“ஆகாயத்தில் ஒரு ஒளி” என்ற தொடரில் இடம் பெறும் குறிப்புகள் ஒவ்வொன்றும் மகத்தானவை. இனி இந்த குறிப்புகள் ஒவ்வொன்றும் மக்களின் மனதில் நீங்கா இடத்தை பெற உள்ளன. இன்று தீர்க்கதரிசனத்தின் 19-ம் பகுதி இங்கு வெளிப்படுத்தப்படுகிறது. அதாவது தென் தமிழகம் முழுவதும் சித்தர்களின் அற்புதங்கள் நடைபெற உள்ளதாக இந்த 19-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகின்றன.
முதல் அதிசய சம்பவமாக பழனி மலையும், அதனை தொடர்ந்து சதுரகிரி மலையும், அதனை தொடர்ந்து திருவண்ணாமலையும், அதனை தொடர்ந்து கொல்லிமலையும், அதனை தொடர்ந்து சேலம் கஞ்ச மலையும், அதனை தொடர்ந்து மருத மலையும், அதனை தொடர்ந்து சிவன் மலையும், அதனை தொடர்ந்து தீர்த்த மலையும் அதனை தொடர்ந்து ஜவ்வாது மலையும், அதனை தொடர்ந்து மாதேஸ்வரன் மலையும், அதனை தொடர்ந்து சேர்வராயன் மலையிலும் சித்தர்களின் அற்புதங்களும், அவர்களின் காட்சிகளும் மக்களிடையே பதிவாகிட உள்ளதாக இந்த 19-ம் தீர்க்கதரிசனம் ஒரு நிகழ்கால உண்மையை எடுத்துக் கூறுகிறது.
மதுரையில் மகத்தான அதிசயம் ஒன்று பொற்றாமரை குளத்தில் நடக்க உள்ளதாகவும் அதே சமயத்தில் பிரசித்திப் பெற்ற வைத்தீஸ்வரன் ஆலயத்தில் உள்ள குளத்திலும் ஒரு மகா அற்புதம் ஒன்று நடக்க உள்ளதாக 19-ம் தீர்க்கதரிசனம் ஒரு குறிப்பைத் தருகிறது.
தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தை சுற்றியுள்ள கிராமங்களில் மக்களின் கண்களில் படும்படி பூமி சம்பந்தமான பல அதிசய நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடக்க உள்ளதாக 19-ம் தீர்க்கதரிசனம் மேலும் ஒரு குறிப்பை தருகிறது.
தருமபுரியில் மீண்டும் ஒரு அகழ்வாராய்ச்சி துவங்கும் என்றும், அதற்கான முயற்சிகள் அரசு எடுக்கும்படி பல சம்பவங்கள் நடக்கும் என்றும், இதனால் பல அரிய வரலாற்று உண்மைகளை மக்கள் சமுதாயம் அறிய உள்ளதாக 19-ம் தீர்க்கதரிசன குறிப்பு ஒன்று அறிவுறுத்துகின்றது.
சேர்வராயன் மலைப்பகுதியின் அடிவாரத்தில் ஒரு திடீர் பள்ளம் ஏற்படும் என்றும், அதற்கான பூமி சம்பந்தப்பட்ட நிகழ்வு ஒன்று விரைந்து நடக்க உள்ளதாகவும், அச்சமயத்தில் அந்த திடீர் பள்ளத்திலிருந்து பாதாள கங்கை ஒன்று தோன்றி வற்றாத நதியாக ஓடும் என்றும், இதுவே தமிழக வரலாற்றில் ஒரு பொன்னாளாக திகழும் என்றும், அன்றிலிருந்து அப்பகுதியில் இறை அதிசயங்கள் தொடர்ச்சியாக அங்கு நிகழும் என்றும் அது பிரபஞ்சம் வியக்கும் ஒரு அதிசயமாக நிகழ்ந்து கொண்டே இருக்கும் என்று 19-ம் தீர்க்கதரிசனம் மேலும் ஒரு அதிசய குறிப்பை தருகின்றது.
இந்திய வரலாற்றில் மீண்டும் இறை காவியம் ஒன்று அரங்கேறும் அதிசயம் நிகழ உள்ளது என்றும் இதுவே அடுத்த யுக மாற்றத்திற்கான அச்சாணியாக விளங்கிடப் போகிறது என்றும், அச்சமயத்தில் இந்திய யோகிகள் மற்றுமின்றி உலக ஆன்மீக ஞானிகள் ஒன்றுகூடி ஒரு தீர்க்கமான அறிவிப்பை வழங்குவர்கள் என்றும், அதனை தொடர்ந்து உலகின் பல பகுதிகளில் 35% வீதம் அழிவுச் சம்பவங்கள் நடந்து முடிந்திருக்கும் என்றும் 19-ம் தீர்க்கதரிசனம் மேலும் ஒரு குறிப்பை தருகின்றது.
உலக வரலாற்றில் மெய்ஞானம் எந்த அளவிற்கு வளர்ச்சி அடைகிறதோ அதே அளவிற்கு உலகத்தில் உள்ள அனைத்து கலைகளும் இந்திய தேசத்தில் வளர்ச்சி பெறும்விதமாக இந்திய தேசத்து ஆன்மீக அமைப்பு ஒன்று தனது பணிகளை முழுவீச்சில் செய்யும் என்றும், அந்த அமைப்பை நோக்கி உலக மக்கள் ஒற்றுமையுடன் கைகோர்த்து வருவார்கள் என்றும் 19-ம் தீர்க்கதரிசனம் ஒரு அரிய குறிப்பை தருகின்றது.
மக்களை காக்கும் மகா அவதாரம் தனது அற்புதங்களை இந்த தமிழக மண்ணிலிருந்து ஆரம்பித்து, உலகையே வலம் வர உள்ளதாக 19-ம் தீர்க்கதரிசனம் இங்கு ஒரு மகா குறிப்பை தருகின்றது.
காலத்தின் நிலை இனி கடவுளின் கைகளில் மட்டுமே அது உள்ளது என்றும், அது உலகின் இயக்கத்தை இனி முறைப்படுத்தப் போகின்றது என்றும், அதன் அச்சாணி இந்திய தேசத்தின் ஒரு மாநிலத்தில் இருக்கும் என்றும் 19-ம் தீர்க்கதரிசனம் மேலும் ஒரு மகத்தான குறிப்பை தருகின்றது.
-- இன்னும் தொடரும் --
ஆசிரியர். ஸ்ரீ யோகேஸ்வரன்
குறிப்பு :- இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை. வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்கவேண்டும். இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது. இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்டவெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள் ஒளியாக பிரகாசிக்கும்.
No comments:
Post a Comment