Friday 27 February 2015

ஆகாயத்தில் ஒரு ஒளி (பகுதி – 54)


ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற வருங்கால தீர்க்கதரிசனத்தில் இன்று நாம் தெரிந்து கொள்ளும் தீர்க்கதரிசனம் 54-ம் பகுதியாகும். தீர்க்கதரிசனத்தின் ஒவ்வொரு வரிகளும் ஆழமான பொருள் பொதிந்தவை. அவைகளை வெறும் சம்பவங்களின் விபரங்களாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும், அதன் பின்னணியில் உள்ள பொருள் பொதிந்த இறை இரகசியங்களை இந்த மனித குலம் கண்டுகொள்ள வேண்டும் என எடுத்துக் கூறுகிறது.

அந்த வகையில் இன்று 54-ம் தீர்க்கதரிசனப் பகுதி இனி மக்களுக்கு வருங்காலம் என்பது பலவகையான சோதனைகள் நிறைந்த காலம் என்றும், இது எதனால் இவ்வாறு ஏற்படுகிறது என ஆழ்ந்து சிந்திக்கும் அளவிற்கு பல்வேறு சோதனைகள் நிகழக்கூடும் என்று எச்சரிக்கை செய்கிறது. சோதனைகள் யாவும் நாட்டுக்கு நாடு வேறுபடும் என்றும், அச்சோதனைகள் முழுவதும் மனிதகுலத்தை சார்ந்தே அமையும் என்று விளக்கம் கொடுக்கிறது. அதாவது கடல்சார்ந்த சோதனைகள் 35% விழுக்காடு என்றும், பூமி சார்ந்த சோதனைகள் 65% விழுக்காடு என்று 54-ம் தீர்க்கதரிசனம் எடுத்துக் கூறுகிறது.

Wednesday 25 February 2015

ஆகாயத்தில் ஒரு ஒளி (பகுதி – 53)




ஆகாயத்தில் ஒரு ஒளிஎன்ற வருங்கால தீர்க்கதரிசனத்தில் இன்று நாம் அறிந்து கொள்ளும் பகுதி 53-ம் தீர்க்கதரிசனப் பகுதியாகும். மக்களின் வாழ்வாதார சூழ்நிலைகள் இவ்வுலகில் பொருளாதாரத்தை சார்ந்தே உள்ளது. அந்த பொருளாதாரம் உடல் உழைப்பின்றி, வெறும் பதிவேடுகளை சார்ந்த ஒரு வேலையாக மட்டுமே இன்று நடைமுறையில் நிலவி வருகிறது. உடல் உழைப்பின்றி வாழும் அத்தனை மனிதகுலமும் இன்று மோசமான சூழ்நிலைக்கு தள்ளப்படும் ஒரு அவல நிலை உருவாகிட போவதாக 53-ம் தீர்க்கதரிசனம் இங்கு ஒரு குறிப்பை தருகின்றது.

53-ம் தீர்க்கதரிசனம் அமெரிக்காவில் வாழும் வெளிநாட்டு மக்கள் யாவரும் தன்னுடைய தாய்நாட்டை நோக்கி திரும்பும் ஒரு அவல நிலை உருவாகிட உள்ளதாகவும், அந்த மக்கள் வெறும் கம்யூட்டரை மட்டுமே நம்பி இதுநாள்வரை வாழ்ந்தவர்கள் என்றும், அவர்களால் தன் தாய் நாட்டிற்கு எந்த அளவிலும் உதவ முடியாத சூழ்நிலை உருவாகும் என்றும், படித்த அத்தனை மக்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்கும் நிலை அந்த தாய்நாடுகளுக்கு இருக்காது என்றும் 53-ம் தீர்க்கதரிசனம் ஒரு குறிப்பை தருகின்றது. இதனால் உடல் உழைப்பால் மட்டுமே ஒருவன் முழுமையான தன்னிறைவை அடைய முடியும் என்று அந்த 53-ம் தீர்க்கதரிசனக் குறிப்பு இங்கு அறிவுறுத்துகின்றது.

Monday 23 February 2015

ஆகாயத்தில் ஒரு ஒளி (பகுதி – 52)


ஆகாயத்தில் ஒரு ஒளிஎன்ற வருங்கால தீர்க்கதரிசனத்தில் இன்று நாம் காணும் பகுதி 52-ம் தீர்க்கதரிசனப் பகுதியாகும். 52-ம் தீர்க்கதரிசனப் பகுதியானது இவ்வுலகில் திடீரென்று நடக்ககூடிய பலச்சம்பவங்களின் தொகுப்பாக இருக்கும் என்று எடுத்துக் கூறுகிறது.


  • 52-ம் தீர்க்கதரிசனப் பகுதியானது முதலில் இந்திய தேசத்தின் இமயமலையின் தென்பகுதியில் ஒரு விபரீத சம்பவம் நடைபெறும் என்றும், சாதுக்கள் நிறைந்த அந்த பகுதியானது மக்கள் அறிய முடியாத அளவிற்கு பெரும் சேதத்தை சந்திக்க உள்ளதாக எடுத்துக் கூறுகிறது.

Friday 20 February 2015

ஆகாயத்தில் ஒரு ஒளி (பகுதி – 51)




ஆகாயத்தில் ஒரு ஒளிஎன்ற தீர்க்கதரிசனத்தில் இன்று நாம் அறிந்து கொள்ளும் பகுதி 51-ம் தீர்க்கதரிசனப் பகுதியாகும். இது ஒரு முக்கியமான தீர்க்கதரிசனப் பகுதி என இறைநிலைக் கோட்பாடுகள் தெரிவிக்கின்றன.

51-ம் தீர்க்கதரிசனமானது வரும் ஜூலை மாதத்தில் மாபெரும் பூமி சம்பந்தப்பட்ட அழிவுச்சம்பவம் ஒன்று தெற்கு ஆசியாவில் நடைபெற உள்ளதாக எடுத்துக் கூறுகிறது. இது உலக வரலாற்றில் இதுவரை நடைபெறாத அழிவுச்சம்பவமாக இருக்ககூடும் என 51-ம் தீர்க்கதரிசன குறிப்புகள் தெரிவிக்கின்றன.

51-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை இங்கு சுட்டி காட்டுகின்றது. ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற தீர்க்கதரிசனப்பகுதியில் 7-வது தீர்க்கதரிசனமாக உரைக்கப்பட்ட தீர்க்கதரிசனம் எவ்வித மாறுபாடு இன்றி  உடனே நடக்கும் என்றும், அதற்கான காலக்கட்டம் இதுவே என்று மெய்பட கூறுகிறது.

Wednesday 18 February 2015

ஆகாயத்தில் ஒரு ஒளி (பகுதி – 50)


ஆகாயத்தில் ஒரு ஒளிஎன்ற வருங்கால தீர்க்கதரிசனத்தின் நிகழ்வுகள் ஒவ்வொன்றும் காலச்சக்கரத்தின் சுழற்சியின் நிகழ்வோடு இணைக்கப்பட்டுள்ளன. யுக மாற்றம், அதன் வருகைக்கு முன் ஏற்படும் அறிகுறிகள், அதனை சார்ந்த பிரபஞ்ச நிகழ்வுகள், உலக நிகழ்வுகள் என அனைத்து சம்பவங்களும் காலச்சக்கரத்தின் நிகழ்கால இயக்கத்தோடு சம்பந்தப்பட்டவை என இறைநிலைக் கோட்பாடுகள் தெரிவிக்கின்றன.

காலச்சக்கரமே இந்த உலகத்தின் ஒட்டுமொத்த இயக்கத்தை நிர்ணயிக்கும்விதிஅமைப்புஎன்று தீர்க்கதரிசனக் கோட்பாடுகள் தெரிவிக்கின்றன. இந்த உலகம் படைக்கபட்டபோது, அதில்உயிர்என்ற தன்மையை சுமந்த ஒரு அதிசய பிறவியாகமனிதபிறவியேபடைக்கபட்டதாககாலச்சக்கர கோட்பாடு விதிகூறுவதாக இறைநிலைச் செய்திகள் கூறுகின்றன.

Monday 16 February 2015

ஆகாயத்தில் ஒரு ஒளி (பகுதி – 49)


ஆகாயத்தில் ஒரு ஒளிஎன்ற வருங்கால தீர்க்கதரிசனப் பகுதியில் இன்று நாம் அறிந்து கொள்ளக்கூடிய தீர்க்கதரிசனப் பகுதி 49-ம் பகுதியாகும். தீர்க்கதரிசனங்கள் எக்காலத்திலும் அவைகள் பொய்த்து போனதில்லை. அவை நிகழ்காலத்தின் உண்மைகளாக இன்றும் காத்து உள்ளன.

வருங்காலத்தின் உண்மைத் தன்மைகளை மக்கள் உணர்ந்து அறிந்துகொள்ள வேண்டும் என தீர்க்கதரிசன கோட்பாடுகள் கூறுகின்றன. இவ்வுலகில் வேதங்கள் என்பவை தர்மத்தின் வாசல்கள் என கடவுள் கோட்பாடுகள் தெரிவிக்கின்றன. சராசரியாக ஒரு மனிதன் இவ்வளவு நேரத்திற்கு சாப்பிட வேண்டும், தூங்க வேண்டும், எழுந்திருக்க வேண்டும், உழைக்க வேண்டும் என குறிப்புகள் உள்ளன. இவைகள் யாவுமே வேதத்தின் அடிப்படை சாரம்சகளாகும் என வேதங்கள் குறிப்பிடுகின்றன. வேதங்கள் மனிதனுக்கும், கடவுளுக்கும் இடையில் ஒரு நிகழ்கால இணைப்பை ஏற்படுத்துவதற்காக இறை அவதாரங்களால் மனு குலத்திற்கு வழங்கப்பட்ட நல்ஒழுக்கங்களாகும்.

Friday 13 February 2015

ஆகாயத்தில் ஒரு ஒளி (பகுதி - 48 )


ஆகாயத்தில் ஒரு ஒளிஎன்ற வருங்கால தீர்க்கதரிசனத்தில் இன்று நாம் அறிந்து கொள்ள வேண்டிய தீர்க்கதரிசனம் 48-ம் பகுதியாகும். உலக மக்களுக்கு மிகுந்த அச்சத்தை உருவாக்கும் பல நிகழ்வுகளை கொண்ட தீர்க்கதரிசனப் பகுதியே இந்த 48-ம் தீர்க்கதரிசனம் ஆகும்.

பல உலக மக்கள் ஒன்று கூடி இந்த காட்சியை அதாவது வானத்தில் வினோதமான பல ஒளி வடிவ காட்சிகளையும், சில உருவங்களையும் காண்பார்கள் என்றும், இதனால் உலக மக்களின் மன எண்ணங்களில் நமது கடைசி காலம் இக்காலமாக இருக்குமோ என்ற அச்சத்திற்கு ஆளாவார்கள் என்று 48-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை தருகின்றது.

Wednesday 11 February 2015

ஆகாயத்தில் ஒரு ஒளி (பகுதி – 47)


ஆகாயத்தில் ஒரு ஒளிஎன்ற தீர்க்கதரிசனப் பகுதியில் இன்று நாம் காண வேண்டிய தீர்க்கதரிசனம் 47 வது தீர்க்கதரிசனமாகும். இந்த 47 வது தீர்க்கதரிசனம் உலக வாழ்க்கையில் சந்தோஷங்களை வெறும் பணம் வடிவில் மட்டும் கண்டு வாழ்ந்து வரும் உலக பணக்காரர்களுக்கு போதாத காலம் என்று அறிவுறுத்துகிறது. அதாவது இந்த உலகத்தில் மற்றவர்களின் உழைப்பில் சொகுசாக வாழ்ந்து வரும் அத்தனை பணக்காரர்களும் தங்களுடைய வாழ்நாளை வாழ முடியாமல் போகும் தருணம் இக்காலமாக இருக்கும் என்று 47-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை தருகின்றது.

இந்த உலகத்தில் நடிகர்கள், அரசியல்வாதிகள், வணிகர்கள், முதலீட்டாளர்கள், சொகுசான வாழ்க்கையை வாழும் அரசு அதிகாரிகள் அத்தனை நபர்களுக்கும் இக்காலம் போதாத காலமாக இருக்கும் என்று 47-ம் தீர்க்கதரிசனம் சற்று விரிவாக குறிப்பிடுகின்றது.