Friday, 23 January 2015

ஆகாயத்தில் ஒரு ஒளி (பகுதி – 39)


ஆகாயத்தில் ஒரு ஒளிஎன்ற வருங்கால தீர்க்கதரிசனத்தில் இன்று நாம் காணும் பகுதி 39-ம் தீர்க்கதரிசனப் பகுதியில் இடம்பெறும் முக்கிய குறிப்புகளாகும்.

39-ம் தீர்க்கதரிசனத்தில் இறைவனின் அவதாரம் இப்புவியில் நிகழும் சமயத்தில் உலகத்தின் பிற தேசங்களில் மக்களை அச்சுறுத்தும் பல கொடிய சம்பவங்கள் நடக்கும் என்றும், உதாரணமாக ஊர் தெருக்களில் வினோதமான உருவ அமைப்பு கொண்ட மனிதர்கள் உலாவுவார்கள் என்றும், இவர்கள் மனித ரத்தத்தை குடிக்கும் அளவிற்கு இருப்பார்கள் என்றும், இதனை உலக நாடுகள் கண்டறிந்து அவர்களை அழிக்கும் சம்பவம்  ஒன்று நடைபெறும் என்றும், இது தீயசக்திகள் என்று அந்நாட்டு மக்கள் பயப்படும் சமயத்தில் கடவுளின் சேனைகள் அந்த நகரத்தில் இறங்கி அவர்களை முற்றிலுமாக அழிக்கும் ஒரு அதிசய நிகழ்வு நடக்கும் என்று 39-ம் தீர்க்கதரிசனம் ஒரு குறிப்பை தருகின்றது.




இந்த பூமியில் பல சக்திகளின் மறுபிரவேசம் இந்த 38-ம் தீர்க்கதரிசனம் நடக்கும் சமயத்தில் நிகழும் என்றும், அப்பொழுது ஒட்டுமொத்தமாக உலக மக்களும் தங்களை காக்கும்படி இறை அவதாரத்திடம் முறையிடுவார்கள் என்றும், அச்சமயத்தில் பிரபஞ்சம் வியக்கும் அதிசயம் ஒன்று நடந்து அந்த மக்களை இரட்சிக்கும் என்றும், ஒரேசமயத்தில் இறைவனின் அற்புதம் மக்கள் காணும்படியான அதிசயங்களாக நிகழக்கூடும் என்று 39-ம் தீர்க்கதரிசனம் கூறுகிறது.


39-ம் தீர்க்கதரிசனம் மேலும் ஒரு அரிய குறிப்பை இங்கு தருகின்றது. அதாவது கடலுக்குள் மறைந்து போன கப்பல்கள், விமானங்கள் அதிசயத்தக்க வகையில் மீண்டும் அவைகள் பூமிக்கு திரும்ப வரும் என்றும், இது கடவுளின் செயலாக உலக மக்கள் கண்டு வியப்பார்கள் என்று 39-ம் தீர்க்கதரிசனம் ஒரு குறிப்பை இங்கு தருகின்றது. இப்பணியில் வேற்றுகிரகவாசிகளின் முக்கிய பங்கு இருக்கும் என்று 39-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.

மனம் மகிழும் அதிசய சம்பவங்கள் தொடர்ந்து தமிழகத்தில் நடக்கும் என்றும், இக்காலம் தமிழகத்திற்கு பொற்காலம் என்றும், கண்ணகி வாழ்ந்த மதுரையில் அப்பொழுது மாபெரும் இறை அதிசயம் ஒன்று நடைபெறும் என்றும், இதுவே 39-ம் தீர்க்கதரிசனங்கள் நடைபெறுவதற்கான முன் அறிகுறிகளாக இருக்கும் என்று 39-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.


வாலைசித்தர்என்று அழைக்கப்பட்ட ஒரு சித்தரின் அரிய உருவக்காட்சி வீடியோவில் பதிவாகும் என்றும், அவருடன் சேர்ந்து பதிவாகும் மற்றொரு உருவம் வேற்றுகிரக வாசியைப் போன்று காணப்படும் என்றும், அன்றிலிருந்து தமிழகம் ஊடகங்களில் இச்செய்தி சிறப்பான ஒரு இடத்தை அடையும் என்றும், சித்தர்களை பற்றிய ஆய்வில் இருக்கும் பல அமைப்புகள் சேலத்தை நோக்கி படையெடுக்கும் என்றும், கஞ்ச மலையின் பல இரகசியங்கள் அப்பொழுது உலக மக்களுக்கு தெரியவரும் என்று 39-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.

உலக மக்களின் அனைத்து கேள்விகளுக்கும் தமிழகத்தில் உள்ள ஒரு யோகா அமைப்பு தனது விளக்கங்களை ஆதாரத்துடன் தெளிவுபட விளக்கும் என்றும், அன்றுமுதல் உலக மக்கள் அந்த அமைப்பை  நோக்கி விரைந்து வந்து இணைந்து இறைபணியை செய்வார்கள் என்றும் 39-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.

உலக மக்கள் இறைவன் வெளிப்படுத்தும் ஒரு அடையாள சின்னத்தை தங்களுடைய இல்லங்களில் வைத்து வழிபடுவார்கள் என்றும், அது ஆதிசக்தியின் அடையாளமாக உலக மக்கள் மட்டுமின்றி பிறகிரகவாசிகளும் ஏற்று வணங்குவார்கள் என்று 39-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.

தென் தேசத்து மக்கள் வாழும் ஒரு மலையில் சித்தர்களின் நடமாட்டமும், அவர்கள் வான்வீதியில் பறந்து செல்லும் ஒரு அதிசயமும் நடக்க உள்ளதாகவும், அங்கு இறைவனுடைய பல அதிசய வெளிப்பாடுகள் நடக்கும் என்று 39-ம் தீர்க்கதரிசனம் மெய்பட ஒரு குறிப்பை தருகின்றது.

-- இன்னும் தொடரும் --
ஆசிரியர்.  ஸ்ரீ யோகேஸ்வரன்

குறிப்பு :- இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை. வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்கவேண்டும். இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது. இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்டவெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள் ஒளியாக பிரகாசிக்கும்.

4 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. கண்ணகி வாழ்ந்தயிடம் மதுரை எனவும் அங்கே தான் அதிசயம் நடக்கப்போவதாய் சுட்டிக்காட்டியிருக்கிறீர்கள். கண்ணகி வீழ்ந்தயிடம்தான் மதுரை. வாழ்ந்த இடம் நாகை மாவட்டம் பூம்புகார் என்பதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்

    ReplyDelete