“ஆகாயத்தில் ஒரு ஒளி” என்ற வருங்கால தீர்க்கதரிசனத்தில் இன்று நாம் அறிந்து கொள்ள வேண்டிய தீர்க்கதரிசனம் 48-ம் பகுதியாகும். உலக மக்களுக்கு மிகுந்த அச்சத்தை உருவாக்கும் பல நிகழ்வுகளை கொண்ட தீர்க்கதரிசனப் பகுதியே இந்த 48-ம் தீர்க்கதரிசனம் ஆகும்.
பல உலக மக்கள் ஒன்று கூடி இந்த காட்சியை அதாவது வானத்தில் வினோதமான பல ஒளி வடிவ காட்சிகளையும், சில உருவங்களையும் காண்பார்கள் என்றும், இதனால் உலக மக்களின் மன எண்ணங்களில் நமது கடைசி காலம் இக்காலமாக இருக்குமோ என்ற அச்சத்திற்கு ஆளாவார்கள் என்று 48-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை தருகின்றது.
கன்னியாகுமரியின் தென்கடல் பகுதியில் பல ஆச்சர்யங்கள் நிறைந்த வினோத சம்பவங்கள் பல நடக்கும் என்றும், அகத்தியரின் புனர்ஜென்ம வழிபாடு நடக்கும் திருவிழா அன்று கடலில் மிகப்பெரிய சம்பவம் நடைபெறும் என்று 48-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.
இந்திய வடதேசப் பகுதியில் கிருஸ்துவர்களுக்கும், முஸ்லீம் இனத்தவருக்கும் ஒரு விரோதச் சம்பவம் ஒன்று ஏற்பட்டு பலர் இறப்பதற்கு அந்நிகழ்வே முக்கிய காரணமாக அமையும் என்றும், அப்பொழுது ஒரு தீவிரவாத கும்பல் அப்பகுதியில் ஒரு மிகப்பெரிய சதிச் செயல் தீட்டிட திட்டமிடும் என்றும், அதனை அரசு கண்டறிந்து முழுமையாக தடுத்துவிடும் என்றும் 48-ம் தீர்க்கதரிசனம் மெய்பட் கூறுகிறது.
கானா தேசத்தில் மாபெரும் கலவரம் ஒன்று வெடிக்கும் என்றும் இங்கு ஆயிரக்கணக்கான மக்கள் கொன்று குவிக்கப்படும் கொடூர நிகழ்ச்சி ஒன்று கூடிய விரைவில் நடந்து முடியும் என்று 48-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகிறது.
இலங்கை -இந்தியா இடையே கடல்வழி போக்குவரத்து மீண்டும் துவங்கும் என்றும், இச்சமயத்தில் அதன் வழிதடத்தில் அதிசயம் ஒன்று கண்டறியப்படும் என்று 48-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.
உலகத்தில் உள்ள இறைவனைச் சார்ந்த பல தீர்க்கதரிசன உண்மைகள் மெய்படும் காலமாக இக்காலம் இருக்கும் என்றும், பொய்யாமொழிக்கு ஏற்ப நிகழ்வுகள் ஒவ்வொன்றாக இந்த உலகில் நடந்து முடியும் என்றும், அதிசயம், ஆச்சர்யங்கள் நிறைந்த ஆண்டாக 2015 - 2016-ம் ஆண்டுகள் அமைய உள்ளதாக 48-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.
1978-ம் ஆண்டில் கடலில் வீழ்ந்து மறைந்து போன ஒரு விமானம் மீண்டும் கடலிலிருந்து வெளிவந்து பெரிய அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தும் என்று 48-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது.
இந்திய மகா சமுத்திரத்தில் மகா அதிசயம் ஒன்று நடைபெறும் என்றும், இது இறைவனின் மகா அற்புத செயலாக அன்று திகழும் என்றும், உலக கிருஸ்துவ மக்களுக்கு இது நற்செயல் ஆண்டாக ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு இந்த நிகழ்வு நிகழ உள்ளதாக 48-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.
இன்பமே துன்பத்திற்கு காரணம் என்று கூறப்பட்ட புத்தரின் புனித வார்த்தைகளுக்கு ஏற்ப, இந்திய யோகிகளின் போர்வையில் வாழும் பல ஆசாமிகளின் இன்ப வாழ்க்கை அவர்களுக்கு துன்ப வாழ்க்கையாக மாறிடப் போகின்றது என 48-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.
இந்திய குடிமகனின் அற்புதம் ஒன்று இந்தியாவில் ஆரம்பிக்கும் சுப நிகழ்வு ஒன்று துவங்கும் தினமாக இவ்வாண்டு அமைய உள்ளதாக 48-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது.
--
இன்னும்
தொடரும்
--
ஆசிரியர்.
ஸ்ரீ
யோகேஸ்வரன்
குறிப்பு :- இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை. வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்கவேண்டும். இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது. இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்டவெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள் ஒளியாக பிரகாசிக்கும்.
No comments:
Post a Comment