Wednesday, 25 March 2015

ஆகாயத்தில் ஒரு ஒளி (பகுதி – 65)


ஆகாயத்தில் ஒரு ஒளிஎன்ற வருங்கால தீர்க்கதரிசனத்தில் இன்று நாம் அறிந்து கொள்ளும் பகுதி 65-ம் தீர்க்கதரிசனப் பகுதியாகும். பல முக்கிய குறிப்புகள் இப்பகுதியில் இடம் பெற உள்ளன.

அதாவது தென்னிந்திய திருச்சபை எனும் பெயர் கொண்ட ஒரு அமைப்பில் வியப்பூட்டும் ஒரு அதிசயம் நடக்க உள்ளதாகவும், அங்கு மக்களின் பிரவேசம் அதிகமாக காணப்படும் என்றும், அங்கு நடக்கும் சபை கூட்டத்தில் இந்தஆகாயத்தில் ஒரு ஒளிஎன்ற தீர்க்கதரிசனத்தின் மீது விவாதங்கள் நடைபெறும் என்று 65-ம் தீர்க்கதரிசனம் ஒரு குறிப்பை தருகின்றது.


சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் கிருஸ்துவ அமைப்பு ஒன்று மக்களை திசை திருப்பும் முயற்சியில் ஈடுபடும் என்றும், அதனை உலக கிருஸ்துவ அமைப்பு கண்டிக்கும் என்றும், அந்த நேரத்தில் தேவாலயம் ஒன்றில் இயேசுவின் அற்புதம் ஒன்று நிகழக்கூடும் என்றும், இதுவே ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற வருங்கால தீர்க்கதரிசனத்தில் இடம்பெறும்தீர்க்கதரிசனக் குறிப்புகள்ஒவ்வொன்றாக நடைபெறுவதற்கான நல்ல அறிகுறிகள் என்று 64-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகின்றது.


இந்திய தேசத்திற்கு புனிதர் ஒருவரின் வருகை தற்போது நடைபெறும் என்றும், அது நடைபெறும் சமயத்தில்வாடிகன்நகரில் ஒரு மகா அதிசய நிகழ்வு நடைபெறும் என்றும், இது கூட தீர்க்கதரிசனத்தின் உண்மைகள் இப்பூமியின் மீது நிகழும் காலமாக மக்கள் எடுத்துக் கொண்டு, ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற வருங்கால தீர்க்கதரிசனம் கூறும் உண்மைகளை கண்டு மன மாற்றத்தை மக்கள் அடைய வேண்டும் என்று 65-ம் தீர்க்கதரிசனம் ஒரு குறிப்பை எடுத்து தருகின்றது. அதே சமயத்தில் இவ்வுலகில்ஷாவ்லின்என்ற பெயர் புனித பெயராக இவ்வுலகில் வலம் வர உள்ளதாக 65-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை மெய்பட கூறுகிறது. மக்கள் மனதில் பல மாற்றங்கள் ஏற்படும் காலமாக வரும் ஜுன் மாதம் அமைய உள்ளதாக 65-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.

மும்பைநினைவில் கொள்ள வேண்டிய இடம் என்றும், அங்கு நடைபெறும் ஒரு சம்பவம் உலகையே திரும்பி பார்க்கச் செய்யும் என்றும், இது நடக்கும் காலம் மிக, மிக அருகில் இருப்பதாக 65-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை தருகின்றது.

பன்னாட்டு வணிகம் இனி இந்தியாவில் சிறப்பாக நடைபெறும் என்றும், அதே சமயத்தில் இந்திய தயாரிப்புகளின் மேல் உலகம் மக்கள் அதிகமாக விரும்புவார்கள் என்றும், இதனால் இந்திய பாரம்பரிய சந்தைப் பொருட்களை அதிகமாக உற்பத்தி செய்து உலக வர்த்தகத்தில் இந்தியா சிறப்பான ஒரு இடத்தை அடையும் என்றும், அது தற்போது நடைபெறும் இந்திய அரசின் முயற்சியே காரணமாக அமையும் என்று 65-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை தருகின்றது.


தேசத்தந்தை மகாத்மா காந்தி வாழ்ந்த தேசத்தில் ஒரு அரிய அகழ்வராய்ச்சி தற்போது துவங்கும் என்றும், அங்கு பல வரலாற்று சரித்திர சான்றுகள் கிடைக்கப் பெறும் என்றும், அதில் அன்னை ஆதிசக்தியின் வருகையைப் பற்றி குறிப்புகள் காணப்படும் என்று 65-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.


ஷாவ்லின் புத்த மடாலயம்ஒன்று தற்போது இயற்கை சீற்றத்தால் தரைமட்டம் ஆகிடப் போகிறது என்றும், அதன் வரலாற்று பாரம்பரிய கலைகளின் உண்மைகளை இவ்வுலகம் இப்பொழுது அரிய முற்படும் என்றும், அதன் அடுத்த பரிணாம வளர்ச்சி இந்திய தேசத்தில் அதுவும் தமிழகத்தில் மட்டுமே உருவாகும் என்றும், அதன்பின்னர் தமிழகத்திலிருந்து உலகம் முழுவதும்ஷாவ்லின்பாரம்பரியம் பரவும் என்று 65-ம் தீர்க்கதரிசனம் ஒரு அரிய குறிப்பை இங்கு எடுத்துக் கூறுகின்றது.


இந்திய முன்னோர்கள் வாழ்ந்த பழமை வாய்ந்த ஒரு குகை இமயமலையில் தற்போது கண்டறியப்படும் என்றும், அங்கு தமிழர்களின் வரலாற்று சிற்பங்கள் கண்டெடுக்கப்படும் என்றும், அதில் காணப்படும் ஒரு சிற்பம் அடுத்த தலைமுறையினரை சுட்டிக் காட்டுவதாக அமையும் என்று 65-ம் தீர்க்கதரிசனம் மெய்பட ஒரு குறிப்பை எடுத்து கூறுகின்றது.

-- இன்னும் தொடரும் --
ஆசிரியர்.  ஸ்ரீ யோகேஸ்வரன்

குறிப்பு :- இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை. வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்கவேண்டும். இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது. இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்டவெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள் ஒளியாக பிரகாசிக்கும்.



4 comments:

  1. உங்களுடைய இந்த முயற்சிக்கு எம்முடைய வாழ்த்துக்கள். ஒருவார காலமாக உங்களுடைய பதிவுகளை படித்தேன்.இன்று எல்லா விதமான துயர்களிலும் சிக்கி, வழி தெரியாமல் தவிக்கும் உலகமக்களுக்கு இவை ஒரு ஆறுதலாக இருக்கும்.நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல் இந்த உலகம், அனைத்திலும் ஒரு மாற்றத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறது.

    ஏன் இந்த பிரபஞ்ச விதியில், நாம் வாழும் பூமியின் கலாசாரம் என்பது ஒழுங்கானது ஓர் ஒழுங்கற்றதையும் , ஒழுங்கற்றது ஓர் ஒழுங்கானதையும் நோக்கி பயணிப்பது தானே.

    இதுகாறும் இந்த உலகத்தில் வந்த தீர்க்கதரிசகள்.,இறையாளர்கள்.,சித்தர்கள் அனைவரும் தாம் வாழ்ந்த இம்மை வாழ்க்கையிலிருந்து மறுமையின் காலத்தை.,வாழ்க்கையைத் தானே தேடிக் கொண்டிருந்தார்கள்.

    அவர்களின் தேடல்கள் தான் இன்றும் நம்மிடமுள்ள கலாசார இயத்தின் பற்றிய விளக்கங்கள்.,எத்தனையோ அறிய கருத்துக்களை கொண்ட நூல்கள்.

    எத்தனையோ அரிய கருத்துக்களை சொல்லியிருந்தாலும் அனைவருடைய ஏக்கமும் எல்லாம் வல்ல பரம்பொருள் ஏகநாயகன் இறைவன் ஒருவரின் வருகையைப் பற்றியதாகவே இருந்தது என்பது அவர்களின் தீர்க்க தரிசனங்களில் தெரிகிறது.

    இப்படி வந்த ., வாழ்ந்த தீர்க்கதரிசிகள்.,இறையாளர்கள் இப்பூவுலகில் எங்கெங்கோ பிறந்து வளர்ந்து தம்முடைய அரிய இறைப்பணிகளை செய்து வந்தனர்.கலாசாரத்திற்கு ஏற்ப மக்களை உண்மை வழியில் வழிநடத்திச் சென்றனர். அதற்காக தம்முடைய அற்புத பொக்கிஷ உயிரையும் உடல்களையும் துறந்தனர். (இறையாளர்களின் உடல்கள் பொக்கிஷம்) .

    இப்படி வந்த தீர்க்கதரிசிகளின் ஒரே கனவு இறுதியில் இறைவனின் இறையாட்சியைப் பற்றியது தான். அந்த அற்புத இறைநாளை அடைய இந்த உலகம் தன் காலப் பயணத்தில் எத்தனை மாற்றங்களை அடையும் என்று தங்களுடைய தீர்க்கதரிசனங்களிலே சொல்லி விட்டுச் சென்றனர்.

    நீங்கள் வெளியிட்டிருக்கும் அத்தனை தீர்க்கதரிசனங்களையம் பல தீர்க்கதரிசிகள் ஏற்கனவே முன்னமே உரைத்து எழுதி வைத்துள்ளனர். இந்த பகுதி அவைகளின் தொகுப்பாகத்தான் தெரிகிறது.

    ReplyDelete


  2. இயேசுவைப் பற்றி சொல்லியிருக்கிறீர்கள். இயேசுவின் இரண்டாம் வருகை இந்த பூமியில் நிச்சயம் உண்டு என்பது யாராலும் மறுக்கமுடியாத உண்மை. அவர் வருவார் என்பதற்கு அவருடைய சீடர்களில் முக்கியமான யோவான்.,மத்தேயு.,தம்முடைய சுவிசேஷங்களில் சொல்லியிருக்கிறார்கள்.இவர்களில் மத்தேயு ,இயேசு சொன்னதை மீண்டும் எடுத்துச்சொன்ன ஒரு மாணவனே தவிர தீர்க்கதரிசி அல்ல.ஆனால் யோவான் இயேசுவின் இரண்டாம் வருகைக்கான அடையாளங்களைத் தெளிவாக தன்னுடைய தீர்க்கதரிசனங்களில் சொல்லி உள்ளார்.

    தீர்க்கதரிசி என்பவன் எந்த சூழ்நிலையிலும்.,எந்த நேரத்திலும் தன்னுடைய நிலையிலிருந்து தன்னுடைய கருத்திலிருந்து உயிரே போகுமென்றாலும் மாறாதவன்.அப்படியிருக்க உங்களுடைய பதிவில் மத்தேயு மீண்டும் வந்து புதிய வெளிப்பாட்டை வெளியிடும் அதிசயம் நடக்கும் என்று சொல்லியிருக்கிறீர்கள். பைபிலில் புதிய ஏற்பாட்டின் முதல் புத்தகத்தை படித்த நீங்கள் கடைசி புத்தகமான யோவானுடைய திருவெளிப்பாட்டை பற்றி தீர்க்கதரிசன குறிப்புகளை ஒன்று கூட குறிப்பிடவில்லை. ஏன்? அனைத்தும் இறுதியில் உள்ள அமைப்பிற்கு மட்டுமே.,அதாவது ஞானம் உள்ளவர்களுக்கே தெரியும் என்பதாலா?முழுக்க முழுக்க இயேசுவின் இரண்டாம் வருகைக்காக ,அந்த இறுதி அமைப்பிற்காக சொல்லப்பட்டவையே 22 அதிகாரங்களும்.

    மத்தேயு 24 : 14 வசனம் ராஜ்யத்தினுடைய இந்த சுவிசேஷம்.,பூலோகமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாக பிரசங்கிக்கப்படும்.அப்போது முடிவு வரும்.,என்ற ஒரு வசனத்தை நினைவூட்ட மத்தேயுவைக் குறிப்பிட்டிருக்கும் நீங்கள் அதற்கு அடுத்த வசனத்தை மறந்தது ஏனோ? "நடுங்க வைக்கும் தீட்டு " பற்றி தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கின்றானே, "வாசிக்கின்றவன் சிந்திக்கக்கடவன் " .அதை பரிசுத்த ஸ்தலத்தில் நிற்கக்காணும் போது -என்றும்,இந்த இக்கட்டை சந்திக்கும் அமைப்பே இறுதி அமைப்பு என்றும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.(இயேசு சொன்னது. )

    இறுதி அமைப்பில் இரு தீர்க்கதரிசிகள் தீர்க்கதரிசனம் உரைப்பார்கள்.அப்போது அவர்கள் கொல்லப்பட்டு மீண்டும் அதே உடலோடு அவர்கள் எழுப்பப்பட்டு.,இறைவனின் சாட்சியாக நிற்கும் சபையே.,அமைப்பே அந்த இறுதி அமைப்பு. மத்தேயு 24 ல் 9 வது வசனத்தைப் பார்த்தால் தெரியும்.இதையெல்லாம் பார்த்தால் நீங்கள் 11 ம் வசனத்திற்குரியவர்களில் ஒருவரோ என்று தோன்றுகிறது.

    ReplyDelete
  3. தமிழக சித்தர்களில் புகழ்பெற்ற வல்லமை மிக்க 18 சித்தர்களைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கும் நீங்கள் அவர்களின் பாடல்களைப் படித்தால் நன்கு விளங்கும்,ஒளிரூபமானவன் இறைவன் என போற்றும் அவர்கள் சிலை வழிபாடுகளை.,கல்லை வழிபடுவதை பகிரங்கமாக சாடுகிறார்கள்.அப்படி இருக்க 18 சித்தர்கள் பெயரில் இங்கு ஆன்மீகம் செழிக்கும் என்று சொல்லும் நீங்கள்.,எப்படி சமயபுரத்தாள்,கண்ணன்,சாய்பாபா,புத்தர் என்று கூறுகிறீர்கள் என்று தெரியவில்லை! மேலும் ஏக பரம்பொருளான இறைவன்.,பிரபஞ்சத்தையே ஆட்டிப்படைக்கும் ஆற்றல் உள்ள அற்புத இறைவன் இங்கு வந்து புதிய பூமி.,புதிய வானம் என அனைத்தையும் புதிதாக்கும் இறைவன்.,பழைய கடவுளர்களின் உருவங்களில் சென்று அற்புதம் செய்வார் என்று சொல்கிறீர்கள்.

    மேலும் அனைத்தையும் இயக்கும் ஆற்றலுள்ள இறைவன் காலத்தில் மூப்பு ஏது? நோய் ஏது?.இந்த உலகத்தில் சாவை நிறுத்திக் காட்டுபவரே இறைவன். முத்தொழிலையும் தன் கையில் வைத்திருப்பவரே இறைவன். அப்படியிருக்க மூலிகையைக் கொண்டு குணப்படுத்த வேண்டிய அவசியமில்லை.

    இறைவன் இல்லாத போது இறையாளனாய் வந்த இயேசு.,தன் ஆன்மபலத்தால் ,தன் பார்வையாலும் தொடுதலாலும் 42 அற்புதங்களை செய்யும் போது இறைவனுக்கு எதற்கு மூலிகை மருத்துவம்? நீங்கள் சொல்லியிருக்கும் 16 முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் அனைத்து மார்க்கங்களிலும் ஏற்கனவே சொல்லப்பட்டிருக்கிறது.

    மேலும் இறைவனின் வருகை 1000 ஆண்டுகளுக்கு முன்பாக முடிவு செய்யப்பட்டது என்று சொல்கிறீர்கள்.ஆனால் இறைவன் வருகை ஒவ்வொரு 5040 ஆண்டுகளுக்கு ஒருமுறை இப்பூமியில் நடந்தே தீரும் என்பது.,நீங்கள் சொல்லும் " ஆதிசக்தி மகராசி " என்ற பெருவெடிப்பு நடந்த சிம்மராசியின் திட்டம்.


    இறைவனின் வருகை என்பது இந்தப்பூவுலகில்.,நம்நாட்டில்.,நம்முடைய இறை தமிழ்நாட்டில் தான்.ஆனால் நீங்கள் சொல்லும் சேலத்தில் (ஸ்ரீசைலம்)அல்ல.ஸ்ரீ சைலம் என்பது மேன்மை பொருந்திய மலை.இறைவன் வாழும் மலை என்ற பொருள் தானே தவிர ,சேலம் என்ற ஊர் அல்ல.இறுதியில் இறைவனின் வருகை உள்ள இடம் அறிய விரும்பினால்.,-கோரக்கரின் சந்திரரேகை நூலிலும்,சாமித்தோப்பு அய்யாவழி நூலிலும்,பிரெஞ்சு தீர்க்கதரிசி நாஸ்டரடமஸ் நூலிலும்,காகபுசண்டரின் தீர்க்கதரிசனங்களிலும், இறுதி நேர சன்மார்க்க வருகையிலும் சொல்லப்பட்டிருக்கிறது.



    வேண்டுமென்றால் உங்களுடைய இந்த உழைப்பிற்காக அந்த இடம் பற்றி சொல்கிறேன்.
    அது கடல் சார்ந்த ஒரு பகுதி,இன்னும் குறிப்பாக சொல்லவென்றால் அது கோரக்க சித்தரின் சீவசமாதி உள்ள மாவட்டத்தைச் சேர்ந்த ஓர் ஊராகும்.

    ReplyDelete