“ஆகாயத்தில் ஒரு ஒளி” என்ற வருங்கால தீர்க்கதரிசனப் பகுதியில் இன்று நாம் காணும் தீர்க்கதரிசனப் பகுதி 59-ம் பகுதியாகும். இந்த 59-ம் தீர்க்கதரிசனப் பகுதி பல்வேறு இறை உண்மைகளை மக்களுக்கு வெளிச்சமிட்டு காட்ட உள்ளன.
59-ம் தீர்க்கதரிசனம் இவ்வுலகம் இறைவனால் படைக்கப்பட்டவுடன் இந்த பூமி எனும் கிரகத்தில் முதல் மனித வித்தாக கடவுளே அனுப்பப்பட்டார் என தீர்க்கதரிசனக் கோட்பாடுகள் தெரிவிக்கின்றன. அதாவது இவ்வுலகத்தின் ஆதிமூலம் அன்னை ஆதிபராசக்தியே ஆவார். அவரின் உள் ஒளியிலிருந்து ஜோதியாக தோன்றியவர் ஆதிசிவனார் ஆவார். அவரின் தோற்ற வடிவமே கடவுளின் அம்சங்களாகும். அவ்வகையில் இப்பூமியில் முதல் மனித வடிவாக அவதரித்தவர் “ஈசனே” என்று 59-ம் தீர்க்கதரிசனக் கோட்பாடுகள் தெரிவிக்கின்றன.
அவரின் வழித்தோன்றல்களே ஆதி மனித சமுதாயம் என்ற கோட்பாட்டை 59-ம் தீர்க்கதரிசனம் இங்கு முன் வைக்கின்றது. ஈசனின் அம்சமாக அவதரித்த மனித சமூகத்திற்கே “மனுசன்” (மனு + ஈசன்) என்ற பெயர் வந்தது என 59-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கு தெரிவிக்கின்றது.
இந்த பரந்த பூமியில் மனிதன் முதல் படைப்பாக படைக்கப்பட்ட இடம் இந்திய தேசம் என்றும், அதுவும் பண்டைய தமிழகமான “லெமூரியா” கண்டம் (குமரிக்கண்டம்) என்று 59-ம் தீர்க்கதரிசனம் ஒரு அரிய முக்கிய குறிப்பை இந்த தீர்க்கதரிசனத்தின் வாயிலாக தெரிவிக்கின்றது. மனிதகுலத்தின் ஆதி தோற்றம் “சிவம்” என்றும், அதுவே ஈசனாக இவ்வுலகில் வலம் வந்த “ஆதிசிவன்” என்றும், இவரே படைக்கும் கடவுளான பிரம்மனையும், காக்கும் கடவுளான திருமாலையும் தோற்றுவிக்க மூலகாரணமாக இருந்தார் என்றும் 59-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை தருகின்றது. அன்னை ஆதிபராசக்தியின் அம்சங்களே கடவுளின் ஒட்டு மொத்த நிலைகள் என்றும், இவைகளின் இயக்க நிலைகள், முடிவு நிலைகள் யாவும் நான்கு யுகங்களை பொறுத்து வடிவமைக்கப்பட்டுள்ளன என்றும் 59-ம் தீர்க்கதரிசனம் கடவுளின் நிலைகளைப் பற்றியும், முதல் மனித வர்க்கத்தை பற்றிய முக்கிய இரகசிய குறிப்பையும் இங்கு வெளியிடுகிறது.
படைக்கும் கடவுளான பிரம்மா அன்னை ஆதிசக்தியின் அவதாரப் பெருமைகளை மக்கள் சமுதாயம் உணர வேண்டும் என்பதற்காக “சத்திய யுகத்தின்” பிரஜைகளாக இவ்வுலகம் முழுவதும் பல புனித ஆத்மாக்களை மனிதர்களாக பிறவி எடுக்கும்படி செய்துள்ளார் என்றும், அவர்களின் வாழ்வியல் தர்மங்களையும், நீதிகளையும் இந்த பிரபஞ்சம் முழுவதும் பரவும்படி செய்ய அன்னை ஆதிபராசக்தியானவர் தனது யுகப்பயணமான சத்திய யுகத்தில் “அன்னை ஆதிசக்தியாக” அவதாரம் மேற்கொள்ள உள்ளார் என்றும், அவரே கலியுகத்தில் அன்னை ஸ்ரீ சமயபுரத்தாளாக அவதாரத்தை மேற்கொண்டு மக்கள் இனத்தை காத்திட்ட தாயாக இருந்தவள் என்று 59-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கு வெளிப்படுத்துகின்றது.
“சத்தியயுகம்” தற்போது பிரபஞ்சம் முழுவதும் வெளிப்பட துவங்கி விட்டது என்றும், அன்னை ஆதிபராசக்தியானவர் ஆதிசக்தியாக அவதாரம் கொள்ள இப்பூமியின் மீது முழுமையாக தனது சக்திகளின் நிலைப்பாட்டினை வெளிப்படுத்த உள்ளார் என்றும், ஏற்கனவே இந்தியாவில் உள்ள அவரின் 51 சக்தி பீடங்களின் சக்திகள் அனைத்தும் மீண்டும் அவர் அவதாரம் மேற்கொள்ளும் “ஆதிசக்தி” என்ற வடிவத்துக்குள் முழுமையாக ஒன்று சேரும் என்றும், அப்பொழுது அன்னை ஆதிசக்தியானவர் இந்திய பூமியில் அதுவும் தமிழ்நாட்டில் தனது இறை அவதாரத்தை ஏற்படுத்திட உள்ளார் என்று 59-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை வெளிப்படுத்திட உள்ளது.
அன்னை ஆதிபராசக்தியானவர் அன்னை ஆதிசக்தியாக அவதாரம் மேற்கொள்ளும் சமயத்தில் அவர் வெளியிட்ட அனைத்து தீர்க்தரிசனங்களும் இப்பூமியில் நடந்து முடிய உள்ளன என்றும், இனி சத்திய யுகத்தின் ஆட்சியே உலக நாடு முழுவதும் இருக்கும் என்றும், இச்சமயத்தில் இந்தியாவின் வளர்ச்சி மற்ற நாடுகளை விட பன்மடங்கு பெருகும் என்றும், இந்திய நாடே உலகில் “வல்லரசு” நாடாக விளங்கும் என்று 59-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது.
அன்னை ஆதிசக்தியானவர் இந்தியாவில் அதுவும் நமது தமிழகத்தில் “அவதாரத்தை” மேற்கொள்ள உள்ளார் என்ற செய்தியினை அனைத்து நாடுகளிலிருந்தும் இனி செய்திக் குறிப்புகளாக வெளிவர உள்ளன என்றும், இனி மக்கள் சமுதாயம் இறைவனை காண தயாராகும் என்றும் 59-ம் தீர்க்கதரிசனம் எடுத்துக் கூறுகிறது. இவ்வுலகில் உள்ள அனைத்து ஆலயங்களும் இயற்கை சீற்றத்தால் தாமாகவே அழியும் என்றும், வரலாற்றுக்காக ஒரு சில ஆலயங்களே இப்பூமியில் நிலைத்து நீடித்து இருக்கும் என்றும், இது அன்னை வந்துவிட்டாள் என்பதற்கான முன் அறிகுறி என்று 59-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை தெரிவிக்கின்றது.
அன்னை ஆதிசக்தியின் அவதார நோக்கம் மக்களையும், அவர்கள் வாழும் இப்பூமியையும் கலியுகம் முடியும் இச்சமயத்தில் பிரபஞ்சத்தின் அழிவுலிருந்து காக்க வேண்டும் என்பதற்காகவே என்றும், அதேசமயத்தில் அன்னை ஆதிசக்தியின் அவதாரத்தின் முக்கிய நோக்கம் “சத்திய யுகம்” என்பது இறைவன் பூலோகத்தில் அமர்ந்து ஈரேழு பதினான்கு லோகத்தையும் ஆட்சி செய்து, தனது சத்தியத்தையும், நீதிகளையும், தர்ம நெறிகளையும் மக்கள் பின்பற்றி வாழ வேண்டும் என்பதற்காகவும் அன்னை அவதரிக்க உள்ளார் என்று 59-ம் தீர்க்கதரிசனம் அன்னை ஆதிசக்தியின் அவதாரக்கோட்பாட்டை இங்கு நமக்கு தெரிவிக்கின்றது.
அன்னை ஆதிபராசக்தியின் அனைத்து அம்சங்களும் அன்னை ஆதிசக்தியின் ஒரே உருவத்தில் அமிழும் நிகழ்வு ஒன்று “பிரபஞ்சம் வியக்கும் அதிசயமாக” நடக்க உள்ளதாக 59-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கு தந்துள்ளது.
--
இன்னும்
தொடரும்
--
ஆசிரியர்.
ஸ்ரீ
யோகேஸ்வரன்
குறிப்பு :- இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை. வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்கவேண்டும். இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது. இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்டவெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள் ஒளியாக பிரகாசிக்கும்.
No comments:
Post a Comment