Wednesday, 26 November 2014

ஆகாயத்தில் ஒரு ஒளி (பகுதி – 14)




 ஆகாயத்தில் ஒரு ஒளி” என்ற வருங்கால தீர்க்கதரிசனத்தில் இன்று நாம் 14-ம் தீர்க்கதரிசனத்தை காண உள்ளோம். தீர்க்கதரிசனங்கள் மெய்படும் காலமாக இன்றைய 2014-ம் ஆண்டின் இறுதி நாட்களும், வரும் ஆண்டுகளான 2015 முதல் 2020 வரை ஆகிய ஆறு ஆண்டுகள் மிக சக்திவாய்ந்த ஆண்டுகளாக இருப்பதாக தீர்க்கதரிசன கோட்பாடுகள் தெரிவிக்கின்றன. தீர்க்கதரிசனங்களில் பெரும்பாலானவை  2015 மற்றும் 2016-ம் ஆண்டுகளுக்குள் கட்டாயம் நடந்து முடிந்துவிடும் என்றும், எஞ்சியுள்ள மற்ற தீர்க்கதரிசனங்கள் 2017-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டுக்குள் நடந்து முடியும் என தீர்க்கதரிசனங்கள் கூறுகின்றன.

தீர்க்கதரிசனங்கள் நடந்து முடியும் கால அளவு என்பது இறைவனின் திட்டதில் உள்ள இரகசியம் என்றும், இதனை 18 சித்தர்களில் ஒரு சிலர் முழுமையாக அறிந்து உள்ளனர் என்றும், அந்த சித்தர்கள் உலகில் உள்ள சில மகான்கள் மூலம் இதன் இரகசியங்களை வரும் டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்திலிருந்து வெளியிடுவார்கள் என தீர்க்கதரிசன குறிப்புகள் தெரிவிக்கின்றன. தீர்க்கதரிசன குறிப்புகளை இறைவனே முன்னின்று அனைத்து மதங்களை சார்ந்த மனிதர்கள் மூலம் வழங்குவார் என்றும், இதனை மக்கள் ஏற்றாலும் சரி, ஏற்காவிட்டாலும் சரி, அது நடந்தே முடியும் என தீர்க்கதரிசன கோட்பாடுகள் தெரிவிக்கின்றன.



தீர்க்கதரிசனம் 14-ம் நிகழ்வு என்னவென்பதை இங்கு காண்போம். கடல் சூழ்ந்த நாடுகளில் உள்ள புத்த கலாச்சாரம் ஒன்று புத்த சந்நியாசிகளின் உரிமைக்காக குரல் கொடுக்கும் சமயத்தில் கடலில் ஆழிப்பேரலைகள் தோன்றி உலகை அச்சுறுத்தும் என்றும், அப்பொழுது இலங்கை கடல் பகுதியில் இருந்து ”ஒரு புத்த விக்கிரகம்” கடல் வழியாக மிதந்து வந்து இந்திய கடல் எல்லையை வந்து அடையும் என்றும், அதனை மக்கள் மீட்டு தமிழகத்தில் வைக்கும் சமயத்தில் இலங்கையில் பல அற்புதச்சம்பவங்களும், பல அழிவுச்சம்பவங்களும் ஏற்படும் என்றும், அதனை காண உலக விஞ்ஞானிகள் இலங்கைக்கு சென்று ஆய்வு செய்யும் அச்சமயத்தில் “ஆதாம் – ஏவாள்” வாழ்ந்த சரித்திர சான்றொன்றை கண்டெடுப்பார்கள் என்றும், இதுவே முதல் கிருஸ்துவர்களுக்கான அடையாளத்தை உலகத்திற்கு வெளிச்சமிடும் என்று 14-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது.


14-ம் தீர்க்கதரிசனத்தின் படி “ஆதாம் – ஏவாள்” வாழ்ந்தது உண்மை என்று மக்கள் அறிந்து வியப்படையும் சமயத்தில் இந்திய எல்லைக்குள் இயேசு பயனித்த காலம், அவர் இந்தியாவில்தான் சில ஆண்டுகள் வாழ்ந்தார் என்ற உண்மையும் இந்த உலகத்திற்கே தெரியவரும் என்றும் 14-ம் தீர்க்கதரிசனம் மேலும் சில அரிய உண்மைகளை வெளியிடுகிறது. மேலும் கிருஸ்தவர்களுக்கான நற்செய்தி ஒன்று விரைவில் கிடக்கப்பெறும் என்றும், அந்த நற்செய்தி 14-ம் தீர்க்கதரிசனம் நடைபெறுவதை உறுதி செய்யும் நற்செய்தியாக நமக்கு இருக்கும் என்று தீர்க்கதரிசன குறிப்புகள் தெரிவிக்கின்றன.

14-ம் தீர்க்கதரிசனம் மேலும் சில உண்மைகளை இங்கு எடுத்துக்கூறுகிறது, அதாவது இனி கிருஸ்துவர்கள் மத்தியில் நம்பிக்கை பிறக்கும் அளவிற்கு இயேசுவின் வருகைக்கான அறிகுறிகள் தென்படும் என்றும், அதே சமயத்தில் அவரின் வருகை என்பது எப்படி இருக்கும்? அவரின் வெளிப்பாடு இவ்வுலகில் எப்படி இருக்கும்? என்ற கேள்விகள் ஆராய்ச்சி நோக்கில் கிருஸ்துவ மக்களிடையே எழும்பும் என்றும், அதற்கு பல்வேறு விடைகளை “ஊகத்தின்” மூலம் கிருஸ்துவ அமைப்பின் வழிநடத்துனர்கள் கூறுவார்கள் என்று 14-ம் தீர்க்கதரிசனம் மேலும் ஒரு குறிப்பை தருகின்றது,

14-ம் தீர்க்கதரிசனத்தின்படி “ஆதாம் – ஏவாள்” வாழ்வியல் சான்றுகள் இந்த மண்ணுலகில் கிடைக்கபெற்றாலும் மீண்டும் இயேசுவின் வருகை எதற்காக? என்ற கேள்வி உலக மக்களிடையே ஒரு விடைதெரியாத மர்மத்தை ஏற்படுத்தும் என்றும், அப்பொழுது உலகில் உள்ள பல கிருஸ்துவ அமைப்புகள் ஒன்று கூடி ஒரு புதிய இறைக்கொள்கையை கடவுளின் வருகையை பற்றி முன் மொழிவார்கள் என்றும் 14-ம் தீர்க்கதரிசனம் மேலும் ஒரு புதிய குறிப்பை தருகின்றது.


இயேசுவின் வருகை என்பது இறைவனின் வருகைக்கான முன் அறிவிப்பு என்றும், அவரே கடவுளின் வருகையை முன் அறிவிப்பார் என்றும், “என்னை பின் தொடர்ந்த நீங்கள் இனி பிதாவான இவரை பின் தொடருங்கள்” என முன்அறிவிக்கவே இப்பூலோகத்திற்கு வருகிறார் என 14-ம் தீர்க்கதரிசனம் மேலும் ஒரு உண்மையை நமக்கு எடுத்துகூறுகிறது.

காலத்தால் அழியாத ஒரு புதுக்காவியம் ஒன்று இந்திய திருநாட்டில் உருவாகிட போகிறது என்றும், அதனைச்சார்ந்தே உலகில் உள்ள அனைத்து மதத்தினரின் வழியே இறைவன் தனது வெளிப்படுதல்களின் அற்புதத்தை செய்வார் என்றும் இது மிக, மிக அருகில் உள்ள ஒரு நிகழ்வு என்று 14-ம் தீர்க்கதரிசனம் மேலும் ஒரு குறிப்பை தருகின்றது.

மக்கள் சமூகம் இனி பூமி மட்டுமின்றி வான் மண்டலத்தில் நடக்கும் மாற்றங்களையும், ஆச்சர்யங்களையும் நன்கு ஊன்றி கவனிக்க வேண்டும் என்றும், இந்த மாற்றங்களே 14-ம் தீர்க்கதரிசனம் நடைபெறுவதற்கான இயற்கையின் மாற்றங்கள் என்றும், இதுவே மக்கள் மனதில் ஆகாயத்தில் ஒரு ஒளி போன்று நம்பிக்கை ஏற்படுத்தும் என்றும் 14-ம் தீர்க்கதரிசனம் கூறுகிறது.

--இன்னும் தொடரும்—
ஆசிரியர். ஸ்ரீ யோகேஸ்வரன்

குறிப்பு : இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் எற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை, வருங்காலத்தை பற்றி விவாதிக்க அனைவருக்கும் உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல ! அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும் ! இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது, இதை ஒரு கதைப்போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்டவெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள் ஒளியாக பிரகாசிக்கும்..

No comments:

Post a Comment