றும், இதனால் சாதாரண குடிமகனும் சேமிப்பு பழக்கத்தை இனி மேற்க்கொள்ளும் படியான திட்டத்தை இந்திய அரசு மேற்கொள்ளும் என்றும், இதனால் நாட்டில் பணப்புழக்கம், பண்டமாற்று முறையும் புழக்கத்தில் வரும் என்று 36-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது.


கலியுகக் கடவுளான கிருஷ்ண பரமாத்மா தனது பிரவேசத்தை இப்பூமியில் நிலைநிறுத்தும் காலமாக இந்த 36-ம் தீர்க்கதரிசனம் நடைபெறும் நாட்களே தீர்மானிக்கும் என்றும், அந்த சிறப்பான தினத்தை பல ஆன்மீக அமைப்புகள் முன்நிறுத்தி வெளியிடுவார்கள் என 36-ம் தீர்க்கதரிசனம் மேலும் ஒரு குறிப்பை தருகின்றது.

மத்திய ஆசிய நாடுகளில் ஒரு இனம் புரியாத கலவரம் திடீரென்று வெடிக்கும் என்றும், இது தீவிரவாத செயலாக அமையும்படி ஒரு நாடு தனது முயற்சிகளில் இறங்கும் என்றும், அதனை உலகநாடுகள் சபை கண்டறிந்து அந்த நாட்டை எச்சரிக்கை செய்யும் என்றும், இதனால் உலகப்போர் ஒன்று உருவாதற்கான முகாந்திரம் உருவாகிட சூழ்நிலைகள் ஏற்படும் என்றும், இதனை உலக நாடுகளில் சில தலையிட்டு ஒரு அமைதியான சூழ்நிலைக்கு திரும்ப கொண்டு வரும் என்று 36-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது.

இந்திய தேசத்தின் மகா ஞானிகளின் அற்புதக் காலமாக இக்காலம் இருக்கும் என்றும், இதுவே நமக்கான நல்லநேரம் என்று இந்திய தேசத்து மக்களே நினைக்கும்படியாக பல அற்புதங்கள் நிகழக்கூடிய இறை அற்புதங்களின் துவக்கம் என்று 36-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தெரிவிக்கின்றது.


மண்ணை ஆண்ட ராஜாக்களில் பேரும் புகழும் பெற்ற வீரசிவாஜி வழிபட்ட காளியின் சந்நதியில் மாபெரும் இறை அதிசயம் ஒன்று விரைவில் நிகழும் என்றும், வீர சிவாஜிக்கு தமிழகத்தில் மக்கள் கோவில் எழுப்பும் ஒரு நிகழ்வும் நடக்க உள்ளதாக இறை தீர்க்கதரிசனத்தின் 36-ம் பகுதி ஒரு குறிப்பை தருகின்றது.

சொல்வதும், அதனை செயல்படுத்துவதும் இறைவனேஎன்ற பொன்வாக்கு நிகழும் காலமாக இக்காலம் திகழும் என்றும், இதுவே அன்றைய நாளில் ஆகாயத்தில் ஒரு ஒளியாக பிரகாசிக்கும் என்று 36-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது.

-- இன்னும் தொடரும் --
ஆசிரியர்.  ஸ்ரீ யோகேஸ்வரன்

குறிப்பு :- இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை. வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்கவேண்டும். இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது. இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்டவெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள் ஒளியாக பிரகாசிக்கும்.

No comments:

Post a Comment