“ஆகாயத்தில்
ஒரு ஒளி” என்ற தொடரில்
இடம் பெறும் ஒவ்வொரு தீர்க்க
தரிசனங்களும் மக்கள் நம்பிக்கையைப் பெறுவதற்காக
அல்ல! மக்கள் கடவுளின் நம்பிக்கைக்கு
பாத்திரமாக திகழ வேண்டும் என்பதற்கே
இங்கு வெளிப்படுத்தப் படுகின்றன.
உண்மைக்குள்
ஒழிந்துள்ள தெய்வீக உண்மைகளை மக்களுக்கு
வெளிச்சமிட்டு காட்டுவதே “ஆகாயத்தில்
ஒரு ஒளி” என்ற
தொடரின் முக்கிய நோக்கமாகும். இங்கு
வெளியிடப்படும் தீர்க்க தரிசனங்களைப் போன்று
உலகில் பல மக்கள், பல
மதத்தினர் வெளியிட்டு வருகின்றனர். ஆனால், இத் தொடரில்
இடம் பெறும் தீர்க்க தரிசனங்கள்
யாவும் கடவுளின்
வருகைக்கு
முன்பாக
இப் புவியில் மக்களுக்கு நடக்கும் சம்பவங்களை வெளிச்சமிட்டு காட்டுவதற்கே இங்கு வெளியிடப்படுகின்றன. ஆனால்
விஞ்ஞானம் முழுவதையும்
கண்டறியாது. அதே சமயத்தில் முழுமையாக
மக்கள் அறிந்து கொள்ளும்படி அது
வெளிப்படுத்தாது. அது
அரசாங்கத்தின் முக்கிய கட்டுப்பாட்டு விதிமுறையாகும்.
உலக நாடுகளில் நடைபெறும் முக்கிய சம்பவங்களையே இத்தொடர்
தீர்க்க தரிசனங்களாக வெளிச்சமிட்டுக் காட்டும். சுட்டிக் காட்டப்படும் தீர்க்க தரிசனங்களின் மீது
யாரும் எவரும் பயப்படத் தேவையில்லை.
அவைகள் நிகழும் சமயத்தில் இறைவனே
அதனை தடுக்கவும் உதவுவார். அப்படி என்றால் இந்த
சம்பவங்கள் இறைவனால் நிகழ்த்தப்படஉள்ளதா? என்ற கேள்வி உங்களுக்கு
வரலாம்! இது அப்படி அல்ல!
ஏனெனில் இது முன்பே வகுக்கப்பட்ட
உலகியல் விதி ஆகும். இதனை
மாற்ற முடியாது. ஆனால் மக்கள் நினைத்தால்
இதன் பாதையை மாற்றி அமைக்க
முடியும். மக்களின் பழக்க வழக்கங்களிலும், நடைமுறை
செயல்களிலும் நேர்மை இருந்தால், இறைவன்
அவர்களுக்காக இதனை மாற்றி அமைப்பார்
என்று இறை கோட்பாடுகள் தெரிவிக்கின்றன.
கிருஸ்துவ சபை ஒன்று கூடி
ஒரு தீர்க்க தரிசனத்தை அறிவிக்க
உள்ளது. அது இயேசுவின் வருகையை
ஆணித்தரமாக அறிவிக்க உள்ளார்கள். இதனால் உலக கிருஸ்துவர்களுக்குள்
ஒரு புதிய நம்பிக்கை பிறந்து
புதிய உற்சாகத்தை ஏற்படுத்தும். அச்சமயத்தில் பிரசித்திப் பெற்ற மற்றொரு கிறிஸ்துவ
அமைப்பு இது பொய் என்றும்,
இதனால் மக்கள் சமுதாயம் அழிய
வகை ஏற்படும் என்றும் இதனை யாரும்
நம்பி ஏமாற வேண்டாம் என்று
ஒரு அறிக்கையை வெளிப்படுத்தும். ஆனால் உலக மக்களின்
நம்பிக்கையை வலிமைப்படுத்தும் வகையில் இயேசுவின் வருகைக்கான
வான் தூதுவர்கள், தோன்றி அவரின் வருகையை
உறுதிப்படுத்தும் அதிசய சம்பவம் நடைபெற
உள்ளது என்று ஏழாம் தீர்க்க
தரிசனம் கூறுகிறது.
ஏழாம் தீர்க்க தரிசனம் நடைபெறுவதற்கு
முன்பாக இந்த பூமியில் மிகப்பெரிய
அழிவுச் சம்பவம் ஒன்று தென்நாட்டில்
நடக்கும் என்றும், இது உலக நாடுகள்
முழுவதும் எதிரொலிக்கும் என்றும் அந்த ஏழாம்
தீர்க்க தரிசனம் நிச்சயம் நடைபெறப்
போவதை இச்சம்பவமே உறுதிப்படுத்தும் என்று தெய்வீக தீர்க்க
தரிசனக் கோட்பாடுகள் தெரிவிக்கின்றன.
நாடுகளும்,
மதங்களும் மற்போர் புரியும் அளவிற்கு
பல சம்பவங்கள் 7-ம் தீர்க்க தரிசனத்திற்கு
முன்பாக நடைபெறும் என்றும், உலகில் பல நாடுகளில்
போலி குருமார்கள் தோன்றி தமது சபைகளுக்காக
மக்களை தன்வசப்படுத்துவார்கள் என்றும் அச்சமயத்தில்தான் உலக
கிருஸ்து சபை இயேசுவின் வருகையை
உறுதிபடுத்தி அறிக்கையை வெளியிடும் என்று 7-ம் தீர்க்க
தரிசனம் நமக்கு தெளிவுபடுத்துகிறது.
இயேசுவின்
வருகைக்கு முன்பாக நடக்கும் சம்பவங்களை
உலக நாட்டு மக்கள் இனம்
கண்டு நமது தீர்க்க தரிசனத்தின்
உண்மைகளை அறிந்து மகிழும் அச்சமயத்தில்
ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற
தொடர்அவர்கள் மனதில் பிரகாசமாக ஒளி
வீசி பதிவாகும். இந்த நாள் நமக்கு
இனிய நாளாக அமையும்.
-- இன்னும்
தொடரும் --
ஆசிரியர். ஸ்ரீ
யோகேஸ்வரன்
குறிப்பு : இத்தொடரில்
வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் எற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை,
வருங்காலத்தை பற்றி விவாதிக்க அனைவருக்கும் உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல ! அவசியம்
இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும் ! இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே
இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது, இதை ஒரு கதைப்போல் படியுங்கள், உண்மை ஒரு நாள்
வெட்டவெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள் ஒளியாக பிரகாசிக்கும்.
No comments:
Post a Comment