Friday, 27 March 2015

ஆகாயத்தில் ஒரு ஒளி (பகுதி – 66)


ஆகாயத்தில் ஒரு ஒளிஎன்ற வருங்கால தீர்க்கதரிசனத்தில் இன்று நாம் காணும் பகுதி  66-ம் பகுதியாகும்.

இந்த 66-ம் தீர்க்கதரிசனப் பகுதியானது சத்திய யுகத்தின் நிகழ்வுகள் இப்பூமியில் துவங்குவதற்கு முன் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளைப் பற்றி மக்களுக்கு எடுத்து கூறியது. அந்த நிகழ்வுகள் ஒவ்வொன்றாக நிகழும் காலம் தற்போது துவக்கத்தில் உள்ளது என்றும் வரும் ஜுன் மாதமே அதன் வீரியம் அதிகமாக இருக்கும் என்று ஒரு குறிப்பை இங்கு தருகின்றது.


தீர்க்கதரிசனத்தில் 9-ம் தீர்க்கதரிசனம் நடைபெறும் காலத்தில் உலகத்தின் தென்பகுதி பெரும் மாற்றத்தை சந்திக்கும் என்றும், அதே சமயத்தில் உலகத்தின் வட பகுதி சிறிது, சிறிதாக அழியத் துவங்கும் என்று 66-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கு எடுத்துக் கூறுகிறது.

ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற வருங்கால தீர்க்கதரிசனத்தில் 18-ம் தீர்க்கதரிசனப் பகுதி நடக்கும் காலத்தில் மத்திய தரைக்கடல் பகுதியில் பல வினோத சம்பவங்கள் தொடர்ச்சியாக நடக்கும் என்றும், உலக மக்கள் தீர்க்கதரிசனத்தின் மீது அதிக நம்பிக்கை கொள்வார்கள் என்று 66-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை தருகின்றது.


தீர்க்கதரிசனத்தில் 21-ம் தீர்க்கதரிசனக் குறிப்புகள் துவங்கி நடந்து கொண்டுயிருக்கும் சமயத்தில் இந்திய தேசத்தில் பல முக்கிய நிகழ்வுகளும், ஆன்மீக இறை அதிசயங்களும் மிக, மிக அதிகமாக நடக்கும் என்றும், இந்திய தரைவழிமார்கத்தில் ஒரு புதிய புரட்சி ஏற்பட்டு பல நாடுகளுக்கு தரைவழி போக்குவரத்து ஏற்படக் கூடும் என்று 66-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை தருகின்றது.


நமது வருங்கால தீர்க்கதரிசனத்தில் குறிப்பிட்ட குறிப்புகளின்படி உலக நிகழ்வுகள் நடந்து கொண்டுயிருக்கும் என்றும், அதே சமயத்தில்உக்ரைன்நாட்டில் ஒரு மகா பாதகச் செயல் அரங்கேறிக் கொண்டியிருக்கும் என்றும், இதனால் அந்நாடு இறையின் கோபத்திற்கு ஆளாகி தீக்கிரையாக்கும் ஒரு சம்பவம் நடைபெறும் என்றும், இது 33-வது தீர்க்கதரிசனப் பகுதி நடைபெறும் சமயத்தில் நிகழும் என்று 66-ம் தீர்க்கதரிசனக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

உலக அரசியல் மாற்றங்கள் நமது தீர்க்கதரிசனக் குறிப்புகள் நடைபெறும் சமயத்தில் ஏற்படும் என்றும், இரஷ்யா, அமெரிக்கா, தென் அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் என்றும், இப்புரட்சியானது ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற வருங்கால தீர்க்கதரிசனத்தில் 40-வது தீர்க்கதரிசனப் பகுதி நடைபெறும் சமயத்தில் நடக்கும் என்று 66-ம் தீர்க்கதரிசனப் பகுதி ஒரு முக்கிய குறிப்பை தருகின்றது.

உலகத்திற்கு இது போதாத காலமாக இக்காலம் இருக்கும் என்றும், ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற வருங்கால தீர்க்கதரிசனத்தில் 50-வது தீர்க்கதரிசனப் பகுதி நடைபெறும் சமயத்தில் இந்த போதாத காலம் துவக்கம் பெறும் என்றும், இது 48 நாட்களுக்கு உலகம் ஸதம்பித்து நிற்கும் அளவிற்கு பல சம்பவங்களின் தொகுப்பாக இருக்கும் என்று 66-ம் தீர்க்கதரிசனம் ஒரு எச்சரிக்கை குறிப்பை மக்களுக்கு எடுத்துக் கூறுகிறது.


உலகம் தெய்வத்தின் கட்டுபாட்டுக்குள் உள்ளது என்றும், இனி இறைவனை நம்பினால் மட்டுமே மக்கள் சமுதாயம் இப்பூமியில் நீடித்து வாழ முடியும் என்று மக்கள் மனதில் ஒரு புதிய சிந்தனை துளிர்விடும் காலமாக 55-ம் தீர்க்கதரிசனக்குறிப்புகள் நடக்கும் காலம் அமையும் என்று 66-ம் தீர்க்கதரிசனக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. அதேசமயத்தில் 60-வது தீர்க்கதரிசனக் குறிப்புகள் நடக்கும் கால கட்டத்தில் ஒரு வரலாறு காணாத மாற்றம் இப்பூமி எங்கும் நடந்து முடிந்திருக்கும் என்று 66-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை எடுத்துக் கூறுகின்றது.


61-லிருந்து 63-வரை ஆகாயத்தில் ஒரு ஒளி தீர்க்கதரிசனக் குறிப்புகள் நடக்கும் சமயத்தில்பிரபஞ்சமே வியக்கும் அதிசயமாகஇந்த பூமி எங்கும் ஒருவரின் அரசாட்சி ஏற்படும் என்றும், அவரே இவ்வுலகை ஆளும் அரசனாக போற்றப்படுவார் என்றும், சத்தியயுகத்தின் சுவடுகள் இப்பிரபஞ்சம் முழுவதும் பரவ துவங்கிவிடும் என்றும், 64, 65, 66 மூன்று தீர்க்கதரிசனங்கள் அதனை செம்மைபடுத்தும் நிகழ்வுகளாக அமையும் என்று 66-ம் தீர்க்கதரிசனம் தனது முடிவை இதன் வாயிலாக தெரிவிக்கின்றது.

இனி நிஜங்கள் மட்டுமே நிழல்களாக மக்களை தொடரும் என்றும், அவைகள் இறைவனை சார்ந்தே நிகழக்கூடும் என்றும், இனி இறைவனின் மெய் காப்பாளர்கள் இந்த உலகம் முழுவதும் தோன்றி வலம் வருவார்கள் என்றும், அவர்களே சத்திய யுகத்தின்பிரஜாதிபதிகள்என்று அழைக்கப்படுவார்கள் என்றும், இவர்களே உலகத்தின்காவலாளிகள்ஆவார்கள் என்று 66-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை தருகின்றது. யுகத்தின் யுகாதிபதி இந்த உலகத்தை ஆளும் காலம் தற்போது துவங்கி விட்டது என்றும், அதன் காலம் இக்காலமே என்று அறிந்து கொள்வதற்கு தீர்க்கதரிசனத்தின் நிகழ்வுகள் தற்போது துவங்கிட உள்ளதாக 66-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை மெய்பட கூறுகிறது.

-- அன்னையின் வழியில் --
ஆசிரியர்.  ஸ்ரீ யோகேஸ்வரன்

குறிப்பு :- இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை. வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்கவேண்டும். இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது. இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்டவெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள் ஒளியாக பிரகாசிக்கும்.



5 comments:

  1. சில விஷயங்கள் நடந்தது கேள்விபட்டேன்

    ReplyDelete
  2. Yerkanave iraivan sathyugam sthaabanaikku vanthuvittar, pazhaiya ulagam azhiya pokirathu, makkalai thooimai aakkum iraivan gnanam brahmmakumaris centerla ulagam muzhuvathum pothikka padukirathu. Ohm shanthi

    ReplyDelete
  3. Yerkanave iraivan sathyugam sthaabanaikku vanthuvittar, pazhaiya ulagam azhiya pokirathu, makkalai thooimai aakkum iraivan gnanam brahmmakumaris centerla ulagam muzhuvathum pothikka padukirathu. Ohm shanthi

    ReplyDelete
  4. நீங்கள் இதுவரை பல தீர்க்கதரிசனங்களை பதிவிட்டீர்கள் 2 வருடம் ஆகிவிட்டது எதுவுமே நடக்கவில்லை.என்னவாயிற்று உங்கள் தீர்க்கதரிசனம்?

    ReplyDelete
    Replies
    1. தற்போது உக்ரைன் நாட்டின் நிலைமையைத் தாம் அறிவீர்களா?

      Delete