’ஆகாயத்தில் ஒரு
ஒளி’ என்ற இந்த வருங்கால தீர்க்கதரிசனத் தொடரில் இன்று நாம் காணும் விஷயம் சாதாரணமானதன்று.
உலக மக்கள் யாவரும் எதிர்பார்க்கும் “யுகமாற்றம்” ஏற்படும் இக்காலக்கட்டத்தில்
இந்தியாவின் எல்லைகளை நாம் பாதுகாக்கும் அவசியத்தில் தற்போது உள்ளோம். இது சாதாரணச்
செய்திகளாகவோ (அ) ஒரு தெளிவில்லாத தீர்க்கதரிசனமாகவோ நாம் எண்ணிவிடக்கூடாது, கடல் எல்லையில்
பல பயங்கர ஊடுருவல் நடக்கும் காலம் இதுவென்று இன்றைய தீர்க்கதரிசனக் கோட்பாடுகள் எச்சரிக்கை
செய்கின்றன.
உலக மக்களை காத்திடும் அவதாரம் இப்பூமியினில்
கால் ஊன்றும் நேரம் தற்பொழுது வந்துவிட்டது என மேலும் ஒரு கூடுதல் செய்தியினை தீர்க்கதரிசனக்
கோட்பாடுகள் எடுத்துக்கூறுகிறது. மேலும் ஐரோப்பிய நாடுகளையே கதி கலங்க வைக்கும் ஒரு
மாபெரும் புயல் உருவாகி வருகின்றது என்றும், அந்த புயலின் தாக்கம், நாடுகளுக்கு இடையே
மும்முனை தாக்குதலாக ஏற்படக் கூடும் என்று இன்றைய தீர்க்கதரிசனம் கூறுகிறது. இதுவே
இன்றைய ”பத்தாவது தீர்க்கதரிசனம்” ஆகும்.
ஐரோப்பிய நாடுகளை தாக்க வரும் இப்புயலின் வேகம்
350KM அளவிற்கு
வேகம் கொண்டது என இத்தீர்க்கதரிசனம் மேலும் ஒரு விளக்கத்தை தருகிறது. “மாயப்புயல்” என்றே இதனை நாம் பெயரிட்டு
அழைக்கலாம் என்று தீர்க்கதரிசனம் கூறுகிறது. மேலும் இந்த மாயப்புயலால் ஏற்படும் சேதங்கள்
கணக்குள் அடங்காத அளவிற்கு இருக்கும் என்றும், மக்களின் வாழ்வாதாரச் சூழ்நிலை மீண்டும்
சீரடைய சுமார் 5 மாதங்கள் ஆகும் என்றும் தீர்க்கதரிசனம் எடுத்துக் கூறுகிறது.
இந்த மாயப்புயலின் வருகையை சரியாக விஞ்ஞானம் கணிக்க
முடியாது என்றும், அது தாக்கும் சமயத்திற்கு முன்பாக மட்டுமே இதனை அறிய முடியும் என
தீர்க்கதரிசனம் ஒரு குறிப்பை தருகின்றது. மேலும் இந்த “மாயப்புயல் உருவாகுவதற்கு மிக
சமீபமாக செயற்கைகோள்” ஒன்று செயலிழக்கும் என்றும், இதுவே இப்புயல் வருவதற்கான முக்கிய
அறிகுறியாக நாம் எடுத்துக்கொள்ள வேண்டும் என தீர்க்கதரிசனங்கள் உண்மையை இங்கு தெளிவுபட
கூறுகின்றன.
மக்களின் மனநிலையில் தற்பொழுது அலட்சியமும், அவல
போக்கும் காணப்படுகின்றன என்றும், இது அவர்களின் வாழ்க்கை சூழலுக்கே சரிவை ஏற்படுத்தும்
என்றும் மேலும் ஒரு தீர்க்கதரிசனம் நம்மை எச்சரிக்கை செய்கிறது. பல பங்குமுதலீடுகள்
மிகப்பெரிய சரிவை சந்திக்க உள்ளதாக காலக்கேடு என்ற ஒரு விஷயம் தற்போது அது உடனே
நிகழும் என்று தீர்க்கதரிசனம் மேலும் விளக்கம் தருகிறது.
- இந்த புவியில் மிகப் பெரிய பூமிசார்ந்த அதிர்வு ஒன்று தற்பொழுது வர உள்ளதாகவும் இதனை உணர்ந்து மக்கள் தங்களை தயார்படுத்தி, தற்காத்துக்கொள்ள முயற்சிகளை துவங்கினால் பெரும் சேதங்கள் தவிர்க்கப்படும் என்று மேலும் ஒரு தீர்க்கதரிசனம் எடுத்துக் கூறுகிறது. மேலும் இந்த பூமி அதிர்வைப்பற்றி பலநாட்டு அறிஞர்களும், விஞ்ஞானிகளும் முன்னதாகவே எச்சரிக்கை செய்வார்கள் என்று அந்த தீர்க்கதரிசனம் மேலும் சில விளக்கங்களை தருகிறது.
- சுமேரியா நாட்டில் உருவாகும் ஒரு கொடிய நோய் அந்த நாட்டையே பரிதாபத்திற்கு ஆளாக்கும் என்று மேலும் ஒரு தீர்க்கதரிசனம் கூறுகிறது.
- ரஷ்ய நாட்டில் உருவாகும் மாபெரும் புயல் ஒன்று அந்நாட்டில் பலத்த சேதங்களை உருவாக்கும் என்று மேலும் சில தீர்க்கதரிசனங்கள் எடுத்துக் கூறுகின்றன.
- உலகவரலாற்றில் கணினி சார்ந்த விஞ்ஞானம் சில நாட்களுக்கு செயல்படாமல் ஸ்தம்பிக்கும் சூழ்நிலை உருவாக உள்ளது என்றும், இதற்கு விஞ்ஞானிகளும், கணினி அறிஞர்களும் விடைகாண முடியாது என்றும் மேலும் ஒரு தீர்க்கதரிசனம் இங்கு எடுத்துக்கூறுகிறது.
- இந்திய திருநாட்டில் உருவாகும் ஒரு ஆன்மீக அமைப்பு மக்களுக்கு பல உண்மைகளை கூற உள்ளது என்றும், அந்த ஆன்மீக அமைப்போடு உலக ஆன்மீக அமைப்புகள் சாதி, மத பேதமின்றி இணைவார்கள் என்றும், இதுவே தீர்க்கதரிசனத்தில் சிறப்பான செய்தி என்று தீர்க்கதரிசனத்தின் 10-வது கோட்பாடு எடுத்துக்கூறுகிறது.
- உலக மக்கள் யாவரும் ஒன்று கூடும் ஒரு தினம் விரைவில் ஆசியாவில் உருவாகும் என்றும், அதற்கு உலக சமூக அமைப்பு ஒன்று ஏற்பாடுகளை செய்யும் என்றும், இதுவே இந்தியாவை உலக நாடுகள் திரும்பி பார்க்கும் படி செய்யும் என்று மற்றொரு தீர்க்கதரிசனம் எடுத்துக்கூறுகிறது.
- விரைவில் ஆன்மீகவாதி ஒருவர் இயற்கை எய்துவார் என்றும், இது நடைபெற்றவுடன் அந்த அமைப்பில் பல சம்பவங்கள் நடக்கும் என்றும், அங்குள்ள மக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் அலைவார்கள் என்றும், அச்சமயத்தில் இறைவனின் அற்புதம் ஒன்று அங்கு நடைபெற்று அந்த மக்களை வழிநடத்திச் செல்லும் ஒரு அற்புதம் நடைபெறும் என்று ஒரு தீர்க்கதரிசனம் தெரிவிக்கின்றது.
- தீர்க்கதரிசனத்தின் மேல் இனி மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் அளவிற்கு இறைவனின் நியாயத்தீர்ப்புகள் இந்த பூமியில் நடந்தேறும் என்று தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது.
- உலக கத்தோலிக்க கிருஸ்துவ சபை ஒரு அறிவிக்கையை வெளியிடும் என்றும் அது கிருஸ்துவர்களுக்கு புதிய நம்பிக்கையை தரும் என்று மற்றொரு தீர்க்கதரிசனம் இங்கு எடுத்துக்கூறுகிறது.
- உலக வரலாற்றில் “கருப்பு தினம்” என்று ஒரு நாள் வரும் என்றும், அது அந்நாட்டிற்கு போதாத தினம் என்றும் தீர்க்கதரிசனம் மற்றொரு செய்தியை வெளியிடுகிறது.
மேலும்
உலகத்தில் ”புனிதர்” ஒருவரின் வருகை நிச்சயம்
உண்டு என்றும் அதைச்சார்ந்த இறை திருவிளையாடல்கள் வரும் டிசம்பர் மாதம் முதல்
உலகம் முழுவதும் வெளிப்படும் என்றும், அன்று முதல் மக்கள் நம்முடைய வெளிப்பாட்டில்
இடம் பெறும் தீர்க்கதரிசனங்களின் மேல் ஆழ்ந்த நம்பிக்கை கொள்வார்கள் என்றும், இந்த
நம்பிக்கையே ஒரு நாள் வெளிச்சமாக ஆகாயத்தில் ஒளி வீசும் என்றும், அது இறைவனின் தூய
ஆத்மாவின் மீது நாம் வைத்துள்ள நம்பிக்கையின் உண்மைத்தன்மையாக விளங்கிடும் என்று இங்கு
எடுத்துக் கூறுகிறது.
--இன்னும் தொடரும்—
ஆசிரியர். ஸ்ரீ யோகேஸ்வரன்
குறிப்பு : இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் எற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை, வருங்காலத்தை பற்றி விவாதிக்க அனைவருக்கும் உரிமை உண்டு, அச்சப்படுவதற்க்கு அல்ல ! அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும் ! இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது, இதை ஒரு கதைப்போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்டவெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள் ஒளியாக பிரகாசிக்கும்..
--இன்னும் தொடரும்—
ஆசிரியர். ஸ்ரீ யோகேஸ்வரன்
குறிப்பு : இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் எற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை, வருங்காலத்தை பற்றி விவாதிக்க அனைவருக்கும் உரிமை உண்டு, அச்சப்படுவதற்க்கு அல்ல ! அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும் ! இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது, இதை ஒரு கதைப்போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்டவெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள் ஒளியாக பிரகாசிக்கும்..
No comments:
Post a Comment