“ஆகாயத்தில் ஒரு ஒளி” என்ற வருங்கால தீர்க்கதரிசனத்தில் இன்று நாம் காணும் பகுதி 52-ம் தீர்க்கதரிசனப் பகுதியாகும்.
52-ம் தீர்க்கதரிசனப் பகுதியானது இவ்வுலகில் திடீரென்று நடக்ககூடிய பலச்சம்பவங்களின் தொகுப்பாக இருக்கும் என்று எடுத்துக் கூறுகிறது.
- 52-ம் தீர்க்கதரிசனப் பகுதியானது முதலில் இந்திய தேசத்தின் இமயமலையின் தென்பகுதியில் ஒரு விபரீத சம்பவம் நடைபெறும் என்றும், சாதுக்கள் நிறைந்த அந்த பகுதியானது மக்கள் அறிய முடியாத அளவிற்கு பெரும் சேதத்தை சந்திக்க உள்ளதாக எடுத்துக் கூறுகிறது.
- 52-ம் தீர்க்கதரிசனப் பகுதியில் நாம் அடுத்ததாக காண உள்ள பகுதி இந்திய மண்ணில் ஒரு அதிசய கனிமம் கிடைக்க உள்ளதாகவும், இதனால் இந்திய தேசத்தின் பொருளாதார நிலை உயரும் அளவிற்கு இந்த கனிமத்தின் மதிப்பு இருக்கும் என்றும், இதனால் பல்லாயிரம் மக்களுக்கு புதிய வேலைவாய்ப்பும், இந்த கனிமத்தால் சுற்றுச்சூழல் பாதிப்பு இன்றி ஒரு தொழிற்புரட்சியை உலகில் ஏற்படுத்தும் நிலை இந்திய தேசத்திற்கு உருவாகும் என்று 52-ம் தீர்க்கதரிசனக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
- 52-ம் தீர்க்கதரிசனக் குறிப்பில் அடுத்ததாக இடம்பெறும் குறிப்பானது மிக, மிக முக்கியத்துவம் பெற்ற குறிப்பாகும். அதாவது வான் மண்டலத்தில் நிகழும் ஒரு அதிசய நிகழ்வினைப் பற்றி எடுத்துக் கூறுகிறது. கோள்களின் வரிசைப்பட்டியலில் ஒரு புதிய கிரகம் கோளாக ஏற்றுக்கொள்ளும்படியான ஒரு அதிசய நிகழ்வு நடக்க உள்ளதாகவும், அந்த கிரகம் நமது 9 கோள்களின் இடைப்பட்ட சுற்று வட்டப்பாதையில் திடீரென்று நுழைந்து நிலைப்பெற்று இயங்கும் ஒரு மகா அதிசயம் நடக்க உள்ளதாகவும் இந்த 52-ம் தீர்க்கதரிசனப் பகுதி எடுத்துக் கூறுகிறது.
- மன்னர்களில் மகத்தான பல சாதனைகளை நிகழ்த்திய கரிகால் சோழனின் வரலாற்றில் இடம்பெற்ற ஒரு “கல்தூண்” இந்தி தேசத்தின் மண்ணிலிருந்து கண்டெடுக்கப்பட உள்ளதாகவும், அதன் வழியாகத்தான் இராஜஇராஜசோழனின் உண்மை வரலாற்றை உலகம் அறிய உள்ளதாகவும், இச்சம்பவம் நடைபெறும் அதேசமயத்தில் திருச்சி சமயபுரம் பகுதியில் ஒரு வினோத நிகழ்வு நடைபெறும் என்று 52-ம் தீர்க்கதரிசனப் பகுதியில் உள்ள குறிப்புகள் தெரிவிக்கின்றன.
- இந்திய தொல்லியல் துறையானது தருமபுரி மாவட்டத்தில் ஒரு அகழ்வராய்ச்சி மேற்கொள்ளும் அளவிற்கு ஒரு பூமி சம்பந்தப்பட்ட நிகழ்வு மிக, மிக அருகில் நடைபெற உள்ளதாகவும், இச்சம்பவத்தால் தமிழனின் மரபுச் சார்ந்த ஒரு தொன்மை இரகசியம் இவ்வுலகிற்கு தெரியவர உள்ளதாகவும், தமிழகத்தின் தனித்திறன் இதன்மூலம் உலக மக்கள் அறியும் வகையில் இச்சம்பவம் நடைபெற உள்ளதாக 52-ம் தீர்க்கதரிசனம் அரிய ஒரு தகவலை நமக்கு வழஙகுகின்றது.
- ஏற்கனவே ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற வருங்கால தீர்க்கதரிசனப் பகுதியில் தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் உள்ள சில ஊர்களின் பெயர்களை குறிப்பிட்டு எழுதியுள்ளதாகவும், அந்தந்த ஊர்களில் திடீர், திடீர் என பல துயரச்சம்பவங்கள் நடைபெற்று வருவதை மக்கள் அறியாமல் விட்டுவிடுகின்றனர் என்றும், இனி அவ்வாறு இல்லாமல் நம்மைச் சுற்றி நடக்கும் எந்த ஒரு நிகழ்வையும் ஆழ்ந்து கவனித்து புரிந்து கொள்ள வேண்டும் என 52-ம் தீர்க்கதரிசனப் குறிப்பில் இக்கருத்து வெளிப்படுத்தப் படுகிறது என்றும், அதேசமயத்தில் “கொல்லிமலை” அரபளீஸ்வரர் ஆலயத்திற்கு இடப்புறமாக ஓடும் ஒரு ஓடையில் ஒரு அதிசயம் நடைபெற உள்ளதாக 52-ம் தீர்க்கதரிசனப் பகுதியின் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
- இவ்வுலகில் உள்ள அனைத்து யோக மார்க்கங்களும் ஒன்றிணையும் ஒரு மகா அதிசய சம்பவம் ஒன்று தற்போது நடைபெறும் என்றும், யோகத்தின் பயன்பாட்டினை அனைத்து நாட்டு மக்களும் ஏற்றுக்கொள்ளும் மகா சம்பவம் ஒன்று இந்திய தேசத்தின் ஒரு மாநிலத்தில் மாநாடாக துவங்கிட உள்ளதாக 52-ம் தீர்க்கதரிசனக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. அதேசமயத்தில் வடஇந்தியவில் ஒரு யோகா அமைப்பு காவல் துறையினாரால் ஆய்வு செய்யும்படியான சூழலுக்கு தள்ளப்பட்டு, அதன் நிர்வாகி யார்? என்பதனை கண்டு வியப்படையும் ஒரு நிகழ்வு நடக்க உள்ளதாக 52-ம் தீர்க்கதரிசன குறிப்புகள் நமக்கு எடுத்துக் கூறுகின்றன.
- “துன்பத்திலும் இன்பத்தை தேடு” என்ற பொன்மொழிக்கு ஏற்ப தமிழக அரசியல் அமைப்பில் ஒரு மாற்றம் உடனே நடக்க உள்ளதாகவும், இது இந்திய தேசம் முழுவதும் அதிகம் கவனத்தை ஈர்க்கும் என்றும் 52-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை நமக்கு தெரிவிக்கின்றன.
--
இன்னும்
தொடரும்
--
ஆசிரியர்.
ஸ்ரீ
யோகேஸ்வரன்
குறிப்பு :- இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை. வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்கவேண்டும். இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது. இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்டவெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள் ஒளியாக பிரகாசிக்கும்.
No comments:
Post a Comment