ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற தொடரின் ஆரம்பமும் முடிவும் எப்படி இருக்கும் என்ற கற்பனையை வாசகர்கள் நன்கு கவனித்து வருகிறார்கள் என்பது தெள்ளத் தெளிவாக புரிகிறது. ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற தொடரின் ஆரம்ப பக்கங்கள்
2005-லிருந்து ஆரம்பித்துவிட்டன. ஆனால் முகநூல் மற்றும் இணையம்தளம் வழியாக மக்கள் 2014-ல் தான் தெரிந்து கொள்ள வாய்ப்பு கிட்டியுள்ளது. இதன் செயல்முறை காலம் தற்போது தான் என்பதை நாம் இங்கு அறிய வேண்டிய ஒரு உண்மை ஆகும். ஆகையால் ஆரம்பகாலத்தின் பயணம் இதன் உண்மைகளின் நம்பகத்தன்மையை நான் முதலில் உணரும் வகையில் இருந்தது என்பதே உண்மையாகும்.
புரியாத புதிராக பல தீர்க்கதரிசனங்கள் இருப்பதாக நாம் நினைத்தாலும் அவைகள் ஒரு போதும் செயல்படாமல் (நிகழாமல்) இருப்பதில்லை. காலக் கோள்களின் இயக்கம் தற்போது தீர்க்கதரிசனங்களின் நிகழ்விற்கு சாத்தியமானதாக இருப்பதாக கடவுளின் கோட்பாடுகள் தெரிவிக்கின்றன.
தீர்க்கதரிசனத்தில் இன்று 20-வது தீர்க்கதரிசனத்தை பற்றி இங்கு காண்போம். உலகத்தில் மாயன் என்ற இனத்தவர்கள் வாழ்ந்தது என்பது உண்மையாகும். அவர்கள் விட்டுச் சென்ற கலாச்சார ஆதாரங்கள் இன்றும் பூமியில் காணப்படுகின்றன. அவர்களின் வம்சாவழியினர் யார்? பாரம்பரியத்தில் அவர்கள் எங்கிருந்து இடம் பெயர்ந்து சென்றனர் என்ற கேள்விக்கு ஆராய்ச்சியாளர்களின் ஆய்வில் பல பதில்கள் இருப்பினும், இவர்கள் வட இந்தியர்கள் என்ற உண்மையை இன்னும் சில நாட்களில் அரியும்படியான ஒரு சம்பவம் நிகழ உள்ளதாக 20-வது தீர்க்கதரிசனம் ஒரு குறிப்பை தருகின்றது.
வட இந்தியாவின் மாநிலத்தில் மலைவாழ் மக்களாக வாழ்ந்த நாகா என்ற வம்சத்தினரின் பழங்குடிகளே இந்த மாயன் வம்சத்தினர் (மக்கள்) ஆவார்கள்.
வட இந்தியாவின் மாநிலத்தில் மலைவாழ் மக்களாக வாழ்ந்த நாகா என்ற வம்சத்தினரின் பழங்குடிகளே இந்த மாயன் வம்சத்தினர் (மக்கள்) ஆவார்கள்.
இந்த மாயன் மக்களுக்கும் 20-வது தீர்க்கதரிசனத்திற்கும் என்ன தொடர்ப்பு உள்ளது என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். உண்மையில் வான்வெளி சாஸ்திரத்தை கணித கணக்கீடாக அறிந்த முக்கால ஞானிகள் இவர்களாவார்கள். இந்த மாயன் வம்சாவழியினரின் தொன்று தொட்டு பழகி வரும் ஒரு கலாச்சாரம் இன்றும் உள்ளது. அது முன்னோர்களை வழிபாடு செய்யும் "ஆருத்ரா" எனும் வழிபாடு முறையாகும். அதாவது இவர்கள் சிவலிங்கத்தின் மேல் இருக்கும் நாக வம்சத்தினரை கடவுளாக போற்றி வணங்கும் முறையாகும். இந்த உலகமே பஞ்சபூதத்தின் சக்தியால் ஆக்கப்பட்டு அதன் இயக்கத்தால் இயங்கிவரும் கட்டமைப்பை கொண்ட ஒரு அதிசய உலகம் என்று நம்பி வணங்கி வந்தனர். மறு உலகத்திற்கு நமது முன்னோர்கள் நம்மை அழைத்துச் செல்வார்கள் என்ற நம்பிக்கையின் மீது அதீத நம்பிக்கை கொண்டவர்கள் இவர்கள்.
இந்த மாயன் வம்சத்தினர் காலக்கோளின் இயக்கத்தினை நன்கு அறிந்தவர்கள். அதன் இயக்க சுழற்சி எப்பொழுது பூமிக்கு அருகே வரும் என்பதை கண்டறிந்தவர்கள். அந்த காலக்கோள் எப்பொழுது பூமிக்கு அருகே வருகிறதோ அப்பொழுது இப்பூமியில் பல அழிவுகள் நடக்கும் என்றும், இந்த பூமி தன்னை மறுசீரமைப்புக்கு உட்படுத்திக் கொள்ளும் என்றும், அச்சமயத்தில் இந்த பூமியில் வாழும் தன் மக்களை காத்திட அந்த நாக வம்சத்தின் கடவுளான "அகாரா" வருவார் என்றும் தமது ஞான திருஷ்டியின் வாயிலாக கண்டறிந்து வைத்துச் சென்றனர். இதே கோட்பாடோடு நமது இந்தியதேசத்தில் வட இந்திய மாநிலத்தில் ஒரு பிரிவினர் இதன்படி நடந்து வருகின்றனர் என்றும், அந்த வம்சத்தினர் இந்த உலகம் பல ஆபத்துகளை சந்திக்க உள்ளது என்றும், அதனை காக்க தனது வம்சாவழியில் வந்த முன்னோர் ஒருவர், "கடவுள் ஒருவர்" வருவார் என்ற தீர்க்கதரிசனத்தை இன்னும் ஒரு சில மாதத்தில் அறிவிக்க உள்ளார்கள் என்று 20-வது தீர்க்கதரிசனம் ஒரு குறிப்பை தருகிறது.
20-வது தீர்க்கதரிசனத்தின் படி வட இந்தியாவில் அதற்கான சூழல்களும், பல இயற்கை சீற்றங்களும் தற்போது உருவாகும் என்றும், அப்பொழுது பல அதிசயங்கள் வட இந்தியாவில் நடக்கும் என்றும், அச்சமயத்தில் தான் இறைவன் வருகையை பற்றி ஒரு வம்சாவழியினர் அறிக்கை வெளியிடுவார்கள் என்று 20-வது தீர்க்கதரிசனம் மேலும் ஒரு குறிப்பை தருகிறது.
வான் தேசத்திலிருந்து ஒரு செய்தி அனைத்து மத மக்களுக்கும் வர உள்ளதாகவும், அதனைப் பற்றிய முதல் செய்தியினை திபெத்திய லாமாக்கள் முன் அறிவிப்பார்கள் என்றும் 20-வது தீர்க்கதரிசனம் மேலும் ஒரு குறிப்பை தருகின்றது.
தமிழ்நாட்டில் புத்த கலாச்சாரம் வேர் ஊன்றிய காஞ்சிபுரத்தில் அரிதான ஒரு கல்வெட்டு கிடைக்கப்பெறும் என்றும், அதில் தமிழகத்தில் நடக்கும் அதிசயம் ஒன்றைப் பற்றிய அரிதான குறிப்பு ஒன்று இடம் பெற்றிருக்கும் என்றும் 20-வது தீர்க்கதரிசனம் மேலும் ஒரு குறிப்பை தருகிறது.
சென்னை கடற்கரையில் கடல் நீர் புகுந்து ஓடும் சம்பவம் ஒன்று நிகழ உள்ளதாகவும், அதற்கு முன்னோட்டமாக மாமல்லபுரத்தில் ஒரு அதிசய சம்பவம் ஒன்று நடைபெறும் என்றும் 20-வது தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.
கடல் தேசத்து நாடுகளில் மாபெரும் நிகழ்வுகள் ஆரம்பிக்க உள்ளதாகவும் அதனால் பல தேசங்கள் பீதியில் ஆழ்ந்து தவிக்கும் என்றும், அச்சமயத்தில் "பிலிப்பைன்ஸ்" நாட்டில் ஒரு மகா சோகச் சம்பவம் ஒன்று நடைபெற உள்ளதாக 20-வது தீர்க்கதரிசனம் ஒரு குறிப்பை தருகின்றது.
சென்னை, கன்னியாகுமரி, கேரள கிழக்கு கடற்கரை, பாம்பே நினைவில் கொள்ளக்கூடிய அளவிற்கு ஒரு சம்பவம் நிகழ உள்ளதாக இறை தீர்க்கதரிசனங்கள் ஒரு குறிப்பை தருகின்றன.
-- இன்னும் தொடரும் --
ஆசிரியர். ஸ்ரீ யோகேஸ்வரன்
குறிப்பு :- இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை. வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்கவேண்டும். இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது. இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்டவெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள் ஒளியாக பிரகாசிக்கும்.
No comments:
Post a Comment