“ஆகாயத்தில் ஒரு ஒளி” என்ற வருங்கால தீர்க்கதரிசனத்தில் இன்று நாம் தெரிந்து கொள்ளும் தீர்க்கதரிசனப்பகுதி 58-ம் பகுதியாகும். இது வருங்காலத்தின் உண்மைகள் என 58-ம் தீர்க்கதரிசனங்கள் குறிப்பை தருகின்றன.
58-ம் தீர்க்கதரிசனம் வருங்காலத்தில் ஒரு மகா அதிசயம் இவ்வுலகில் நிகழும் என்றும், அது இறைவனின் அவதாரப் பெருவிழா என்றும் கூறுகிறது. அனைத்து மக்களின் பிரதிநிதியான இறைவன் பூலோகத்தில் கடவுளின் வடிவாக அதாவது ஒரு ரூபமாக, ஒரு திருநாமத்தின் பெயரிலே அவதரிக்கும் அற்புதம் ஒன்று நடக்க இருப்பதாக 58-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை தருகின்றது.
இறைவன் அவதாரம் மேற்க்கொள்ளும் தேசம் இந்திய தேசம் என்றும், இதனால் இந்தியாவில் பல இறை அதிசய நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடக்கும் என்றும், இது வரும் ஜூலை மாதத்திலிருந்து துவங்கி வரும் ஆண்டான 2016-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் முடிவடையும் என்று 58-ம் தீர்க்கதரிசனக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
பார் போற்றும் புதிய சகாப்தம் ஒன்று துவங்கப்பெறும் என்றும் அதற்கு “சத்திய யுகம்” என்றும், அந்த சத்திய யுகத்திற்கான அதிபதியாக இறைவன் அவதாரம் மேற்கொள்வார் என்றும், அவரின் அற்புதங்கள் இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் முழுவதும் இனி ஏற்படும் என்றும், இனி மக்கள் சுபிட்ஷமாக வாழும் சூழ்நிலைகள் உருவாகும் என்றும், அச்சமயத்தில் உலகத்தின் ஒரு மூலையில் உலகமே வியக்கும் அளவிற்கு ஒரு மலை பூமிக்குள் அமிழ்ந்து போகும் என்றும் 58-ம் தீர்க்கதரிசனம் ஒரு குறிப்பை மெய்பட கூறுகிறது.
இந்திய அரசியலில் மகா மாற்றம் ஒன்று 58-ம் தீர்க்கதரிசனங்கள் நடக்கும் சமயத்தில் நடக்கும் என்றும், இது இறைவனின் அற்புதத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும் என்றும், இந்திய அரசியலைமைப்பின் சட்டதிட்டங்களில் அப்பொழுது பல மாற்றங்கள் உருவாகும் என்று 58-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.
கடவுளின் பிரதிநிதிகள் என மக்கள் பல தேசங்களிலிருந்து இனம் காணும் ஒரு இறை அதிசயம் நடக்கும் என்றும், அச்சமயத்தில் அனைத்து நாட்டிலிருந்தும் மக்கள் கூட்டம் இந்திய தேசத்தை தேடி வருவார்கள் என்றும், அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இறைவனுக்கு ஒரு மகா பேராலயத்தை உருவாக்கிட முற்படுவார்கள் என்றும், அதற்கான அச்சாரத்தை இந்திய மண்ணில் மக்கள் முதன்முதலாக துவங்கி வைப்பார்கள் என்றும், உலக தலைவர்கள் இதற்காக முன்வந்து நிற்கும் வைபோகம் ஒன்று வெகு விமர்சையாக நடக்கும் என்று 58-ம் தீர்க்கதரிசனக் கோட்பாடுகளில் உள்ள குறிப்புகள் தெரிவிக்கின்றன.
மதம் என்பது தவத்தின் பயனாக அடைந்த மக்கள் சமுதாயம் என்பதை மக்கள் இனமே மறந்து விட்டது என்றும், அந்த மதத்தின் பெயரால் இனி வன்முறைகள் ஏதும் நடக்காது இருக்கும்படி “அனைத்து மதமும்” ஒன்றிணைந்து இறைவனின் அவதாரப் பெருவிழாவில் கலந்துகொண்டு தங்களை ஒரு மார்க்கத்தின் கீழ் வலம் வரும் மக்கள் சமூகமாக மாற்றிக் கொள்ளும் மாபெரும் விழா ஒன்று அனைத்து நாடுகளின் பெரும் முயற்சியால் நடக்கும் என்றும், இது மனித வரலாற்றில் நடக்கும் மாபெரும் அதிசயம் என்றும், இதுவே பிரபஞ்சத்தில் இறை வரலாறுகள் தெரிவிக்கும் மகா முதல் நிகழ்வு என்று 58-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது.
இந்தியாவின் பொக்கிஷங்கள் ஒவ்வொன்றும் உலக நாடுகள் முழுவதும் பரவி கிடக்கின்றன என்றும், அவைகள் அந்தந்த நாட்டின் பிரஜைகள் மூலம் இனம் கண்டறிந்து மீண்டும் இந்தியாவிற்கே கொண்டு வந்து சேர்க்கும் நிகழ்வுகள் தொடர்ந்து 3 ஆண்டுகள் நடக்கும் என்றும், இதனால் இறைவனின் வரலாற்று உண்மைகளையும், அவரின் படைப்பின் தன்மைகளையும் மக்கள் சமூகம் கண்டு வியப்படையும் அதிசயங்கள் இனி நிகழ உள்ளதாக 58-ம் தீர்க்கதரிசனக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
மகா அதிசயம் என்பது இவ்வுலகில் இதுவரை நிகழவில்லை என்றும், இனிதான் இந்த மண்ணுலகில் நடக்க உள்ளதாகவும் இது “பிரபஞ்சம் வியக்கும் ஒரு அதிசயமாக” விளங்கிடப் போவதாகவும் 58-ம் தீர்க்கதரிசனம் ஒரு புரியாத உண்மையை மக்களுக்காக எடுத்துக் கூறுகிறது. அதாவது மனித அவதாரங்களிலேயே இப்படி ஒரு அவதாரம் இதுவரை படைக்கப்படவில்லை என்ற கோட்பாட்டிற்கு ஏற்ப இறைவன் மேற்க்கொள்ளும் ஒரு சிறப்பு அவதாரம், இந்த மண்ணுலகில் நிகழ உள்ளதாக 58-ம் தீர்க்கதரிசனம் ஒரு குறிப்பை இங்கு தருகிறது.
--
இன்னும்
தொடரும்
--
ஆசிரியர்.
ஸ்ரீ
யோகேஸ்வரன்
குறிப்பு :- இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை. வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்கவேண்டும். இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது. இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்டவெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள் ஒளியாக பிரகாசிக்கும்.
No comments:
Post a Comment