’ஆகாயத்தில் ஒரு ஒளி’ என்ற தொடரில் இடம் பெறும்
வருங்கால தீர்க்கதரிசனங்கள் யாவும் நடைபெறும் காலம் வந்துவிட்டதாக இன்றைய இறைகோட்பாடுகள்
தெரிவிக்கின்றன. நமக்குள் உருவாகும் ஒரு எண்ணமே
நாளைய புதிய கண்டுபிடிப்புகளுக்கு மூலமான சக்தி என்பதை மனிதகுலம் ஏற்றுக்கொண்டே
ஆக வேண்டும். எண்ணங்களே மனிதனை ஆக்கபூர்வமான ஒரு படைப்பாக இந்த உலகத்திற்கு வெளிச்சமிட்டு
காட்டுகின்றது ஆகையால்தான் சான்றோர்கள் “எண்ணம் போல் வாழ்வு” என்று கூறுகின்றனர்.
இந்த உலகில் புதிய, புதிய படைப்புகள் யாவும் மனித
அறிவால் உருவாக்குப்பட்டுள்ளன. இந்த அற்புதமான படைப்பின் திறனை மனிதனுக்குள் வைத்தது
யார்? இதனை இன்றளவும் “விஞ்ஞானத்தால்” கண்டறிய முடியவில்லை, காரணம் இவ்வாறு ஒரு கேள்விக்கு
விடை காண வேண்டும் என மனிதனுக்குள் அறிவுறுத்துவது அவனுடைய மனமே ஆகும். ஆனால் மனித
மனதிற்கு அப்பாற்பட்ட சக்தி ஒன்று இவ்வுலகில் இருந்து வருகிறது. அதுவே மனிதனையும், இவ்வுலகத்தையும் இயக்கிவருகிறது.
அந்த அற்புத சக்திக்கே ”கடவுள்” என்று
பெயர். அந்த கடவுளின் ஒரு சிறு சக்தியே நம்முடைய ஆழ்மனதில் உள்ள ஆழ்மனசக்தியாகும்.
அதாவது மனோசக்தியாகும் இந்த மனோசக்தியை மனிதன் தனது ஆறாம் அறிவின் வாயிலாகப் பயன்படுத்தும்
போது மட்டுமே அவனால் இவ்வுலகில் புதுப்புது கண்டுபிடிப்புகளை உருவாக்கிடவோ (அ) கண்டறியவோ
முடிகிறது. இதைத்தான் “புதுமைகளை படைக்கும் புது மனிதன் என்று வரலாறு” கூறுகிறது.
காலப்பயணம் என்று ஒன்று உண்டு அது நம்முடைய ஆத்மாவானது
இவ்வுலகில் இருந்து தான் நினைக்கும் இடத்திற்கு
சென்று தனக்கு தேவையான அறிவுக்களஞ்சியத்தை (ஞானம்) இந்த பூமிக்கு கொண்டு வரமுடியும்.
அவ்வாறு நமது ஆத்மா இந்த பூமியைவிட்டு அயல் கிரகங்களுக்கு கூட தனது காலப்பயணத்தை மேற்க்கொள்ள
முடியும், அப்படி ஒரு பயணத்திற்கு துணை நிற்பது “காலச் சக்கரம்” என்ற அற்புதமான படைப்பு ஒன்று கடவுளால் உருவாக்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்த காலச்சக்கரத்தை பயன்படுத்தியே ஆத்மா தனது தூர தேசங்களுக்கு சென்று வரும், இவ்வாறு
சென்றுவரும் ஆத்மாவே இந்த உலகில் மனித உடலைக் கொண்டு மனித உலகிற்கு தேவையான புதிய படைப்புகளை
உருவாக்குகிறது என்று இறைக்கோட்பாடுகள் தெரிவிக்கின்றன.
இந்த உலகில் காலச்சக்கரத்தை கண்டவர் எவரும் இல்லை,
ஆனால் அதன் சக்தியை ஒளிவடிவாக, பேரொளியாக இவ்வுலகில் கண்டவர்கள் ஏராளம். ஆகவே நாம்
கண்களால் கண்ட ஒளி வடிவங்களைக் கூட சில நேரங்களில் இதுவென்று அனுமானம் செய்ய முடியாது.
ஆகவே இன்றைய 12-ம் தீர்க்கதரிசனம் இதற்காண சில விளக்கங்களை இன்று தெரிவிக்கின்றது.
மனிதர்களைப் போன்றே அயல் கிரகத்தில் வசிப்பவர்கள் தனது முயற்சியால் காலப்பயணத்தை மேற்கொண்டு
அடிக்கடி பூலோகத்திற்கு வந்து செல்கின்றனர் என்றும், அவ்வாறு வரும் அந்த ஆத்மாக்கள்
பயணம் செய்யும் காலச்சக்கரங்களை இனி ஆகாயத்தில் பல ஒளிப்புள்ளிகளாக, வட்ட வடிவங்களாக
மக்கள் கண்களால் காண முடியும் என்றும், இதுவே அதற்கான இக்காலம் என்றும், அதற்கு காரணம்
ஆகாயத்தில் திடீரென்று ஏற்படும் ஒரு மாற்றமே இத்தகைய காட்சிகள் மனித சமூகம் காண்பதற்காண
சாத்திய கூறுகளை ஏற்படுத்தும் என்று 12-ம் தீர்க்கதரிசனம் இங்கு எடுத்துக்கூறுகிறது.
- 12-ம் தீர்க்கதரிசனம் நடைபெறுவதற்கு முன்பாக இப்பூமியின் தென் துருவப் பகுதியில் பல ஆச்சர்யங்களும், அதிசயங்களும் நடக்கும் என்றும் தீர்க்கதரிசன குறிப்புகள் தெரிவிக்கின்றன.
- 12-ம் தீர்க்கதரிசனம் நடபெறும் சமயத்தில் வான் மண்டலத்தில் பல வினோத ஊர்திகளை விஞ்ஞானிகள் முதலில் கண்டறியும் சம்பவம் ஒன்று நடைபெறும் என்று இந்த 12-ம் தீர்க்கதரிசனம் சில உண்மைகளை எடுத்துக்கூறுகின்றது.
- இந்திய தேசத்தின் இமயமலைப் பகுதிகளில் திடீரென்று சில அசம்பாவித சம்பவங்கள் நிகழக்கூடும் என்றும், அச்சமயத்தில் இனம்புரியாத பல வினோத சம்பவங்கள் அங்கு நடக்ககூடும் என்று தீர்க்கதரிசன கோட்பாடுகள் தெரிவிக்கின்றன.
- கயிலாயப் பாதையின் வடக்கே ஒரு அதிசயம் நிகழும் என்றும் அதனை விஞ்ஞானிகள் உறுதி செய்வார்கள் என்றும் தீர்க்கதரிசனம் எடுத்துக்கூறுகிறது.
- இந்தியாவில் மறைந்த ஒரு ஆன்மீக குருவானவர் தனது ஆத்ம சொரூபங்களை பல மாநிலத்தில், பல இடங்களில் ஒரே சமயத்தில் வெளிப்படுத்துவார் என்றும், அச்சமயத்தில் மக்கள் ஆச்சர்யத்திலும், பீதியிலும் காணப்படும் பொழுது இறைவன் ஒரு சில அற்புதங்களை இந்திய மாநிலங்களில் வெளிப்படும்படி செய்வார் என்று ஒரு சில தீர்க்கதரிசனங்கள் தெரிவிக்கின்றன.
- மற்றொரு உலகம் என்பது நாம் வாழும் பூமிக்கு அருகே உள்ளது என்றும், அதனை இதுவரை விஞ்ஞானிகளால் அறிய முடியவில்லை என்றும், தற்பொழுது அதனை கண்டறியும் வகையில் விஞ்ஞானிகளின் செயல்கள் இருக்கும் என்றும் மற்றொரு தீர்க்கதரிசனம் இதனை எடுத்துக்கூறுகிறது.
- உலகில் உள்ள அனைத்து கலைகளுக்கும் முன்னோடியாக இந்திய தேசத்தின் ஒரு கலையே அடிப்படையாக இருந்தது என்றும் அதனை உலக நாடுகளே ஏற்றுக்கொள்ளும் நிகழ்வு வெகு விரைவில் நடக்கும் என்றும் தீர்க்கதரிசனக் கோட்பாடுகள் தெரிவிக்கின்றன.
--இன்னும்
தொடரும்—
ஆசிரியர்.
ஸ்ரீ யோகேஸ்வரன்
குறிப்பு : இத்தொடரில்
வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் எற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை,
வருங்காலத்தை பற்றி விவாதிக்க அனைவருக்கும் உரிமை உண்டு, அச்சப்படுவதற்க்கு அல்ல !
அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும் ! இயற்கையை நேசிக்க வேண்டும்
என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது, இதை ஒரு கதைப்போல் படியுங்கள்,
உண்மை ஒரு நாள் வெட்டவெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள் ஒளியாக பிரகாசிக்கும்..
No comments:
Post a Comment