Friday, 27 March 2015

ஆகாயத்தில் ஒரு ஒளி (பகுதி – 66)


ஆகாயத்தில் ஒரு ஒளிஎன்ற வருங்கால தீர்க்கதரிசனத்தில் இன்று நாம் காணும் பகுதி  66-ம் பகுதியாகும்.

இந்த 66-ம் தீர்க்கதரிசனப் பகுதியானது சத்திய யுகத்தின் நிகழ்வுகள் இப்பூமியில் துவங்குவதற்கு முன் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளைப் பற்றி மக்களுக்கு எடுத்து கூறியது. அந்த நிகழ்வுகள் ஒவ்வொன்றாக நிகழும் காலம் தற்போது துவக்கத்தில் உள்ளது என்றும் வரும் ஜுன் மாதமே அதன் வீரியம் அதிகமாக இருக்கும் என்று ஒரு குறிப்பை இங்கு தருகின்றது.

Wednesday, 25 March 2015

ஆகாயத்தில் ஒரு ஒளி (பகுதி – 65)


ஆகாயத்தில் ஒரு ஒளிஎன்ற வருங்கால தீர்க்கதரிசனத்தில் இன்று நாம் அறிந்து கொள்ளும் பகுதி 65-ம் தீர்க்கதரிசனப் பகுதியாகும். பல முக்கிய குறிப்புகள் இப்பகுதியில் இடம் பெற உள்ளன.

அதாவது தென்னிந்திய திருச்சபை எனும் பெயர் கொண்ட ஒரு அமைப்பில் வியப்பூட்டும் ஒரு அதிசயம் நடக்க உள்ளதாகவும், அங்கு மக்களின் பிரவேசம் அதிகமாக காணப்படும் என்றும், அங்கு நடக்கும் சபை கூட்டத்தில் இந்தஆகாயத்தில் ஒரு ஒளிஎன்ற தீர்க்கதரிசனத்தின் மீது விவாதங்கள் நடைபெறும் என்று 65-ம் தீர்க்கதரிசனம் ஒரு குறிப்பை தருகின்றது.

Monday, 23 March 2015

ஆகாயத்தில் ஒரு ஒளி (பகுதி – 64)


ஆகாயத்தில் ஒரு ஒளிஎன்ற வருங்கால தீர்க்கதரிசனப் பகுதியில் இன்று நாம் அறிந்து கொள்ளும் பகுதி 64-ம் தீர்க்கதரிசனப் பகுதியாகும். இப்பகுதியானது பல முக்கிய குறிப்புகளை கொண்ட தீர்க்கதரிசனங்களாகும்.

இறைவன் கூறும் கூற்றுகள் யாவும் மெய்படும் காலம் தற்போது உருவாகி விட்டது என்றும், இதற்கான அறிகுறிகளாக இவ்வுலகம் முழுவதும் பூமி அதிர்வுகள், எரிமலை குமுறும் சம்பவங்கள், ஆக்ரோஷமான மழைப்பொழிவு, கடல் சீற்றங்கள், சுனாமி பேரலைகள், திடீர் என்று ஏற்படும் பள்ளங்கள், கொடிய நோய்கள், பனிப்புயல் தாக்குதல்கள் போன்ற பல சம்பவங்கள் உலகம் முழுவதும் ஏற்படும் தருணம் இப்போது என்று 64-ம் தீர்க்கதரிசனங்கள் கூறுகின்றன.

Friday, 20 March 2015

ஆகாயத்தில் ஒரு ஒளி (பகுதி – 63)


ஆகாயத்தில் ஒரு ஒளிஎன்ற வருங்கால தீர்க்கதரிசனத்தில் இன்று நாம் காணும் பகுதி 63-ம் தீர்க்கதரிசன பகுதியாகும். இதில் இடம்பெறும் குறிப்புகள் அன்னை ஆதிசக்தியை பற்றிய முக்கிய குறிப்புகளாகும்.

ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற இப்பகுதியில் 63-ம் தீர்க்கதரிசனம் இவ்வுலகில் சக்தியின் பீடங்கள் 51 என்றும், அட்சரங்கள் 51 என்றும் கூறுகிறது. இந்த 51 சக்தி பீடங்கள் அனைத்தும் இவ்வுலகின் தன்மையிலிருந்து மாறுபாடு அடைய உள்ளதாகவும், இனி 51 சக்திகளின் மகா தொகுப்பாகஆதிசக்தியின் அவதாரக்கோவில்விளங்கிடும் என்றும், அதனாலேயே சேலத்தைசைலமாகமாற்றும் நிகழ்வு நடக்கும் என்று 63-ம் தீர்க்கதரிசனம் ஒரு குறிப்பை தருகின்றது.

Wednesday, 18 March 2015

ஆகாயத்தில் ஒரு ஒளி (பகுதி – 62)




ஆகாயத்தில் ஒரு ஒளிஎன்ற வருங்கால தீர்க்கதரிசனத்தில் இன்று நாம் காணும்பகுதி 62-ம் பகுதியாகும். இந்த 62-ம் பகுதியானது பல்வேறு குறிப்புகளின் தொகுப்பாகும்.

அன்னை ஆதிசக்தியின் அவதாரப் பிரவேசம் தமிழகத்தில் சேலம் மாவட்டத்தில் என்பது 1000 ஆண்டுகளுக்கு (மனித கணக்கு) முன்பே தீர்மானிக்கப்பட்ட ஒன்று என்றும், இதனால் தமிழகம் பல்வேறு சிறப்புகளை பெறக்கூடிய முன்னணி மாநிலமாக விளங்கும் என்று 62-ம் தீர்க்கதரிசனம் ஒரு குறிப்பை தருகின்றது. அன்னை ஆதிசக்தி அவதாரம் மேற்க்கொள்ளும் சேலம் மீண்டும் தனது வரலாற்று பெயரானசைலம்என மாறும் என 62-ம் தீர்க்கதரிசனம் மேலும் விளக்கம் தருகின்றது.

Monday, 16 March 2015

ஆகாயத்தில் ஒரு ஒளி (பகுதி – 61)




ஆகாயத்தில் ஒரு ஒளிஎன்ற வருங்கால தீர்க்கதரிசனத்தில் இன்று நாம் அறிந்து கொள்ளும் தீர்க்கதரிசனப் பகுதி 61-ம் பகுதியாகும். மெய்பட பல உண்மைகளை அறிவிக்கும் தொடராக இந்தஆகாயத்தில் ஒரு ஒளிஎன்ற தீர்க்கதரிசனத் தொடர் வெளிவந்து கொண்டுள்ளது.

இதுவரை வெளியிடப்பட்ட, இனி  வெளியாகும்  அனைத்து தீர்க்கதரிசனங்களும், இவ்வுலகில் செயல்படும் காலம் தற்போது துவங்கி விட்டன என்றும், இனிதான்ஆகாயத்தில் ஒரு ஒளிஎன்ற இந்த தீர்க்கதரிசனப் பகுதிகளின் மீது உலக மக்களின் கவனம் ஈர்க்கப்படும் என்றும், பல சமூக ஆர்வலர்கள் இந்த பகுதியினை தாமாகவே முன்வந்து அவரவர் தாய்மொழியில் மொழிபெயர்த்து வெளியிடுவார்கள் என்று 61-ம் தீர்க்கதரிசனம் ஒரு குறிப்பை தருகின்றது.

Friday, 13 March 2015

ஆகாயத்தில் ஒரு ஒளி (பகுதி – 60)




ஆகாயத்தில் ஒரு ஒளிஎன்ற வருங்கால தீர்க்கதரிசனத்தில் இன்று நாம் தெரிந்துகொள்ளும் தீர்க்கதரிசனப் பகுதி 60-ம் பகுதியாகும்.

மக்கள் வாழ வேண்டும், அவர்கள் வாழும் இந்த சமூகம் இறை உண்மைகளை உணர்ந்து அறியவேண்டும். கர்மவினைகளை அனுபவிக்கும் மனிதனுக்கு கடவுள் சார்ந்த விஷயங்களை மட்டும் ஏனோ நம்புவதில்லை. இனி மக்கள் வழிபாடு செய்யும் இடங்களில் பல சோகச்சம்பவங்கள் நிகழக்கூடும் என்றும், அச்சமயத்தில் பல புதுமைகளை பல ஆன்மீக குருமார்கள் தாங்களாகவே முன் வந்து செய்வார்கள் என்றும், இது கடவுளின் செயல் என்பதுபோல் பறைசாற்றுவார்கள் என்று ஒரு கோட்பாடு தெரிவிப்பதாக 60-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை தருகின்றது.

Wednesday, 11 March 2015

ஆகாயத்தில் ஒரு ஒளி (பகுதி – 59)




ஆகாயத்தில் ஒரு ஒளிஎன்ற வருங்கால தீர்க்கதரிசனப் பகுதியில் இன்று நாம் காணும் தீர்க்கதரிசனப் பகுதி 59-ம் பகுதியாகும். இந்த 59-ம் தீர்க்கதரிசனப் பகுதி பல்வேறு இறை உண்மைகளை மக்களுக்கு வெளிச்சமிட்டு காட்ட உள்ளன.

59-ம் தீர்க்கதரிசனம் இவ்வுலகம் இறைவனால் படைக்கப்பட்டவுடன் இந்த பூமி எனும் கிரகத்தில் முதல் மனித வித்தாக கடவுளே அனுப்பப்பட்டார் என தீர்க்கதரிசனக் கோட்பாடுகள் தெரிவிக்கின்றன. அதாவது இவ்வுலகத்தின் ஆதிமூலம் அன்னை ஆதிபராசக்தியே ஆவார். அவரின் உள் ஒளியிலிருந்து ஜோதியாக தோன்றியவர் ஆதிசிவனார் ஆவார். அவரின் தோற்ற வடிவமே கடவுளின் அம்சங்களாகும். அவ்வகையில் இப்பூமியில் முதல் மனித வடிவாக அவதரித்தவர்ஈசனேஎன்று 59-ம் தீர்க்கதரிசனக் கோட்பாடுகள் தெரிவிக்கின்றன. அவரின் வழித்தோன்றல்களே ஆதி மனித சமுதாயம் என்ற கோட்பாட்டை 59-ம் தீர்க்கதரிசனம் இங்கு முன் வைக்கின்றது. ஈசனின் அம்சமாக அவதரித்த மனித சமூகத்திற்கேமனுசன்” (மனு + ஈசன்) என்ற பெயர் வந்தது என 59-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கு தெரிவிக்கின்றது.

Monday, 9 March 2015

ஆகாயத்தில் ஒரு ஒளி (பகுதி – 58)




ஆகாயத்தில் ஒரு ஒளிஎன்ற வருங்கால தீர்க்கதரிசனத்தில் இன்று நாம் தெரிந்து கொள்ளும் தீர்க்கதரிசனப்பகுதி 58-ம் பகுதியாகும். இது வருங்காலத்தின் உண்மைகள் என 58-ம் தீர்க்கதரிசனங்கள் குறிப்பை தருகின்றன.

58-ம் தீர்க்கதரிசனம் வருங்காலத்தில் ஒரு மகா அதிசயம் இவ்வுலகில் நிகழும் என்றும், அது இறைவனின் அவதாரப் பெருவிழா என்றும் கூறுகிறது. அனைத்து மக்களின் பிரதிநிதியான இறைவன் பூலோகத்தில் கடவுளின் வடிவாக அதாவது ஒரு ரூபமாக, ஒரு திருநாமத்தின் பெயரிலே அவதரிக்கும் அற்புதம் ஒன்று நடக்க இருப்பதாக 58-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை தருகின்றது.