Monday, 9 February 2015

ஆகாயத்தில் ஒரு ஒளி (பகுதி – 46)


         “ஆகாயத்தில் ஒரு ஒளிஎன்ற இந்த பகுதியில் இன்று நாம் தெரிந்து கொள்ள வேண்டிய பகுதி 46-ம் தீர்க்கதரிசனப் பகுதியாகும். 46-ம் தீர்க்கதரிசனப் பகுதி பல முக்கிய குறிப்புகளை கொண்ட தொகுப்பாகும்.

           46-ம் தீர்க்கதரிசனத்தில் இன்று நாம் அறிந்து கொள்ளும் குறிப்பானது மிக, மிக முக்கியமான ஒரு செய்தி தொகுப்பாகும். அதாவது இந்திய தேசத்தின் நலனில் அக்கறை கொண்ட பல புனித ஆத்மாக்கள் சூட்சும வடிவில் உலாவும் அற்புதமான ஒரு நேரமாக தற்போது விளங்கும் என்றும், அது இந்த 46-ம் தீர்க்கதரிசனம் வெளிப்படுத்தப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் இந்த அற்புத நிகழ்வு துவங்கும் என்றும், உலக வரலாற்றில் இவ்வளவு புனித ஆத்மாக்கள் இதுவரை ஒரே சமயத்தில் வெளிப்பட்டு மக்களுக்கு காட்சி கொடுத்த சம்பவம் நடைபெறவில்லை என்றும், இதுவேபிரபஞ்சம் வியக்கும்அதிசயமாக அமைய உள்ளதாக 46-ம் தீர்க்கதரிசனம் ஒரு அற்புத குறிப்பை இங்கு தெரியப்படுத்துகின்றது.



             மலேசியா நாட்டில் கடல் சார்ந்த அழிவுச்சம்பவம் ஒன்று தற்சமயம் நடக்க உள்ளதாகவும், இச்சம்பவம் இயற்கை சீற்றத்தால் நிகழக்கூடிய பெரியச்சம்பவம் என்று 46-ம் தீர்க்கதரிசனம் இங்கு மற்றொரு குறிப்பை தருகின்றது.


         மகா சக்தி வாய்ந்த ஸ்ரீசக்கரம் ஒன்று கானா தேசத்தில் கண்டெடுக்கப்படும் என்றும், அது அக்காலத்திலேயே மிக, மிக அரிய உலோகத்தால் செய்யப்பட்ட ஸ்ரீசக்கரம் என்றும், அது கண்டெடுக்கப்படும் தருணத்தில் உலகத்தின் ஒரு மூலை சிறிது உயரும் என்றும், அதன் மற்றொரு மூலை சற்று கீழே தாழும் என்று 46-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.

          உண்மை விசுவாசிகளாக விளங்கக்கூடிய தருணம் இதுவென்றும், இறைவனின் உண்மையை மக்கள் முழுமையாக உணரும் காலமாக இக்காலம் இருக்கும் என்றும், மக்கள் தங்களை தாங்களாகவே மாற்றிக்கொள்ளும் ஒரு அற்புத காலமாக இக்காலம் இருக்கும் என்று 46-ம் தீர்க்கதரிசனம் ஒரு குறிப்பை தருகின்றது.

          புத்தர் பிறந்த தேசத்தில் ஒரு மகா பொக்கிஷம் கண்டெடுக்கப்படும் என்றும், அச்சமயத்தில் புத்தமதத்தை சார்ந்த ஒரு ஞானி தன் உயிரை தனது இனத்திற்காக தாரை வார்க்கும் ஒரு துன்ப நிகழ்வு நடக்கும் என்றும், அச்சமயத்தில் சீனா, திபெத் இடையே ஒரு புரட்சி வெடிக்கும் என்றும், அப்பொழுது சீன தேசத்தில் ஒரு மிகப்பெரிய அழிவுச்சம்பவம் நிகழும் என்று 46-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகின்றது.

         மலைவாழ் மக்கள் ஒன்று கூடி ஒரு மிகப்பெரிய விழாவை தமிழகத்தில் நடத்துவார்கள் என்றும் அச்சமயத்தில்ஆதிபராசக்தியின்அற்புத திருவிளையாடல் ஒன்று அந்த மக்களிடத்தில் அன்னை நிகழ்த்துவார் என்றும், இது உலக மக்களையே திரும்பி பார்க்கச் செய்யும் என்று 46-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.

         “இளையோர் முன்னேற்ற கழகம்என்ற அமைப்பு ஒரு புரட்சிகரமான திட்டத்தை மக்களிடையே கொண்டு வர முற்படுவார்கள் என்றும், இதனால் சில நாட்கள் கூச்சல் குழப்பங்கள் நிகழக்கூடும் என்றும், இதனை அரசு கண்டறிந்து தடுக்கும் என்றும், அவர்களுக்கு பின்னால் இருந்து செயல்படும் ஒரு மகா சக்தி வாய்ந்த இயக்கம் இருப்பதை கண்டு நாடே வியக்கும் என்றும், அதனை அரசு முழுமையாக தனது அதிகாரத்தால் அடக்கும் ஒரு நிகழ்வு நடக்கும் என்று 46-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.

         புன்னகை மன்னன் ஒருவரின் மரணம் தற்செயலாக நடந்து முடியும் என்றும், இதனால் ஒரு புதிய குழப்ப நிலை நாட்டில் உருவாகும் என்றும், இதனை சிலர் புரளியாக செய்திகளை பரப்புவார்கள் என்று 46-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை வெளியிடுகின்றது.

         செல்வம், புகழ், அந்தஸ்து என்பவை நிலையானவை அல்ல. மனிதனுக்கு மரணத்தை விட கொடியது ஏதும் இல்லை என்று கூறி, உங்களை காத்துக்கொள்ள உங்களை நீங்களே தயார்படுத்திக் கொள்ளுங்கள் என்று ஒரு நடிகர் தனது பிரச்சாரத்தை நாட்டில் துவங்குவார் என்றும், அச்சமயத்தில் நாட்டில் ஒரு அரசியலில் மாற்றம் நிகழக்கூடிய சூழல் ஏற்படும் என்று 46-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.


             மகா அவதார் பாபாஜியின் அற்புத காட்சிகள் இந்தியா முழுவதும் தென்படும் என்றும், இதனால் ஆன்மீக மக்களுக்கு ஒரு புது உற்சாகம் ஏற்படும் என்றும்யோகா அமைப்புகளில் இவரின் வழிகாட்டுதல்கள் அப்பொழுது துவங்கும் என்று 46-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.

             சுகர் மகரிஷியின் தரிசனம் தென் தமிழகத்தில் உள்ள ஒரு சிவாலயத்தில் தென்படும் என்றும், சைவ சித்தாந்தம் அங்கு மீண்டும் புதுப்பொழிவு பெறும் என்று 46-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.


           குதம்பை சித்தரின் அற்புதம் ஒன்று சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு மலைத்தொடரில் வெளிப்படும் என்றும், அவரால் ஆசிர்வதிக்கப்பட்ட இருவர் ஒரு யோகா மையத்தை சார்ந்தவர்களாக இருப்பார்கள் என்றும், அவர்கள் வழியாக குதம்பை சித்தர் பல விஷயங்களை உலகத்திற்கு வெளிப்படுத்துவார் என்று 46-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.

          கடுவெளி சித்தரின் காலப்பயணம் முடிவுற்று அவரது பிரவேசம் தென் சென்னையில் துவக்கம் பெறும் என்றும், அச்சமயத்தில் சென்னை மழை நீரால் பெரும் சோதனைக்கு ஆளாக நேரிடும் என்று 46-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.

         உண்மையான மதம் எங்களுடையது என்று இந்திய தேசத்தில் ஒரு சில மத அமைப்புகள் தங்களுடைய குரலை உயர்த்தும் என்றும், ஆனால் அரசு அதனை பலங்கொண்டு கட்டுபடுத்தும் என்றும், அச்சமயத்தில் மூத்த அரசியல் தலைவர் ஒருவரின் மரணம் நிகழும் என்று 46-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.


       இமயத்துள் அமர்ந்து தவமியற்றும் இறைவன் சிவனார் தனது அற்புத திருவுருவக் காட்சியை 3 இடங்களில் பதிய வைக்கும் அற்புத நிகழ்வு நடக்கும் என்றும், இதுவரை உலகத்தில் பதிவாகாத அற்புத இறை அதிசயம் இதுவாக இருக்கும் என்று 46-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது.

-- இன்னும் தொடரும் --
ஆசிரியர்ஸ்ரீ யோகேஸ்வரன்

குறிப்பு :- இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை. வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்கவேண்டும். இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது. இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்டவெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள் ஒளியாக பிரகாசிக்கும்.



No comments:

Post a Comment