Friday, 14 November 2014

ஆகாயத்தில் ஒரு ஒளி ( பகுதி - 9 )

   


 ”ஆகாயத்தில் ஒரு ஒளி” என்ற தொடரில் வெளிப்படுத்தப்படும் ஒவ்வொரு தீர்க்கதரிசனங்களும் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தவை, தீர்க்கதரிசனங்கள் என்றுமே பொய்த்ததில்லை, அவை நடைபெரும் காலகட்டங்கள் மட்டுமே சில மாறியுள்ளன.

     சென்ற வருடங்களில் “உலக அழிவு” என்ற தீர்க்கதரிசனத்தின் மேல் மக்கள் மிகுந்த ஆவல் கொண்டு இருந்தார்கள், அவர்கள் எதிர்பார்ப்புகள் ஏதும் நடக்காமல் போனதால், உடனே மக்கள் தீர்க்கதரிசனத்தின் மேல் இருந்த நம்பிக்கையை சற்று தளர்த்தி உள்ளனர், இதுவே உண்மையும் ஆகும், ஆனால் தீர்க்கதரிசனத்தின் வார்த்தைகளை மக்கள் நன்கு உற்று நோக்க வேண்டும். 2000-ல், 2010-ல், மற்றும் 2012-ல் உலக அழிவு என்ற வார்த்தையில் உள்ள நம்பகத்தன்மையை சற்று ஆழமாக கவனிக்க வேண்டும்.



”உலகம் முழுவதும் அழிவு” என்பதே உலக அழிவு என்று பழைய தீர்க்கதரிசன குறிப்புகள் தெரிவிப்பதாக மக்கள் கருத்தில் கொண்டனர். இது உண்மை அன்று, உலகப் பிரளயம் என்பது மக்கள் வாழும் தேசத்தின் மீதும், மக்கள் மீதும் மட்டுமே ஏற்படுமே ஒழிய, உலகம் முழுவதும் அழியும் என்று அர்த்தம் அல்ல ! ஆகவே மகா பிரளயம் ஒன்று நிகழ்வதற்கு முன் மக்களை நல்வழிப்படுத்தி அவர்களை காக்க வேண்டும் என்றே இறைவனும், மகா சக்திகளும், தீர்க்கதரிசிகளும், சித்தர்களும் நினைக்கின்றார்களே தவிர உலகத்தை முழுமையாக அழித்திட அல்ல! ஆகவே உலக அழிவு என்பது இப்புவியில் வாழும் மக்ககளின் எண்ணிக்கை, வாழ்வாதார சூழல்கள் போன்றவை மட்டுமே அழிக்கப்படும் என்றும் அவை படிப்படியாக வருங்காலத்தில் நிகழக்கூடும் என்றே தீர்க்கதரிசனங்கள் எச்சரிக்கை செய்கின்றன. மேலும் முடிவும் அதன் தன்மைகளும் எப்பொழுதும் இறைவன் பக்கமே உள்ளது என்று மக்கள் இங்கு அறிய வேண்டிய  உண்மையாகும்.

     இன்று ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற தொடரில் ஒன்பதாம் தீர்க்கதரிசனம் வெளிப்படுத்தப்படுகிறது !


     கடவுள் என்பவர் உண்மயில் உண்டா ? அவர் எந்த வடிவத்தை சார்ந்தவர் ? எந்த மதத்தை சார்ந்தவர் ? எந்த நாட்டை சார்ந்தவர் என்ற கேள்விகள் உலகம் முழுவதும் மக்களிடமிருந்து வெளிப்பட்ட வண்ணமே உள்ளன. இதற்கான விடையோ இல்லை (அ) தெரியவில்லை என்றே இன்றளவும் அதிகமாக பதிவாகி உள்ளது. உண்மையில் கடவுள் எந்த உருவத்தில் இருக்கிறார்? எந்த வடிவத்தை தாங்கி வருவார்? அவரின் வருகை எப்படி இருக்கும்? எப்பொழுது இருக்கும்? என்ற கேள்விகளுக்கு இனி மக்கள் எளிதாக அறிந்து கொள்ளும்வகையில் இந்திய தேசத்தில் உள்ள தமிழகத்தில் பல புதிய அதிசயங்கள் விரைவில் நடக்க உள்ளன. மேற்கண்ட கேள்விகளுக்கெல்லாம் இந்த அதிசய நிகழ்வுகளே விடையாக அமையும் என்று தீர்க்கதரிசனங்கள் விளக்கம் தருகின்றன.

     காலத்தால் அழியாத ஒரு காவியம் தமிழகத்தில் நடக்க உள்ளது என்றும், அது “பிரபஞ்சம் வியக்கும் அதிசயமாக” விளங்கப் போகிறது என்றும் தீர்க்கதரிசனங்கள் தெரிவிக்கின்றன. உலக வரலாற்றில் இடம் பெறும் விதமாக இந்த ஒன்பதாம் தீர்க்கதரிசனம் விளங்கபோகின்றது என்றும், அது மலை, கடல், நகரம், மாநகரம், நாடுகளை கடந்து பரவி நிற்க உள்ளது என்றும் அந்த 9-ம் தீர்க்கதரிசனம் மேலும் சில உண்மைகளை தெரிவிக்கின்றது! ஆம் உலகத்தின் பேரழிவை தடுக்கும் ”இறைவனின் வருகையை உறுதிபடுத்தும்” இந்த தீர்க்கதரிசனமே 9-ம் தீர்க்கதரிசனம் என்று இறைநிலை கோட்பாடுகள் கூறுகின்றன.

     உலக தீர்க்கதரிசிகள் உற்று நோக்கி காத்திருக்கும் “அந்த வருகை” யாருக்காக என்று நம்மிடையே கேள்வி எழலாம், ஆம் உலக தீர்க்கதரிசிகள் எதிர்நோக்கும் அந்த இறைவனின் வருகை ”பூமியில் வாழும் மக்களுக்காக” மட்டுமே என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மேலும் 9-ம் தீர்க்கதரிசனம் நடைபெருவதற்கு முன்பாக உலக நாடுகள் முழுவதிலிருந்து ஒரு அறிவிப்பு வெளியாகும், அது “ இதோ இறைவன் அவதாரம் செய்ய உள்ளார், அவர் எம்மிடத்திலேயே அவதாரத்தை மேற்கொள்வார்” என்று பிரகடனப்படுத்துவார்கள் என்றும், ஆனால் இறைவனின் அவதார வருகை  என்பது இந்தியாவில் அதாவது தமிழகத்தில் என்பதை அப்பொழுது மக்கள் அறிந்து மகிழ்ச்சி கொள்வார்கள் என்று 9-ம் தீர்க்கதரிசனம் அது நிகழும் முன் தென்படும் அறிகுறிகளைப் பற்றி பல உண்மைகளை தெரிவிக்கின்றன.

     காலமும், கோள்களும் ஒன்றினைந்து பூலோகத்தின் வாசல் பக்கம் நிற்க இறைவன் பூலோகத்தில் கால் ஊன்றும் நேரத்தை ஒரு ஆன்மீக அமைப்பு முன் அறிவிப்பு செய்யும் என்றும், அச்சமயத்தில் உலக மக்களிடையே “கடவுள் நம்பிக்கை” துளிர்விட ஆரம்பித்துவிடும் என்றும் 9-ம் தீர்க்கதரிசனத்தில் உள்ள சில உண்மைகளை தீர்க்கதரிசன கோட்பாடுகள் எடுத்துக் கூறுகின்றன.

     இது நிகழும் காலத்தை அறிந்த சிலர் பல அறிக்கைகளாக ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்துவார்கள் என்றும், அதற்கு பல ஆன்மீக அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிக்கும் என்றும் அச்சமயத்தில்தான் இந்தியாவில் தமிழ்நாட்டில் இறையின் அதிசயங்கள் துவக்கம் பெறும் என்று 9-ம் தீர்க்கதரிசனத்தில் உள்ள நிகழ்கால உண்மைகள் நமக்கு வெளிச்சமிட்டு காட்டுகின்றன. கூடிய விரைவில் தென் தமிழகம் முழுவதும் கல்வெட்டுகளும், கற்சிலைகளும் வெளிப்படும் என்றும், இதுவும் 9-ம் தீர்க்கதரிசனத்திற்கு முன் நிகழும் ஆதாரச் சான்றுகள் என தீர்க்கதரிசனங்கள் தெரிவிக்கின்றன.

--இன்னும் தொடரும்--
ஆசிரியர். ஸ்ரீ யோகேஸ்வரன்

குறிப்பு : இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் எற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை, வருங்காலத்தை பற்றி விவாதிக்க அனைவருக்கும் உரிமை உண்டு, அச்சப்படுவதற்க்கு அல்ல ! அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும் ! இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது, இதை ஒரு கதைப்போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்டவெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள் ஒளியாக பிரகாசிக்கும்..


No comments:

Post a Comment