ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற நமது தீர்க்கதரிசன தொடரில் இடம் பெறும் ஒவ்வொரு குறிப்புகளும் இந்த உலகில் நடக்கக்கூடிய முக்கிய சம்பவங்களை பற்றிய நிகழ்வுகளாகும். இந்த நிகழ்வுகள் ஒவ்வொன்றும் வருங்காலத்தை பற்றிய செய்திகளாகும். இந்த வருங்காலத்தை பற்றிய ஒவ்வொரு குறிப்புகளும் இறைவனோடும், இந்த மக்களோடும் நெருங்கிய தொடர்புடைய முக்கிய நிகழ்வுகள் என்று இறை தீர்க்கதரிசன கோட்பாடுகள் தெரிவிக்கின்றன.
பல்வேறு நாட்டு மக்களும் மிக, மிக ஆவலுடன் எதிர்நோக்கும் பல்வேறு கேள்விகளுக்கான பதில்களை இந்த வருங்கால தீர்க்கதரிசனத்தின் மூலம் மக்கள் சமூகம் அறிந்து கொள்ள முடியும் என இறை தீர்க்கதரிசனங்கள் தெரிவிக்கின்றன.
இன்றைய 26-வது தீர்க்கதரிசனம் ஒரு மகத்தான நிகழ்வைப் பற்றிய குறிப்புகளை நமக்கு தெரிவிக்கின்றன.
அதாவது இந்த பூவுலகில் கடவுள் பற்றிய சிந்தனை இல்லாத மனிதன் இவ்வுலகில் இல்லையென சொல்லலாம். அதாவது இந்த உலகில் கடவுள் என்ற ஒரு நிலை இல்லவே இல்லை என்று சொல்லும் மனிதன்கூட கடவுள் சார்ந்த கேள்விகளை தனக்குள் எழுப்பிய வண்ணம் வாழ்ந்து வருகிறான் என்று 26-ம் தீர்க்கதரிசனம் ஒரு குறிப்பை தருகின்றது. அதாவது இந்த உலகில் கடவுளின் நிலைப்பற்றிய அவநம்பிக்கை கொண்டோரும் இனி கடவுளின் மீது முழு நம்பிக்கை கொள்ளும்படியான ஒரு அதிசய சம்பவம் பூமியில் நடக்கும் என 26-ம் தீர்க்கதரிசனம் ஒரு குறிப்பை தருகின்றது.
அதாவது பல நாடுகளுக்கு இடையே பல விவாதங்கள் நடக்கும்சமயத்தில் இந்தியாவில் கடவுளின் வருகையைப் பற்றிய விழிப்புணர்வு துவங்கிவிடும் என்றும், இது இந்தியாவில் உள்ள அனைத்து மதத்திலும் துவங்கிவிடும் என்றும், அச்சமயத்தில் தமிழகத்தின் ஒரு மாவட்டத்தில் அகழ்வராய்ச்சி நடக்கும் அளவிற்கு கடவுள் சார்ந்த ஒரு அதிசயம் நடக்கும் என்றும், இந்த அதிசய சம்பவம் வரலாற்றில் இடம் பெறக்கூடிய அளவில் அமையும் என்றும் 26-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.
26-ம் தீர்க்கதரிசனத்தின்படி கடவுளின் வருகை என்பது உறுதியான ஒரு விஷயம் என்றும், அது உலக நாடுகளிலேயே இந்தியாவில் மட்டுமே நடக்கும் “பிரபஞ்சம் வியக்கும் அதிசயமாக” அமைய உள்ளதாக 26-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.
ஆனி மாதம் 7-ம் தேதி மக்கள் மனதில் பதிய வைக்க வேண்டிய முக்கிய தினம் என்றும், அன்றைய நாளில் எனது வருகையின் பதிவுகள் இந்த பூமியெங்கும் இருக்கும் என்றும், இதுவே இறைவன் பூமியை வழிநடத்தும் முதல் நாளாக அமையும் என்றும், அன்று முதல் “சத்திய யுகத்தின்” பொற்காலம் துவங்கிவிட்டதற்கான உண்மைநிலை என்று 26-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.
மல்யுத்தம் நடைபெறும் ஒரு ஊரில் வீர சிவாஜியின் நினைவு நாள் அன்று ஒரு இறை அதிசயம் நிகழும் என்றும், அது கடவுளின் வருகைக்கு முன்பாக நிகழக்கூடிய அதிசயம் என்று 26-ம் தீர்க்கதரிசனம் மேலும் ஒரு குறிப்பை தருகின்றது.
மகத்துவங்களே மனிதனுக்குள் மாற்றத்தை தரும் என்றும், அது இறை வருகைக்கு முன் இந்த பூமியில் நடக்கக்கூடிய அதிசயங்கள் என்றும், கட்டாயம் பல மாற்றங்கள் பூமி எங்கும் ஆரம்பமாக உள்ளதாக 26-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது!
“சேலம்” மக்கள் மனதில் பதியவேண்டிய முக்கிய குறிப்பின் பெயர் என்றும், தமிழகத்தின் தலையெழுத்தை மற்றுமின்றி உலகத்தின் தலையெழுத்தை மாற்றக்கூடிய முக்கிய பொறுப்பில் இந்நகரம் திகழும் என்றும், ஸ்ரீசைலம் என்ற மாற்றுப்பெயரை விரைவில் தாங்கி நிற்கும் என்றும், இதுவே கடவுளின் வருகையை உறுதிபடுத்தும் முக்கிய இடமாக திகழும் என்றும் 26-ம் தீர்க்கதரிசனம் ஒரு குறிப்பை தருகின்றது.
பல்வேறு மொழி பேசும் அனைத்து மக்களும் இந்த கடவுளின் வருகையை ஆணித்தரமாக நம்புவார்கள் என்றும், அவர்கள் அனைவரும் கடவுளை வரவேற்க தயாராகிவிட்டனர் என்றும் 26-ம் தீர்க்கதரிசனம் மேலும் ஒரு குறிப்பை தருகின்றது.
--
இன்னும்
தொடரும்
--
ஆசிரியர்.
ஸ்ரீ
யோகேஸ்வரன்
குறிப்பு :- இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை. வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்கவேண்டும். இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது. இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்டவெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள் ஒளியாக பிரகாசிக்கும்.
No comments:
Post a Comment