Wednesday, 12 November 2014

ஆகாயத்தில் ஒரு ஒளி ( பகுதி - 8 )




ஆகாயத்தில் ஒரு ஒளிஎன்ற தொடரில் இன்று நாம் அறிய வேண்டிய முக்கிய நிகழ்வு ஒன்று உண்டு. அது வான் மண்டலத்தில் நிகழும் அதிசயங்களைப் பற்றி நமக்கு எடுத்துக் கூறுகிறது.

வான் வெளியில் பல பிரபஞ்சங்கள் உண்டு என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே! ஆனால் இதுவரை அறிந்திடாத ஒரு பிரபஞ்சத்தை நமது விஞ்ஞானிகள் கண்டறிய உள்ளார்கள். அங்கு பல வியத்தகு ரகசியங்கள் உள்ளதை ஆதாரத்துடன் விஞ்ஞானிகள் வெளிப்படுத்த உள்ளார்கள். வானில் ஒரு மகா பேரொளி தோன்றி அந்த பிரபஞ்சத்தினுள் ஊடுருவிச் செல்வதை உலக விஞ்ஞானிகள் கண்டு வியப்பார்கள் என்றும், அச்சமயத்தில் அங்கிருந்து பறக்கும் தட்டுகள் வெளியேறி பூமியின் சுற்றுவட்டப் பாதையை நெருங்கும் காட்சியை கண்டு விஞ்ஞானிகள் வியப்படைவார்கள் என்பதே இன்றைய எட்டாவது தீர்க்க தரிசனம் உறுதிபட கூறுகிறது.



இந்த 8-வது தீர்க்க தரிசனம் நடைபெறுவதற்கு முன்பாக உலகில் உள்ள மகாபெரும் கடலிலிருந்து ஒரு அதிசயம் வெளிப்படும் என்றும், அது இதுவரை தேடிய ஒரு முக்கிய ரகசியம் அதுவென்பதை உலகமே அறிந்து வியப்படையும் என்றும், இதுவே 8-வது தீர்க்க தரிசனம் நடைபெறுவதற்கு முன் நடைபெறும் அதிசய நிகழ்வு என்று 8-ம் தீர்க்க தரிசனம் நமக்கு தெளிவுப்படுத்துகிறது.

ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற இத்தொடரின் மூலம் உலக மக்கள் இணைக்கப்படும் அதிசய நிகழ்வு ஒன்றும் கூடிய விரைவில் நடைபெற உள்ளதாக 8-ம் தீர்க்க தரிசனம் மேலும் ஒரு செய்தியை வெளிப்படுத்துகின்றது.

நாம் காணும் செய்திகள் இன்று பொய்யாக நமது மனத்திற்குள் தோன்றலாம். ஆனால், நாளைய வருங்காலத்தில் இவைகளே நிஜங்களாக மாறி  ஆகாயத்தில் ஒளிகளாக பிரகாசிக்கும் என்பதை மட்டும் நாம் அனைவரும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

கடல் சூழ்ந்த நாட்டில் உள்ள கயவர்களால் சில நாட்டு மக்கள் கடத்தப்படும் சம்பவம் நடைபெறும். அச்சமயத்தில் 8-ம் தீர்க்க தரிசனத்தின் செயல்பாடுகள் இவ்வுலகில் நடக்கும் காலம் இதுவென்று நாம் உணர வேண்டும் என 8-ம் தீர்க்க தரிசனம் மேலும் ஒரு விளக்கத்தை இங்கு தருகிறது.

”சத்திய யுகம்
இறைவனின் யுகம்
இது இந்தியாவில்
வேர் ஊன்றி
விருட்சமாக
வளர உள்ளது

-- இன்னும் தொடரும் --
ஆசிரியர்.  ஸ்ரீ யோகேஸ்வரன்

குறிப்பு : இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் எற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை, வருங்காலத்தை பற்றி விவாதிக்க அனைவருக்கும் உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல ! அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும் ! இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது, இதை ஒரு கதைப்போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்டவெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள் ஒளியாக பிரகாசிக்கும்.

No comments:

Post a Comment