Friday, 6 March 2015

ஆகாயத்தில் ஒரு ஒளி (பகுதி - 57)




ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற வருங்கால தீர்க்கதரிசனப் பகுதியில் இன்று நாம் காணும் தீர்க்கதரிசனப் பகுதி 57-ம் பகுதியாகும். 57-ம் தீர்க்கதரிசனப் பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை எந்த அளவிற்கு பாதிப்படைய உள்ளது என இங்கு விளக்கமாக எடுத்துக் கூறுகிறது.

அதாவது 57-ம் தீர்க்கதரிசனத்தின்படிமலேசியாநாட்டில் வாழும் தமிழ் மக்களுக்கு இது போதாத காலம் என்றும், அங்கு தமிழர்களின் நிலையில் சுமார் 35% விழுக்காடு பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டு மக்கள் அவதியுறும் காலமாக இக்காலம் இருக்கும் என்று 57-ம் தீர்க்கதரிசனக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.


கடல் தேசத்து பயணத்தில் மிகப்பிரம்மாண்ட செயல்பாடு ஒன்றை ஒரு நாடு ஆரம்பிக்கும் என்றும், அப்பயணத்தின் போது பல்வேறு அசம்பாவிதங்கள் ஏற்பட்டு மக்கள் கூட்டம் கூட்டமாக இறக்கும் சம்பவம் ஒன்று விரைந்து நடக்க உள்ளதாக 57-ம் தீர்க்கதரிசனத்தில் ஒரு குறிப்பு எடுத்துக் கூறுகிறது.


சிங்கப்பூர் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய பகுதி என்றும், அங்கு பல துயரச்சம்பவங்கள் ஏற்படும் என்றும், அதற்கு பாகிஸ்தானின் தீவிரவாத அமைப்புகளின் செயல்பாடுகளே காரணமாக அமையும் என்றும், இதற்கு சர்வதேச தீவிரவாத அமைப்பு உதவும் என்று ஒரு குறிப்பு 57-ம் தீர்க்கதரிசனத்தில் எடுத்துக் கூறுகிறது.


நல்லவர்கள் வாழும் பூமியில் செழிப்பு என்பது எந்த அளவிற்கு இருக்கும் என்பதை அறிந்து கொள்ள அந்த ஊரின் விவசாயிகளை கொண்டு நாம் அளவிட முடியும் என்றும், அத்தகைய விவசாயிகளுக்கு இது போதாத காலம் என்றும், இந்திய மண்ணில் பல ஊர்களில் விவசாயத்தை சார்ந்துள்ள தொழில்கள் நசிவடையும் என்றும், அந்த வகையில் ஒரு தானியத்தை நாம் அந்நிய தேசத்தில் இருந்து பெறும் சூழல் தற்போது உருவாகி வருவதாக  57-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது.


கலியுகக் கடவுளான ஸ்ரீமத் நாராயணனின் மகா அற்புதம் ஒன்று காஞ்சி மாநகரில் துவக்கம் பெற உள்ளதாக 57-ம் தீர்க்கதரிசன கோட்பாடுகள் தெரிவிக்கின்றன. இந்த கலியுகக் கடவுளான ஸ்ரீமத் நாராயணனின் ஒரு மகா பொக்கிஷம் வரும் ஜுன் மாதத்தில் பூமியிலிருந்து வெளிப்பட உள்ளதாக    57-ம் தீர்க்கதரிசனத்தின் குறிப்புகள் தெரிவிக்கின்றன. காஞ்சியின் மன்னன் ஒருவனின் கல்லறை கண்டறியப்படும் என்றும், அதனை அகழ்வராய்ச்சி ஆய்வாளர்கள் ஆய்ந்து பல உண்மைகளை உலகத்திற்கு எடுத்து சொல்வார்கள் என்று 57-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது.

சென்னை, பெங்களுர், ஹைதராபாத், கேரளா, பாம்பே, ஒரிஸா, மத்திய பிரதேஷ் மிக, மிக கவனத்தில் கொள்ள வேண்டிய ஊர்கள் என்றும், இங்கு பல்வேறு அசம்பாவிதங்கள் நடக்க உள்ளது என்றும், இதனை யாராலும் தடுக்க முடியாது என்று 57-ம் தீர்க்கதரிசனக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

வரும் ஜுன் மாதம் தீர்க்கதரிசனங்கள் ஒவ்வொன்றாக நடக்க ஆரம்பிக்கும் என்றும், சில தீர்க்கதரிசனங்கள் காலவரிசைப்படி விரைந்து நடக்க கூடியவைகள் என்றும், ஒரு சில தீர்க்கதரிசனங்கள் இறைவனின் சித்தத்தின்படி மாறி, மாறி நடக்க உள்ளதாகவும் 57-ம் தீர்க்கதரிசனக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

வரும் மாதங்களில் நாடாளுமன்றத்தில் பல புதிய விவாதங்கள் ஏற்படும் என்றும், அந்தந்த விவாதத்திற்கு ஏற்ப இந்திய நாட்டில் பல சம்பவங்கள் திடீர், திடீர் என்று நடக்க உள்ளதாக 57-ம் தீர்க்கதரிசனக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.


வரும் பௌர்ணமி தினத்தன்று ஒரு மகா அதிசய சம்பவம் ஒன்று இவ்வுலகின் தென்திசைப்பகுதியில் நடக்க உள்ளதாகவும், இது இறைவன் சார்ந்த ஒரு அதிசய நிகழ்வாக அமைய உள்ளதாக 57-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.

வடசென்னை, மத்தியசென்னை, தென்சென்னை போன்ற பகுதிகளில் மிகுந்த கவனம் தேவை என்றும், மக்கள் கூடும் இவ்விடங்களில் பல சோதனைகள் ஏற்படக் கூடும் என்று 57-ம் தீர்க்கதரிசனக் கோட்பாடுகள் தெரிவிக்கின்றன. மாநகரில் பல சம்பவங்கள் ஒன்று போலவே ஒற்றுமையுடன் நடக்கவிருப்பதாக தீர்க்கதரிசனக் கோட்பாடுகள் தெரிவிக்கின்றன. இந்த சமயத்தில் இந்திய அரசியல் தலைவர்களில் ஒருவரின் மரணம் நிச்சயமாக நடக்கும் என்றும் 57-ம் தீர்க்கதரிசனக் கோட்பாடுகள் தெரிவிக்கின்றன.


புண்ணிய ஷேத்திரத்தில் ஒரு மகா சோகச்சம்பவம் தற்போது நிகழும் என்றும், இது திட்டமிட்ட சதிச்செயல் என்றும், இதில் சொற்ப மரணங்கள் நிகழக்கூடும் என்றும், இதனால் இந்திய தேசத்தின் இறையாண்மை இடங்களுக்கு  பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்படும் என்றும் 57-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது. காசியில் ஒரு மகாச்சோகச் சம்பவம் ஒன்று நடைபெறும் என்றும் அகோரிகளின் மத்தியில் இதுவரை ஏற்படாத ஒரு மாற்றம் அங்கு நிகழ உள்ளதாக 57-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.

-- இன்னும் தொடரும் --
ஆசிரியர்.  ஸ்ரீ யோகேஸ்வரன்

குறிப்பு :- இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை. வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்கவேண்டும். இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது. இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்டவெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள் ஒளியாக பிரகாசிக்கும்.



No comments:

Post a Comment