ஆகாயத்தில் ஒரு ஒளி
என்ற தொடரின் அற்புதங்களை மக்கள் உணரும் காலம் நெருங்கிவிட்டன. வெறும் அழிவுகளை மட்டுமே
தீர்க்கதரிசனங்கள் கூறவில்லை அதற்கு மாறாக இப்பூமியில் இறைவனின் அற்புதங்களும் நடக்க
உள்ளதாக இறை தீர்க்கதரிசனங்கள் இன்று தெரிவிக்கின்றன.
இன்றைய 21-ம் தீர்க்கதரிசனம்
இப்புவியின் மீது இறைவன் ஆட்சி செய்ய வரும் சேதியைப் பற்றி முன் அறிவிக்கின்றது. உலகத்தை
ஆளும் பரம்பொருளின் வருகையானது ஒரு ஆவணி மாதத்தில் நடக்கும் என்றும், அச்சமயத்தில்
இவ்வுலகில் பல அதிசயதக்க, வியக்கதக்க அளவில் பல வினோத சம்பவங்கள் நடக்கும் என்றும்,
அனைத்து நிகழ்வுகளிலும் ஒரு ஒற்றுமை காணப்படும் என்று 21-வது தீர்க்கதரிசனம் ஒரு குறிப்பை
தருகிறது.
ஆதியும் அந்தமும்
இல்லா அந்த பரம்பொருளின் கருணை வடிவத்தை தாங்கிய அற்புத சிலையொன்று பூமியிலிருந்து
வெளிப்படும் என்றும், அது மலைகள் சூழ்ந்த ஒரு ஊரில் நிகழும் என்றும் 21-வது தீர்க்கதரிசனம்
மேலும் ஒரு குறிப்பை தருகின்றது.
திருவண்ணாமலையின்
கீழே அக்னி குழம்பு ஒன்று உருவாகி வருகிறது என்றும், ஆனால் அது பூமியை விட்டு வெளியே
வராமல் அங்கு அதிசயத்தை உருவாக்கி இறைவனாரின் அற்புதத்தை வெளிபடுத்தும் ஒரு செயலாக
அது நிகழும் என்று 21-ம் தீர்க்கதரிசனம் மேலும் ஒரு குறிப்பை தருகின்றது.
வள்ளலார் வாழ்ந்த
இடத்தில் இறை அதிசயம் ஒன்று விரைந்து நடக்க உள்ளதாகவும், இதுவரை அவருடைய ஆன்ம ஸ்வரூபத்தை
காணாத அவருடைய பக்தர்களின் கண்களுக்கு வள்ளலாரின் சொரூபத்தை காண்கின்ற பாக்கியம் கிட்டும்
என்றும், தமிழகத்தில் உள்ள ஒரு வள்ளலார் மடத்தில் அண்ணபாத்திரத்தில் ஒரு அதிசயத்தை
வள்ளலார் நிகழ்த்த உள்ளதாக 21-வது தீர்க்கதரிசனம் மேலும் ஒரு குறிப்பை தருகின்றது.
முக்கண்ணன் என்ற
திருநாமத்தை சுமந்த சிவனின் ஆலயம் ஒன்றில் ஒரு மிகப்பெரிய வெடிப்பொலி நிகழ்வு நடக்க
உள்ளதாகவும் அங்கு பல அதிசய காட்சிகளை மக்கள் காண உள்ளதாக ஒரு தீர்க்கதரிசனம் குறிப்பை
தருகிறது.
மதுரை மாநகரத்தில்
சக்தியின் ஸ்தலத்தில் ஒரு அதிசயமிக்க நிகழ்வு நடக்க உள்ளதாகவும் அங்கு நடக்கும் நிகழ்வின்படி
தமிழகத்தின் அரசியலில் ஒரு மிகப்பெரிய மாற்றம் நிகழும் என்றும், இந்த மாற்றம் விரும்பதக்க
ஒரு நிகழ்வு என்றும் 21-ம் தீர்க்கதரிசனம் ஒரு குறிப்பை தருகின்றது.
மதுரையில் வீதிதோறும்
விழா நடக்கும் சமயத்தில் ஒரு பிள்ளையார் சந்நதியில் அதிசயமொன்று தொடர்ந்து நடக்கும்
என்றும், இதனால் மக்கள் மனங்களில் இறை நம்பிக்கைகள் ஆழமாக வேர் ஊன்றும் என்றும் அப்பொழுது
ஒரு குளத்தில் அதிசயமொன்று வெளிப்படும் என்று 21-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை
தருகின்றது.
கண்ணபுரத்தாள் கருத்தாக
இடம்பெயர்வாள் என்றும் இதன் முன்னறிவிப்பு தமிழகம் முழுவதும் உள்ள அவளின் கோவில்களில்
வாக்காக வெளிப்படுத்துவாள் என்றும், அப்பொழுது
திருச்சியில் வரலாறு காணாத அளவிற்கு மழைநீர் ஓடும் என்றும், அவளின் மூத்த சந்நதி சில
நாட்களுக்கு மூடியே இருக்கும் என்றும் அச்சமயத்தில் அங்கு அன்னை சமயபுரத்தாள் அற்புதம்
ஒன்றை வெளிப்படுத்துவாள் என்றும், இதுவே இறைவன் இவ்வுலகை ஆள போவதற்கான அரிச்சுவடி என்று
21-ம் தீர்க்கதரிசனம் மேலும் ஒரு இறை இரகசியத்தை குறிப்பாக தருகின்றது.
”தமிழ் முன்னேற்றம்” என்ற ஒரு அமைப்பு பல விஷயங்களை மக்கள்
அறியும்படி தனது அறிக்கையை வெளிப்படுத்தும் என்றும், தொன்மைத்தமிழ், மூத்த தமிழன்,
வீரம் செறிந்த தமிழன் என்ற வார்த்தைகளில் உள்ள வரலாற்று செய்திகளை அந்த அமைப்பு வெளியிடும்
என்றும், அச்சமயத்தில் இந்த உலகத்தில் முதல் மனிதனின் தோற்றம் எங்கே உருவானது என்ற
கேள்வியை மக்கள் அமைப்பு கேட்கும் என்றும், அதற்கு ஆதாரமாக இந்திய தேசத்தின் தென் மாநிலத்தில்
ஒரு அரிய சிற்பம் ஒன்றும், கல்வெட்டும் கிடைக்கப்பெறும் என்றும் இதனால் தமிழ் இனமே
தலை நிமிர்ந்து நிற்கும் அற்புதமான ஒரு நிலை இவ்வுலகில் ஏற்படும் என்று 21-ம் தீர்க்கதரிசனம்
ஒரு குறிப்பை தருகின்றது.
மக்களின் காவலன்
யார்? இந்த உலகத்தின் வழிகாட்டி யார்? பாவங்களை கலைத்து எங்களை மீட்பவர் யார்? என்ற
கேள்விகளோடு உலக மக்கள் ஏங்கி நிற்கும் சமயத்தில் உலகமே வியந்து நோக்கும் அளவிற்கு
இறைவனின் அற்புதம் ஒன்று இந்த பூமியில் அதற்கு விடையாக நடந்து முடியும் என்றும், இதுவே
“பிரபஞ்சம் வியக்கும் அதிசயமாக” மக்கள் நினைப்பார்கள்
என்றும், இதனை தொடர்ந்து ”ஒன்றே குலம், ஒருவனே தேவன்” என்ற கூற்று மெய்பட சூழ்நிலைகள் உருவாகும் என்று 21-ம் தீர்க்கதரிசனம்
மெய்பட ஒரு இறை இரகசியத்தை குறிப்பாக தருகின்றது.
--
இன்னும்
தொடரும்
--
ஆசிரியர்.
ஸ்ரீ
யோகேஸ்வரன்
குறிப்பு :- இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை. வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்கவேண்டும். இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது. இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்டவெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள் ஒளியாக பிரகாசிக்கும்.
No comments:
Post a Comment