"ஆகாயத்தில் ஒரு
ஒளி" என்ற
வருங்கால
தீர்க்கதரிசனத்தில்
இடம்
பெறும்
அனைத்து
குறிப்புகளும்
அதன்
நிகழ்வுகளும்
உலக
மாறுபாட்டை
சுட்டிக்காட்டவே
இங்கு
வெளிப்படுத்தப்படுகின்றன.
மக்கள்
சமுதாயம்
பல
கடவுள்
நிலைகளாலும்,
மதப்
பிரிவினாலும்,
சாதிப்
பிரிவினாலும்
பலவாறாக
பிரிக்கப்பட்டு
நிம்மதி
இன்றி
இருந்து
வருகிறது,
இந்நிலையில் பல மதத்தினர்
இறைவன்
எங்கள்
மதத்தை
சார்ந்தவர்
என்ற
புதிய
அறிக்கையை
மக்களிடையே
பரப்பி
பல
குழப்பங்களை
ஏற்படுத்துவார்கள்
என்று
இன்றைய
18-ம்
தீர்க்கதரிசனம்
ஒரு
குறிப்பை
தருகின்றது.
சமூக மாற்றம்
என்பது
மக்களிடையே
சமத்துவம்
ஏற்பட்டால்
மட்டுமே
அது
சாத்தியமாகும்,
சாதிகள்
உள்ளவரை
இந்த
சமூகம்
மாற்றத்தை
சந்திக்காது
என்றும்
அத்தகைய
மாற்றம்
நிகழ
வேண்டுமெனில்
அது
இறைவனின்
வருகையால்
மட்டுமே
சாத்தியமாகும்
என்று
18-ம்
தீர்க்கதரிசனம்
இங்கு
மேலும்
ஒரு
குறிப்பைத்
தருகிறது.
ஒரு சமூக
அமைப்பினர்களுக்குள்
பல
சாதி
மக்கள்
ஒற்றுமையுடன்
உள்ளார்கள்
என்றும்,
அவர்கள்
அனைவரும்
ஒருவரையே
கடவுளாக
பாவித்து
தங்களை
மேம்படுத்திக்
கொண்டு
வாழ்ந்து
வரும்
அச்சமயத்தில்,
அவர்களுக்குள்
கடவுளின்
தோற்றம்
எங்கள்
இனத்தைச்
சார்ந்தது
என்று
பேதம்
பிரித்து
பார்க்கும்
அளவிற்கு
பற்பல
சம்பவங்கள்
நிகழக்கூடும்
என்றும்,
இதனால்
பல
புதிய
அமைப்புகள்
இத்தகைய
செயல்களை
வன்மையாகக்
கண்டிப்பார்கள்
என்றும்
இச்சம்பவம்
நிகழும்
சமயத்தில்
"இறை அற்புதம்"
ஒன்று
உலகில்
ஒரே
சமயத்தில்
தோன்றி
நடந்து
முடியும்
என்றும்,
அந்நேரத்தில்
மக்களிடையே
சமூக
மாற்றம்,
நற்சிந்தனை
தோன்றும்
என்று
18-ம்
தீர்க்கதரிசனம்
இங்கு
ஒரு
குறிப்பை
தருகிறது.
நாடாளும் மன்னர்
ஒருவரின்
மகுடம்
பறிக்கப்படும்
சம்பவம்
கூடிய
விரைவில்
நடக்கும்
என்றும்,
அந்நாட்டில்
மதக்
கலவரம்
ஒன்று
தோன்றி
வெடிக்கும்
என்றும்,
இதனால்
பல
மத
குருமார்களை
கொன்று
அழிப்பார்கள்
என்றும்,
அங்கு
இராணுவ
கிளர்ச்சி
ஏற்பட்டு
மக்கள்
வாழ
வழிதெரியாமல்
அலைவார்கள்
என்றும்
அங்கு
புதியதாக
மக்கள்
கிளர்ச்சி
ஒன்று
ஏற்பட்டு
அந்நாட்டை
கைப்பற்றி
நல்ல
பாதைக்கு
கொண்டு
வரும்
சமயத்தில்
அங்கு
ஒரு
இறை வெளிப்பாடு
அதிசயமான
முறையில்
நடந்து
முடியும்
என்றும்
அதுவே
அந்நாடு
தன்
பொழிவை
மீண்டும்
பெறுவதற்கான
அறிகுறி
என்று
18-ம்
தீர்க்கதரிசன
குறிப்பு
ஒன்று
மேலும்
சில
விளக்கங்களை
தருகிறது.
இந்திய தேசத்து
வான்வெளி
விஞ்ஞானிகள்
ஒரு
புது
முயற்சியை
மேற்கொள்வார்கள்
என்றும்,
அந்த
முயற்சியின்
முழு
வெற்றியானது
ஒரு
மகத்தான
சாதனையாக
அப்பொழுது
இருக்கும்
என்றும்,
இச்சம்பவம்
நிகழும்
சமயத்தில்
இந்திய
மருத்துவ
துறையில்
ஒரு
புதிய
மருந்தை
கண்டறிவார்கள்
என்றும்,
அது
உலகையே
அச்சுறுத்தி
வரும்
எயிட்ஸ் என்ற
நோய்க்குரிய
அற்புத
கண்டுபிடிப்பாக
அமையும்
என்றும்,
இது
உலக
வரலாற்றில்
இடம்
பெறக்கூடிய
இரண்டு
முக்கிய
சம்பவங்கள்
என்று
18-ம்
தீர்க்கதரிசனம்
மேலும்
சில
குறிப்புகளை
தருகின்றது.
கொல்கத்தா நகரில்
பல
சாதுக்கள்
ஊர்வலம்
நடத்துவார்கள்
என்றும்
அப்பொழுது
இந்திய
தேசத்தில்
ஒரு
ஆன்மீக
புரட்சி
வெடிக்கும்
என்றும்,
இதனால்
உள்
நாட்டு
மாநிலங்களில்
ஒரு
சில
பாதிப்புகள்
நிகழும்
என்றும்,
அச்சமயத்தில்
திடீரென்று
இந்திய
மாநிலங்களின்
தலைநகரங்களில்
பல
தெய்வீக
அதிசயங்கள்
நிகழும்
என்றும்,
அச்சமயத்தில்
அந்த
ஆன்மீக
புரட்சி
அமைதி
கொள்ளும்
என்றும்,
மறைந்த
விவேகானந்தரின்
ஆன்மீக
கனவு
ஒன்று
மெய்பட
இந்திய
தேசம்
ஒரு
புதிய
பாதைக்கு
வழிவகுக்கும்
என்றும்,
இதுவே
இந்தியா
மாபெரும்
ஒரு
அதிசயத்தை
சந்திக்க
உள்ளதற்கான
முக்கிய
குறிப்பு
என்று
18-ம்
தீர்க்கதரிசனம்
மேலும்
ஒரு
முக்கிய
குறிப்பை
தருகிறது.
கனடா நாட்டில்
வாழும்
இந்தியர்
ஒருவர்
ஆன்மீக
துறையில்
ஒரு
முக்கிய
அறிவிப்பை
செய்வார்
என்றும்,
அதனால்
அந்நாடு
அவரை
வெளிநடப்பு
செய்யும்
என்றும்,
அவர்
வெளியேறிய
3 தினங்களில்
அவர்
கூறிய
சம்பவம்
நடக்கும்
என்றும்,
அன்றிலிருந்து
அந்நாடு
இந்திய
தேசத்து
ஞானிகளைப்
பற்றி
தனது
சீரிய
ஆய்வை
மேற்க்கொள்ளும்
என்றும்,
இதனால்
இந்திய
யோகக்
கலாச்சாரம்
ஒன்று
அங்கு
தோன்றி
நன்கு
வளர்ச்சி
பெறும்
சம்பவம்
ஒன்று
விரைந்து
நடக்க
உள்ளதாக
18-ம்
தீர்க்கதரிசனம்
மேலும்
ஒரு
குறிப்பை
தருகின்றது.
பல்வேறு நாடுகள்
ஒன்றிணைந்து இந்திய தேசத்திலிந்து ஒருவரை வரவேற்க
தயாராகும் என்றும் இது
உலக வரலாற்றில் இடம்
பெற வேண்டிய முக்கிய
குறிப்பு என்று 18-ம்
தீர்க்கதரிசனம் ஒரு குறிப்பை
தருகின்றது.
மன்னர் ஒருவரின்
சமாதி
எகிப்திய
நாட்டில்
கண்டெடுக்கப்படும்
என்றும்,
அவர்
இந்திய
தேசத்தை
சார்ந்த
ஒரு
மன்னராக
இருப்பார்
என்றும்
இதுவே
உலகில்
ஒரு
வியப்பான
செய்தியாக
மக்கள்
வியந்து
போற்றுவார்கள்
என்றும்,
அச்சமயத்தில்
அவரின்
சமாதியிலிருந்து
சிவலிங்கம்
ஒன்று
கண்டெடுக்கப்படும்
என்றும்
அதன்
மூலம்
உலகமே
தமிழர்களைப்
பற்றியும்,
தமிழ்
அரசர்களை
பற்றியும்
உண்மைகளை
கண்டு
வியப்படையும்
என்று
18-ம்
தீர்க்கதரிசனம்
மேலும்
ஒரு
குறிப்பை
தருகின்றது.
-- இன்னும் தொடரும்
--
ஆசிரியர். ஸ்ரீ யோகேஸ்வரன்
குறிப்பு
:- இத்தொடரில்
வரும்
கருத்துக்களையும்,
செய்திகளையும்
யாரும்
ஏற்றுக்கொள்ள
வேண்டும்
என்று
இங்கு
தெரியப்படுத்தவில்லை.
வருங்காலத்தைப்
பற்றி
விவாதிக்க
அனைவருக்குமே
உரிமை
உண்டு,
அச்சப்படுவதற்கு
அல்ல.
அவசியம்
இவ்வுலகத்தின்
மேல்
நாம்
கவனமாக
இருக்கவேண்டும்.
இயற்கையை
நேசிக்க
வேண்டும்
என்பதற்காகவே
இத்தொடர்
இங்கு
வெளிப்படுத்தப்படுகிறது.
இதை
ஒரு
கதை
போல்
படியுங்கள்,
உண்மை
ஒரு
நாள்
வெட்டவெளிச்சமாகும்,
அது
ஆகாயத்தில்
ஒரு
நாள்
ஒளியாக
பிரகாசிக்கும்.
No comments:
Post a Comment