’ஆகாயத்தில் ஒரு ஒளி’ என்ற தீர்க்கதரிசனத்தின்
தொடரில் இன்று விஞ்ஞானத்திற்கு அப்பாற்பட்ட ஒரு தீர்க்கதரிசனம் வெளியிடப்படுகிறது,
அதாவது பூமியில் உள்ளது போன்று மற்ற கிரகத்தில் உயிரினங்கள் உள்ளனவா? என்ற கேள்வி விஞ்ஞானிகள் மட்டுமின்றி உலக நாடுகளின் மக்களுக்குள்ளும் ஒரு ஆச்சர்யமூட்டும் கேள்வியாக உள்ளது.
இன்றைய ஆறாவது தீர்க்கதரிசனம் மனிதர்களின் உருவ
அமைப்பை ஒத்த ஆனால் சில மாறுபட்ட அங்க அமைப்புகள் உடைய, ஆற்றலில் மேம்பட்ட சில ஜீவராசிகளும்,
மனிதனை போன்றவர்களும், பல கிரகங்களில் வசித்து வருகின்றனர் என்ற குறிப்பை இந்த தீர்க்கதரிசனம்
தெரிவிக்கின்றது. அதாவது பூலோக அமைப்பில் உள்ள வட, தென் துருவங்களில் எங்கு அதிகமான
உறைபனி உள்ளதோ அதன் நேர் ஒளிப்புள்ளி செல்லும்
திசையில் சுற்றிவரும் வான்மண்டல கோள்களில் மனிதனைப் போன்ற வேற்றுகிரக வாசிகள் வாழ்ந்து
வருவதாக இந்த தீர்க்கதரிசனம் தெரிவிக்கின்றது. அதுமட்டுமின்றி செவ்வாய், சனி, புளுட்டோ,
சந்திரன் போன்ற கோள்களில் வேற்றுகிரகவாசிகள் வாழ்வதாக இந்த ஆறாவது தீர்க்கதரிசனம் ஒரு
விளக்கத்தை தருகிறது. இவர்கள் பூமிக்கு பயணிக்கும் வழிமுறைகளை முழுமையாக அறிந்துவிட்டனர்
என்றும், விரைவில் இப்புவியில் இவர்கள் நடமாடும் காட்சியை முழுமையாக இந்த மனித சமூகம்
காணும் என்றும் தீர்க்கதரிசனம் தெரிவிக்கின்றது.
இவர்கள் பூமியில் குடிகொள்ளும் பகுதிகள் குளிர்ச்சி மிகுந்தவையாகவும், நீர் நிறைந்த ஏரி, கடல் போன்ற பகுதியில் வாழ்வார்கள் என்றும், இவர்கள் ”ஒளி” வாசிகள் என்றும், இரவு நேரத்தில் மட்டுமே இவர்கள் மக்கள் கண்களுக்கு தெரிவார்கள் என்றும் தீர்க்கதரிசனம் தெரிவிக்கின்றது.
இந்த வேற்றுகிரகவாசிகள் மரணத்தை சந்திக்கும் சமயத்தில்
மட்டுமே இவர்களின் உடல்களை மக்கள் சாதாரணமாக கண்களால் காணமுடியும் என்றும், பகலில்
இவர்கள் மற்றவர்களுக்கு தங்களை தெரியப்படுத்திட தமது விஞ்ஞான அறிவால் உடைகளை கண்டறிந்துவிட்டார்கள்
என்றும், மேலும் அத்தகைய ஆடைகளை அணிந்த சமயத்தில் மட்டுமே இவர்களை பூமியில் பகலில்
மக்கள் காணமுடியும் என்றும் இந்த ஆறாவது தீர்க்கதரிசனம் மேலும் பல விளக்கங்களை தருகிறது.
இங்கு வெளிப்படுத்தப்படும் தீர்க்கதரிசனங்களை
மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றோ (அ) நம்ப வேண்டும் என்றோ இங்கு வெளிப்படுத்தப்படவில்லை,
இதுபோன்ற தீர்க்கதரிசனங்கள் சுமார் 10 ஆண்டுகளாக எமக்கு வழங்கப்பட்டுள்ளன, அவைகளில்
ஆனேக தீர்க்கதரிசனங்கள் நடந்து முடிந்துள்ளன. ஆகவே இன்றைய காலக்கட்டத்தில் இவைகளில்
உள்ள நம்பகத்தன்மையை நானும் உங்களோடு இணைந்து அறிய வேண்டும், அதே சமயத்தில் இதனை இங்கு
பதிவுகளாக பதிவு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே இந்த தொடர் வெளியிடப்படுகிறது,
“மாற்றங்களே மக்களை வாழ வைக்கும், மாற்றம்
இல்லாத ஒன்றை மக்கள் தங்கள் நினைவுகளிலிருந்து நீக்கி விடுவார்கள்”,
இதுவே உண்மையும்
கூட, இத்தொடர் உங்களிடையே சில மனப்பதிவுகளாக பதிந்து கிடந்தாலும் காலத்தால் இதன் உண்மைகளை
நீங்கள் அறிந்து கொள்ளும் சமயத்தில் இந்த தீர்க்கதரிசனங்கள் ஒரு நாள் நீங்காத ஒரு ஒளியாக
ஆகாயத்தில் ஒளி வீசும். அன்று உண்மைகள் வெட்ட வெளிச்சமாகும்.
”ஆகாயத்தில் ஒரு ஒளி” என்ற இத்தொடரில் இடம் பெறும்
விளக்கங்கள் மற்றும் தீர்க்கதரிசனங்கள் ஒவ்வொரு வாரமும் திங்கள், புதன், வெள்ளி அன்று
இடம்பெறும். மொத்தம் 66 தீர்க்கதரிசனங்கள் இடம்பெறும், இந்த தீர்க்கதரிசனங்களை மெய்பட
காணவேண்டுமெனில் அதன் காலத்திற்காக நாம் காத்திருப்போம். தீர்க்கதரிசனங்களில் உள்ள
நிகழ்வுகள் நடக்கும் காலம் எப்பொழுது வேண்டுமானாலும் நிகழக்கூடும், இது இறைவனின் வருகைக்கு
முன்பாக இப்புவியின் மீது நடக்கும் “நியாயத்தீர்ப்புகளின்” மாற்று வடிவங்களே என்பதை
நாம் இங்கு உணரவேண்டும்…….
--இன்னும் தொடரும்—
ஆசிரியர். ஸ்ரீ யோகேஸ்வரன்
குறிப்பு : இத்தொடரில்
வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் எற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை,
வருங்காலத்தை பற்றி விவாதிக்க அனைவருக்கும் உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல ! அவசியம்
இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும் ! இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே
இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது, இதை ஒரு கதைப்போல் படியுங்கள், உண்மை ஒரு நாள்
வெட்டவெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள் ஒளியாக பிரகாசிக்கும்..
No comments:
Post a Comment