" ஆகாயத்தில் ஒரு ஒளி " என்ற வருங்கல தீர்க்கதரிசனத்தில் இன்று நாம் காண உள்ளது 29-ம் தீர்க்கதரிசனம் ஆகும். இந்த தீர்க்கதரிசனம் மனித குலம் அரிய வேண்டிய பல அரிய செய்திகளை தீர்க்கதரிசனங்களாக வெளியிடுகின்றது. அதன்படி 29-ம் தீர்க்கதரிசனம் தனது மெய்படும் உண்மைகளை உலக மக்களுக்கு சுட்டிக்காட்டிட விரும்புகின்றது.
அவைகள் :
- இந்த உலகில் கடலுக்குள் மறைந்து போன பண்டைய தமிழகமான ‘லெமூரீயா’ கண்டம் கடலை விட்டு வெளியே வரும் என்று 29-ம் தீர்க்கதரிசனம் ஒரு குறிப்பை தருகின்றது.
- உலகில் மனித தோற்றத்தில் வாழ்ந்து தேவலோகத்தை அடைந்த இயேசுவின் புனித ஆத்மா மீண்டும் ஆவி வடிவில் இந்த பூலோக மக்கள் காணும்படி அவரின் வெளிப்பாடு அமையும்.
- ‘இஸ்ரவேல்’ என்ற பெயர் வரலாற்றை விட்டு நீங்கும் ஒரு அதிசயம் நடக்க உள்ளதாக 29-ம் தீர்க்கதரிசனம் ஒரு குறிப்பை தருகின்றது.
- வானில்ஒளிப்பிழம்புபோன்றபறக்கும்தட்டுகளைமனிதசமூகம்காணும் என்றும், இனிபூமி எங்கும் அதில் வரும் ஒருகூட்டம் இந்த பூமியில் எதற்காகவோ தேடி அலைவார்கள் என்று 29-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.
- யூதர்களுக்கு இது போதாத காலம் என்றும், இதனை உலக மக்கள் சமூகம் கவனத்தில் கொள்ள வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளது என்று 29-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.
- பாகிஸ்தான் நாட்டில் பல கலவரங்கள் வெடிக்கும் என்றும், அங்கு மீண்டும் இராணுவ ஆட்சி எழும்பும் என்றும் இதை யாராலும் தடுக்க முடியாது என்று 29-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.
- உலகில் உள்ள மகா சமுத்திரங்களிலிருந்து பல அரிய காட்சிகளும், இவ்வுலகில் மறைந்த பொருட்களும் மேலே வரும் என்று 29-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.
- கடவுள் இல்லை என்று கூறுபவனை விட கடவுள் உண்டு என கூறி தவறு செய்யும் கூட்டங்கள் இவ்வுலகம் முழுவதும் உண்டு எனவும், அது போன்ற கூட்டங்களின் தலைவர்கள் திடீர், திடீர் என்று மரணத்தை சந்திப்பார்கள் என்றும், இதுவும் கடவுளின் விதி என்று 29-ம் தீர்க்கதரிசனம் ஒரு குறிப்பை தருகின்றது.
- முஸ்லீம் மதத்தினரிடையே ஒரு மகத்தான அற்புதம் வெளிப்படும் என்றும், இதுவரை அவர்களிடையே நடந்திராத ஒரு மாபெரும் நிகழ்வு என்றும் 29-ம் தீர்க்கதரிசனம் மேலும் ஒரு குறிப்பை தருகின்றது.
- மக்களுக்குள் மக்களாக வாழ்ந்து வரும் பல உயரிய புனித ஆன்மாக்கள் இவ்வுலகம் முழுவதும் வெளிப்பட்டு மக்களிடையே கடவுளின் வருகையை முன் அறிவிப்பார்கள் என்றும், அதற்கான முதல் நிகழ்வு இந்திய தேசத்திலிருந்து துவங்கும் என்றும், இது உலகின் அனைத்து நாடுகளிலும் வெளிப்படையாக அமையும் என்று 29-ம் தீர்க்கதரிசனம் மேலும் ஒரு குறிப்பை தருகின்றது.
- சுவிசேஷ நூல்களிலிருந்து பல உண்மைகளை அறிந்த கிருஸ்துவர்களுக்கு இறைவன் ஒருவரே என்ற நிலையை அறியாது விட்டனர் என்றும், இது ‘மத்தேயு’ என்ற தீர்க்கதரிசியின் வாயிலாக கூறப்பட்டுள்ளது என்றும், அவரே மீண்டும் மக்களிடையே ஒரு ‘புதிய’ வெளிப்பாட்டை வெளியிடும் அதிசயமொன்று நடைபெற உள்ளதாக 29-ம் தீர்க்கதரிசனம் மேலும் ஒரு குறிப்பை தருகின்றது.
- மக்களுக்காக வாழ்ந்தவர் பலர், இறைவனுக்காக வாழ்ந்தவர் பலர், ஆனால் உலகத்திற்காக வாழ்ந்தவர் ஒரு சிலரே அவர்களின் இரகசியங்களை இனி சித்தர்கள் உலகம் முழுவதும் தோன்றி அறிவிப்பார்கள் என 29-ம் தீர்க்கதரிசனம் ஒரு குறிப்பை தருகின்றது.
- தமிழக அரசியல் வரலாற்றில் திடீர் என்று பல சம்பவங்கள் நடைபெற உள்ளதாகவும், இது காலத்தின் கட்டாயம் என்றும், இதனை எவராலும் தடுக்க முடியாது என்றும் 29-ம் தீர்க்கதரிசனம் ஒரு குறிப்பை தருகின்றது.
- இன்றைய காலக்கட்டத்தில் பல நடிகர்களுக்கு இது போதாத காலம் என்றும், அரசியல் பின்னணியில் உள்ளவர்களுக்கு இது பலத்த பின்னடைவு என்றும் 29-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.
- உலகமே எதிர்நோக்கியுள்ள நவக்கிரக மாற்றம் என்பது யாரும் எதிர்பாராத பல திருப்பங்களை தரஉள்ளதாகவும், இது பலருக்கு ஆச்சர்யங்களை ஏற்படுத்தும் என்று 29-ம் தீர்க்கதரிசனம் மேலும் ஒரு குறிப்பை தருகின்றது.
-- இன்னும் தொடரும் --
ஆசிரியர். ஸ்ரீ யோகேஸ்வரன்
குறிப்பு :- இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை. வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்கவேண்டும். இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது. இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்டவெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள் ஒளியாக பிரகாசிக்கும்.
No comments:
Post a Comment