ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற வருங்கால தீர்க்கதரிசனத்தில் இன்று நாம் காணும் தீர்க்கதரிசனம் 35-ம் பகுதியாகும். தீர்க்கதரிசனத்தில் கூறப்படும் கருத்துக்கள் என்பவை நிகழும் நிகழ்வின் உண்மைத்தன்மைகளை மட்டுமே எடுத்து கூறுகின்றன. ஆகையால் அவைகளின் கருத்துகளில் ஏற்ற,தாழ்வுகளை மக்கள் காணக்கூடாது என 35-ம் தீர்க்கதரிசனம் சில குறிப்புகளை தருகின்றது.
“மெய்பட பேசு” என்பது உலகளாவிய கூற்றாகும். யார் மெய்பட பேச வேண்டும் என்ற கேள்வி, யாருக்கானது என்று கடவுள் கோட்பாடுகள் ஒரு கருத்தை முன் வைக்கின்றன. மௌன விரதத்தில் இருக்கும் மனிதனுக்கு அவன் மனம் பேசாமல் இருப்பதில்லை. ஆகையால் அங்கு உண்மை என்பது ஊமையாக காட்சியளிக்கிறது.
“தன்னலம் கருதாது பிறர் நலம் கருத வேண்டும்” என்ற கூற்று ஆன்றோர்களின் அறிவுரையாகும். இன்று யார் தன்னலம் கருதாது பிறர் நலத்தை கருதி சேவை செய்கின்றனர், செய்யும் சேவையை பிறருக்கு எடுத்துக்கூற தன் சேவையை போட்டோ எடுத்து மற்றவரிடம் காட்டும்போது, அதை பார்க்கும் பார்வையாளருக்கு அவர்மேல் பொறாமை அல்லவா ஏற்படும்படி செய்து விடுகிறது. இது சரியான செயலா? உண்மையில் இது சுயநலமா? பொதுநலமா? என்ற கேள்வி எழலாம்.
34-ம் தீர்க்கதரிசனம் இங்கு ஒரு முக்கிய குறிப்பை தெரிவிக்கின்றது. அதாவது தீர்க்கதரிசனங்கள் என்பவை பொதுநலன் கருதி வெளியிடுபவை. பிறரின் நலன் கருதி வெளியிடுபவை. இதில் எந்த ஒரு தனி மனிதருக்கும் பிரதிபலன் இல்லை என மக்கள் கருத வேண்டும் என அறிவுறுத்துகிறது. எழுத்துப்பணிகள் என்பவை சிறப்பானவை. அதில் எந்த அளவிற்கு சமூகத்தின் நலன் உள்ளது என காண வேண்டும் என்று 34-ம் தீர்க்கதரிசனம் இங்கு ஒரு அறிவுரையை முன் வைக்கின்றது. மக்கள் தீர்க்கதரிசனத்தின் மீது முழுமையான நம்பிக்கை கொள்ள வேண்டும் என்றும், இதற்கு கடவுள், மதம், சாதி என்ற சாயப்பூசல்களை பூசி கலங்கப்படுத்தக் கூடாது என தனது கோட்பாட்டை முன் வைக்கின்றது.
இந்திய இறையாண்மை என்பது நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் நன்மை பயப்பதாக இருக்க வேண்டும் என்றும், அத்தகைய சூழல்கள் இந்தியாவில் ஆன்மீக பாதையில் மட்டுமே நிச்சயம் உருவாகும் என்றும், அது உடனே நிகழக்கூடிய முக்கிய நிகழ்வாக இந்திய தேசத்தில் உருவாகி ஒரு ஆன்மீக புரட்சியை ஏற்படுத்தும் என்றும், இதுவே 34-ம் தீர்க்கதரிசனம் ஒரு குறிப்பாக தனது வெளிப்பாட்டை வெளிப்படுத்துகின்றது. அதுமட்டுமின்றி இந்தியாவிலிருந்து உருவாகும் ஒரு ஆன்மீக அமைப்பே உலகத்தையே தனது குடைக்குள் கொண்டு வந்து நல்லாட்சி புரியும் என்றும், அதனை இறைவனே முழுமையாக ஏற்படுத்துவார் என்று 34-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது.
இராமர் வாழ்ந்த அயோத்தியில் ஒரு மாபெரும் ஆன்மீக மறுமலர்ச்சி உருவாகும் என்றும், இந்து, முஸ்லிம்களுக்குள் ஒரு மாபெரும் நல்இணக்கம் ஏற்பட்டு மாபெரும் ஒற்றுமை ஏற்படும் என்றும், இந்திய வரலாற்றில் இது ஒரு மைல்கல்லாக அமையும் என்று 34-ம் தீர்க்கதரிசனம் ஒரு குறிப்பை தருகின்றது.
இந்திய வாலிபர் ஒருவருக்கு “மதநல்லிணக்கத்திற்காக” நோபல் பரிசு ஒன்று வழங்கப்படும் என்றும், இது அதிவிரைவாக நடக்கக்கூடிய மகத்தான செயல் என்று 34-ம் தீர்க்கதரிசனம் ஒரு அரிய குறிப்பை வெளிப்படுத்துகின்றது.
கலியுகக் கடவுளான ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா மீண்டும் தனது ஆத்மாவை இந்திய தேசத்தில் பதிய வைக்கும் ஒரு நிகழ்வு நடக்க உள்ளது என்றும், அச்சம்பவம் நடைபெறும் தினம் கிருஷ்ணர் பிறந்த ஒரு தினமாக உலக நாடுகள் கொண்டாடும் ஒரு தினத்தன்று நடைபெறும் என்றும், இதுவே இவ்வுலகில் “ஸ்ரீகல்கி” அவதாரம் பிறந்து விட்டதற்கான சான்று என்றும், அத்தருணத்தில் இந்திய தேசத்தின் கடல்மீது ஒரு அதிசயம் நடைபெறும் என்றும் “கோவர்த்தன” மலைப்பற்றிய இரகசியம் ஒன்று மக்களுக்கு வெளிப்படும் என்று 34-ம் தீர்க்கதரிசனம் ஒரு மகத்தான குறிப்பை தருகின்றது.
பார் போற்றும் பாரிவேந்தன் வாழ்ந்த தேசத்தில் ஒரு மகத்தான கல்வெட்டு கிடைக்கும் என்றும், அதில் தமிழர்களின் பாரம்பரியம் தழுவிய ஒரு அரியச் செய்தி கிட்டும் என்றும், இது ஒரு மகத்தான குறிப்பாக அன்று விளங்கும் என்று 34-ம் தீர்க்கதரிசனம் மேலும் ஒரு குறிப்பை தருகின்றது.
“ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரம்” நினைவில்கொள்ள வேண்டிய அரிய பொக்கிஷம் என்றும், அதற்குரிய தோரணையுடன் தமிழகத்தில் மீண்டும் மாபெரும் ஒரு ஆலயக் கோபுரம் உருவாக்கப்படும் என்றும், இது வரலாற்றில் இடம் பெறும் என்று 34-ம் தீர்க்கதரிசனம் மேலும் ஒரு குறிப்பை தருகின்றது.
--
இன்னும்
தொடரும்
--
ஆசிரியர்.
ஸ்ரீ
யோகேஸ்வரன்
குறிப்பு :- இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை. வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்கவேண்டும். இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது. இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்டவெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள் ஒளியாக பிரகாசிக்கும்.
No comments:
Post a Comment