“ஆகாயத்தில்
ஒரு ஒளி” என்ற தொடரானது இனி உலகத்தின் உண்மை நிலைகளை மக்களுக்கு எடுத்துரைக்கபோகின்றது.
மக்களின் மனமாற்றமே யுக மாற்றத்திற்கான திறவு கோல் என்று கடவுள் கோட்பாடுகள்
கூறுகின்றன.
உலகத்தின்
படைப்பில் இயற்கை அழகானது, அதில் ஆபத்தும் உண்டு, ஆனந்தமும் உண்டு, ஆரோக்கியமும் உண்டு,
ஆனால் அதில் உள்ள உண்மைகளை மக்கள் இன்னும் அறியாமல் உள்ளனர், ஆழத்தில் பல இரகசியங்கள்
உண்டு. ஆழமென்பது இங்கு கடலின் ஆழத்தை குறிக்கும். இந்த உலகத்தில் திடீரென்று காணமல்
போன அனைத்தும் வானத்தில் மறைத்து வைக்கப்படவில்லை. ஆனால் கடலின் ஆழத்தில் பாதுகாக்கப்பட்டு
உள்ளது என இன்றைய 15 –ம் தீர்க்கதரிசனம் ஒரு உண்மையை வெளிச்சமிட்டு காட்டுகிறது.
கடலின்
ஆழத்தை கணக்கிடாத மனிதனுக்கு கண்ணுக்கு புலப்படாத சக்திகளைப் பற்றி நிச்சயம் அறிந்து
கொள்ள முடியாது என 15-ம் தீர்க்கதரிசனம் கூறுகிறது. கண்ணுக்கு புலப்படாத ஆனால் மக்களுக்குள்
மக்களாக மாறி பல வினோத சக்திகள் வாழ்ந்து வருவதாக இந்த 15-ம் தீர்க்கதரிசனம் ஒரு வியப்பான
செய்தியினை இங்கு வெளியிடுகிறது.
மனிதனுக்குள்ளே
பல வியப்பான ஆற்றல்கள் மறைந்துள்ளன என்றும், அத்தகைய சக்திகளை மனிதன் இன்னும் பயன்படுத்தும்
நுணுக்கங்களை அறியவில்லை என்றும், அத்தகைய சக்திகளை மனிதனுக்கு அருகே வாழும் சில கண்னுக்கு
புலப்படாத மகாசக்திகள் பயன்படுத்தி வருகின்றன என்றும் இது வெகு சீக்கிரத்திலேயே விஞ்ஞானத்தால்
அறியப்படும் என்றும் 15-ம் தீர்க்கதரிசனம் மேலும் அதன் உண்மைகளை எடுத்துக் கூறுகிறது.
மனிதன்
தான் வாழும் காலக்கட்டத்தில் இதன் உண்மைகளை முழுமையாக உணர்ந்தும், உணராமலும் வாழ்ந்து
சென்றதாகவும், அக்கால ஞானிகளால் இத்தகைய சக்திகளை அவர்கள் இனம்கண்டு அதனை பயன்படுத்தி
வந்தனர் என்றும், ஆனால் இக்கால மனிதர்கள் இதனை அறியாமல் வாழ்ந்து வருகின்றனர் என கடவுள்
கோட்பாடுகள் தெரிவிக்கின்றன.
15-ம் தீர்க்கதரிசனம் இனி நடக்கும் பல வினோத சம்பவங்களை
பற்றி இங்கு சில குறிப்புகளாக வெளிப்படுத்துகின்றது.
அவைகள் :
- தென் பசிபிக் கடலோரமாக ஒரு விந்தையான வினோத உருவங்களை இனி மக்கள் காண்பார்கள் என்றும், அதன் பிறகே இவ்வுலகம் விழிப்படையும் என்றும், அப்பொழுது மதம் சார்ந்த பல்வேறு அமைப்புகள் பல கட்டுகதைகளை அவிழ்த்து விடுவார்கள் என்றும் 15-ம் தீர்க்கதரிசனம் மேலும் விளக்கம் தருகிறது. கடலுக்குள் உள்ள அந்த அதிசயங்களை வரும் சுனாமி பேரலைகளே உலகத்திற்கு வெளிச்சமிட்டு காட்டப்போவதாக மேலும் சில உண்மைகளை இந்த 15-ம் தீர்க்கதரிசனம் எடுத்துக்கூறுகிறது.
- தமிழக கல்குவாரி ஒன்றில் 5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒரு இரகசியம் தென்படும் என்றும், அதனை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மற்றுமின்றி அந்த இடத்திற்கு அது விஞ்ஞானிகளையும் வரவழைக்கும் என்று மற்றொரு தீர்க்கதரிசனம் ஒரு உண்மையை நமக்கு எடுத்துக் கூறுகிறது.
- மக்களின் மனதில் நீங்காத ஒரு அற்புத நிகழ்வு கூடிய விரைவில் நடக்கும் என்றும், அது தென் தமிழகத்தில் ஒரு சித்தரால் நடக்க உள்ளதாக மற்றொரு தீர்க்கதரிசனம் இங்கு ஒரு குறிப்பை தருகின்றது.
- அற்புதங்கள் என்பவை மந்திரங்களையோ (அ) மனிதர்களையோ சார்ந்தது அல்ல என்றும், அது இறைவனுக்கு மட்டுமே உரியவை என்றும், அது மனிதர்களை சார்ந்து நடக்கும் பொழுது மக்களால் அது கவர்ந்திழுக்கப்படுகிறது என்றும், அது போன்ற ஒரு நிகழ்வு சேலத்தின் மையப்பகுதியில் விரைவில் நடக்க உள்ளதாக மற்றொரு தீர்க்கதரிசனம் மற்றுமொரு குறிப்பை தருகிறது.
- திருவண்ணாமலை, திருப்பதி, சேலம், கடலூர், குமரி மாவட்டம், தருமபுரி, காஞ்சிபுரம், மயிலாடுதுரை, பழனி, ஊட்டி இவையாவும் குறிப்பில் கொள்ளவேண்டிய ஊர்கள் என்றும், இங்கிருந்து பல சம்பவங்கள் தொடர்ச்சியாக நடக்கும் என்றும், அரசு இயந்திரம் மிக வேகமாக செயல்பட வேண்டும் என்றும் இறை தீர்க்கதரிசனம் ஒன்று இங்கு ஒரு குறிப்பை தருகிறது.
- கர்நாடாக எல்லையில் சில வியப்பூட்டும் “ஒளி பிழம்பு” நிகழ்வுகள் நடக்க உள்ளதாகவும், மக்களுக்கு இது அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் தரும் என்று மற்றொரு தீர்க்கதரிசனம் கூறுகிறது. மேலும் இது மிக, மிக அருகில் நடக்கும் நிகழ்வு என்று அந்த தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது.
- காலத்தால் அழியாத காவியமான கண்ணகியின் கதைக்குள் உள்ள ஒரு விஞ்ஞான உண்மை கேரளத்தின் எல்லையில் கண்டறிவார்கள் என்றும், இது வியக்கதக்கவகையில் பிரமிப்பை ஏற்படுத்தும் என்றும் மற்றொரு தீர்க்கதரிசனம் கூறுகிறது.
- கன்னியாகுமரி கடலில் இருந்து ஒளியால் ஆன ஒரு உருவம் எழுந்து கடல் நடுவே நடந்து செல்லும் அதிசயத்தை சுற்றுலா பயணிகளால் படம்பிடிக்கப்படும் என்றும், அது பல சர்ச்சைகளை அப்பொழுது ஏற்படுத்தும் என்றும் மற்றொரு தீர்க்கதரிசனம் கூறுகிறது. இதுவும் சமீபமாக நடக்க கூடிய ஒரு செயல் என்று அந்த தீர்க்கதரிசனம் ஒரு குறிப்பை தருகிறது.
--இன்னும்
தொடரும்—
ஆசிரியர்.
ஸ்ரீ யோகேஸ்வரன்
குறிப்பு : இத்தொடரில்
வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் எற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை,
வருங்காலத்தை பற்றி விவாதிக்க அனைவருக்கும் உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல ! அவசியம்
இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும் ! இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே
இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது, இதை ஒரு கதைப்போல் படியுங்கள், உண்மை ஒரு நாள்
வெட்டவெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள் ஒளியாக பிரகாசிக்கும்..
No comments:
Post a Comment