Monday, 23 March 2015

ஆகாயத்தில் ஒரு ஒளி (பகுதி – 64)


ஆகாயத்தில் ஒரு ஒளிஎன்ற வருங்கால தீர்க்கதரிசனப் பகுதியில் இன்று நாம் அறிந்து கொள்ளும் பகுதி 64-ம் தீர்க்கதரிசனப் பகுதியாகும். இப்பகுதியானது பல முக்கிய குறிப்புகளை கொண்ட தீர்க்கதரிசனங்களாகும்.

இறைவன் கூறும் கூற்றுகள் யாவும் மெய்படும் காலம் தற்போது உருவாகி விட்டது என்றும், இதற்கான அறிகுறிகளாக இவ்வுலகம் முழுவதும் பூமி அதிர்வுகள், எரிமலை குமுறும் சம்பவங்கள், ஆக்ரோஷமான மழைப்பொழிவு, கடல் சீற்றங்கள், சுனாமி பேரலைகள், திடீர் என்று ஏற்படும் பள்ளங்கள், கொடிய நோய்கள், பனிப்புயல் தாக்குதல்கள் போன்ற பல சம்பவங்கள் உலகம் முழுவதும் ஏற்படும் தருணம் இப்போது என்று 64-ம் தீர்க்கதரிசனங்கள் கூறுகின்றன.


காலத்தால் அழியாத காவியம் ஒன்று உருவாகும் இச்சமயத்தில் வான் மண்டலத்தில் பல விசித்திர சம்பவங்கள் தற்போது நிகழக்கூடும் என்றும், இதனால் தொலைதொடர்பு சாதனங்கள் சிறிது நாட்கள் முடங்கும் மோசமான சம்பவங்கள் தற்போது நிகழக்கூடும் என்று 64-ம் தீர்க்கதரிசனத்தில் உள்ள ஒரு முக்கிய குறிப்பு தெரிவிக்கின்றது.


ஜப்பான் நாட்டை ஆழிப்பேரலை தற்போது தாக்கும் அபாயம் உருவாகிட உள்ளதாகவும், இது பல நாடுகளுக்கு பரவும் அபாயம் உள்ளதாக 64-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கு எடுத்து காட்டுகின்றது.

முன்னாள் பாரதப் பிரதமர் ஒருவரின் மரணம் தற்போது இயற்கையான முறையில் நடைபெறும் என்றும், இதுவே தீர்க்கதரிசனங்கள் நடைபெறும் காலக்கட்டத்தின் ஆரம்பம் என  உலக மக்கள் கருத வேண்டும் என்று மற்றொரு குறிப்பை 64-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது.



இமயத்துள் இருக்கும் பல மர்மங்கள் இனி வெளி உலகத்திற்கு தெரிய வரும் என்றும், இமயத்துள் வாழ்ந்த ஒரு யோகியின் நடமாட்டத்தை இனி இந்திய மக்கள் மற்றுமின்றி உலக மக்களே அறியும்படியான பல சம்பவங்கள் இந்த பூமி முழுவதும் நடைபெற போவதாக 64-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.

கடல் தேசத்து நாடுகள் தோறும் ஒரு துயரச் சம்பவம் தற்போது நடைபெற உள்ளதாகவும், வியட்நாம், சீனா, பர்மா போன்ற தேச எல்லைகளில் இனி பல பதற்றமான சூழ்நிலைகள் உருவாகிடப் போவதாக 64-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.

உண்மை, கடவுள், ஞானி, யோகி, சாது போன்ற வார்த்தைகளில் உள்ள புனிதத்தை இனி இந்திய மக்கள் மட்டுமின்றி உலக மக்களும் உணரும்படியான பல ஆன்மீக விஷயங்கள் தற்போது மக்கள் மத்தியில் நடைபெறும் காலமாக இக்காலம் விளங்கிடப் போவதாக 64-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.

தமிழர் முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பு பல தமிழ் மரபுகளைப் பற்றி ஆய்வுகளை மேற்கொள்ளும் என்றும், அந்த அமைப்பின் வாயிலாக முந்தைய 1000 வருடங்களுக்கு முன் இருந்த தமிழர்களின் தொன்மை வரலாற்றினை படம் பிடித்து காட்டும் என்றும், அச்சமயத்தில் தமிழக ஆராய்ச்சியில் பல உண்மைச் சம்பவங்கள் வெட்ட வெளிச்சத்திற்கு வரும் என்று 64-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.

நன்மைகள் பலகோடி உருவாகும்சத்திய யுகத்தின்வரவு இப்பூமியில் தற்போது துவங்கும் காலம் ஆரம்பமாகிவிட்டது என்றும், இதனை ஏற்று வழிநடத்தும் அன்னை ஆதிசக்தியின் பங்கு 100 % வீதம் முழுமையாக இருக்கும் என்று 64-ம் தீர்க்கதரிசனம் கூறுகிறது.


ஜென்என்ற தத்துவக் கோட்பாடுகள் இனி உலகம் முழுவதும் விரைந்து பரவும் என்றும், இந்த ஜென் யோகம் உலக மக்களின் நோய்களை தீர்க்கும் ஒரு அற்புத கலையாக இவ்வுலகில் விளங்கிடும் என்று 64-ம் தீர்க்கதரிசனம் மெய்பட எடுத்துக் கூறுகிறது.


அன்னை ஸ்ரீ சமயபுரத்தாளின் பிரவேசம் தமிழக மக்களிடையே அதிகமாக காணப்படும் என்றும், இது உலக தமிழ் மக்களிடையே மிகுந்த வரவேற்பையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தும் என்று 64-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை மெய்பட கூறுகிறது.

அன்னை ஆதிசக்தியின் பிரவேசம் நிச்சயம் உள்ளது என்றும், அவரின் பிரவேசம் என்பது இந்திய எல்லையில் ஆரம்பித்து தமிழகத்தில் வந்து அமரும் ஒரு நிகழ்வு கூடிய விரைவில் நடக்கும் என்றும், அவரின் அற்புதமான விளையாட்டு ஒன்று தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் தற்போது துவங்கிட உள்ளதாக 64-ம் தீர்க்கதரினம் ஒரு முக்கிய குறிப்பை எடுத்துக் கூறுகின்றது.

-- இன்னும் தொடரும் --
ஆசிரியர்.  ஸ்ரீ யோகேஸ்வரன்

குறிப்பு :- இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை. வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்கவேண்டும். இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது. இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்டவெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள் ஒளியாக பிரகாசிக்கும்.



No comments:

Post a Comment