ஆகாயத்தில் ஒரு ஒளி (அத்தியாயம் - 3)
சத்திய யுகம் (பகுதி 8)
(எட்டாம் தீர்க்கதரிசனம்)
“சத்திய யுகம்“ எனும் வருங்கால தீர்க்கதரிசனப் பகுதியில் இன்று நாம் காணும் தீர்க்கதரிசனப் பகுதி 8-ம் பகுதியாகும். இந்த 8-ம் தீர்க்கதரிசனத்தில் பல முக்கிய நிகழ்வுகள் இடம் பெற உள்ளன. அவைகளைப் பற்றி இங்கு காண்போம்.
இந்த 8-ம் தீர்க்கதரிசனப் பகுதியில் இன்று முதலாவதாக காணும் தீர்க்கதரிசனம் என்னவெனில் உலகத்தின் முக்கிய பிரசித்திப் பெற்ற உலக அதிசயங்களில் ஒன்றாக இருக்கக்கூடிய நினைவிடங்களில் ஒன்று, உலக தீவிரவாதிகளால் முழுமையாக அழிக்கப்பட உள்ளது என்றும், இது தீவிரவாத அச்சுறுத்தலுக்கு முக்கிய நிகழ்வாக அமைய போவதாகவும், இதனால் உலக நாடுகள் அச்சமடையும் ஒரு தீவிரவாத செயலாக இருக்குமென 8-ம் தீர்க்கதரிசனம் இங்கே ஒரு குறிப்பை தருகிறது.
“மெல்போர்ன்“ என்கிற நகரில் மிகப்பெரிய கொடுமையான தீவிரவாத தாக்குதல் மக்கள் மீது நடக்க இருப்பதாகவும், இது வன்மையாக கண்டிக்கதக்க செயலாகவும், செய்தியாகவும் ஊடகங்களில் உலா வரும் செய்தி என 8-ம் தீர்க்கதரிசனம் தெரிவிக்கின்றது.
“நமது உண்மைகள் உறங்குவதில்லை“ என்ற தீர்க்கதரிசனத்தில் நாம் ஏற்கனவே வெளியிட்டுள்ள 8-ம் தீர்க்கதரிசனத்தில் இடம் பெற்றுள்ள சில நிகழ்வுகள் தற்போது நடக்கும் காலமாக இப்பொழுது இருக்கும் என்றும், அதே சமயத்தில் தமிழகத்தில் தற்போது புரட்சிகரமான பல போராட்டங்கள் நடைபெற உள்ளதாக சத்திய யுக தீர்க்கதரிசனமான 8-ம் தீர்க்கதரிசனம் ஒரு குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.
“உண்மைகள் உறங்குவதில்லை“ மற்றும் “ஆகாயத்தில் ஒரு ஒளி“ என்ற நமது வருங்கால தீர்க்கதரிசனப் பகுதிகளில் நாம் ஏற்கனவே வெளியிட்டுள்ள 12-ம் தீர்க்கதரிசனத்தில் வெளியிட்டுள்ள பல நிகழ்வுகள் தற்போது நடக்கும் காலமாக இருக்கும் என்றும், ஒரு நகரமே பூமி அதிர்வினால் பூமிக்குள் அமிழும் சோகச் சம்பவம் ஒன்று இந்தியாவின் வடதேசத்தில் தற்போது நடைபெற போவதாக 8-ம் தீர்க்கதரிசனம் ஒரு குறிப்பை இங்கே தெரிவிக்கின்றது.
“சத்திய யுகம்“ எனும் நமது வருங்கால தீர்க்கதரிசனப் பகுதியில் மொத்தம் 16 தீர்க்கதரிசனங்கள் மட்டுமே இடம்பெற உள்ளதாகவும், அதில் 13-ம் தீர்க்கதரிசனம் இடம்பெறும் சமயத்தில் தமிழகத்தில் பல கலவரங்கள் உருவாகிட இருப்பதாகவும், தமிழக அரசியலுக்கு பல நெருக்கடிகள் நேரிடும் என்று 8-ம் தீர்க்கதரிசனம் இங்கே குறிப்பிடுகின்றது.
“முக்குலத்தோர்“ அமைப்பில் பல இன்னல்களும், தடைகளும் உருவாகும் காலமாக தற்போது இருக்கும் என்றும், அதற்கு நடிகர் ஒருவரின் ஆவேசப் பேச்சுகளே காரணமாக இருக்கும் என்றும், இதனால் தென்தமிழகத்தில் சில கலவரங்கள் ஏற்படலாம் என 8-ம் தீர்க்கதரிசனம் ஒரு குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.
“துப்பாக்கி முனையில்“ ஒரு நாட்டின் அதிபரை தீவிரவாத கும்பல் ஒன்று திட்டமிட்டபடி கடத்தும் என்றும், இதற்கு பல அமைப்புகள் ஒன்றிணைந்து செயல்படும் என்றும், அச்சமயத்தில் “பாரசீக நாட்டில்“ மதக்கலவரங்கள் திடீரென்று வெடிக்கும் என்றும், இதனால் உலகத்தில் பல பதற்றமான சூழ்நிலைகள் உருவாகும் என 8-ம் தீர்க்கதரிசனம் ஒரு குறிப்பை தருகின்றது.
மன்னார் வளைகுடாவில் தற்போது புயல் உருவாகும் என்றும், இப்புயலைப் பற்றி நாம் ஏற்கனவே தீர்க்கதரிசனத்தில் வெளியிட்டாலும், தற்போது நாம் வெளியிடும் குறிப்பு என்னவெனில் அந்த சமயத்தில் சீனாவில் பெரும் சேதங்கள் ஏற்படும் என்றும், தற்போது அந்த தேசத்தின் அதிபருக்கு ஒரு புதிய நெருக்கடி ஏற்படும் என்று 8-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய நிகழ்வை இங்கே பதிவு செய்கிறது.
தமிழகத்தின் பல மாவட்டங்களில் போராட்டங்கள் வெடிக்கும் என்றும், இதனால் கர்நாடகாவின் மீது இறைவனின் நீயாயத்தீர்ப்பு ஒன்று இறங்கிடும் சூழல் உருவாகும் என்றும், அச்சமயத்தில் நடிகர் ஒருவரின் பேச்சால் மக்கள் சமூகம் கொதித்து எழும் சம்பவங்கள் நிகழும் என்று 8-ம் தீர்க்கதரிசனம் முக்கிய நிகழ்வைப் பற்றி இங்கே தெரிவிக்கின்றது.
“உகாண்டா“ மாகாணத்தில் பெரும் சோகச் சம்பவங்கள் நடக்கப் போவதாகவும், அங்கு வாழும் கருப்பு இன மக்கள் மீது இறைவனின் நீயாயத்தீர்ப்புகள் நெருப்பு மழையாக தற்போது இறங்கிட இருப்பதாக 8-ம் தீர்க்கதரிசனங்கள் தெரிவிக்கின்றன.
“உகாண்டாவில்“ வாழும் கருப்பு இனத்தவர்களால் உலக மக்களுக்கு அச்சுறுத்தும் ஒரு கொடிய நோய் பரப்பபட இருப்பதாகவும், இது திட்டமிட்ட சதியாக இருக்கும் என்றும், அதனாலேயே இறைவனின் கோபத்திற்கு அந்நாட்டு மக்கள் ஆளாகப் போகிறார்கள் என 8-ம் தீர்க்கதரிசனம் ஒரு குறிப்பை தெரிவிக்கின்றது.
“தென்தமிழகத்தில்“ இனி பல புதுமையான அதிசய நிகழ்வுகள் நடக்க இருப்பதாகவும், அவைகள் தெய்வம் சார்ந்த நிகழ்வுகளாக இருக்குமென 8-ம் தீர்க்கதரசனம் மெய்பட கூறுகின்றது.
வட மாநிலங்களிலும் பல தெய்வீக அதிசயங்கள் நடக்கும் என்றும், பாபா ஒருவரின் அதிசயங்களை இந்திய மக்கள் கண்கூடாக காணும் பல நிகழ்வுகள் நடக்க இருப்பதாக 8-ம் தீர்க்கதரிசனம் மேலும் ஒரு குறிப்பை இங்கே சுட்டிக் காட்டுகின்றது.
கேரளாவின் பல பகுதிகள் மழையினால் பலத்த சேதங்களை சந்திக்கும் என்றும், இதனால் பல வாரங்கள் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு அடையும் என 8-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.
“தெய்வீக சங்கல்பம்“ ஒன்று தென்தமிழகத்தின் “குடிலில்“ நடக்க இருப்பதாகவும், இது இறைவன் இந்த பூமியில் தனது இறை ஆட்சியை ஏற்படுத்துவதற்கான முதல் சுவடாக மக்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், இந்நிகழ்விற்கு முன்பாக பெரிய ஆன்மீக அமைப்பின் பித்தலாட்டங்கள் மக்கள் பார்வைக்கு முன்வரும் ஒரு நிகழ்ச்சி தற்போது நடைபெறும் என்று 8-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.
இனி நமது தீர்க்கதரிசனங்கள் மீது உலக மக்களின் பார்வை திரும்பிட உள்ளதாகவும், தமிழ்மொழியில் வெளி வந்துள்ள நமது தீர்க்கதரிசனங்களை பிற ஆன்மீக அமைப்புகள் அவர்களாகவே முன்வந்து தமது தாய்மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடுவார்கள் என்றும், உலக மக்களிடையே நமது தீர்க்கதரிசனங்கள் மீது நம்பிக்கை ஏற்படும் என்றும் 8-ம் தீர்க்கதரிசனம் ஒரு கருத்தை இங்கே பதிவு செய்கிறது.
தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் இனி “சேலம்“ மாவட்டம் பல சிறப்புகளை பெறும் என்றும், இனி வருங்காலத்தில் தமிழகத்தின் ஆட்சிமுறை சேலத்திலிருந்து துவங்கிடும் என்றும், இது இந்திய வரலாற்றில் ஒரு புதிய சகாப்தமாக அமையும் என்று 8-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை தருகின்றது.
“ஏற்காடு“ உலக மக்களை கவரும் ஒரு ஆன்மீகஸ்தலமாக விரைவில் மாறும் என்றும், உலக மக்களின் கவனம் இனி இங்கு பதியப் போவதாக 8-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை தருகின்றது.
“புண்ணிய ஸ்தலங்களில் ஒன்று பூமியில் அமிழும் ஒரு நிகழ்வு தற்போது விரைந்து நடக்க இருப்பதாகவும், இரு மதத்தினருக்கு சவாலாக இருக்கும் ஒரு சம்பவம் இனி நடக்காமல் போகும் என்றும், இது இறைவன் தன் மீது ஏற்படுத்திக் கொள்ளும் நீயாயத்தீர்ப்பாக இருக்கும் என 8-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை தருகின்றது.
மாற்றான் ஒருவனின் பேச்சால் தமிழக அரசியல் களத்தில் பல பிளவுகள் ஏற்படும் என்றும், தமிழக மக்கள் அரசியல் நாகரியத்தையே வெறுக்கும் பல நிகழ்வுகள் இனி நடக்க இருப்பதாக 8-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.
காந்தி என்ற புனைப்பெயரில் உள்ள ஒருவரின் மரணம் தற்போது நடக்கும் என்றும், அச்சமயத்தில் தமிழகத்தில் மிகப் வலுவான “புயல்“ ஒன்று உருவாகி பலத்த சேதங்களை ஏற்படுத்தும் என்றும் 8-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை தருகின்றது.
இறைவன் வெளிப்படும் அந்த இறுதிசபை ஒரு யோகா அமைப்பாக இருக்கும் என்றும், அந்த அமைப்பில் தற்போதுவரை இறைவனின் அற்புதங்கள் தொடர்ந்து நடந்து வரும் என்றும், அவர்கள் மத்தியில் தற்போது புதுமையான அதிசயம் ஒன்று இறைவனால் நடத்தப்பட இருப்பதாக 8-ம் தீர்க்கதரிசனம் மிக முக்கியமான நிகழ்வைப் பற்றிய செய்திக் குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.
இறைவனின் பிரவேசம் இப்பூமியில் முழுமையடையும் சமயத்தில் தென்கிழக்கில் உள்ள ஒரு சிவாலயத்தில் மாபெரும் அதிசயம் நிகழ இருப்பதாக 8-ம் தீர்க்கதரிசனம் மேலும் ஒரு அதிசய நிகழ்வைப் பற்றி இங்கே பதிவு செய்கிறது.
இறைவனின் அற்புதங்களை காண நாம் அதுவரை காத்திருப்போம். சத்திய யுகத்தின் நிகழ்கால உண்மைகளை காண அந்த இறைவனின் வருகையை இருகரம் கூப்பி வரவேற்போம்.
--யுகம் தொடரும்--
ஆசிரியர். ஸ்ரீ யோகேஸ்வரன்
குறிப்பு :-
இந்த வருங்கால தீர்க்கதரிசனத்தில் வெளிப்படுத்தப்படும் தேதிகள் மற்றும் வருடங்களை மட்டும் யாரும் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டாம். இது இறைவனின் நீயாத்தீர்ப்புகளின் படியே அமையும், ஆனால் செய்திக்குறிப்புகள் அனைத்துமே நடைபெறும். மேலும் இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை. வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும். இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது. இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்டவெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள்ஒளியாக பிரகாசிக்கும். அன்று உறங்கும் உண்மைகள் வெளிப்படும்.
No comments:
Post a Comment