Wednesday, 28 January 2015

ஆகாயத்தில் ஒரு ஒளி (பகுதி – 41)


ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற வருங்கால தீர்க்கதரிசனத்தில் இன்று நாம் காணும் பகுதி 41-வது தீர்க்கதரிசன பகுதியாகும். தீர்க்கதரிசனத்திற்கும் அதை வெளிப்படுத்துபவர்களுக்கும் எப்பொழுதும் ஒரு நெருங்கிய தொடர்பு உண்டு என்பதை மக்கள் அறிய வேண்டும். எப்பொழுதும் அதனை வெளியிடும் தீர்க்கதரிசிகளின் பிறவி இரகசியம் என்பது தீர்க்கதரிசனத்தின் உண்மைகளோடு பிண்ணப்பட்டவைகளாக இருக்கும் என்று தீர்க்கதரிசன கோட்பாடுகள் தெரிவிக்கின்றன.

மற்றவர்கள் தன்னை புகழ வேண்டும் என்பதற்காகவோ, இதனைகொண்டு பணம், புகழ், செல்வாக்கு முதலியவற்றை சம்பாதிக்கவோ தீர்க்கதரிசனங்கள் வெளிப்படுத்தப்படுவதில்லை. மாறாக தீர்க்கதரிசிகள் ஒவ்வொருவரும் இறைவனின் பணிகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே என்று தீர்க்கதரிசனக் கோட்பாடுகள் தெரிவிக்கின்றன.



அந்தவகையில்மோசஸ்என்ற தீர்க்கதரிசி இவ்வுலகில் வாழ்ந்த சரித்திரத்தை உலக கிருஸ்துவ மக்கள் மறந்திருக்க முடியாது. அவரின் உபதேசங்களும், அவரின் ஞானஸ்தானமும் இறைமகன் இயேசுவிற்கு வழிகளாக அமைந்தன என்பதே இங்கு உண்மை. இவர்களில் எவர் அற்புதம் படைத்தவர் என்பது இங்கு கேள்வி அல்ல. யார்? யாருடைய கடமையை செய்ய இந்த உலகத்திற்கு இறைவனால் அனுப்பபட்டனரோ அதைத்தான் இவர்கள் இருவருமே செய்தனர். இறைமகன் இயேசுவின் வருகைக்காக காத்திருந்த மோசஸ் அவரின் வருகைக்கு முன் இவ்வுலகில் பல அற்புதங்களை செய்தவர் என்பது உலக வரலாறு கூறும் உண்மைகளாகும்.


 இவரை தொடர்ந்து யோவான் போன்றவர்களும் இயேசுவின் வருகைக்காக காத்திருந்து அவரை பின் தொடர்ந்த தீர்க்கதரிசிகள் ஆவார்கள். பல அற்புதங்களை மக்களிடையே நிகழ்த்தி மக்களின் பங்களானாக வாழ்ந்த இறைமகன் இயேசுவின் இரகசியங்களை வெளிப்படுத்தும் தீர்க்கதரிசனமே இன்றைய 41-வது தீர்க்கதரிசனமாகும்.

41-வது தீர்க்கதரிசனத்தின் கூறும் ஒரு உண்மைக்கூற்றை இங்கு மக்கள் தங்களின் ஆய்விற்காக மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். இது வதந்திக்காகவோ () கிருஸ்துவ மதத்தை தாழ்த்துவதற்காகவோ அல்ல என்று 41-வது தீர்க்கதரிசனம் இங்கு தனது குறிப்பை பதிவு செய்கிறது. அதாவது இறைமகன் இயேசு பிறந்தபின் அவரின் இளமைப் பருவம் எப்படி இருந்தது. அவருக்கு ஞானஸ்தானம் எந்த வயதில் வழங்கப்பட்டது, அவர் மூன்று ஆண்டுகள் ஜெருசலத்தை விட்டு எங்கு சென்றார்? அவருக்கு அப்பொழுது என்ன வயது? அவர் காணாமல் போன 3 ஆண்டுகளுக்கு முன் மக்களுக்கு பல அற்புதங்களை செய்தாரா? () 3 ஆண்டுகள் கழித்து அவர் ஜெருசலத்திற்கு வந்தபின் மக்களிடையே அற்புதங்களை செய்தாரா


 அவர் காணாமல் போன அந்த 3 ஆண்டுகள் அவர் இந்தியாவில் அதாவது இந்திய யோகிகளிடையே வாழ்ந்து வந்ததாகவும், அப்பொழுதுதான் இறைவன் அவருக்கு அற்புதத்தின் மகிமைகளை வழங்கியதாகவும் 41-வது தீர்க்கதரிசனம் ஒரு அற்புதமான குறிப்பை இங்கு தெரிவிக்கின்றது. இயேசுவின் கால்கள் இந்திய மண்ணில் உலாவியதற்கான சான்றுகள் தற்போது ஆராய்ச்சியாளர்களால் கண்டறிந்து உலகத்திற்கு அறிவிப்பார்கள் என்றும், அதன்பின்னர்தான் இயேசுவின் வருகை இப்புவியில் நடக்கும் என்று 41-வது தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தெரிவிக்கின்றது.

மக்களால் நம்மை ரட்சிக்கும் இரட்சகர் என்று அன்போடு அழைக்கப்படும் இறைமகன் இயேசுவின் உண்மையான வாழ்வியல் இரகசியங்களைப் பற்றி, உலக கிறிஸ்துவ அமைப்பு தற்போது வெளியிடும் என்றும், அவரின் வழிநடத்துதல் தற்போது அங்கு துவங்கி விட்டது என்றும் 41-வது தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை இங்கு தெரிவிக்கின்றது.


இயேசு சிலுவையில் அறையப்பட்டபின், அவரை கல்லறையில் வைத்து மூடிய பின், 3 தினங்கள் கழித்து அவர் உயிர்த்தெழுந்த அற்புதத்தைப் போன்று இந்திய யோகிகளும், சித்தர்களும் பலமுறை ஜீவ சமாதியை விட்டு வெளிவந்து மக்களுக்கு காட்சி கொடுத்த புராணங்களை உலக மக்கள் அறிந்த ஒன்றே.


இத்தகைய சூட்சும சக்திகளை இயேசு தனது தவத்தின் பயனாக அடைந்தார் என்றும், அதன் காரணமாகவேதான் அவர் கல்லறையை விட்டு எழுந்து ஆவி வடிவானவராக காட்சி கொடுத்தார் என்று 41-வது தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது. புத்தருக்கும், இயேசுவிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்றும், அவர்கள் வாழ்ந்த காலம் வெவ்வேறாக இருப்பினும், இவர்களில் புத்தர் அனேகராக இவ்வுலகில் பல்வேறு ஆண்டுகளாக வாழ்ந்ததாக இறை புராணங்கள் தெரிவிக்கின்றன. புத்த மதமும் மீண்டும் புத்தர்சிரிக்கும் புத்தராக” (மகிழ்ச்சியை வழங்கக்கூடிய) இவ்வுலகில் அவதரிப்பார் என்று கூறுகிறது


 ஆகவே இயேசுவின் வாழ்வில் 3 ஆண்டுகள் இந்திய வன பிரவேசமாக இருந்தது என்றும், அப்பொழுதான் அவர் இறைவனிடத்தில் ஞானத்திற்கான தீட்சை பெற்றார் என்றும், அக்காலத்தில் பிற நாடுகளில் தீட்சை என்ற ஒரு சம்பிராதயம் இல்லையென்றும், இயேசுவின் ஞானஸ்தானத்திற்கு பிறகே (தீட்சை) அவர் இறைவனின் அன்பிற்குரியவராக மாறி, ஒரு குருவிடம் அவர் தீட்சை பெற வேண்டும் என்ற கட்டளைக்கு ஏற்ப யோவானிடத்தில் இயேசு ஞானஸ்தான தீட்சையை அடைந்தார் என்றும், இது இந்திய யோகிகளின் யோக மரபு என்று இதன் வழியாக உலகம் அறிய வேண்டும் என்றும், அதன் பின்னரே இது கிருஸ்துவ மக்களிடையே ஒரு சம்பிரதயமாக பரவியுள்ளது என்று 41-வது தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.

இயேசுவின் வாழ்க்கையில் மறைந்திருக்கும் பல்வேறு இரகசியங்களும், அவரின் இறை அனுபவங்களும், அவர் அதீதமான கோபகுணம் உடையவர் என்பதும் பின்னாளில் மக்களுக்கு தெரியவரும் என்றும், இத்தகைய குறிப்புகள் அவர் மனித வாழ்க்கையிலிருந்து எவ்வாறு இறைத்தன்மைக்கு உயர்ந்தார் என்பதை அறிந்துகொள்ளவே என்று 41-வது தீர்க்கதரிசனம் இங்கு சில புதிர்களை பதிவு செய்கின்றது.

இயேசுவிற்கும், இந்தியாவிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்றும், அவரின் உண்மையான திருநாமம் எதுவென்பதை உலக கிருஸ்துவ மக்கள் தேடி கண்டறிய வேண்டும் என்றும், இனி கிருஸ்துவ மக்கள் இயேசுவின் புனிதத்தன்மைகளையும், அவரின் பிறவி இரகசியங்களையும் முழுமையாக அறிந்துகொள்ளும்படி இவ்வுலகில் பல இரகசியங்கள் வெளிப்படும் காலமாக இருக்கும் என்று 41-வது தீர்க்கதரிசனம் ஒரு குறிப்பை தெரிவிக்கின்றது.


கிறிஸ்துவ மதத்திற்கும், சாத்தான் என்ற கெட்ட சக்திக்கும் என்ன தொடர்பு? இங்கு ஒவ்வொரு மக்களும் நன்கு யோசிக்க வேண்டும். இறைமகன் இயேசுவை குறிவைத்து அவரின் செயல்பாடுகளை தடைசெய்த அந்த கெட்ட சக்தி எந்த உலகத்திலிருந்து வந்தது. அதன் உண்மை நோக்கம் என்ன? உண்மையில் இயேசுவின் சுவடுகளை அறியும் போது, அந்த சாத்தானின் சுவடுகளையும் மக்கள் அறிய வேண்டும். அந்த சாத்தானை எப்படி இறைமகன் இயேசு அடக்கினார். அவரின் சக்திகள் எப்படி வெளிப்படுத்தப்பட்டன. இயேசுவின் மறைவிற்கு பின் அந்த சாத்தான் எங்கே? எந்த உலகத்திற்கு சென்றது. மீண்டும் இயேசு இவ்வுலகிற்கு வரும்பொழுது அந்த சாத்தான் மீண்டும் இப்பூமிக்கு திரும்ப வருமா? அப்படியானால் அதனை அடக்கிட இவ்வுலகத்திற்கு இயேசுவுடன் யார் வருவார்? அவர் பிதாவானவரா? அவர்தான் இறைவனா? இவையெல்லாம் உண்மையில் நடக்குமா? என்ற கேள்விகளுக்கு இறைமகன் இயேசு வருகையின்போது நிச்சயம் விடை கிடைக்கும் என்று 41-வது தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.

இயேசு இப்பூமிக்கு வரும்பொழுது அவருடன் அவரின் சீடர்கள் அனைவரும் மீண்டும் வருவார்களா? அவர்கள் தோற்றுவித்த திருச்சபைகளில் என்னென்ன அதிசயங்கள் நிகழப் போகின்றன () அவர்கள் வரமாட்டார்களா? என்ற கேள்விக்குசத்தியயுகமேபதிலளிக்கும் என்றும், இறைமகன் இயேசு அடக்கம் செய்யப்பட்ட கல்லறை திடீரென்று வெடித்து சிதறும் என்றும் இது அருகில் நடக்க உள்ள அதிசய நிகழ்வு என்று 41-வது தீர்க்கதரிசனம் ஒரு குறிப்பை தருகின்றது.

உலக மக்களின் நலனிற்காக தனது இரத்தத்தை சிந்திய இறைமகன் இயேசுவின் வருகை எதற்காக? என்ற கேள்வி கிருஸ்துவ மக்களுக்கே புரியாத புதிராக இருக்கும் என்றும்? ஆனால் அவரின் வருகையே இவ்வுலகத்தை அழிவிலிருந்து காக்க வல்லது என்ற உண்மையை உலக மக்கள் அறிய உள்ளார்கள் என்று 41-வது தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.

-- இன்னும் தொடரும் --
ஆசிரியர்.  ஸ்ரீ யோகேஸ்வரன்

குறிப்பு :- இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை. வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்கவேண்டும். இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது. இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்டவெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள் ஒளியாக பிரகாசிக்கும்.

No comments:

Post a Comment