Monday, 15 December 2014

ஆகாயத்தில் ஒரு ஒளி (பகுதி - 22)


ஆகாயத்தில் ஒரு ஒளி  என்ற வருங்கால தீர்க்கதரிசனத் தொடரில் இன்று இடம் பெறுவது 22-ம் பகுதியாகும். இந்த 22-ம் தீர்க்கதரிசனம் நிகழ்கால உண்மைகளை சற்று ஆழமாக எடுத்துக்கூறுகிறது. நிகழ்வுகளின் காலம் வந்துவிட்டது என்றும், தீர்க்கதரிசனங்களின் உண்மைத்தன்மைகள் உலக மக்கள் அறியும் நேரம் வந்துவிட்டதாக கூறுகிறது. இன்றைய 22-ம் தீர்க்கதரிசனம் சுமேரியா நாட்டில் உருவாகும் ஒரு மர்ம நோயால் உலக நாடுகளே அச்சமடையப் போவதாக கூறுகிறது. அங்கு மனித இனத்துக்கும், குரங்கு இனத்துக்கும் உருவாகும் ஒரு கலாச்சார இணைப்பே இதற்கு காரணமாக அமைய உள்ளதாக 22-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை தருகிறது.

                22-ம் தீர்க்கதரிசனத்தின்படி மனித மரபியல் மாற்றங்கள் கடந்த 3 ½ ஆண்டுகளாக நடந்து வருவதாகவும் இதற்கு மனிதனே முழுக்க காரணம் என்றும், இதற்கான ஆய்வுகளை மனிதன் துவங்கி பல மர்மமான நோய்களுக்கு வித்தாக அமைத்து விட்டான் என்று 22-ம் தீர்க்கதரிசனம் ஒரு அதிர்ச்சியான தகவலை தருகிறது. மேற்கண்ட உண்மைகளை மருத்துவ ஆராய்ச்சிக் குழு கண்டறிந்து உலகத்திற்கு வெளிச்சமிட்டு காட்டும் என்று  22-ம் தீர்க்கதரிசனம் மேலும் சில புள்ளி விபரங்களை தருகிறது.


               

 மனித மரபியல் மாற்றம் கடந்தவருடங்களாக ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்ட உலக அமைப்பு ஒன்று முழு முயற்சியில் ஈடுபட்டு வருவதாகும். இந்த மரபனு மாற்றம் உலகத்தையே அச்சுறுத்தும் மனித வைரஸ்கள் என்று 22-ம் தீர்க்கதரிசனம் கூறுகிறது. இந்த மரபனு மாற்றத்திற்கு உட்பட்டவர்கள் நரமாமிசம் சாப்பிடும் மனிதர்களாக மாறக் கூடிய வாய்ப்பாக அமையக் கூடும் என்று 22-ம் தீர்க்கதரிசனம் மேலும் சில குறிப்புகளை தருகின்றது.


                பகஸ்தா  (PAGASDA ) என்ற ஒரு வார்த்தை அறிவியல் துறையில் இடம் பெற உள்ளதாகவும், சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் இந்த வார்த்தை ஒரு சமுகத்தில் இடம் பெற்று இருந்ததாகும்,  இனி மக்களிடையே இந்த வார்த்தை மிகவும் பிரபலமடையும் என்று 22-ம் தீர்க்கதரிசனம் மேலும் ஒரு குறிப்பை தருகின்றது. பகஸ்தா (PAGASDA) என்பது மக்கள் அச்சப்படக்கூடிய ஒரு வார்த்தையாக இருக்கும் என்றும், உலக சுகாதார அமைப்பிற்கு இனி போதாத காலமாகவும், தலைவலியாகவும் இந்த வார்த்தை இருக்கும் என 22-ம் தீர்க்கதரிசனம் மேலும் ஒரு குறிப்பை தருகின்றது.

                நாளைய மக்கள் வர்க்கம் தங்களை மேம்படுத்திக் கொள்ள இயற்கையை மட்டுமே சார்ந்து வாழ வேண்டும் என்றும், அவ்வாறு இல்லாது மாறுபட்டு நடக்கும் காலத்தில் இது போன்ற ஒரு கொடுமையான சூழலை மக்கள் சமுதாயம். சந்திக்கும் என்று 22-ம் தீர்க்கதரிசனம் இங்கு எடுத்துக் கூறுகிறது.

                காலத்தால் அழியாத ஒரு மாபெரும் மருத்துவ பொக்கிஷமே உலக மக்களை நோய்களிலிருந்து காத்திடும் என்றும், அது இந்திய தேசத்திலிருந்தே கிடைக்கப் பெறும் என்று 22-ம் தீர்க்கதரிசனம் மேலும் ஒரு குறிப்பை தருகிறது.

                மருத்துவ உலகில் இந்திய தேசம் பல புதுமைகளை படைத்து, மக்கள் சமுகத்திற்கு உதவி செய்யும் என்றும், இதனால் உலக வரலாற்றில் இந்தியா தனக்கென ஒரு சிறப்பான இடத்தை அடையும் என்றும், ஆயுர்வேதம், சித்தா, யுனானி, ஆங்கில மருத்துவம், மாற்றுமுறை மருத்துவம் போன்ற பல்வேறு மருத்துவத்துறைகள் தமது சாதனைகளை இந்திய தேசத்தில் நிகழ்த்தி, உலக மக்களுக்கு உதவும்படி தமது கடமைகளை செய்யும் என்று 22-ம் தீர்க்கதரிசனம் மேலும் ஒரு குறிப்பை தருகிறது.


                புத்துயிர் தரும் புது மூலிகை ஒன்று இந்திய தேசத்தில் கண்டறிந்து பயிரிடப்படும் என்றும், இந்திய தேசத்தில் கண் குருடு என்ற நிலை முற்றிலும் மாறி மக்கள் நலமுடன் வாழும் புதிய இந்தியாவை உலக நாடுகள் காணும் என்று 22-ம் தீர்க்கதரிசனம் மேலும் ஒரு குறிப்பை தருகின்றது.


                63 - நாயன்மார்கள் வாழ்ந்த புண்ணிய பூமி ஒன்றில் மகத்தான அற்புதம் ஒன்று நிகழ உள்ளது என்றும் இதுவே 22-ம் தீர்க்கதரிசனம் நடைபெறுவதற்கு முன் நிகழும் சம்பவம் என்றும், இது நடந்தால் 22-ம் தீர்க்கதரிசனம் மெய்பட நடக்கும் என 22-ம் தீர்க்கதரிசனம் மேலும் ஒரு குறிப்பை தருகின்றது.

-- இன்னும் தொடரும் --
ஆசிரியர்.  ஸ்ரீ யோகேஸ்வரன்

குறிப்பு :- இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை. வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்கவேண்டும். இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது. இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்டவெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள் ஒளியாக பிரகாசிக்கும்.


No comments:

Post a Comment