Friday 28 July 2017

ஆகாயத்தில் ஒரு ஒளி (அத்தியாயம் - 2)
உண்மைகள் உறங்குவதில்லை (பகுதி 13)

உண்மைகள் உறங்குவதில்லை
(தீர்க்கதரிசனம் 13 -ம் பகுதி)

“உண்மைகள் உறங்குவதில்லை“ என்கிற இந்த வருங்கால தீர்க்கதரிசனப் பகுதியில் இன்று இடம் பெறும் தீர்க்கதரிசனப் பகுதி 13-ம் பகுதி ஆகும். இந்த 13-ம் பகுதி பல நிகழ்வுகளின் தொகுப்பு ஆகும். அவைகளைப் பற்றி விரிவாக இங்கு காண்போம்.


13-ம் தீர்க்கதரிசனத்தில் இன்று முதலாவதாக இடம் பெறும் குறிப்பு என்னவெனில் “நாடாளும் மன்னன் ஒருவனின் இராஜ்யம்“ அவன் கைகளை விட்டு விலகிச் செல்லும் என்றும், ரோம் நாட்டில் நடைபெறும் ஒரு பெரும் புரட்சி இதற்கு வித்தாக அமையும் என்று 13-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கு நமக்கு தெரிவிக்கின்றது. யுதர்களின் சாம்ராஜ்யம் ஆட்டம் காணும் அளவிற்கு இப்புரட்சி அமையும் என்று இந்த தீர்க்கதரிசனம் மீண்டும் சுட்டிக்காட்டுகின்றது.




    “நாகரீகம்“ வளர்ந்த நாடுகளில் இனி மக்கள் பஞ்சத்தால் பரிதவிக்கும் காட்சிகளை இனி உலகம் காண உள்ளதாகவும், எத்தோப்பியா இதில் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகும் என்று 13-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.


“இயேசுவின்“ வருகை இனி உலக நாடுகள் முழுவதும் அறிவிக்கப்பட உள்ளது என்றும், இச்செய்தி விரைந்து உலக மக்களை சென்று அடைய உள்ளதாகவும், இதற்கான முக்கிய அறிவிப்பு வரும் செப்டம்பர் மாதத்தில் நடக்க இருப்பதாகவும், அச்சமயத்தில் நாம் ஏற்கனவே வெளியிட்ட “ஆகாயத்தில் ஒரு ஒளி“ என்ற நமது வருங்கால தீர்க்கதரிசனப் பகுதியில் இடம் பெற்ற 27-ம் தீர்க்கதரிசனம் மெய்பட உள்ளதாக 13-ம் தீர்க்கதரிசனம் இங்கு ஒரு முக்கிய செய்திக்குறிப்பை நமக்கு தெரிவிக்கின்றது.


புதுமைகளுக்கு எப்பொழுதும் மக்கள் மத்தியில் வரவேற்பு இருப்பது போல, வரும் முக்கிய மாதமொன்றில் இப்பூமியில் இறை அதிசயம் ஒன்று நடைபெற இருப்பதாகவும், இந்த அதிசயம் நடைபெறும் சமயத்தில் உலக மக்கள் ஒரு விழாவை கொண்டாடிக் கொண்டிருப்பார்கள் என்றும், இதனைப் பற்றிய விஷயம் நாம் ஏற்கனவே வெளியிட்டுள்ள “ஆகாயத்தில் ஒரு ஒளி“ என்ற வருங்கால தீர்க்கதரிசனத்தில் நாம் குறிப்பிட்டுள்ள 37-ம் தீர்க்கதரிசனத்தில் உள்ளது என்று 13-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை இங்கே நமக்கு சுட்டிக்காட்டுகின்றது.



நமது இந்திய தேசத்தில் வரும் 3 மாதங்களுக்கு வடதேசம் முழுவதும் பூமி சார்ந்த இடர்பாடுகளும், கடும் பனிப்பொழிவுகளும், ஆறு முழுவதும் நீர் நிரம்பி ஒடும் காட்சிகளும் இடம்பெற உள்ளதாக 13-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கு தெரிவிக்கின்றது. சிரபுரஞ்சி, மேகாலாயா, டார்ஜிலிங், ஒரிஷா, கன்குவான், வடஹிமாலயா போன்ற பகுதிகள் கடும் சேதங்களை சந்திக்கும் என தீர்க்கதரிசனச் செய்திக்குறிப்புகள் தெரிவிக்கின்றன.



பர்மாவில் வரலாறு காணாத அளவிற்கு மழைநீரால் சேதங்கள் ஏற்பட இருப்பதாகவும், பர்மாவின் எல்லையோரத்தில் உள்ள இந்திய தேசத்தின் சில பகுதிகளும் இதனால் பாதிப்புக்குள்ளாகும் என்று 13-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது. மணிப்பூர் மிகுந்த கவனத்தில் கொள்ள வேண்டிய பகுதி என்று 13-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.


தமிழ்நாட்டில் ஏற்படும் பருவநிலை மாற்றம் கடலில் புதியதாக ஒரு புயல் உருவாதற்கான காரணமாக அமையும் என்றும் இப்புயலால் தமிழகத்தில் பலத்த சேதங்கள் ஏற்பட இருப்பதாக 13-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது. இதற்குமுன் வெளியிட்ட தீர்க்கதரிசனத்தில் இதற்கான விடைகள் உள்ளன என்று 13-ம் தீர்க்கதரிசனம் ஒரு குறிப்பை இங்கு சுட்டிக்காட்டுகின்றது.


கோவை மாவட்டத்தின் அருகே உள்ள ஒரு மலைத் தொடரில் ஒரு பேரதிர்வு உருவாக இருப்பதாகவும், இந்த அதிர்வினால் கோவை மாவட்ட மக்கள் பேரதிர்ச்சிக்கு ஆளாக நேரிடும் என்று 13-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தெரிவிக்கின்றது.


பழனி மலைக்கும், கொடைக்கானல் மலைக்கும் இடைப்பட்ட ஒரு மலைக்கிராமத்தில் ஒரு அதிசயம் நிகழ இருப்பதாகவும், இவ்வதிசயம் ஸ்ரீபோகர் என்ற சித்தரால் நடத்தப்படும் என்றும், இவ்வதிசயத்தை காண அப்பகுதி மக்கள் நெடுங்காலமாக காத்து உள்ளனர் என்றும் 13-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.


தமிழக உள் மாவட்டங்களில் வரும் வாரம் முதல் மழை பெய்யத் துவங்கும் என்றும், பல மாவட்டங்களில் மழையினால் மக்கள் பாதிப்புக்குள்ளாவார்கள் என்று 13-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு செய்திக்குறிப்பை இங்கு நமக்கு மீண்டும் நினைவூட்டுகிறது.


புதைபொருள் ஆய்வில் இனி தமிழகம் தனி ஒரு இடத்தை பிடிக்கும் என்றும், அது வரலாற்று சார்ந்த பல ஆய்வுகளின் கேள்விகளுக்கு விடை காண உதவும் என்று 13-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.

சென்னை மதுராந்தகம் பகுதியில் அமைந்துள்ள ஒரு ஏரியில் வியப்பான ஒரு நிகழ்வு நடக்க இருப்பதாகவும், அச்சமயம் சென்னையின் மையப்பகுதியில் பூமி சம்பந்தப்பட்ட ஒரு பெரிய நிகழ்வு நடக்க உள்ளதாக 13-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.

சென்னை மயிலாப்பூர் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய பகுதி என்றும், மக்கள் யாரும் எதிர்பாராத தருணத்தில் ஒரு அசம்பாவிதம் நடக்க இருப்பதாகவும் 13-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு 
குறிப்பை தருகின்றது.


கல்விக்கொள்கை ஒன்றில் தமிழக அரசும், மத்திய அரசும் இணைந்து ஒரு முக்கிய முடிவெடுக்கும் என்றும், இது மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு பாராட்டை பெரிதும் பெறும் என்றும், இச்சமயத்தில் நடிகர் ஒருவரின் அரசியல் பிரவேசம் நடக்கும் என்றும், அச்சமயத்தில் நமது “ஆகாயத்தில் ஒரு ஒளி“ என்ற வருங்கால தீர்க்கதரிசனத்தில் நாம் ஏற்கனவே வெளியிட்டுள்ள 43-ம் தீர்க்கதரிசனத்தில் உள்ள சில குறிப்புகள் உடனே நடக்கும் என 13-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை நமக்கு தெரிவிக்கின்றது.


தமிழக அமைச்சரவையில் பெரும் மாற்றங்கள் உருவாகும் காலமாக இக்காலம் இருக்கும் என்றும், அதே சமயத்தில் பல பெரிய, பெரிய IT நிறுவனங்கள் தற்போது மூடும் காலமாக இக்காலம் இருக்கும் என்று 13-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.

நடிகர் ஒருவரின் மரணம் தற்போது நிகழ உள்ளதாகவும், இது நடைபெறும் இக்காலகட்டத்தில் அரசியலில் பல புதிய மாற்றங்கள் ஏற்பட உள்ளதாக 13-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.


கடவுள், மனிதன் இருவருக்கும் உள்ள நெருக்கத்தை இன்றளவும் மக்கள் சமூகம் ஏற்காத ஒன்றாக இருக்கிறது என்றும், இது கட்டுக்கதை அல்ல. இது நிஜமான ஒன்றாகும் என நினைக்கும் அளவிற்கான ஒரு தெய்வீக நிகழ்வு தமிழகத்தில் நடக்க இருப்பதாகவும், அது நடக்கும் சமயத்தில் மக்கள் “உண்மைகள் உறங்குவதில்லை“ அது எப்பொழுதும் தனது நிஜத்தை இப்பூமியில் நிலை நாட்டிடும் என்று நினைக்கும்படி நிகழ்வுகள் நடக்க இருப்பதாக 13-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது. அதுவரை நாம் காத்திருப்போம்.

--உண்மைகள் தொடரும்--
ஆசிரியர். ஸ்ரீ யோகேஸ்வரன்

குறிப்பு :-

இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை. வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும். இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது. இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்டவெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள்ஒளியாக பிரகாசிக்கும். அன்று உறங்கும் உண்மைகள் வெளிப்படும்.

No comments:

Post a Comment