தீர்க்கதரிசனங்கள் என்றுமே பொய்த்துப்போனவை அல்ல,
அப்படி நடைபெறாமல் போவதற்கு பல காரணங்கள் உண்டு, ஒருவர் தன்னை மிகைப்படுத்திக்கொள்வதற்காக
வெளியிடப்படும் தீர்க்கதரிசனங்கள் யாவும் இன்றுவரை உலகில் நடைபெறாமல் இருந்துள்ளன,
ஆனால் தன் சுயலாபமின்றி, உலகின் நன்மைக்காக இறைவனின் ஆசிர்வாதத்தோடு வெளிப்படும் தீர்க்கதரிசனங்கள்
இன்றுவரை நடந்து வருகின்றன, அதற்கு உதாரணமாக பைபிள், குரான், மற்றும் இந்து மதத்தின்
நிஜமான ஞானிகளின் தீர்க்கதரிசனங்கள் போன்றவை இன்றுவரை வியத்தகு வகையில் நடைபெற்று வருகின்றன.
“ஆகயத்தில்
ஒரு ஒளி என்ற இந்த ஆன்மீக தொடரில் இன்று இடம்பெறும் தீர்க்கதரிசனம் மிக முக்கியமான
தீர்க்கதரிசனமாகும், இப்புவியின் மீது இறைவனின் நியாத்தீர்ப்புகள் வழங்கும் இறுதிநாள்
என்று பல மதத்தினர் இன்றும் பிரசங்கம் செய்து வருகின்றனர், இது உண்மையில் நடக்கும்
செயலா? என்ற கேள்வி நம் எல்லோருக்கும் உண்டு, ஆனால் உலகம் முழுவதும் அழியும் ஊழிக்காலம்
இக்காலம் என்பதை நாம் யாரும் மறுக்கமுடியாது, ஆனால் படைத்த இறைவன் அனைத்தையும் அழிக்கும்
நிலைக்கு போகமாட்டார், ஆனால் அவரின் பிரவேசம் இப்புவி மீது முழுமையாக இருக்கும்படி
அமையும், இதுவே இறைவனின் வருகைக்கான முக்கிய ஒரு அறிவிப்பாக நாம் இங்கு எடுத்துக்கொள்ளவேண்டும்.
இரண்டாம் தீர்க்கதரிசனம் எதுவென்றால் “ என்னை
ஆழம் பார்க்கும் அனைத்து மக்களையும் நான் ஆழம் பார்க்க தவறமாட்டேன்”, இதுவே என் வருகையின்
நிமித்தம் என்று கடவுளின் கோட்பாடு ஒன்று தெரிவிக்கின்றது. ஆகவே மக்கள் நிரம்பியுள்ள
இந்த பூமியின் மீது இறைவன் நடமாடும் தினம் வெகு அருகில் உள்ளது என்பதை நாம் இங்கு உணர
வேண்டிய ஒன்றாகும், அது இதன் வாயிலாக உறுதியாகின்றது.
இப்புவியில் உள்ள மக்களின் மனதில் இறைவன் பற்றிய
அவநம்பிக்கைகள் அதிகமாக துளிர்விட ஆரம்பித்துவிட்டன, இதனால் நம்பிக்கை இல்லா மக்களின்
வாழ்வாதார சீர்கேடுகளை இச்சமூகம் நிறைய அனுபவித்து வருகின்றது, அதனை சீரமைப்பது யார்?
அதற்காகத்தான் “கடவுளின் வருகை இப்புவியின் மீது” என்று பல மத தீர்க்கதரிசனங்கள் தெரிவிக்கின்றன.
“பரலோக ராஜ்யம் நமக்கானது” என்று பல சமூக மக்கள் கூறி வருகின்றன. பரலோகம் என்பது எது?
என்ற கேள்வியை இங்கு நாம் எழுப்ப வேண்டும், ஆம் அது இதுவே “பரமன் குடிகோள்ளும் உலகம்”
என்று நாம் இங்கு பொருள்கொள்ள வேண்டும், அப்படி என்றால் இந்த புவியின் மீது நடக்கும்
இறைவன், அவர் விரும்பும் உலகம் இந்த “புவிதான்” என்பது நிச்சயமாக தெரியவருகிறது, ஆகையால்
இந்த புவியையே இறைவன் தான் வசிக்கும் இடமாகவும், தன் ஆட்சியை இப்புவியின் மீது நடத்திட
திடமாக உள்ளார் என்றும் தெரியவருகிறது. ஆகையால் இறைவனை நேசிக்கும் அனைவருக்கும் இப்புவியில்
நிச்சயம் இடம் உண்டு என்பதனை மட்டும் நாம் மறந்து விடக்கூடாது.
இந்த இரண்டாம் தீர்க்கதரிசனம் என்பது என்ன? என்பதை
பற்றி உங்களுக்கு நான் விளக்கம் தருகிறேன், ஒவ்வொரு யுகமாற்றத்தின் போதும் இறைவன் இப்புவியின்
மீது தனது ஆதிக்கத்தை செலுத்தி அதனை சீர்படுத்தியுள்ளார், அந்த வகையில் தற்போது கலியுகம்
முடிந்து சத்தியயுகம் துவங்கும் காலகட்டமான இச்சமயத்தில் அவரின் வருகை இப்புவியின்
மீது என்பது யாராலும் மறுக்கமுடியாது, அவரின் வருகையின் போது என்னென்ன சம்பவங்கள் இப்புவியில்
நடக்கும் என்பதை இங்கு நாம் உற்றுகவனிப்போம், அவர் வருகையின் சமீபமாக கீழ்கண்ட சம்பவங்கள்
நிச்சயம் நடக்கும் என இரண்டாம் தீர்க்கதரிசனங்கள் தெரிவிக்கின்றன்,
அவைகள்:
- இப்புவியின் மீது அக்னி மழை பொழியும்.
- வானத்தில் பலத்த இடி ஓசை தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கும்.
- கடல் பொங்கும்.
- கானகக் குயில்கள் யாவும் எட்டுதிசை எங்கும் சப்தத்தை எழுப்பும்.
- வானத்தின் நிறம் மாறும்.
- இரண்டு சூரியன்கள் தென்படும்.
- இரண்டு கிரகணங்கள் ஏற்படும்.
- செயற்கை கோள்கள் பல செயலிழக்கும்.
- மதத்தை சார்ந்த அதிசய தூதுவர் ஒருவரின் வருகை இப்புவியில் மூன்று இடங்களில் தென்படும்.
- ஒரு பிரபல மதமானது, இது இறைவனின் வருகை என்று பிரகடனப்படுத்தும்.
- இப்புவியில் பல வியத்தகு அதிசயங்கள் மக்களிடையே எழும்பும்.
- பல அரசியல் மாற்றங்கள் உலக நாடுகள் முழுவதும் நடந்து முடியும்.
- கடலிருந்து அழிந்து போன பழமையான் ஒரு நாகரீக உலகம் வெளிவரும்.
- ஆங்காங்கே வானத்தில் பல ஊர்திகளை மக்கள் கண்களால் காணும் காட்சி தென்படும்.
- உலக வரலாற்றை புரட்டி போடும்படி இரு நாடுகளுக்கு இடையே ஒரு மிகப்பெரிய யுத்தம் நடைபெறுவதற்கான சூழல் ஏற்படும்.
- உலகமே கண்டு வியப்படையும் ஒரு அதிசயம் கடலின் நடுவே நடக்கும்.
இதுவே
கடவுளின் வருகை இப்புவியின் மீது நிகழும் சமயத்திற்கு முன்பாக இப்புவியில் தென்படும்
தீர்க்கதரிசன அறிகுறிகளாகும்.
இரண்டாம் தீர்க்கதரிசனம் எந்த அளவிற்கு சாத்தியம்
என்பதற்கு வரும் மாதத்தில் ஒரு நாள் மிகப்பெரிய கடல் சார்ந்த அழிவுச்சம்பவம் ஒன்று
நடைபெற உள்ளது, இதுவே அதற்கான அறிவிப்பாகும் அப்பொழுது தீர்க்கதரிசனத்தின் மீது மக்கள்
கொள்ளும் நம்பிக்கை அன்று “ஆகயத்தில் ஒளியாக அது பிராகசிக்கும்”……
--இன்னும் தொடரும்—
ஆசிரியர். ஸ்ரீ யோகேஸ்வரன்
குறிப்பு : இத்தொடரில்
வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் எற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை,
வருங்காலத்தை பற்றி விவாதிக்க அனைவருக்கும் உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல ! அவசியம்
இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும் ! இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே
இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது, இதை ஒரு கதைப்போல் படியுங்கள், உண்மை ஒரு நாள்
வெட்டவெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள் ஒளியாக பிரகாசிக்கும்...
No comments:
Post a Comment