உண்மைகள் உறங்குவதில்லை
(தீர்க்கதரிசனம் 11-ம் பகுதி)
“உண்மைகள் உறங்குவதில்லை“ என்ற இந்த வருங்கால தீர்க்கதரிசனப் பகுதியில் இன்று நாம் காண உள்ள தீர்க்கதரிசனப் பகுதி 11-ம் பகுதியாகும். இதில் இடம் பெறும் குறிப்புகள் யாவும் பல்வேறு நிகழ்வுகளின் தொகுப்பாகும்.
11-ம் தீர்க்கதரிசனத்தில் இன்று முதலாவதாக நாம் காண இருப்பது, வருங்காலத்தின் நிலையை “காலக்கண்ணாடியாக“ நாம் விளக்கும் முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பே இப்பகுதியாகும். அதாவது உண்மைகள் உறங்குவதில்லை என்ற பகுதியில் நாம் ஏற்கனவே வெளியிட்டுள்ள 3-ம் தீர்க்கதரிசனத்தின் அனைத்து குறிப்புகளும் தற்போது நடக்கும் காலமாக உள்ளது என்றும், இது தவறாமல் நடக்கும் நிகழ்வுகள் என்பதை 11-ம் தீர்க்கதரிசனம் தீர்க்கமாக இங்கே குறிப்பிடுகின்றது.
மயிலாடுதுறையில் சித்தர் ஒருவரின் சமாதியில் அற்புதமான நிகழ்வு ஒன்று தற்போது நடக்க உள்ளதாகவும், அங்கே மாயவன் குடிகொண்டுள்ள ஒரு ஆலயத்திலும் ஒரு அதிசய சம்பவம் நடக்க உள்ளதாக 11-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.
இந்தியாவின் இறையாண்மையை பரிசோதிக்கும் அளவில் பாகிஸ்தானின் நிகழ்வுகள் தற்போது அதிகரிக்கும் என்றும், இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகளின் எல்லைகளில் உடனே போர் ஏற்படும் அபாய நிலை உருவாகிட உள்ளதாக 11-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.
சுனாமியின் பேரலை தாக்குதலால் ஏற்கனவே பாதிக்கப்பட்ட நாடுகள் அனைத்தும் மீண்டும் ஒரு சுனாமியின் தாக்குதலுக்கு ஆளாக உள்ளதாக ஒரு குறிப்பு செய்தி 11-ம் தீர்க்கதரிசனத்தில் சுட்டிக் காட்டுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை மாநகரில் இனி பல திடீர் திடுக்கிடும் சம்பவங்கள் நடக்க உள்ளதாகவும், மக்கள் கூடும் இடங்களை மிகுந்த கவனத்துடன் கண்காணிக்கப்பட வேண்டும் என்ற எச்சரிக்கையை 11-ம் தீர்க்கதரிசனம் இங்கு குறிப்பிடுகின்றது.
பாரதப் பிரதமரின் திடீர் பயணத்தில் ஒரு அரிய நிகழ்வு ஒன்று நடக்க உள்ளதாகவும், உலகத் தலைவர்களின் கவனம் தற்போது இந்தியா மீது திரும்பும்படியான ஒரு முக்கிய சம்பவம் நடக்க உள்ளதாக 11-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது.
தென்கைலாயம் என்று அழைக்கப்படுகின்ற ஒரு மலையில் திடீரென்று பேரதிர்வு ஒன்று ஏற்பட உள்ளதாகவும், இது தமிழ்நாட்டிற்கு போதாத காலமாக இருக்கும் என்பதற்கான முக்கிய அறிகுறியாக மக்கள் மனதில் எண்ண வேண்டும் என 11-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.
“சுடுகாடு, இடுகாடு“ என்று பொருள்படும் நிலப்பரப்புகளில் பல இன்னல்கள் நடந்து வருவதை தமிழக அரசு தற்போது கண்டறியும் என்றும், இச்சமயத்தில் மகாகொடிய மனம் படைத்த சாமியார் ஒருவன் தென் மாவட்டத்தில் காவல்துறையால் கைது செய்யப்படுவான் என்றும், அவனைப் பற்றிய பிண்னணியை ஆராயும் போது மக்கள் அச்சப்படும்படி மிகப்பெரிய இரகசியம் ஒன்று வெளியாகும் என்று 11-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகிறது.
போகர் சித்தரின் பிரவேசம் ஒன்று தற்போது நடைபெறும் என்றும், அவரைப் பற்றிய மிக, மிக அரிதான விஷயம் ஒன்று உலக தமிழ் மக்கள் அறியும்படியான நிகழ்வு ஒன்று தற்போது நடைபெற உள்ளதாகவும், இதனால் சித்தர்களின் மேல் இருந்த நம்பிக்கை மக்கள் சமுதாயத்திற்கு அதிகமாகிட உள்ளதாக 11-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.
மேருமலை, கைலாய மலை, பர்வத மலை இவற்றில் ஒரே சமயத்தில் அதிசய நிகழ்வுகள் வரும் டிசம்பர் மாதத்தில் நடைபெறும் என்றும், இறைவன் சிவனாரின் அற்புத காட்சிகளை உலக மக்கள் காணும்படியான ஒரு சம்பவம் நிச்சயம் நடக்கப் போவதாக 11-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகிறது.
திருவண்ணாமலையில் “விசிறி சாமியார்“ என்று அழைக்கப்பட்ட ஒருவரின் ஆன்மாவை மக்கள் பல இடங்களில் காணும்படியான ஒரு அரிய நிகழ்வு வரும் “கிரிவலம்“ அன்று நிகழப் போவதாக 11-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது.
இறைவன் ஒருவனே, அவன் ஜோதி வடிவானவன், அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்ற பேச்சுகள் எல்லாம் காணாமல் போய், இறைவன் பல வடிவானவன், அவனின் உருவம் பல நிலைகளைக் கொண்டது. அவனை காண்பது என்பது உண்மையான ஒன்று என மக்கள் பேசும்படியான பல சம்பவங்கள் இனி தமிழ்நாட்டில் நடக்க உள்ளதாக 11-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.
அன்னை சமயபுரத்தாளின் பிரவேசம் இப்பூமியில் இனி பல இடங்களில் மக்கள் காணும்படியான நெகிழ்வான பல சம்பவங்கள் இனி தமிழ்நாட்டில் நடக்க உள்ளதாகவும், அதற்கு அச்சாரமாக வரும் ஆடி மாதம் அதன் துவக்கமாக அமைய உள்ளதாக 11-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.
“சுந்தர்“ என்ற பட்டப்பெயர் கொண்ட ஒருவனின் வீண்ஜாலப் பேச்சால் ஒரு நிறுவனம் அவப்பெயருக்கு ஆளாக நேரிடும் என்றும், ஆவி, பரிசுத்தமானவன், வருகை என்ற பேச்சுக்கள் இனி அங்கு செல்லுபடியாகாது என்று 11-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.
“தேவகன்னி“ ஒருவளின் வருகை தற்போது பூலோகத்தில் நடக்க இருப்பதாகவும், அதனை உலக மக்கள் பலரும் காணும் அதிசய நிகழ்வுகள் பல இடங்களில் உடனே நடக்க உள்ளதாக 11-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை இங்கு மீண்டும் சுட்டிக் காட்டுகின்றது.
“ஆகாயத்தில் ஒரு ஒளி“ என்ற நமது வருங்கால தீர்க்கதரிசனத்தில் நாம் ஏற்கனவே வெளியிட்ட 24-ம் தீர்க்கதரிசனம் ஆரம்பமாகும் காலமாக வரும் ஆடி மாதம் அமைய உள்ளதாக 11-ம் தீர்க்கதரிசனம் ஒரு குறிப்பை நமக்கு நினைவூட்டுகிறது.
நமது நினைவுகளில் இனி “உண்மைகள் உறங்குவதில்லை“ என்ற தீர்க்கதரிசனங்கள் வலம் வரும் காலமாக தற்போது இருக்கும் என்றும் அதனை காண, நாம் அதுவரை காத்திருப்போம்.
--உண்மைகள் தொடரும்--
ஆசிரியர். ஸ்ரீ யோகேஸ்வரன்
குறிப்பு :-
இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை. வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும். இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது. இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்டவெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள்ஒளியாக பிரகாசிக்கும். அன்று உறங்கும் உண்மைகள் வெளிப்படும்.
No comments:
Post a Comment