ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற வருங்கால தீர்க்கதரிசனத்தில் இன்று நாம் தெரிந்து கொள்ளும் தீர்க்கதரிசனம்
54-ம் பகுதியாகும். தீர்க்கதரிசனத்தின் ஒவ்வொரு வரிகளும் ஆழமான பொருள் பொதிந்தவை. அவைகளை வெறும் சம்பவங்களின் விபரங்களாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும், அதன் பின்னணியில் உள்ள பொருள் பொதிந்த இறை இரகசியங்களை இந்த மனித குலம் கண்டுகொள்ள வேண்டும் என எடுத்துக் கூறுகிறது.
அந்த வகையில் இன்று 54-ம் தீர்க்கதரிசனப் பகுதி இனி மக்களுக்கு வருங்காலம் என்பது பலவகையான சோதனைகள் நிறைந்த காலம் என்றும், இது எதனால் இவ்வாறு ஏற்படுகிறது என ஆழ்ந்து சிந்திக்கும் அளவிற்கு பல்வேறு சோதனைகள் நிகழக்கூடும் என்று எச்சரிக்கை செய்கிறது. சோதனைகள் யாவும் நாட்டுக்கு நாடு வேறுபடும் என்றும், அச்சோதனைகள் முழுவதும் மனிதகுலத்தை சார்ந்தே அமையும் என்று விளக்கம் கொடுக்கிறது. அதாவது கடல்சார்ந்த சோதனைகள் 35% விழுக்காடு என்றும், பூமி சார்ந்த சோதனைகள் 65% விழுக்காடு என்று 54-ம் தீர்க்கதரிசனம் எடுத்துக் கூறுகிறது.