Wednesday, 31 December 2014

ஆகாயத்தில் ஒரு ஒளி (பகுதி – 29)

           

     " ஆகாயத்தில் ஒரு ஒளி " என்ற வருங்கல தீர்க்கதரிசனத்தில் இன்று நாம் காண உள்ளது 29-ம் தீர்க்கதரிசனம் ஆகும். இந்த தீர்க்கதரிசனம் மனித குலம் அரிய வேண்டிய பல அரிய செய்திகளை தீர்க்கதரிசனங்களாக வெளியிடுகின்றது. அதன்படி 29-ம் தீர்க்கதரிசனம் தனது மெய்படும் உண்மைகளை உலக மக்களுக்கு சுட்டிக்காட்டிட விரும்புகின்றது.

அவைகள் :

  • இந்த உலகில் கடலுக்குள் மறைந்து போன பண்டைய தமிழகமான லெமூரீயா கண்டம் கடலை விட்டு வெளியே வரும் என்று 29-ம் தீர்க்கதரிசனம் ஒரு குறிப்பை தருகின்றது.
  • உலகில் மனித தோற்றத்தில் வாழ்ந்து தேவலோகத்தை அடைந்த இயேசுவின் புனித ஆத்மா மீண்டும் ஆவி வடிவில் இந்த பூலோக மக்கள் காணும்படி அவரின் வெளிப்பாடு அமையும்.
  •  இஸ்ரவேல் என்ற பெயர் வரலாற்றை விட்டு நீங்கும் ஒரு அதிசயம் நடக்க உள்ளதாக 29-ம் தீர்க்கதரிசனம் ஒரு குறிப்பை தருகின்றது.

Monday, 29 December 2014

ஆகாயத்தில் ஒரு ஒளி (பகுதி - 28)


 ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற தொடரில் இன்று 28-ம் பகுதியை நாம் காண உள்ளோம். கடவுளின் கோட்பாடுகள் இவ்வுலகில் யாரால் வரையறுக்கப் படுகின்றன. இதனை உலகில் முதன் முதலில் ஏற்படுத்தியவர் யார்? என்ற கேள்விகள் மக்கள் மனதில் எழுகின்ற கேள்விகளாக இருப்பினும், இதற்கான உண்மைகளை மக்கள் அறியாது கடவுளின் நம்பிக்கைக்குரிய பக்தர்களாக தங்களை வெளிப்படுத்திக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.

நமது முன்னோர்கள் உருவாக்கிய கலாச்சார கோட்பாடுகளில் கலந்து விட்ட ஒரு நிலையே கடவுளின் நிலைகள் என்று சொல்கின்ற மனித சமூகம் இன்றும் உள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது. விஞ்ஞானிகளோகடவுளின் துகள் என்ற ஒன்று உள்ளது என்ற ஆராய்ச்சி சிந்தனையில் பயணிக்க துவங்கிவிட்டனர். ஆனால் இந்த கோட்பாடுகளில்கடவுள் என்ற நிலை எங்கே? யாரால் ஏற்படுத்தப்பட்டது? என்ற கேள்விக்கு மட்டும் யாராலும் சரியான பதிலை சொல்ல முடியவில்லை. ஆனால் இன்று நான் அதற்கு விடை கூறுகிறேன் என்று சொல்பவர்களை கண்டு ஏளனம் செய்யும் மக்கள் கூட்டமே இவ்வுலகில் அதிகம் உள்ளனர் என 28-ம் தீர்க்கதரிசனத்தின் கோட்பாடுகடவுள் நிலை’-யை பற்றி இங்கு எடுத்துக் கூறுகிது.

Friday, 26 December 2014

ஆகாயத்தில் ஒரு ஒளி (பகுதி - 27)


             ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற வருங்கால தீர்க்கதரிசனப் பகுதியில் இன்று நாம் காணும் தீர்க்கதரிசனம் 27-ம் பகுதி ஆகும், இந்த 27 ம் தீர்க்கதரிசனமானதுகருங்கடல் பகுதியில் ஒரு ஆச்சார்யமான நிகழ்வு நடக்க உள்ளது என்றும், அது வேற்றுக்கிரக வாசிகள் பற்றிய அதிசய நிகழ்வு என்றும் குறிப்பிடுகின்றது. அதாவது மக்களுக்கு மிகவும் நெருக்கமான அதே சமயத்தில் மிக, மிக அருகில் கண்களுக்கு முன்னால் நிகழக்கூடிய (UFO) நிகழ்விலேயே மிகப்பெரிய நிகழ்வு என்று 27-ம் தீர்க்கதரிசனம் ஒரு குறிப்பை தருகின்றது.

கருங்கடல் மட்டுமின்றி   USA - வின் பல பகுதிகளில் ஒரே சமயத்தில் பல பறக்கும் தட்டுகள் தென்படும் அதிசய நிகழ்வுகள் நடைபெற உள்ளதாக 27-ம் தீர்க்கதரிசனம் மேலும் ஒரு விளக்கத்தை இங்கு தெரியப்படுத்துகிறது. இச்சமயத்தில் பிரேசில், மன்னார்வளைகுடா பகுதி, கரேபியன் கடல் பகுதி, மத்திய கிழக்கு மற்றும் ஆசியாவின் தென்பகுதி  போன்ற இடங்களில் பல வான்வெளி ஆச்சர்யங்களும், ஒளி வடிவ அதிசயங்களும் நிகழும் என்று 27-ம் தீர்க்கதரிசனம் மேலும் ஒரு குறிப்பை தருகின்றது.

Wednesday, 24 December 2014

ஆகாயத்தில் ஒரு ஒளி (பகுதி - 26)


ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற நமது தீர்க்கதரிசன தொடரில் இடம் பெறும் ஒவ்வொரு குறிப்புகளும் இந்த உலகில் நடக்கக்கூடிய முக்கிய சம்பவங்களை பற்றிய நிகழ்வுகளாகும். இந்த நிகழ்வுகள் ஒவ்வொன்றும் வருங்காலத்தை பற்றிய செய்திகளாகும். இந்த வருங்காலத்தை பற்றிய ஒவ்வொரு குறிப்புகளும் இறைவனோடும், இந்த மக்களோடும் நெருங்கிய தொடர்புடைய முக்கிய நிகழ்வுகள் என்று இறை தீர்க்கதரிசன கோட்பாடுகள் தெரிவிக்கின்றன. பல்வேறு நாட்டு மக்களும் மிக, மிக ஆவலுடன் எதிர்நோக்கும் பல்வேறு கேள்விகளுக்கான பதில்களை இந்த வருங்கால தீர்க்கதரிசனத்தின் மூலம் மக்கள் சமூகம் அறிந்து கொள்ள முடியும் என   இறை தீர்க்கதரிசனங்கள் தெரிவிக்கின்றன.

இன்றைய 26-வது தீர்க்கதரிசனம் ஒரு மகத்தான நிகழ்வைப் பற்றிய குறிப்புகளை நமக்கு தெரிவிக்கின்றன. அதாவது இந்த பூவுலகில் கடவுள் பற்றிய சிந்தனை இல்லாத மனிதன் இவ்வுலகில் இல்லையென சொல்லலாம். அதாவது இந்த உலகில் கடவுள் என்ற ஒரு நிலை இல்லவே இல்லை என்று சொல்லும் மனிதன்கூட கடவுள் சார்ந்த கேள்விகளை தனக்குள் எழுப்பிய வண்ணம் வாழ்ந்து வருகிறான் என்று 26-ம் தீர்க்கதரிசனம் ஒரு குறிப்பை தருகின்றது. அதாவது இந்த உலகில் கடவுளின் நிலைப்பற்றிய அவநம்பிக்கை கொண்டோரும் இனி கடவுளின் மீது முழு நம்பிக்கை கொள்ளும்படியான ஒரு அதிசய சம்பவம் பூமியில் நடக்கும் என 26-ம் தீர்க்கதரிசனம் ஒரு குறிப்பை தருகின்றது.

Monday, 22 December 2014

ஆகாயத்தில் ஒரு ஒளி (பகுதி – 25)


ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற வருங்கால தீர்க்கதரிசனத்தில் இன்று நாம் அறிந்து கொள்ளக்கூடிய குறிப்புகள் நிறைய உள்ளன. அந்த குறிப்புகள் யாவும் இன்றைய 25-ம் தீர்க்கதரிசனத்தில் இடம்பெறக் கூடியவைகள் ஆகும்.

                25-ம் தீர்க்கதரிசனம் நமது உலகங்கள் என பல உலகங்கள் நமக்கு உள்ளது என்றும், மனிதன் பூமியில் வாழ்வதற்கு முன் நட்சத்திர மண்டலத்தில் வாழ்ந்தவன் என்றும், அங்கு அவனுக்கு பூத உடல் என்ற அமைப்பு இல்லை என்றும், ஒளி உடலான ஆவி உடலோடு வாழ்ந்து வந்தான் என்றும், அதன்பின்னரே பூமியில் அவனுக்கென்ற ஒரு உடல் தோற்ற அமைப்பு உருவாக்கப்பட்டது என்றும், அந்த உடலுக்குள் வாழும் அவனின்          ஒளிஉடலே (ஆத்மா) இன்றைய மனிதனின் முன்னோடி என்று 25-ம் தீர்க்கதரிசனம் அபூர்வமான ஒரு குறிப்பை வெளிப்படுத்துகின்றது.

Friday, 19 December 2014

ஆகாயத்தில் ஒரு ஒளி (பகுதி – 24)



                ஆகாயத்தில் ஒரு ஒளிஎன்ற தொடரில் இடம்பெறும் தீர்க்கதரிசனங்களின் செயல்முறைகள் வேகம் கொள்ளக்கூடிய அளவில் அதன் உண்மைத்தன்மைகள் திகழ உள்ளதாக இறைக் கோட்பாடுகள் தெரிவிக்கின்றன.

                மனித வரலாற்றில் எத்தனையோ காவியங்கள் இருந்தாலும், இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவை இறைவனின் திருவிளையாடல்களும், அவரின் பல்வேறு அற்புதங்களும் ஆகும். அந்த வகையில் இந்த ஒட்டுமொத்த பிரபஞ்சத்தையும் மாற்றக்கூடிய ஒரு              யுகமாற்றம் பூமியில் நிகழ உள்ளதாக இன்றைய 24-ம் தீர்க்கதரிசனம் ஒரு குறிப்பை தருகிறது. அற்புதம் ஒன்று இந்த பூமியில் நிகழ உள்ளதாகவும் பரம்பொருளான அந்த பரமாத்மா இந்த பூமியில் அவதாரம் எடுக்கும் திருநாள் வந்துவிட்டதாக 24-ம் தீர்க்கதரிசனம் மேலும் ஒரு குறிப்பை தருகிறது.