உண்மைகள் உறங்குவதில்லை
(9-ம் தீர்க்கதரிசனம் பகுதி)
“உண்மைகள் உறங்குவதில்லை“ என்ற இந்த வருங்கால தீர்க்க தரிசனப் பகுதியில் இன்று இடம் பெறுவது 9-ம் தீர்க்கதரிசனப் பகுதியாகும். இந்த 9-ம் தீர்க்கதரிசனத்தில் இடம் பெற உள்ள குறிப்புகள் யாவும் அதிவிரைவாக நடக்ககூடிய சம்பவங்களின் தொகுப்பே இப்பகுதியாகும்.
9-ம் தீர்க்கதரிசனத்தில் நாம் முதலாவதாக காண இருப்பது “வருங்காலம்“ என்பது தற்போதைய சூழ்நிலையில் மிகவும் வருந்தத்தக்க பல அரசியல் சம்பவங்களின் பின்னணியை கொண்ட சம்பவங்களின் தொகுப்பாக அது இருக்கிறது என்றும், அதில் மூத்த அரசியல் தலைவர் ஒருவரின் மரணம் உடனே நிகழ இருப்பதாகவும், அது நிகழ்ந்த 7-ம் தினத்தில் தமிழகத்தின் தென்பகுதியில் ஒரு அழிவுச் சம்பவம் நிகழ உள்ளதாக 9-ம் தீர்க்கதரிசனம் தனது முதல் குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.
“கபடவேடதாரியாக“ வலம் வந்து கொண்டுள்ள ஒரு ஆன்மீகவாதியின் திட்டமிட்ட சதி ஒன்று தற்போது அம்பலமாகும் என்றும், இதன் பின்னணியில் ஒரு சமூக அமைப்பு இருக்கும் என்றும், இதில் மூத்த அரசியல் தலைவரின் பங்கு இருக்கும் என்றும், அதனை உளவுத்துறை கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்கும் என்று 9-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.
“செஞ்சி“ கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு பகுதி என்றும், அங்கு இயற்கை சார்ந்த ஒரு பேரழிவு ஏற்பட உள்ளதாகவும், இதனை மக்கள் வரும் முன் அறிந்தால் பெரும் இழப்பு தவிர்க்க முடியும் என்று 9-ம் தீர்க்கதரிசனம் இங்கு மற்றொரு குறிப்பை பதிவு செய்கிறது. வரும் தமிழ் மாதத்தில் மகத்தான ஒரு அரிய நிகழ்வு “வானில்“ நடக்க உள்ளதாகவும், “ஆகாயத்தில் ஒரு ஒளி“ என்ற நமது வருங்கால தீர்க்கதரிசனத்தில் நாம் ஏற்கனவே வெளியிட்ட 18-ம் தீர்க்கதரிசனம் நடக்கும் காலமாக இக்காலம் அமையும் என்று 9-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.
“சோழவந்தான்“, “மயிலாடுதுறை“,“வாழவந்திநாடு“, உட்கோம்பை, பட்டிப்பாடி, வேலூர், ஏற்காட்டின் தென்வலப்பகுதி, அரூர், தேவக்கோட்டை, உரியூர், உசிலம்பட்டி, ஏரியூர், அரவங்குறிச்சி, தூக்கணாம்பாளையம், சோலையூர், வந்தவாசி, அருப்புக்கோட்டை, கீழ்நிலைப்பட்டி, ஆத்தூர், நடுவூர், நல்லூர், எருமைப்பட்டி ஆகிய ஊர்களில் விசித்திர சம்பவங்கள் பல நடக்கும் என்றும், இச்செய்திகள் செய்தித்தாள்கள், மீடியாக்களில் இடம்பெறும் சமயத்தில் “கீழ்நிலை“ எனும் சொல்படி பொருள் கொண்ட ஒரு ஊரில் மகத்தான தெய்வீக சங்கல்பம் ஒன்று நடக்க போவதாக 9-ம் தீர்க்கதரிசனம் இங்கு ஒரு குறிப்பை பதிவு செய்கிறது.
தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் புயல் மழை பெரும் சேதத்தை ஏற்படுத்துவதாக இருக்கும் என்றும், இது நிகழும் காலம் தற்போது துவங்கிவிட்டது என்றும், வரலாற்றில் ஒரு மிகப்பெரிய நதி நிரம்பி ஒரு மாநிலத்தையே நிலைகுலையச் செய்யும் என்றும், இச்சமயத்தில் நாம் ஏற்கனவே வெளியிட்ட உண்மைகள் உறங்குவதில்லை என்ற 7-ம் தீர்க்கதரிசனத்தில் குறிப்பிட்ட ஒரு முக்கிய சம்பவம் நடந்தேறிடும் என்று 9-ம் தீர்க்கதரிசனம் இங்கு மற்றொரு குறிப்பை தருகின்றது.
பம்பாய், குஜராத், மல்லேஸ்வர் என்ற பகுதிகளில் பல திடுக்கிடும் தொடர் சம்பவங்கள் நடக்க உள்ளதாகவும், காவேரி துவங்கும் இடத்தில் ஒரு தெய்வீக சங்கல்பம் துவங்கும் என்றும், இதன் எதிரொலியாக வடதேசத்தில் ஒரு மகா புண்ணியத் சேத்திரத்தில் மழைநீரால் பெரும் சேதம் ஒன்று நடைபெற உள்ளதாக 9-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை நமக்கு தெரிவிக்கின்றது.
இமயத்தில் இன்றும் உயிரோடு வாழ்ந்து வரும் ஒரு மகா ஞானியின் உருவத்தை புண்ணிய யாத்திரை மேற்கொள்ளும் பல பக்தர்கள் காண்பார்கள் என்றும், அதே சமயத்தில் அவரின் திருவுருவ காட்சியை சென்னையில் உள்ள ஒரு மடத்தில் உள்ள சீடர்கள் காணும் பாக்கியத்தை பெறுவார்கள் என்ற அற்புத செய்தியை 9-ம் தீர்க்கதரிசனம் இங்கு குறிப்பிடுகின்றது.
“நாளைய நாயகன்“ இவரென்று மக்கள் முடிவெடுக்கும் இச்சமயத்தில் ஆன்மீகத்தில் ஒரு செய்தி பல நாடுகளில் ஒரே சமயத்தில் பரவி பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் என்றும், இந்திய திருநாட்டை உலக ஆன்மீக பக்தர்கள் வியப்புடன் பார்க்கும்படி இச்சம்பவம் நடந்தேறிட உள்ளதாக 9-ம் தீர்க்கதரிசனம் இங்கு ஒரு புதிய செய்தியை பதிவு செய்கிறது. இச்சம்பவத்தால் உலகம் இந்தியாவை ஒரு புண்ணிய பூமியாக பார்க்கும்படி அமைய உள்ளதாக 9-ம் தீர்க்கதரிசனம் தனது கருத்தை இங்கு ஆழமாக பதிவு செய்கிறது.
கிறிஸ்துவர்கள் எதிர்நோக்கும் அந்த புனிதரின் வருகையை குறித்து சென்னையில் உள்ள ஒரு பெண்கள் கிறிஸ்துவ சபை தனது அறிக்கையை ஒரு தனியார் தொலைக்காட்சியில் தற்போது பதிவு செய்ய உள்ளதாகவும், அச்சபை வெளியிடும் செய்திக்குறிப்பில் இதுவரை யாருமே எதிர்பாராத ஒரு “இந்து அமைப்பை“ பற்றிய செய்தியை அவர்கள் வெளியிடுவார்கள் என்றும், இச்செய்தி விரைந்து உலகம் முழுவதும் பரவி பரபரப்பை ஏற்படுத்தும் என்று 9-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை இங்கு பதிவு செய்கிறது.
“நாளைய வரலாறு“ துவங்கி விட்டது என்றும், இது கலிகாலம் நீங்கி சத்தியயுகம் அவதரிக்கும் காலம் என்றும், நீதிமான்கள் வாழும் தேசமாக நமது இந்திய தேசம் வீற்றிருக்கும் இச்சமயத்தில் “வான்மண்டல போர்“ ஒன்று தற்போது வருகிறது என்றும், இதனால் வான்மண்டல வீதியில் பல சம்பவங்கள் நடந்தேறிடும் என்றும், இதனை விஞ்ஞானிகள் கண்டு அச்சப்படுவதோடு மட்டுமின்றி மிகுந்த ஆச்சர்யத்திற்குள் ஆழ்வார்கள் என்று 9-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை பதிவு செய்கிறது.
கிருஷ்ணர் வாழ்ந்த புண்ணிய பூமியிலிருந்து ஒரு மகா பூமி திரட்டு கடலிருந்து கண்டெடுப்பார்கள் என்றும், ஸ்ரீகிருஷ்ணபரமாத்மாவின் அடுத்த அவதாரமான “கல்கி“ அவதாரத்தைப் பற்றிய ஒரு மகா குறிப்பு அந்த பூமி திரட்டில் இடம் பெற்றுள்ளதை இந்த உலகமே காணும் அதிசிய நிகழ்வு ஒன்று நடக்க உள்ளதாகவும், இச்சமயத்தில் “ஆகாயத்தில் ஒரு ஒளி“ என்ற நமது வருங்கால தீர்க்க தரிசனத்தில் நாம் ஏற்கனவே வெளியிட்டுள்ள 42-வது தீர்க்கதரிசனத்தில் குறிப்பிட்ட ஒரு முக்கிய சம்பவம் உறுதியாக நடைபெறும் என்று 9-ம் தீர்க்கதரிசனம் இங்கு தமது கருத்தை ஆழமாக பதிவு செய்கிறது.
“உண்மைகள் உறங்குவதில்லை“ அது சக்கரம் போல் சுழலக்கூடியது என்றும், அதன் சுழற்சியை இந்த உலகம் விரைவில் காண உள்ளதாக இந்த 9-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது. அதுவரை நாம் காத்திருப்போம்.
--உண்மைகள் தொடரும்--
ஆசிரியர். ஸ்ரீ யோகேஸ்வரன்
குறிப்பு :-
இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை. வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும். இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது. இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்டவெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள்ஒளியாக பிரகாசிக்கும். அன்று உறங்கும் உண்மைகள் வெளிப்படும்.
No comments:
Post a Comment