Wednesday, 5 November 2014

ஆகாயத்தில் ஒரு ஒளி (பகுதி – 5)



     இவ்வுலகில் நடக்கும் அழிவுச் சம்பவங்கள் யாவும் அவைகள் தானாக நடக்கும் சம்பவங்கள் என்று மக்கள் நம்பி உள்ளனர், ஆனால் இதில் உண்மைகள் ஏதும் இல்லை. அச்சம்பவங்கள் யாவும் சில காரண, காரியங்களுக்காக நடத்தப்படுகின்றன, எதற்காக இவைகள் நடக்கின்றன? என்ற கேள்விகள் நமக்குள் எழலாம்.

     நடக்கும் அனைத்து சம்பவங்களும் இந்த பூமியின்மீது இறைவன் நடத்தும் நியாயத்தீர்ப்புகளின் எதிரொளியே என்பதை நாம் இங்கு கண்டிப்பாக நினைவில் கொள்ள வேண்டும், நியாயத்தீர்ப்புகள் என்றால் என்ன? மக்களின் மன நிலையிலும், வாழ்வியல் முறைகளிலும் ஏற்பட்ட ஒழுக்ககேடான செயல்களினால் தர்மத்தின் உண்மைநிலைகள் அடியோடு மாறிவிட்டன, அது மட்டுமின்றி பொய்யான வாழ்க்கை, கபடம், சூது, வஞ்சகம், கொலை, கொள்ளை, போன்ற சம்பவங்களால் இப்புவியின் இயக்க கோட்பாடுகளில் பாதிப்புகள் ஏற்பட்டுவிட்டன, இதனால் இப்புவியானது அழியும் சூழலுக்கு மிகவும் தள்ளப்பட்டுவிட்டன, இதனை சரி செய்ய வேண்டுமெனில் அதற்கான ஒழுங்கு நடவடிக்கைகளை மனித சமுதாயம் காண வேண்டும். ஆனால் அது சாத்தியமற்ற ஒரு செயலாகும். ஆகையால் இப்புவியை படைத்த இறைவன் அதனை சரி செய்திட விருப்பம் கொண்டு, அவரின் ஒழுங்கு நடவடிக்கையின் ஒட்டு மொத்த செயலுக்கே ”நியாயத்தீர்ப்புகள்” என்று இங்கு குறிப்பிடப்படுகின்றன.



    


     இந்த உலகில் அனைத்து சக்திகளும் ஒரு கட்டுபாட்டோடு, தன் நிலையில் மாறாமல் இயங்கி வந்ததை நாம் யாராலும் மறுக்க முடியாது, ஆனால் இன்றோ அவைகளின் இயக்கத்தில் பெரும் மாறுபாடுகள் உள்ளதை விஞ்ஞானமும் ஏற்றுக்கொண்டுள்ளது. உலகம் வெப்பமயமாதல் என்ற ஒரு நிலையை மனித சமூகம் இன்று கையில் எடுத்துக்கொண்டு உலகம் முழுவதும் எச்சரிக்கை செய்துவருகிறது.     இதற்கு யார் காரணம்? கடவுள் அல்ல! இயற்கையும் அல்ல! முழுக்க, முழுக்க மனித சமூதாயமே காரணமாகும். மேலும் ஆக்கும் சக்தியும், அழிக்கும் சக்தியும் எவை என்பதை விஞ்ஞானம் இன்று முழுமையாக உணர்ந்து இருந்தாலும் இன்று உலக நாடுகள் அதன் பங்களிப்பை ”அழிக்கும் நிலைக்கே” பயன்படுத்துகின்றன, இது ஒரு தகாத செயல் மற்றும் மனித மாண்பு அற்ற இழிச்செயல் என்று தெரிந்தாலும், ஒரு நாடு தன் நாட்டு மக்களை பாதுகாத்திட எண்ணம் கொண்டு, மற்ற நாடுகளின் மக்களை கொல்லுதல் (மரணக்குழிக்குள் தள்ளுதல்) எந்த அளவிற்கு தருமமாகும், எந்த அளவிற்கு அது நீதியாகும், இதை உலக நாடுகளின் சபை இன்றுவரை எதிர்த்து வந்தாலும், அதன் விதிகளை மீறி நடக்கும் நாடுகளை இன்று நாம் அறியாமல் இல்லை, ஆகையால்தான் அதுபோன்ற நாடுகளின்மீது “இறைவனின் நியாயத்தீர்ப்புகள்” இறங்கிட உள்ளன. இதனால் மற்ற நாடுகளின் இறைபற்றிய எண்ணமும், ஒரு அச்சமும் ஏற்பட்டு அந்நாடுகளும் தங்களின் நிலையிலிருந்து மாறுவதற்கு நிறைய வாய்ப்புகள் உண்டு என சில இறை கோட்பாடுகள் தெரிவிக்கின்றன.

     மனித சமூகம் எதை அறிந்து கொள்ள வேண்டுமோ அதனைவிடுத்து, தனது ஆசாபாசங்களுக்காக மக்கள், மக்களையே அழித்துக்கொள்ளும் இழிவான நிலைக்கு இச்சமூகம் சென்றுள்ளது. இதனை கண்னுற்ற இறைவன் மக்கள் மீது ஒரு நியாயத்தீர்ப்பினை வழங்கிட சித்தமாக உள்ளார், அவர் வருகையின் போது இப்புவியின் மீதும், அதில் வாழும் மக்கள் மீதும் இந்த நியாயத்தீர்ப்புகள் இருக்கும் என சத்திய யுக கோட்பாடுகள் சுட்டிக்காட்டுகின்றன.

     ஆம், இவ்வுலகமே வியந்து பார்க்கும் ஒரு யுகப்புரட்சியும், யுகமாற்றமும் இறைவனால் நிகழ்த்தப்பட உள்ளன, இந்த மாற்றம் நடக்கும் அக்காலக்கட்டத்திற்கே “சத்தியயுகம்” என்று வேதங்களால் குறிப்பிடப்படுகின்றன. சத்தியத்தை நிலைநிறுத்தும் அந்த யுகத்திற்கே சத்தியயுகம் என்று பெயர், அந்த சத்திய யுகத்தின் அதிபதியான இறைவன் தனது சேனைகளோடு இப்புவியின் மீது வந்திறங்கும் நிகழ்வு விரைவில் நடைபெறும் என்று சத்தியயுக தீர்க்கதரிசனங்கள் தெரிவிக்கின்றன. ஆகவே மக்கள் இறைவனின் வருகை நம்மிடையே உள்ளது என்றும், அது இக்காலமே என்ற குறிப்பை உணர்ந்து தர்மத்தின் வழியில் நடப்பார்களே ஆனால் அவர்களின் வாழ்க்கை நல்ல முறையில் அமையும் என்பதை இந்த தொடர் வழியாக நாம் உணரலாம்.

      இந்த ஐந்தாம் தொடரில் இடம் பெறும் தீர்க்கதரிசனம் எதுவென்றால் “எபோலோ” வைரசை விட மிகுந்த கொடுமையான ஒரு நோய் உலக மக்களை அச்சுறுத்த வருகிறது என்றும், இந்நோய் கண்டவர்கள் மூன்று தினங்களில் மரணிப்பார்கள் என்றும், இது மிக அருகில் உள்ள சம்பவம் என்றும், இந்த நோய்க்கான மருந்து இந்திய சித்தர்களின் பாடலில் மறைந்துள்ளது என்றும், அப்பாடலின் குறிப்பின் படி அந்நோயை “இந்திய சித்த மருத்துவம்” முழுமையாக குணமாக்கும் என்று, இந்த ஐந்தாம் தீர்க்கதரிசனம் இங்கு தெரிவிக்கின்றது.

     இந்த ஐந்தாம் தீர்க்கதரிசனத்தில் குறிப்பிட்ட அந்த நோய்க்கான அறிகுறிகளைப் பற்றி இந்த தீர்க்கதரிசனம் சில விளக்கங்களை இங்கு தெரிவிக்கின்றது. அதாவது இந்நோய் தாக்கம் கண்ட மனிதர்களுக்கு முதலில் சுவாச மண்டலம் முற்றிலும் பாதிக்கும் என்றும், இரண்டாவதாக நரம்பு மண்டலம் செயலிழக்கும் என்றும், அடுத்ததாக தசை நார்கள் விறைப்பு தன்மைக்கு ஆளாகி மரணம் நிகழும் என்றும் இந்த தீர்க்கதரிசனம் சில விளக்கங்களை எடுத்துக் கூறுகிறது.

     புனிதம் மிக்க சித்த வைத்திய மார்க்கத்தில் 72-ம் பகுதியே இதற்கு தீர்வு என்று ஒரு மறைமுகக் குறிப்பையும் இந்த தீர்க்கதரிசனம் எடுத்துக் கூறுகிறது. ”அறிவது அவனவன் செயல், அறியாதது அவனவன் விதிச்செயல்” என்று தீர்க்கதரிசனம் மேலும் ஒரு தத்துவக்கோட்பாட்டை இங்கு எடுத்துரைக்கின்றது. ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற இந்த ஆன்மீக தொடரில் இடம் பெறும் தீர்க்கதரிசனங்கள் மக்களை அச்சுறுத்த அல்ல, இவைகள் வருங்கால நடப்புகளின் முன் அறிவிப்புகள், ஆகவே இது போன்ற சம்பவங்கள் துவங்கும் காலக் கட்டத்தில் தெரியவரும் ஆரம்ப அறிகுறிகளை இச்சமூகம் இனங்கண்டுகொண்டு தங்களை மரணத்திலிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் இறைவனால் வெளிப்படுத்தப்படும் ஒரு முன் அறிவிப்பே இங்கு தீர்க்கதரிசனங்களாக வெளிப்படுத்தப்படுகின்றன. அகவே மனித சமூகம் ஒரு நாள் இந்த தீர்க்கதரிசனத்தின் வாயிலாக காக்கப்படும் பொழுது, அன்று இந்த தீர்க்கதரிசனம் ஒரு நாள் ஆகாயத்தில் ஒரு ஒளியாக வீற்று நம்மிடையே ஆழ்ந்த நம்பிக்கையை ஏற்படுத்தும்…

--இன்னும் தொடரும்—
ஆசிரியர். ஸ்ரீ யோகேஸ்வரன்




குறிப்பு : இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் எற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை, வருங்காலத்தை பற்றி விவாதிக்க அனைவருக்கும் உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல ! அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும் ! இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது, இதை ஒரு கதைப்போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்டவெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள் ஒளியாக பிரகாசிக்கும்...

3 comments:

  1. உங்களது தொலைபேசி எண் தரமுடியுமா

    ReplyDelete