Monday, 16 February 2015

ஆகாயத்தில் ஒரு ஒளி (பகுதி – 49)


ஆகாயத்தில் ஒரு ஒளிஎன்ற வருங்கால தீர்க்கதரிசனப் பகுதியில் இன்று நாம் அறிந்து கொள்ளக்கூடிய தீர்க்கதரிசனப் பகுதி 49-ம் பகுதியாகும். தீர்க்கதரிசனங்கள் எக்காலத்திலும் அவைகள் பொய்த்து போனதில்லை. அவை நிகழ்காலத்தின் உண்மைகளாக இன்றும் காத்து உள்ளன.

வருங்காலத்தின் உண்மைத் தன்மைகளை மக்கள் உணர்ந்து அறிந்துகொள்ள வேண்டும் என தீர்க்கதரிசன கோட்பாடுகள் கூறுகின்றன. இவ்வுலகில் வேதங்கள் என்பவை தர்மத்தின் வாசல்கள் என கடவுள் கோட்பாடுகள் தெரிவிக்கின்றன. சராசரியாக ஒரு மனிதன் இவ்வளவு நேரத்திற்கு சாப்பிட வேண்டும், தூங்க வேண்டும், எழுந்திருக்க வேண்டும், உழைக்க வேண்டும் என குறிப்புகள் உள்ளன. இவைகள் யாவுமே வேதத்தின் அடிப்படை சாரம்சகளாகும் என வேதங்கள் குறிப்பிடுகின்றன. வேதங்கள் மனிதனுக்கும், கடவுளுக்கும் இடையில் ஒரு நிகழ்கால இணைப்பை ஏற்படுத்துவதற்காக இறை அவதாரங்களால் மனு குலத்திற்கு வழங்கப்பட்ட நல்ஒழுக்கங்களாகும்.




ஒரு சில வேதங்கள் வருங்காலத்தை பற்றியும், மக்களின் வாழ்வியல் முறைகளைப் பற்றியும், சிலவகை தந்திரப் பயிற்சிகளைப் பற்றியும், கடவுளின் அருளையும், அனுக்கிரஹத்தை பெறும் முறைகளைப் பற்றியும் விளக்குகின்றன. போற்றுகின்ற கல்விகள் இவ்வுலகில் பலவாக காணப்பட்டாலும் வருங்காலத்தைப் பற்றி கணக்கிடும் கல்விகள் ஒரு சில மட்டுமே உள்ளன. ஆனால் இக்கல்வியில் தீர்க்கதரிசனங்களை உரைக்க முடியாது என தெய்வீக கோட்பாடுகள் தெரிவிக்கின்றன. மேலும் வேதத்தையும், அதன் வழிமுறை உபதேசங்களையும் பின்பற்றுகின்ற எவராக இருப்பினும், அவர்கள் வழியில் இறைவன் வருங்காலத்தை பற்றி தீர்க்கதரிசனமாக உரைப்பான் என தீர்க்கதரிசன கோட்பாடுகள் தெரிவிக்கின்றன.


49-ம் தீர்க்கதரிசனம் இந்த உலகில் வெறும் வேத புத்தங்களை மட்டும் கையில் வைத்துக்கொண்டு, அதன் உண்மை வழியில் நடக்காமல், அதனை மனப்பாடமாக செய்து கொண்டு, மக்கள் மத்தியில் தங்களை உயர்வாக காட்டிக் கொண்டு, தங்கள் மதத்தை மட்டும் உயர்வாக பேசி கொண்டு, மற்ற மதத்தையும், அதனை சார்ந்த கடவுள் கோட்பாடுகளையும் இழிவாகவும், அதனை பின்பற்றும் மக்களை இழிவாகவும் சித்தரித்து பேசும் அனைவருக்கும் இது போதாத காலம் என்றும், அவர்கள் மீது இறைவனின் நீயாயத்தீர்ப்பு இறங்கும் என்று 49-ம் தீர்க்கதரிசனம் ஒரு குறிப்பை தருகின்றது. மதத்தில் உயர்ந்த மதம், தாழ்ந்த மதம் என்ற பாகுபாடு இல்லை என்றும், இனி மதப்பிரசங்கம் செய்யும் கூட்டத்தில் இறைவனின் நீயாயத் தீர்ப்பின் தண்டனைகள் அவர்களின் மேல் இறங்கிட உள்ளதாக 49-ம் தீர்க்கதரிசனம் மேலும் சில விவரங்களை எடுத்துக் கூறுகிறது.

ஜெனிவா நாட்டில் நடக்கும் ஒரு மத ரீதியான கூட்டத்தில் பயங்கரமான தாக்குதல் நடக்க உள்ளதாகவும், அங்கு மனித உயிர்பலிகள் அதிகம் நடக்கும் என்று 49-ம் தீர்க்கதரிசனம் மேலும் ஒரு குறிப்பை தருகின்றது.


திருச்சி கல்லணைப் பகுதியில் ஒரு விசித்திர சம்பவம் ஒன்று நடைபெற உள்ளதாகவும், காவல்துறை அங்கு கவனத்துடன் தமது பணிகளை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலைகள் உருவாகிடப் போவதாக 49-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.

இலங்கை மட்டகிலப்பு பகுதியில் ஒரு மகா சோகச் சம்பவம் ஒன்று நிகழ உள்ளதாகவும், புதிதாக அமைந்த அரசுக்கு அது ஒரு தலைவலியாக அமைய உள்ளதாக ஒரு தீர்க்கதரிசனம் 49-ம் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நால்வர் மன்றம் எடுக்கும் தீர்ப்பானது (முடிவு) தமிழகத்தை அசைக்கும் அளவிற்கு இருக்கும் என்றும், இது மிக, மிக அருகில் உள்ள நிகழ்வு என்று 49-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை தருகின்றது.

திருவண்ணாமலையை தலைமை இடமாக கொண்ட ஒரு ஆஸ்ரமத்தில் பல வினோத வழிபாடுகளும், பாலியல் கொடுமைகளும் நடக்கும் என்றும், அது ஊடகங்களில் வெளியாகி பெரிய சர்ச்சையை கிளப்பும் என்றும், இதனால் அதன் நிர்வாகி தற்கொலைக்கு முயலும் சம்பவம் ஒன்று நடக்க உள்ளதாக 49-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது.


இயேசுவைப் பற்றிய பல உண்மைகளை இனி ஊடகங்கள் வெளியிடும் என்றும், வானத்தில் அதிசய நட்சத்திரம் ஒன்று உருவாகி காட்சி கொடுக்கும் அதிசய நிகழ்வு ஒன்று நடக்க உள்ளதாக 49-ம் தீர்க்கதரிசனம் ஒரு குறிப்பை தருகின்றது. வரலாற்றில் பல உண்மைகள் இனி மக்கள் அறியும்படி வெளிச்சத்திற்கு வர உள்ளதாக 49-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.

-- இன்னும் தொடரும் --
ஆசிரியர்.  ஸ்ரீ யோகேஸ்வரன்

குறிப்பு :- இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை. வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்கவேண்டும். இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது. இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்டவெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள் ஒளியாக பிரகாசிக்கும்.

No comments:

Post a Comment