ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற இந்த தொடரின் மூன்றாம்
பாகத்தில் இடம் பெறும் தீர்க்கதரிசனங்களை பற்றி இங்கு காண்போம். தீர்க்கதரிசனங்கள்
என்பவை எவை? அவை எப்படி மனிதனால் கூற முடிகிறது? என்ற கேள்விகளுக்கு பல லட்சக்கணக்கான
மக்களும், மெய் ஞானிகளும் இன்றுவரை அதற்கான விடையை தேடி வருகின்றனர், தனது ஆழ்மனதின்
மூலமாக மனிதன் உணர்ந்து சொல்லக்கூடிய விஷயங்களுக்கு “தீர்க்கதரிசனங்கள்” என்று அர்த்தமல்ல,
அவைகளுக்கு பெயர் வேறு, அதாவது ஆழ்மனதின் சக்தி அலைகளால், சில நேரத்தில் நடக்கும் ஒரு
மனிதனின் தனிப்பட்ட செயல்களை பற்றி தெரிவிக்கும் ஆழ்மனதின் பதிவுகளே இவைகளாகும். இது
தனி ஒரு மனிதன் தனது ஆழ்மனதின் வழியாக மற்றொரு மனிதனின் ஆழ்மனதிற்குள் மறைந்துள்ள செய்திகளை
தனது ஈர்ப்பு சக்தியினால் உட்கவர்ந்து சொல்லக்கூடிய மனோசக்தி ஆற்றலே இதுவாகும்.
ஆகையால் தீர்க்கதரிசனம் என்பது முற்றிலும் வேறானது,
அதாவது மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியானது மனிதனுடைய “பீனியல்” சுரப்பியின் செயல்பாட்டோடு இணைந்து அவனின் மூளைக்குள் உலகியல்
செய்திகளை மின்காந்த அலைகளாக செலுத்தப்பட்டு அது அவனிடமிருந்து உரிய காலக்கட்டத்தில்
அந்த அற்புத சக்தியால் மீண்டும் இயக்கப்பட்டு சொல்லப்படும் விஷயங்களே இங்கு தீர்க்கதரிசனங்கள்
என்று சொல்லப்படுகின்றன.
பெரும்பாலான தீர்க்கதரிசனங்கள் வாய்மொழியாக
சொல்லப்படுவதில்லை, அவைகள் ஒரு மனிதனுக்குள் உணர்த்தப்பட்ட பின்னர் செய்திகளாக அவனுக்குள்
எழுதப்பட தூண்டப்படுகின்றன அவ்வாறு எழுதப்பட்ட உலக நிகழ்வுகளை பற்றிய முன் அறிவிப்புகளே
இங்கு தீர்க்கதரிசனங்கள் என்று அழைக்கப்படுகிறது. மேலும் குறிசொல்லுதல், சாமியாடுதல்,
வாக்கு சொல்லுதல், ஜோதிடம், ஆரூடம் கணித்தல் இவைகளெல்லாம் தீர்க்கதரிசனங்கள் அல்ல,
அவைகள் அனைத்துமே ஒரு கணக்கீடு ஆகும். அதாவது மனக்கணக்கீடு ஆகும். ஆகவே மனித குலம்
தீர்க்கதரிசனத்தினைப் பற்றி விழிப்புணர்வு கொள்ள வேண்டும்.
மனிதன் தான் வாழும் காலத்தில் இயற்கையின் சீற்றங்களை
அது வரும் முன்பே அறிய ஆவலாக உள்ளான், இன்றைய விஞ்ஞானம் அதற்கு பெரிதும் துணையாக உள்ளது.
ஆனால் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் இருந்த விஞ்ஞானத்தையும், அதற்கு முன்பு (சுமார்
500 ஆண்டுகளுகள்) இருந்த விஞ்ஞானாத்தையும் ஒப்பிட்டு பார்தால் நம்மால் இயற்கையின் கோரதாண்டவத்தை
அன்றைய விஞ்ஞானத்தால் அறிய முடியாமல் போயிருக்கலாம், ஆனால் அக்கால மக்கள் இயற்கையோடு
ஒன்றி வாழ்ந்து பறவைகள், விலங்குகள் இடம் பெயர்தலை கொண்டு புயல், பூமி அதிர்வு இவைகளை
கண்டறிந்து பாதுகாப்பாக வாழ்ந்து வந்தனர், அன்று அவர்களுக்குள் எந்த அறிவு வித்தாக
இருந்து இன்றுவரை காத்து வந்ததோ அதே அறிவுதான் இன்றும் அவர்களுக்குள் இருந்து வருகிறது,
ஆனால் அந்த அறிவால் இன்று மனிதன் எதையும் அறிய முடியாமல் இருக்கிறான், காரணம் மனிதன்
தன்னுடைய அறிவால் கண்டறிந்த விஞ்ஞான கருவிகளை மட்டுமே இன்று நம்பி வாழ்ந்து வருகிறான்,
அதனை மட்டுமே அவன் முழுமையாக நம்பி இருப்பதால், அதற்குமேல் தன் அறிவை பயன்படுத்தி எதையும்
அறிந்து கொள்ளாமல் இருந்துவிட்டான், இதன் விளைவு இன்று பூமியில் எந்த பக்கம் எது நிகழும்
என்று கூட உணர முடியாமல் தத்தளித்து வருகிறான்.
மனிதன் எப்பொழுது தன் அறிவுபலத்தை இழக்கின்றானோ
அன்று முதல் இறைவன் மட்டுமே அவனுக்கு முழுமையாக உதவமுடியும், இதுவே பிரபஞ்ச இயக்க கோட்பாடு
ஆகும், ஒவ்வொரு யுகமாற்றத்தின் போதும் இவ்வுலகில் பல நாடுகளில் பல தீர்க்கதரிசிகள்
அவதரித்து, மக்களுக்கு தனது தீர்க்கதரிசனங்கள் மூலம் வழிகாட்டி, வரும் துன்பங்களிலிருந்து
காத்து உள்ளனர், அத்தகைய தீர்க்கதரிசனங்களை இயக்கும் அந்த மஹாசக்திக்கே “இறைவன்” என்று
எல்லா மதமும் பெயரிட்டு அழைக்கின்றன, ஆகவே தீர்க்கதரிசனங்களை கூறும் மனிதனை கூர்ந்து
கவனிப்பதை விட்டு விட்டு “தீர்க்கதரிசனத்தில் உள்ள உண்மை தன்மைகள்” என்னவென்று உற்று
கவனித்து அவை உலகில் எங்கு, எச்சமயத்தில், எவ்வளவு கால கட்டத்தில் நடக்கின்றன என்பதை
கவனித்து வந்தாலே இறைவன் நமக்கு கூறும் அறிவுரை, வழிகாட்டுதல் என்னவென்று முழுமையாக
உணர்ந்து நாம் இப்பூமியில் சிறப்பாக வாழ முடியும்.
வாழவெண்டும், அச்சமின்றி வாழவேண்டும், புது நம்பிக்கையோடு
மனிதன் வாழ வேண்டும் என்று ஒரு ஜென் கோட்பாடு தெரிவிக்கின்றது, அதன்படி இன்று மூன்றாவது
தீர்க்கதரிசனம் இங்கே வெளிப்படுத்தப்படுகிறது. அதாவது, இவ்வுலகில் இனி மரண ஒலங்கள்
அதிகமாக காணப்படும் என்றும், மக்கள் வறுமையில் வாடி அதிகமாக இறப்பார்கள் என்றும், வறியவர்களை
அடிமையாக ஒரு நாட்டில் நடத்தப்படும் அவலத்தை இவ்வுலகமே கண்ணுற்று அதிர்சிக்குள்ளாகும்
என்றும், இச்சமயத்தில் ”வானத்தில் ஒரு அதிசய பேரொளி” ஒன்று தென்படும் என்றும், அது
உலக வரைபடத்தின் தென் துருவப்பகுதியில் உள்ள ஒரு நாட்டிலிருந்து புறப்பட்டு அது வடகிழக்காக
நகர்ந்து சென்று மறையும் என்றும், அப்பொழுது இந்திய திருநாட்டில் மிகப்பெரிய அதிசயம்
ஒன்று நடைபெறும் என்றும் இந்த மூன்றாம் தீர்க்கதரிசனம் தனது உண்மைகளை வெளிச்சமிட்டு
காட்டுகிறது.
மூன்றாம் தீர்க்கதரிசனத்தின் போது அதாவது அது
நிகழும் சமயத்திற்கு முன்பாக அமெரிக்க வானியல் ஆராய்ச்சியில் ஒரு புதிய கிரகத்தை கண்டறிவார்கள்
என்றும், அங்கு காணும் உண்மைகள் உலகமே வியந்து பார்க்கும் அளவிற்கு இருக்கும் என்றும்,
இதுவே மூன்றாம் தீர்க்கதரிசனம் நிச்சயம் நடைபெறுவதற்கான அறிகுறியாகும் என்று தீர்க்கதரிசனம்
வெளிச்சமிட்டு காட்டுகிறது, இந்த உண்மையை அறியும் மக்கள் மனதில் இந்த தீர்க்கதரிசனம்
ஆகாயத்தில் ஒரு ஒளியை போன்று அவர்கள் மனதில் இடம் பிடிக்கும்……
--இன்னும் தொடரும்—
ஆசிரியர். ஸ்ரீ யோகேஸ்வரன்
குறிப்பு : இத்தொடரில்
வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் எற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை,
வருங்காலத்தை பற்றி விவாதிக்க அனைவருக்கும் உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல ! அவசியம்
இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும் ! இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே
இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது, இதை ஒரு கதைப்போல் படியுங்கள், உண்மை ஒரு நாள்
வெட்டவெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள் ஒளியாக பிரகாசிக்கும்...
No comments:
Post a Comment