Wednesday, 17 December 2014

ஆகாயத்தில் ஒரு ஒளி (பகுதி - 23)


மக்கள் துன்பமின்றி வாழ அவர்கள் மனதில் மரணம் என்ற அச்ச உணர்வு இன்றி வாழ வேண்டும். மரணத்தைப் பற்றிய அச்ச உணர்வு எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் வரலாம். ஆனால் மனிதன் அவைகளின் மேல் கவனம் வைக்காமல் தன் பாதையில் உள்ள துன்பங்களை கடந்து செல்ல பழக வேண்டும். அதற்கு தன்னம்பிக்கையும், தைரியமும், கடவுள் நம்பிக்கையும் முழுமையாக வேண்டும். வேண்டிய யாவும் கிடைக்காவிட்டாலும், தான் இப்புவியில் பயமின்றி வாழ மனிதன் முதலில் கற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு மனிதன் இயற்கையை நேசிக்க கற்றுக் கொள்ள வேண்டும். மாற்றங்களே மனிதனை சீர்படுத்தும். சீர்படுத்தும் எச்செயலுமே மனிதனுக்கு வாழ்வை தரும்.

                ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற நமது வருங்கால தீர்க்கதரிசன தொடரில் இன்று நாம் இங்கு அறிந்து கொள்வது 23-வது தீர்க்கதரிசனத்தை பற்றிய குறிப்புகளாகும்.

                23-ம் தீர்க்கதரிசனம் இன்று எதைப்பற்றி நமக்கு தெரியப்படுத்துகிறது என தெரிந்துகொள்வோம். அதாவதுநாழிகைக்குள் இந்த உலகமே ஸ்தம்பித்து நிற்கும் அளவிற்கு ஒரு மகா அதிசய நிகழ்வு, இந்த பூலோகம் மட்டுமின்றி பிற லோகங்களிலும் நடக்கப் போவதாக 23-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை தருகிறது. இதனால் உலக மக்கள் மரண அச்சத்தை கண்டுவிட்டு அதிலிருந்து மீண்டு வருவார்கள் என 23-ம் தீர்க்கதரிசனம் சில குறிப்புகளை வெளிப்படுத்துகிறது.


                உலகமே ஸ்தம்பித்து நிற்கும் என்றால் என்ன? அது எப்படி நிகழக்கூடும் என்ற கேள்வி நமக்கு இங்கு எழக்கூடும். இதோ அதற்கான விளக்கத்தை 23-ம் தீர்க்கதரிசனமே எடுத்துக் கூறுகிறது. அதாவது இந்த உலகில் சூரியன் தன் இயக்கத்தில் எப்பொழுதும் போல் இருக்கும், பிற கோள்களும் அதன் அதன் நிலையிலுருந்து மாறாமல் அப்படி இருக்கும். ஆனால் நம்முடைய அன்றாட தேவைகளான தொலைபேசி, தொலைக்காட்சி, இண்டர்நெட், வான் ஊர்திகள், தொலைதொடர்பு சாதனங்கள், சேட்டிலைட் போன்றவைநாழிகைக்கு செயல்படாமல் ஸ்தம்பித்து போகும். அப்பொழுது மனிதனுடைய அனைத்து பணிகளும் முடங்கி போய் உலகமே ஸ்தம்பித்து நிற்கும் என்று 23-ம் தீர்க்கதரிசனம் மேலும் ஒரு விளக்கத்தை தருகிறது.


                இச்சமயத்தில் ஆகாயத்திலிருந்து சில மர்ம வான் ஊர்திகள் திடீரென்று தோன்றி ஆங்காங்கே மக்களை அச்சுறுத்தும் என்றும், இதனால் உலக நாடுகள் ஒருமித்து இதற்கு விளக்கம் காணவும், அதனை தடுக்கவும் முயற்சி செய்வார்கள் என்று 23-ம் தீர்க்கதரிசனம் மேலும் ஒரு குறிப்பை தருகிறது.

                மலேசிய நாட்டில் ஒரு மிகப்பெரிய கடல் சார்ந்த அசம்பாவிதம் நடைபெறும் என்றும், அதனால் அந்நாடு சில நாட்களுக்கு ஸ்தம்பித்து நிற்கும் என்றும் 23-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.


                பாரதம் ஒரு புண்ணியப்பூமி. இங்கு குருஷேத்திர போர் நடந்த கதையை உலகமே அறிந்த ஒன்றாகும். அந்த பஞ்ச பாண்டவர்கள் நடமாடிய ஒரு வனப்பகுதி திடீரென்று ஆய்வாளர்களால் கண்டறியப்படும் என்றும், அங்கு இதுவரை உலக மக்கள் அறிந்திடாத ஒரு வரலாற்று உண்மையை ஆய்வாளர்கள் கண்டறிந்து சொல்வார்கள் என்றும், அச்சமயத்தில் இந்த இந்திய தேசத்து மண்ணில் தருமம் மீண்டும் தலைதூக்கி நிமிரும் என்றும் அன்று முதல் உலகில் இந்திய தேசம் எல்லா வளமும் பெற்று முதல் வல்லரசு நாடாக திகழ்வதற்கான சூழல் உருவாகும் என்று 23-ம் தீர்க்கதரிசனம் மேலும் ஒரு அதிசய குறிப்பை நமக்கு தருகின்றது.


                பனி தேசம் ஒன்றில் ஒரு வரலாற்று குறிப்பு இந்திய தேசத்தின் தொன்மையை எடுத்துக் கூறுவதாக அமையும் என்றும், சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் ஆட்சிக்கும், அவர்களின் வீரத்திற்கும் இது சான்றாக அமையும் என்று 23-ம் தீர்க்கதரிசனம் மேலும் ஒரு குறிப்பை தருகின்றது.

                மக்களை பெற்ற மகராசிஎன்ற நற்பெயரை இந்த உலகத்தின் விடியலுக்கு காரணமாக அமைய உள்ள  இறைவனேபெறப் போகிறார் என்று 23-ம் தீர்க்கதரிசனம் ஒரு குறிப்பை தருகிறது. இந்த குறிப்பின்படி உலக மக்களை காத்து இரட்சித்திட இறைவனின் வருகை நிச்சயம் என்பதை இதன்மூலம் அறியலாம்.

-- இன்னும் தொடரும் --
ஆசிரியர்.  ஸ்ரீ யோகேஸ்வரன்

குறிப்பு :- இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை. வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்கவேண்டும். இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது. இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்டவெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள் ஒளியாக பிரகாசிக்கும்.


No comments:

Post a Comment