Friday 30 January 2015

ஆகாயத்தில் ஒரு ஒளி (பகுதி – 42)


ஆகாயத்தில் ஒரு ஒளிஎன்ற வருங்கால தீர்க்கதரிசனத்தில் இன்று நாம் காணும் தீர்க்கதரிசனத்தின்  42-ம் பகுதி ஆகும். இந்த 42-ம் தீர்க்கதரிசனப் பகுதி இவ்வுலகில் நடக்க கூடிய முக்கிய நிகழ்வுகளின் ஒரு தொகுப்பு பகுதியாகும்.

வருங்காலம் என்பது கடந்து கொண்டு இருக்கும் நிகழ்காலத்தின் அடுத்த நிகழ்வுகளைப் பற்றி இங்கு அறிந்துகொள்ள வேண்டிய முக்கிய குறிப்புகளின் தொகுப்பே அதுவென்று 42-ம் தீர்க்கதரிசனம் கூறுகிறது. அந்த வகையில் இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் நிகழ்கால தாதாக்களாக உள்ள பயங்கரவாதிகளுக்கு இக்காலம் போதாத காலமென்றும், இறைவனின் நியாயத்தீர்ப்புகள் இவர்கள் மீது இறங்கிட உள்ளதாக 42-ம் தீர்க்கதரிசனம் ஒரு குறிப்பை தருகின்றது.

Wednesday 28 January 2015

ஆகாயத்தில் ஒரு ஒளி (பகுதி – 41)


ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற வருங்கால தீர்க்கதரிசனத்தில் இன்று நாம் காணும் பகுதி 41-வது தீர்க்கதரிசன பகுதியாகும். தீர்க்கதரிசனத்திற்கும் அதை வெளிப்படுத்துபவர்களுக்கும் எப்பொழுதும் ஒரு நெருங்கிய தொடர்பு உண்டு என்பதை மக்கள் அறிய வேண்டும். எப்பொழுதும் அதனை வெளியிடும் தீர்க்கதரிசிகளின் பிறவி இரகசியம் என்பது தீர்க்கதரிசனத்தின் உண்மைகளோடு பிண்ணப்பட்டவைகளாக இருக்கும் என்று தீர்க்கதரிசன கோட்பாடுகள் தெரிவிக்கின்றன.

மற்றவர்கள் தன்னை புகழ வேண்டும் என்பதற்காகவோ, இதனைகொண்டு பணம், புகழ், செல்வாக்கு முதலியவற்றை சம்பாதிக்கவோ தீர்க்கதரிசனங்கள் வெளிப்படுத்தப்படுவதில்லை. மாறாக தீர்க்கதரிசிகள் ஒவ்வொருவரும் இறைவனின் பணிகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே என்று தீர்க்கதரிசனக் கோட்பாடுகள் தெரிவிக்கின்றன.

Monday 26 January 2015

ஆகாயத்தில் ஒரு ஒளி (பகுதி - 40)


ஆகாயத்தில் ஒரு ஒளிஎன்ற தொடரில் இன்று நாம் காணும் தீர்க்கதரிசனத்தின் பகுதி 40-வது பகுதியாகும். மக்களின் மனோதிடத்தை அதிகரிக்கும் பல சம்பவங்கள் இந்திய தேசத்தில் நடக்கும் குறிப்புகளை பற்றி தெரிவிக்கும் பகுதியே இந்த 40-வது தீர்க்கதரிசன குறிப்புகளாகும்.

இந்திய மண்ணில் பல அரசியல் மாற்றங்கள் நிகழும் காலமாக இருக்கும் என்று 40-வது தீர்க்கதரிசனம் ஒரு குறிப்பை தருகிறது. யாரும் எதிர்பாராத ஒருவர் ஆட்சி பீடத்தில் அமரும் சூழ்நிலை உருவாகலாம் என்று இந்த 40வது தீர்க்கதரிசனம் ஒரு குறிப்பை தருகிறது.

Friday 23 January 2015

ஆகாயத்தில் ஒரு ஒளி (பகுதி – 39)


ஆகாயத்தில் ஒரு ஒளிஎன்ற வருங்கால தீர்க்கதரிசனத்தில் இன்று நாம் காணும் பகுதி 39-ம் தீர்க்கதரிசனப் பகுதியில் இடம்பெறும் முக்கிய குறிப்புகளாகும்.

39-ம் தீர்க்கதரிசனத்தில் இறைவனின் அவதாரம் இப்புவியில் நிகழும் சமயத்தில் உலகத்தின் பிற தேசங்களில் மக்களை அச்சுறுத்தும் பல கொடிய சம்பவங்கள் நடக்கும் என்றும், உதாரணமாக ஊர் தெருக்களில் வினோதமான உருவ அமைப்பு கொண்ட மனிதர்கள் உலாவுவார்கள் என்றும், இவர்கள் மனித ரத்தத்தை குடிக்கும் அளவிற்கு இருப்பார்கள் என்றும், இதனை உலக நாடுகள் கண்டறிந்து அவர்களை அழிக்கும் சம்பவம்  ஒன்று நடைபெறும் என்றும், இது தீயசக்திகள் என்று அந்நாட்டு மக்கள் பயப்படும் சமயத்தில் கடவுளின் சேனைகள் அந்த நகரத்தில் இறங்கி அவர்களை முற்றிலுமாக அழிக்கும் ஒரு அதிசய நிகழ்வு நடக்கும் என்று 39-ம் தீர்க்கதரிசனம் ஒரு குறிப்பை தருகின்றது.

Wednesday 21 January 2015

ஆகாயத்தில் ஒரு ஒளி (பகுதி - 38)


ஆகாயத்தில் ஒரு ஒளிஎன்ற வருங்கால தீர்க்கதரிசனத்தில் இன்று 38-ம் பகுதியில் இடம்பெறும் தீர்க்கதரிசனங்களைப் பற்றி காண உள்ளோம்.

37-ம் தீர்க்கதரிசனத்தில் அன்னை ஆதிசக்தி இந்த இப்பூமியில் அவதாரம் மேற்கொள்ளும் குறிப்புகளைப் பற்றி நாம் தெரிந்து கொண்டோம். அதில் கடைசி குறிப்பாக அன்னையும், அவரின் ஆலயத்தையும் காண வேற்றுகிரகவாசிகள் வருவார்கள் என்று குறிப்பிட்டு இருந்தோம். இன்று 38-ம் தீர்க்கதரிசனம் அந்த வேற்றுகிரகவாசிகளைப் பற்றிய குறிப்பை தற்போது வெளியிடுகின்றது.

Monday 19 January 2015

ஆகாயத்தில் ஒரு ஒளி (பகுதி - 37)


ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற தொடரின் வாயிலாக இன்று நாம் அறிந்துகொள்ளக் கூடிய இறைவெளிப்பாட்டின் தீர்க்கதரிசனம் 37-ம் பகுதியாகும். இந்த 37-ம் தீர்க்கதரிசனம் இறைவெளிப்பாட்டின் போது இந்த பூமியில் நிகழக்கூடிய சம்பவங்களைப்பற்றிய குறிப்புகளை நமக்கு வெளிப்படுத்துகின்றன.

அதாவது இந்திய தேசத்தில் அதுவும் தமிழ்நாட்டில் மட்டுமே இறைவன் தனது முழு வெளிப்பாட்டையும் நிகழ்த்துவார் என்றும், அவரின் வெளிப்பாடு முழுமையாக நிகழ்வதற்கு முன்பே அனைத்து ஞானிகளும், சித்தர்களும், மகான்களும் தமிழகத்தில் குறிப்பாக இறைவன் அவதரிக்கும் அந்த புண்ணிய பூமியில் தாங்களாகவே முன்வந்து  கோவில் கொண்டு காத்திருப்பார்கள் என்றும், அவர்கள் அனைவரும் இறைவனுக்கு தொண்டு செய்யவும், மக்களை இறைவனை அறியும்படி செய்யவும் தமது முயற்சிகளை அம்மண்ணில் செய்திட காத்திருப்பார்கள் என்று 37-ம் தீர்க்கதரிசனம் இறைவனின் அவதாரக் குறிப்பை தெளிவுபட கூறுகிறது.

Friday 16 January 2015

ஆகாயத்தில் ஒரு ஒளி (பகுதி – 36)



“ஆகாயத்தில் ஒரு ஒளி” என்ற வருங்கால தீர்க்கதரிசனப் பகுதியில் இன்று நாம் தெரிந்து கொள்ள வேண்டிய தீர்க்கதரிசனம் 36-ம் தீர்க்கதரிசனப் பகுதியாகும். பொதுவாக தீர்க்கதரிசனங்கள் துவங்கும் நேரமும், அது முடிவடையும் நேரமும் ஒருவருக்கு தெரியக்கூடாது என்பது கடவுளின் கோட்பாடாகும். ஆனால் தீர்க்கதரிசனத்தால் மக்கள் தங்கள் வாழும் சூழ்நிலையில் நிகழும் இடர்பாடுகளை கண்டு விழிப்படைந்து, அதனால் எச்சரிக்கையுடனும், சில பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் தங்களை காப்பாற்றிக் கொள்ள முயல வேண்டும் என்பதும் கடவுளின் கோட்பாடாகும்.

இன்று 36-வது தீர்க்கதரிசனத்தில் பின்வரும் குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. அதாவது உலகத்தின் தலையெழுத்தை மாற்றக்கூடிய ஒரு மாபெரும் அழிவுச் சம்பவம் இந்த உலகின் வரைபடத்தில் தென்துருவப்பகுதியில் தற்போது நிகழக்கூடும் என்றும், அங்கு ஏற்படும் பனிப்புயலால் பாதி தேசமே காணாமல்போகும் என்றும் 36-வது தீர்க்கதரிசனம் தனது குறிப்பை இங்கு வெளிப்படுத்துகின்றது. மலையேறும் ஒரு குழு இந்த பனிப்புயலில் சிக்கி மரணத்தை சந்திப்பார்கள் என்றும், அந்த புயல் ஓய்ந்தபின் அவர்களை தேடும் முயற்சியில் ஒரு குழு ஈடுபடும் என்றும், அவர்கள் முதலில் உலகத்திலேயே அதிசயமான ஒரு மனித இனத்தை அங்கு கண்டறிவார்கள் என்று 36-ம் தீர்க்கதரிசனம் மேலும் ஒரு குறிப்பை தருகின்றது.

Wednesday 14 January 2015

ஆகாயத்தில் ஒரு ஒளி (பகுதி – 35)


ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற வருங்கால தீர்க்கதரிசனத்தில் இன்று நாம் காணும் தீர்க்கதரிசனம் 35-ம் பகுதியாகும். தீர்க்கதரிசனத்தில் கூறப்படும் கருத்துக்கள் என்பவை நிகழும் நிகழ்வின் உண்மைத்தன்மைகளை மட்டுமே எடுத்து கூறுகின்றன. ஆகையால் அவைகளின் கருத்துகளில் ஏற்ற,தாழ்வுகளை மக்கள் காணக்கூடாது என 35-ம் தீர்க்கதரிசனம் சில குறிப்புகளை தருகின்றது.

மெய்பட பேசுஎன்பது உலகளாவிய கூற்றாகும். யார் மெய்பட பேச வேண்டும் என்ற கேள்வி, யாருக்கானது என்று கடவுள் கோட்பாடுகள் ஒரு கருத்தை முன் வைக்கின்றன. மௌன விரதத்தில் இருக்கும் மனிதனுக்கு அவன் மனம் பேசாமல் இருப்பதில்லை. ஆகையால் அங்கு உண்மை என்பது ஊமையாக காட்சியளிக்கிறது.

தன்னலம் கருதாது பிறர் நலம் கருத வேண்டும் என்ற கூற்று ஆன்றோர்களின் அறிவுரையாகும். இன்று யார் தன்னலம் கருதாது பிறர் நலத்தை கருதி சேவை செய்கின்றனர், செய்யும் சேவையை பிறருக்கு எடுத்துக்கூற தன் சேவையை போட்டோ எடுத்து மற்றவரிடம் காட்டும்போது, அதை பார்க்கும் பார்வையாளருக்கு அவர்மேல் பொறாமை அல்லவா ஏற்படும்படி செய்து விடுகிறது. இது சரியான செயலா? உண்மையில் இது சுயநலமா? பொதுநலமா? என்ற கேள்வி எழலாம்.