Friday, 20 February 2015

ஆகாயத்தில் ஒரு ஒளி (பகுதி – 51)




ஆகாயத்தில் ஒரு ஒளிஎன்ற தீர்க்கதரிசனத்தில் இன்று நாம் அறிந்து கொள்ளும் பகுதி 51-ம் தீர்க்கதரிசனப் பகுதியாகும். இது ஒரு முக்கியமான தீர்க்கதரிசனப் பகுதி என இறைநிலைக் கோட்பாடுகள் தெரிவிக்கின்றன.

51-ம் தீர்க்கதரிசனமானது வரும் ஜூலை மாதத்தில் மாபெரும் பூமி சம்பந்தப்பட்ட அழிவுச்சம்பவம் ஒன்று தெற்கு ஆசியாவில் நடைபெற உள்ளதாக எடுத்துக் கூறுகிறது. இது உலக வரலாற்றில் இதுவரை நடைபெறாத அழிவுச்சம்பவமாக இருக்ககூடும் என 51-ம் தீர்க்கதரிசன குறிப்புகள் தெரிவிக்கின்றன.

51-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை இங்கு சுட்டி காட்டுகின்றது. ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற தீர்க்கதரிசனப்பகுதியில் 7-வது தீர்க்கதரிசனமாக உரைக்கப்பட்ட தீர்க்கதரிசனம் எவ்வித மாறுபாடு இன்றி  உடனே நடக்கும் என்றும், அதற்கான காலக்கட்டம் இதுவே என்று மெய்பட கூறுகிறது.



இந்திய மண்ணில் கால்ஊன்றி தனது தவத்தை இயற்றிய இயேசுவின் வருகைக்கான முக்கிய நிகழ்வு இந்த ஜூலை மாதத்தில் நடக்கும் என்றும், அதே சமயத்தில் இந்திய கிருஸ்துவ சபை ஒன்றில் பொல்லாத செயல்கள் நடந்திருப்பதை அதிசய நிகழ்வு ஒன்று வெளிச்சமிட்டு காட்டும் என 51-ம் தீர்க்கதரிசனத்தில் மற்றொரு குறிப்பு நமக்கு எடுத்துக் கூறுகிறது.


புதுமைகளை இனி பூலோக மக்கள் அனைவரும் காணும்படியான விஞ்ஞான சம்பவம் ஒன்று இந்த ஜூலை மாதத்தில் நடக்க உள்ளதாகவும், வேற்றுகிரக வாசிகளின் உண்மை உருவங்களை மக்களே தங்களது புகைப்பட கேமிராக்களில் பதிவு செய்து வெளி உலகத்திற்கு காட்டப்படும் அதிசய சம்பவம் ஒன்று மிக, மிக விரைவாக நடக்க உள்ளதாக 51-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.


புழுதிப்புயல் ஒன்று உருவாகி கானா தேசத்தையும், அதனை சுற்றியுள்ள பகுதிகளையும் மிக கொடுமையாக தாக்கி பெரிய அழிவை நிகழ்த்தும் சோகச் சம்பவம் ஒன்று நடைபெற உள்ளதாக 51-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது.

மரக்காணம்என்ற ஒரு ஊரில் மிகப்பெரிய அதிசய நிகழ்வு ஒன்று நடைபெறும் என்றும், இவ்வூரில் வாழும் முஸ்லீம் இன மக்களுக்கு இது மிகப்பெரிய வரமாக அமைய உள்ளதாக தீர்க்கதரிசனக் கோட்பாடுகள் 51-ம் பகுதியில் எடுத்துக் கூறுகின்றன.

உண்மைக்கும், பொய்மைக்கும் வித்தியாசம் இன்றி வாழும் இந்திய மக்களில் ஒரு சிலர் பயங்கரவாதம் என்ற தேவையற்ற ஒரு நிலையை தேடி அலைந்து வருவதாகவும், அத்தகைய மக்கள் அதிகமாக வாழும் இந்திய தேசத்தின் ஒரு ஊரில் மிகப்பெரிய இயற்கை பேரழிவு உடனே துவங்கும் என்றும், இதனால் பயங்கரவாதத்திற்கு ஒரு நிரந்தர முற்றுப்புள்ளி ஏற்பட உள்ளதாக 51-ம் தீர்க்கதரிசன குறிப்புகள் தெரிவிக்கின்றன.


சேலத்தை மையமாகக் கொண்டு இயங்கிவரும் ஒரு ஆன்மீகக்குழு சதுரகிரியில் மிகப்பெரிய ஒரு நிகழ்வை சந்திக்க உள்ளதாகவும், இது சித்தர்களின் நிகழ்வாக அமையும் என்றும், இது ஊடகங்களில் நீண்ட நாட்களுக்கு வலம் வரும் என்றும் 51-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது.

பழனிமலை, போகர் இனி மக்கள் மனதில் நீங்கா இடத்தை அடைய உள்ளதாகவும், கேரளத்து மக்கள் தமிழகத்தின் பழமையோடு ஒன்றிணையும் ஒரு அதிசய நிகழ்வு நடக்க உள்ளதாக 51-ம் தீர்க்கதரிசனக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

மானம், தன்மானம், அவமானம் என்ற பேதங்கள் இவ்வுலகில் நீண்ட காலமாக மக்களை சோதித்து வந்தாலும், ஒரு நாடு தன் மானத்தை இழந்து அவமானத்தை உலக அரங்கில் அடைய உள்ளதாகவும், இனி மக்களே மன்னனை நியமிக்கும் அதிகாரத்தை கையில் எடுக்க உள்ளதாகவும், அப்படி ஒரு அதிசய நிகழ்வு இந்த உலகத்தில் நடந்திட உள்ளதாக 51-ம் தீர்க்கதரிசன குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச அரங்கில் இந்தியா ஒரு செயலுக்காக முதல் இடத்தை பெற உள்ளதாகவும், இச்செய்தி அறிவிக்கப்பட்ட அன்றைய தினத்தில் உலகத்தில் ஒரு மகா அதிசயம் நிகழ உள்ளதாக 51-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.

மன்னர்கள் வாழ்ந்த இந்திய தேசத்தில், அதுவும் மராட்டிய தேசத்தில் அன்னை ஆதிசக்தியின் அதிசய நிகழ்வு ஒன்று வெளிப்பட உள்ளதாக 51-ம் தீர்க்கதரிசன குறிப்புகள் தெரிவிக்கின்றன.

-- இன்னும் தொடரும் --
ஆசிரியர்.  ஸ்ரீ யோகேஸ்வரன்

குறிப்பு :- இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை. வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்கவேண்டும். இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது. இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்டவெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள் ஒளியாக பிரகாசிக்கும்.

No comments:

Post a Comment