Wednesday, 21 January 2015

ஆகாயத்தில் ஒரு ஒளி (பகுதி - 38)


ஆகாயத்தில் ஒரு ஒளிஎன்ற வருங்கால தீர்க்கதரிசனத்தில் இன்று 38-ம் பகுதியில் இடம்பெறும் தீர்க்கதரிசனங்களைப் பற்றி காண உள்ளோம்.

37-ம் தீர்க்கதரிசனத்தில் அன்னை ஆதிசக்தி இந்த இப்பூமியில் அவதாரம் மேற்கொள்ளும் குறிப்புகளைப் பற்றி நாம் தெரிந்து கொண்டோம். அதில் கடைசி குறிப்பாக அன்னையும், அவரின் ஆலயத்தையும் காண வேற்றுகிரகவாசிகள் வருவார்கள் என்று குறிப்பிட்டு இருந்தோம். இன்று 38-ம் தீர்க்கதரிசனம் அந்த வேற்றுகிரகவாசிகளைப் பற்றிய குறிப்பை தற்போது வெளியிடுகின்றது.




38-ம் தீர்க்கதரிசனத்தின்படி வேற்றுகிரகவாசிகளின் ஒரு குழு ஏற்கனவே இந்த பூமியில் தரையிறங்கி மறைந்து வசித்து வருவதாகவும், அவர்கள் உலக நாடுகள் முழுவதும் பரந்து உள்ளனர் என்று 38-ம் தீர்க்கதரிசனம் ஒரு குறிப்பை தருகின்றது. மேலும் இவர்கள் பூமியின் சுற்றுவட்டப்பாதையை அறிந்து நமது பூமிக்கு வர நமது சித்தர்களே காரணம் என்றும், இதே போன்று அவர்கள் (வேற்றுகிரகவாசிகள்) உலகத்திலும் அவர்களுக்குள்ளேசித்த தன்மைக்கு உயர்ந்தவேற்றுகிரகவாசிகள் பலர் சித்தர்களாக உள்ளனர் என்று 38-ம் தீர்க்கதரிசனம் அரிய ஒரு குறிப்பை இங்கு வெளிப்படுத்துகின்றது. வேற்றுகிரக சித்தர்களும், நமது பூமியில் நிலைகொண்டுள்ள சித்தர்களும் அன்னையின் அவதாரச் செய்திகளை ஒருவருவருக்கு ஒருவர் பகிர்ந்துகொண்டு, அந்த வேற்று கிரகவாசிகள் பூமிக்கு வர உரிய வழிகளை அமைத்துக் கொடுத்துள்ளதாக 38-ம் தீர்க்கதரிசனம் மேலும் குறிப்பை தருகின்றது.


பூமியில் ஏற்கனவே வந்திறங்கிய வேற்றுகிரக வாசிகளின் ஓடங்கள் இந்த பூமியில் கடலிலும், பெரிய நீர் நிலைகளிலும் மறைத்து வைக்கப்பட்டுள்ளது என்றும், பூமியின் அதிர்வுக்கும், கடலின் கொந்தளிப்புக்கும் இவர்களின் வருகையும் கூட காரணம் என்று 38-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது. இந்திய தேசத்திலும் இவர்கள் உள்ளார்கள் என்றும், குறிப்பாக தமிழகத்தில் சித்தர்கள் நிலைகொண்டு வாழ்ந்த மலைப்பிரதேசங்களில் தற்போது இவர்கள் வசிக்கிறார்கள் என்றும், இவர்களை சில மலைவாழ் மக்கள் கண்டுள்ளனர் என்றும், இவர்களை அந்த மலைவாழ் மக்கள் குள்ள மனிதர்கள் என்று அடைமொழியிட்டு குறிப்பிட்டுள்ளனர் என்றும், இதனை ஊடகங்கள் தவறான பெயரில் பல திகில் சம்பவங்களின் தொகுப்புகளாக (நிகழ்ச்சிகள்) சித்தரித்து காட்டியுள்ளனர் என்று 38-ம் தீர்க்கதரிசனம் இங்கு ஒரு இரகசியத்தை வெளிப்படுத்துகிறது.


இனி பூமியெங்கும் அவர்களின் நடமாட்டம் தென்படும் என்றும், ஆனால் உருவத்தை அரிதாகவே காண முடியும் என்றும் 38-ம் தீர்க்கதரிசனம் ஒரு குறிப்பை தருகின்றது. தமிழகத்தில் சென்னைக்கு மிக அருகே உள்ள ஒரு கடல் பகுதியில் இவர்களின் பறக்கும்தட்டு மறைத்து வைக்கப்பட்டுள்ளது என்றும், அடுத்த சுனாமியின் போது இது மக்களின் கண்களில் தென்படும்படி ஒரு நிகழ்வு நடக்கும் என்றும், அங்கு அதனை ஏன் அவர்கள் மறைத்து வைக்க வேண்டும் என்ற கேள்வியை உலக விஞ்ஞானிகள் எழுப்புவார்கள் என்றும், அப்பொழுதுதான் அவர்கள் மனிதகுலத்தை காக்க வந்தவர்கள் என்ற உண்மை தெரியவரும் என்று 38-ம் தீர்க்கதரிசனம் ஒரு குறிப்பை தருகின்றது.


வேற்றுகிரகவாசிகள் நமது இந்திய தேசத்து மண்ணில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நடமாடி உள்ளனர் என்றும், பஞ்ச பாண்டவர் போரின் போது இவர்களின் பங்கு அங்கு இருந்தது என்றும், இதனை தற்சமயம் தொல்பொருள் ஆய்வாளர்கள் வடஇந்திய மண்ணில் கண்டறிந்து உலகத்திற்கு வெளிச்சமிட்டு காட்டுவார்கள் என்றும், அச்சமயத்தில் நாம் வெளியிடும் தீர்க்கதரிசனத்தின் மீதுநாசாதனது கவனத்தை மேற்கொள்ளும் என்றும், இந்த பூமி எத்தகைய மகிமையையில் இருந்துள்ளது என்ற உண்மை இதன்வாயிலாக உலக மக்கள் அறிந்து கொள்வார்கள் என்று 38-ம் தீர்க்கதரிசன குறிப்புகள் தெரிவிக்கின்றன.

இந்திய தேசத்தில் இமயமலையின் வடபகுதி, குஜராத், மராட்டியம், வடமும்பையின் கடல்பகுதி, கேரளாவின் தென்கடற்கரை, தமிழகத்தின் தென்பகுதி மலைப்பிரதேசங்கள் இவைகள் அனைத்துமே நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய இடங்கள் என்றும் 38-ம் தீர்க்கதரிசனம் ஒரு விஞ்ஞானம் சார்ந்த குறிப்பை தருகின்றது.

ஏற்கனவே இந்தியாவில் வேற்றுகிரகவாசிகள் பற்றிய ஆய்வை ஒரு தனியார் நிறுவனம் பெரும் முதலீட்டில் துவங்கிவிட்டது என்றும், இதனை இன்றுவரை இந்திய அரசுக்கு அது தெரியாது என்றும், இனி அந்த நிறுவனத்தைப் பற்றிய குறிப்பை ஒரு உளவு நிறுவனம் தனது இணைய தளத்தில் வெளியிட்டு ஒரு பெரிய பரபரப்பை ஏற்படுத்தும் என்றும், அதுவரை உலக மக்கள் மற்றும் இந்திய மக்களுக்கு இது தெரியாது என்றும், அதற்கு முன்  நமது தீர்க்கதரிசனத்தின் வழியே உலக மக்கள் இச்செய்தியினை அறிந்து ஆச்சர்யப்படும் வேளையிலே அந்த தனியார் அமைப்பை பற்றி செய்தி இணைய தளத்தில் அப்பொழுது வெளியாகும் என்று 38-ம் தீர்க்கதரிசனம் ஒரு குறிப்பை தருகிறது.

30 ஹெர்ட்ஸ் என்ற குறைந்த அலைவரிசையில் இவர்களின் சமிக்கைகள் (வேற்றுகிரகவாசிகளின் பரிமாற்ற தகவல்கள்) இந்த பூமியில் பயணித்து வருவதாகவும் 38-ம் தீர்க்கதரிசனம் புரியாத புதிருக்கு விடையாக ஒரு குறிப்பை தருகின்றது.

-- இன்னும் தொடரும் --
ஆசிரியர்.  ஸ்ரீ யோகேஸ்வரன்

குறிப்பு :- இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை. வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்கவேண்டும். இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது. இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்டவெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள் ஒளியாக பிரகாசிக்கும்.




3 comments:

  1. பாடலுக்கான பொருளை சரியாக புரிந்து கொண்டு வியாக்கியானம் செய்யாததால் இந்த அத்தியாயம் 38 முழுக்க. வீணாகி போய்விட்டது

    ReplyDelete