Monday, 5 January 2015

ஆகாயத்தில் ஒரு ஒளி (பகுதி - 31)


ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற வருங்கால தீர்க்கதரிசனத் தொடரில் இடம்பெறும் ஒவ்வொரு தீர்க்கதரிசனங்களும் மக்களின் வாழ்க்கை தரத்தோடும், இந்த பிரபஞ்சத்தோடும் எவ்வளவு நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ளன என்று இதனை படிக்கும் அனைவரும் உணர வேண்டும் என்று கடவுள் கோட்பாடுகள் தெரிவிக்கின்றன.

மதத்தில் உள்ள மார்கங்கள் யாவும் இந்த உலகில் கடவுளின் இரகசியத்தைப் பற்றியும், அதன் புனிதத்தைப்பற்றியும் தெரிவிப்பதோடு மட்டுமின்றி அவர்களின் லோகங்களை (வசிக்கும் இடங்கள்) பற்றியும் எடுத்துக் கூறுபவைகளாக இருக்கின்றன. மனிதனோ இதில் உள்ள உண்மைகளை ஆழ்ந்து கவனிப்பதை விட்டு, விட்டு தன் சுயநல தேவைகளுக்காக கடவுளை நோக்கி வணங்கும் நிலைக்கே ஆளாக்கப்பட்டு உள்ளான் என்று கடவுள் கோட்பாடுகள் தெரிவிக்கின்றன.


உலகத்தில் உள்ள அனைத்து மக்களையும் பொதுவாக “மனிதர்கள்என்று நாம் ஒரே பெயரில் அழைத்தாலும், அவர்களின் தோற்றத்திலும், முக அமைப்பிலும், நடை, உடை, பாவனைகளிலும், கலாச்சார பண்புகளிலும் நாட்டுக்கு நாடு அவர்கள் வித்தியாசப்பட்டு காணப்படுகின்றனர். அதே போன்றுதான்கடவுள்என்ற பெயர் ஒன்றாக இருப்பினும் நாட்டுக்கு நாடு, மனிதர்களின் கலாச்சாரத்திற்கு ஏற்றவகையில் கடவுளும் தன் உருவத்தை மாற்றி, மாற்றி வேறுபாடுகளை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் மனிதன் எப்படி கடவுளின்மீது நம்பிக்கை கொண்டுள்ளானோ அதே போன்று கடவுளும் மனிதன் மேல் முழுநம்பிக்கை உடையவராக இருப்பதாக கடவுள் கோட்பாடுகள் தெரிவிக்கின்றன. சீரிய முயற்சியுடைய மனிதர்களுக்கு மட்டுமே கடவுளின் வெளிப்பாடுகள் உடனே கிடைத்துவிடும் என்று கடவுள் கோட்பாடுகள் சில உண்மைகளை தெரிவிக்கின்றன.

ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற இந்த தொடரில் இன்று இடம் பெறும் தீர்க்கதரிசனம் 31-வது தீர்க்கதரிசனம் ஆகும். இந்த 31-வது தீர்க்கதரிசனம் எதைப்பற்றி இங்கு தெரிவிக்கின்றது என அறிந்து கொள்வோம். அதாவது நமது முன்னோர்கள் கடவுளின் மீது கொண்டிருந்த நம்பிக்கையின் மீதும், அவர்கள் தர்மத்தை நிலைநாட்டிட மேற்கொண்ட வாழ்வியல் முயற்சிகளுக்காகவும், தங்களுடைய வம்சாவழி  குலமான மக்கள் இனத்தை காக்க வேண்டும் என்ற நல் எண்ணத்திற்காகவும், கடவுள் மக்கள் மீது கொண்ட நம்பிக்கையை வெளிப்படுத்தும் விதமாக அவரின் வருகை என்பது, “மக்கள் குலத்திற்காக மட்டுமே என்பதை 31-ம் தீர்க்கதரிசனம் அறுதியிட்டு கூறுகிறது. அதாவது மனிதகுலம் ஒரு மாபெரும் உலக அழிவை சந்திக்கும் சூழல் நேரிடும் சமயத்தில் இறைவன், கடவுளின் வடிவத்தில் (புதிய பரிணாமத்தில்) மீண்டும் இப்புவியில் தோன்றி தனது அற்புதத்தால் மக்களை காக்க வருவார் என்றும், இது மிக, மிக சமீபமாக நடக்ககூடிய அற்புதமான நிகழ்வு என்று 31-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது.


நமக்கு பூமியைப் போன்று ஒரு வாழ்விடம் உள்ளது போன்று, இறைவனுக்கும் அவரின் சேவகர்களுக்கும் ஒரு புனித வாழ்விடம் உண்டு என்றும், ஆனால் அவருக்கு என்று எவ்வித பாகுபாடும், எவ்வித கலாச்சார மாற்றங்களும், பேதங்களும் இல்லை என்று 31-ம் தீர்க்கதரிசனம் இங்கு ஒரு குறிப்பை தருகிறது.



இறைவன் குடிகொண்டுள்ள அந்த புண்ணிய லோகத்திற்கு “சத்திய உலகம் என்றும், ஆதிசக்திபுரம் என்றும் வேதங்கள் குறிப்பிடுவதாக 31-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது. ஆக கடவுள் என்ற நிலைகளுக்கும் ஒரு உலகம் உண்டு என 31-ம் தீர்க்கதரிசனம் இங்கு ஒரு குறிப்பை தருகிறது.

இறைவன் குடிகொண்டுள்ள அந்த சத்திய லோகம்(உலகம்) பல ஒளி பொருந்திய பிரபஞ்சத்திற்கு நடுவே நடுநிலையோடு எல்லாவிதமான வளங்களோடு இருப்பதாகவும், அங்கே வசிக்க கூடிய இறைவனும், அவரின் சேவகர்களும் ஒளி பொருந்திய வடிவத்தினர் என்றும் 31-ம் தீர்க்கதரிசனம் ஒரு குறிப்பை தருகிறது.

இறைவன் தன்னுடைய லோகத்தைவிட்டு பூமியில் ஒளி பொருந்தியவராக வந்து இறங்கும் நேரம் வந்துவிட்டது என்றும், அவரின் வருகைக்கு முன்பாக இந்த பிரபஞ்சத்தில் பல வானியல் அதிசயங்கள் தென்படும் என்றும், அப்பொழுது பல புனிதர்கள் ஆவி உடலோடு பூலோகத்தில் தோன்றி அவரின் வருகையைப்பற்றி முன்னறிவிப்பார்கள் என்றும், அச்சமயத்தில் வேற்றுகிரக வாசிகளும் இப்பூமிக்கு இடம்பெயரும் சம்பவம் நடைபெறும் என்றும், இதனை உலகமே கண்டு வியப்படையும் என்று 31-ம் தீர்க்கதரிசனம் மேலும் ஒரு அரிய குறிப்பை தருகின்றது.


31-ம் தீர்க்கதரிசனத்தின்படி கடவுளின் வருகை நடப்பதற்கு முன் ஐரோப்பிய நாடுகள், கிழக்கு ஆசிய நாடுகளில் மாபெரும் அழிவுச் சம்பவங்கள் துவங்கி நடைபெற்று வரும் என்றும், அடுத்த உலகப் போருக்கான ஒத்திகைக்கு பிற நாடுகள் தயார் ஆகும் என்றும், அமெரிக்காவின் தலையெழுத்து அப்பொழுது மாறுபாடு அடையும் என்றும்,  கம்ப்யூட்டர் யுகம் என்பது அப்பொழுது மாற்றத்திற்கு உள்ளாகும் என்றும், அச்சமயத்தில் விஞ்ஞானத்திற்கே சவால்விடும் பல சம்பவங்கள் இந்த பூமியெங்கும் தொடர்ந்து நடக்கும் என்று 31-ம் தீர்க்கதரிசனம் எச்சரிக்கை செய்கிறது.

ஆகவே சத்திய யுகத்திலிருந்து (சத்தியலோகம்) வருகை தரும் இறைவனை வரவேற்க மக்களாகிய நாம் அனைவரும் தயாராக இருக்க வேண்டும் என கடவுள் கோட்பாடுகள் இங்கு சிறப்பான ஒரு குறிப்பை தருகின்றது. யுகம் போற்றும் இறைவனின் வருகை இப்புவியில் நிகழும் என்பது கடந்தகால வரலாற்றில் எழுதப்பட்ட நிஐமான கூற்றாகும்.

-- இன்னும் தொடரும் --
ஆசிரியர்.  ஸ்ரீ யோகேஸ்வரன்

குறிப்பு :- இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை. வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்கவேண்டும். இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது. இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்டவெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள் ஒளியாக பிரகாசிக்கும்.

No comments:

Post a Comment