Friday 8 June 2018

ஆகாயத்தில் ஒரு ஒளி (அத்தியாயம் - 3)
சத்திய யுகம் (பகுதி 16)

ஆகாயத்தில் ஒரு ஒளி (அத்தியாயம் - 3)
சத்திய யுகம் (பகுதி 16)
(பதினாறாம் தீர்க்கதரிசனம்)

    ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொழுதும் மனிதனுடைய வாழ்க்கையில் பலவித சம்பவங்கள் நடப்பதுண்டு. அதைப் போன்றுதான் இந்த பிரபஞ்சத்திலும் தினசரி பல சம்பவங்கள் நிகழ்ந்தவண்ணம் உள்ளன. அவைகளை மனித சமூகம் அறிய முடியாமல் இருந்து வந்துள்ளனர் என்பதே உண்மை.


    இனி நிகழ்கால உண்மைகளாக, இந்த பிரபஞ்சத்தில் நிகழக்கூடிய அனைத்து நிகழ்வுகளையும் உலகத்தில் உள்ள மனித சமூகம் காணப் போகின்றது என்று நமது “சத்திய யுகம்“ எனும் வருங்கால தீர்க்கதரிசனத்தின் 16-ம் பகுதி ஒரு உண்மையை மெய்பட கூறுகின்றது.

Friday 1 June 2018

ஆகாயத்தில் ஒரு ஒளி (அத்தியாயம் - 3)
சத்திய யுகம் (பகுதி 15)

ஆகாயத்தில் ஒரு ஒளி (அத்தியாயம் - 3)
சத்திய யுகம் (பகுதி 15)
(பதினைந்தாம் தீர்க்கதரிசனம்)


“காலத்தால் அழிக்க முடியாத இறை காவியம் ஒன்று இப்பூமியில் விரைவில் அரங்கேற்றப்பட உள்ளது“, இதனை தீர்க்கதரிசிகளின் தீர்க்கதரிசனங்கள் கடந்த 1000 வருடங்களாக இப்புவியில் தனது வெளிப்பாட்டினை வசனங்களாக வெளிப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் சத்திய யுகத்தின் தீர்க்கதரிசனங்களும் பல்வேறு காலக் கட்டங்களில் இறைவன், மனிதர்கள் வாயிலாக இப்புவியில் நடக்கும் பல மாற்றங்கள், சம்பவங்கள், அரசியல் பிண்ணணிகள், புவியின் மாற்றங்கள், அழிவுச் சம்பவங்கள், இயற்கையின் மாற்றங்கள், வானிலை மாற்றங்கள், இறை அதிசயங்கள் போன்றவற்றை தீர்க்கதரிசனங்களாக வெளிப்படுத்தி வருகிறார்.


பொதுவாக மனிதர்கள் தன்னை சுற்றி நடக்கும் பல சம்பவங்கள் சூழ்நிலைக் காரணங்களை மட்டுமே உண்மை என நம்பி வருகின்றனர். ஆனால் அது உண்மை அன்று. அது அனைத்துமே இறைவன் மனிதகுலத்திற்கு தரும் ஒரு எச்சரிக்கை செய்தியே ஆகும். இதுவே இன்று சத்திய யுகத்தில் மனிதகுலம் அறிய வேண்டிய தீர்க்கதரிசனங்கள் ஆகும்.