Monday, 12 January 2015

ஆகாயத்தில் ஒரு ஒளி (பகுதி – 34)


ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற தீர்க்கதரிசனப் பகுதியில் இன்று நாம் காணும் தீர்க்கதரிசனம் 34-ம் பகுதியாகும். இந்த 34-ம் தீர்க்கதரிசனம் பல குறிப்புகளை தனக்குள் கொண்ட ஒரு தொகுப்பு ஆகும்.

34-ம் தீர்க்கதரிசனத்தின்படி இந்திய அரசியல் அமைப்பில் பல புதிய சட்டங்களை மக்களவை உருவாக்கும் தருணத்தில் இருக்கும் என்றும், பல புதிய முயற்சிகளை இந்திய அரசு மக்களின் நலனுக்காக எடுக்கும் என்றும், இது பல கட்டமைப்புகளை தனக்குள் உள்ளடக்கிய தொகுப்பாக அரசு வெளிப்படுத்தும் என்று 34-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை தருகிறது.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் பல திருத்த மசோதாக்களை மத்திய அரசு முடிவெடுக்கும் என்றும், இதனால் இந்திய மக்களிடையே பல மறுமலர்ச்சிகள் உருவாகிட சூழ்நிலைகள் உருவாகும் என்று 34-ம் தீர்க்கதரிசனம் மேலும் சில குறிப்புகளை தருகிறது.


இந்திய அரசு ஆன்மீகதுறையில் பல நல்ல வாய்ப்புகளை மக்கள் மேற்கொள்ளும்படி பல புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் என்றும், இதற்கு பிற அரசியல் அமைப்புகள் எதிர்ப்புகளை காட்டினாலும் இறுதியில் அரசின் முயற்சிகள் வெற்றி பெறும் என்று 34-ம் தீர்க்கதரிசனம் மேலும் ஒரு குறிப்பை தருகிறது.


இந்திய அரசியல் அமைப்பில் வரும் 2015-ம் ஆண்டு மக்களுக்கான ஒரு ஆண்டாக அமையும் என்றும், தமிழக உள்ளாட்சி மன்றங்கள் மேற்கொள்ளும் பல புதிய முயற்சிகளும் தமிழ் மக்களுக்கு சிறப்பானதொரு முயற்சியாக இருக்கும் என்றும், மத்திய, மாநில அரசுகளுக்குல் பல இணக்கமான சூழல்கள் ஏற்படும்படியான திடீர் திருப்பங்களும் ஏற்படும் என்று 34-ம் தீர்க்கதரிசனம் சிறப்பான ஒரு குறிப்பை தருகின்றது.

காலத்தால் மாறாத ஒரு காவியம் விரைவில் இந்திய மண்ணில் உருவாகிடும் சூழல் இந்த 2015-ம் ஆண்டு அமைய உள்ளதாகும், இதனால் இந்திய அரசு அச்சூழலில் மகத்தான பல சாதனைகளை நிகழ்த்தும் என்று 34-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.

ஏழை, எளியவர்கள் பயனடையும் வகையில் மத்திய அரசு பல திட்டங்களை உடனே நிறைவேற்றும் என்றும், அச்சமயத்தில் ஒரு “அரசியல்வாதி” நாட்டுக்கு எதிரான சதியில் ஈடுபட்டுள்ளது தெரியவரும் என்றும், அதனால் இந்திய அரசியலமைப்பில் சில கூச்சல்களும், குழப்பங்களும் உருவாகும் என்று 34-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகிறது. இச்சூழலில் மத்திய அமைச்சரவையில் பல மாற்றங்கள் உருவாகும் என்றும், மூத்த அரசியல்வாதி ஒருவரின் பணி அங்கு திடீரென்று உருவாகும் என்று 34-ம் தீர்க்கதரிசனம் மேலும் ஒரு குறிப்பை தருகின்றது.


இந்திய வான்வெளி ஆராய்ச்சியில் பல திருப்புமுனைகள் ஏற்படும் என்றும், இதுவரை உலக வான்வெளி அமைச்சகம் மேற்கொள்ளாத சாதனையை இந்திய விஞ்ஞானிகள் மேற்கொள்வார்கள் என்றும், அச்சமயத்தில் உலகமே வியப்படையும்படியான ஒரு சம்பவம் இந்திய தேசத்தில் நடக்கும் என்றும், இது இந்தியாவிற்கு பேரையும், புகழையும் ஏற்படுத்தும் என்று 34-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது.

மாநில அரசுகளுக்குள் உருவாகும் கடும் வாக்குவாதம் ஒரு சில தினங்களில் முடிவிற்கு வரும்படி சில நல்ல சம்பவங்கள் திடீர் என்று ஏற்படும் என்றும், இச்சமயத்தில் பிரபல நடிகர் ஒருவர் தனது அறிக்கையை திடீர் என்று பத்திரிக்கையின் வாயிலாகவும், ஊடகங்கள் வாயிலாகவும் வெளியிடுவார் என்றும், அச்சமயத்தில் தமிழகத்தில் பல வேண்டாத சம்பவங்கள் நடைபெறும் என்றும், இதனை யாராலும் தடுக்க முடியாது என்று 34-ம் தீர்க்கதரிசனம் மேலும் ஒரு குறிப்பை தருகின்றது.

ஆன்மீக துறையில் உள்ள ஒரு இளம் சன்னியாசி தனது தகாத செயலால் மாட்டிக்கொள்வார் என்றும், அச்சமயத்தில் அவரைப்போன்றே ஒரு மடத்தின் மடாதிபதியும் தகாத செயலுக்காக காவல்துறையால் கைது செய்யப்படுவார் என்று 34-ம் தீர்க்கதரிசனம் மேலும் ஒரு குறிப்பை தருகிறது.


தமிழக மக்களுக்கு மிகவும் நன்கு அறிமுகமாகிய ஒரு மூத்த அறிஞர் திடீரென்று மரணமடைவார் என்றும், அச்சமயத்தில் தென் தமிழகத்தில் ஒரு பிரிவினைவாதம் உருவாகும் என்றும், அச்சமயத்தில் அரசியல் தலையீடுகள் அங்கு காணப்பட்டாலும், மக்களின் ஒற்றுமையினால் அங்கு ஏற்படும் சூழல் உடனே சரியாகிவிடும் என்று 34-ம் தீர்க்கதரிசனம் மேலும் ஒரு குறிப்பை தருகின்றது.


தென் தமிழகத்தில் பிரசித்திப்பெற்ற ஒரு மடத்திலும், ஒருவரின் சமாதி அமைந்த இடத்திலும், தெய்வீக சங்கல்பங்கள் ஏற்படும் என்று 34-ம் தீர்க்கதரிசனம் மேலும் ஒரு குறிப்பை தருகின்றது.

மக்கள் சந்தோஷமும், மகிழ்ச்சியும் அடையும்படி ஒரு மாபெரும் தெய்வீக சங்கல்பம் திடீரென்று ஏற்படும் என்றும், இந்திய வரலாற்றில் இதுவே பெரிய நிகழ்வாக இருக்கும் என்று 34-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது.

-- இன்னும் தொடரும் --
ஆசிரியர்.  ஸ்ரீ யோகேஸ்வரன்

குறிப்பு :- இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை. வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்கவேண்டும். இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது. இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்டவெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள் ஒளியாக பிரகாசிக்கும்.

No comments:

Post a Comment