Friday, 7 July 2017

ஆகாயத்தில் ஒரு ஒளி (அத்தியாயம் - 2)
உண்மைகள் உறங்குவதில்லை (பகுதி 10)

உண்மைகள் உறங்குவதில்லை
(10-ம் தீர்க்கதரிசனம் பகுதி)

    இன்று “உண்மைகள் உறங்குவதில்லை“ என்ற இந்த தீர்க்கதரிசனப் பகுதியில் இடம் பெறுவது 10-ம் தீர்க்கதரிசனம் ஆகும். இதில் இடம் பெறும் குறிப்புகள் யாவும் முக்கியத்துவம் வாய்ந்த வருங்கால நிகழ்வுகளின் தொகுப்பே இதுவாகும்.


    10-ம் தீர்க்கதரிசனத்தில் இன்று முதலாவதாக நாம் காண உள்ள தீர்க்கதரிசனம் என்னவெனில் “வானில்“ ஆளில்லாத ஒரு விமானம் நமது இந்திய வான் எல்லையில் திடீரென்று வட்டமிடும் என்றும், அதனை நமது ராணுவம் கண்டறிய முற்படும் சமயத்தில் அது திடீரென்று மறைந்துவிடும் என்றும், இது சமீபகால நிகழ்வாக நடக்க இருப்பதாகவும், இச்சம்பவம் பலமுறை இந்திய தேசத்தின் எல்லைப் பகுதியில் நடக்கும் என்றும், இது இந்திய மக்களை அச்சுறுத்தும் ஒரு நிகழ்வாக அமைய உள்ளதாக 10-ம் தீர்க்கதரிசனம் இங்கு நமக்கு முக்கிய குறிப்பை தருகின்றது.



   
    “காலத்தால் அழிக்க முடியாத வரலாற்று நாயகன் முதலாம் இராஜராஜசோழனின் இரகசியம் ஒன்று மக்கள் அறியக்கூடிய வரலாற்று இரகசியம் ஒன்று பூமி திரட்டாக தமிழக மண்ணில் தோண்டி எடுக்கப்பட உள்ளதாகவும், அது மக்களால் தெரிந்துகொள்ளும் சமயத்தில் நாம் ஏற்கனவே வெளியிட்ட “ஆகாயத்தில் ஒரு ஒளி“ என்ற வருங்கால தீர்க்கதரிசனத்தில் இடம் பெற்றுள்ள 17-ம் தீர்க்கதரிசனத்தில் குறிப்பிட்டுள்ள சில குறிப்புகள் நடக்க துவங்கும் காலமாக இருக்கும் என்று 10-ம் தீர்க்கதரிசனத்தில் மற்றொரு குறிப்பு நமக்கு இதனை தெரிவிக்கின்றது.


    அன்னை உமையவள் குடிகொண்டுள்ள ஒரு ஆலயத்தில் மகா அதிசயம் ஒன்று தற்போது நடைபெறும் காலம் இதுவென்று மக்கள் அறியும்படி ஒரு நல்ல சம்பவம் திடீரென்று நடக்கும் என்றும், அந்த ஆலயம் அமைந்துள்ள இடத்தில் ஒரு ஆறு நீண்டு ஓடும் என்றும் அந்த ஆற்றின் கரை ஓரத்தில் வரலாற்று சிறப்புமிக்க ஒரு விஷ்ணு ஆலயம் தற்போது அமைந்துள்ளது என்று 10-ம் தீர்க்கதரிசனத்தில் மற்றொரு குறிப்பு நமக்கு இச்செய்தியை சுட்டிக் காட்டுகின்றது.
 

    ரஷ்ய நாட்டில் ஏற்படும் ஒரு கோர விபத்தால் பல்லாயிரக்கணக்கான மக்கள் மரணத்தை சந்திக்க இருப்பதாகவும், இது திட்டமிட்ட சதிச் செயலாக இருக்கும் என்றும் 10-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை இங்கு பதிவு செய்கிறது.
 

    சீன தேசத்தின் அத்துமீறலை பல நாடுகள் தற்போது கண்டிக்கும் என்றும், இந்திய சீன தேசத்தின் பேச்சுவார்த்தையில் பல முட்டுகட்டைகள் உருவாகும் என்றும், இதில் பாகிஸ்தான் நாட்டின் சதி அம்பலமாகும் என்றும்,  இந்தியா, சீனாவிற்கு ஒரு தக்க பதிலடி கொடுக்கும் என்றும், இச்சமயத்தில் 61-ம் தீர்க்கதரிசனமான ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற வருங்கால தீர்க்கதரிசனத்தில் இடம்பெற்றுள்ள ஒரு முக்கிய நிகழ்வு அப்போது நிகழக்கூடும் என்று 10-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.

 

    இந்திய தேசத்தின் வட பகுதியில் திடீரென்று ஒரு மிகப்பெரிய பூமி அதிர்வு நடக்க உள்ளதாகவும், இது இந்த ஆண்டில் டிசம்பர் மாதத்தில் நடந்து முடியும் என்றும், அப்பொழுது பல மக்கள் பல இன்னல்களுக்கு ஆளாவார்கள் என்று 10-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.

 

    “சுனாமி என்ற ஒரு நிகழ்வு தற்போது நிகழக்கூடியது என்றும், இது இந்து மகா சமுத்திரத்தில் உருவாக கூடியதாக உள்ளது என்றும், இது நிகழ்வதற்கு முன் “சுமித்ரா“ தீவில் ஒரு பயங்கர நிலநடுக்கம் உருவாகும் என்றும், அது நிகழ்ந்த 8 மணி நேரத்தில் இந்துமகாசமுத்திரத்தில் சுனாமி உருவாக உள்ளதாக 10-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.

 

    மகா தவசியான ஸ்ரீஅகத்திய மகாமுனிவரின் அவதாரப் பெருவிழாவை கொண்டாடும் சமயத்தில் தென்தமிழகத்தின் சிவாலயம் ஒன்றில் வானிலிருந்து ஒரு ஒளிபிழம்பு புறப்பட்டு அதன் கருவறையின் மீது விழும் அதிசய நிகழ்வை ஒரு பௌர்ணமி அன்று தமிழக மக்கள் காணும் அதிசய நிகழ்வு தற்போது நடக்க உள்ளதாகவும், இது “பிரபஞ்சம் வியக்கும் அதிசயமாக“ மக்கள் பேசிக் கொள்வார்கள் என்றும், அதே சமயத்தில் திருச்சி சமயபுரத்தில் ஒரு திடுக்கிடும் சம்பவம் நடக்கும் என்றும், அன்றைய தினத்தில் நாம் ஏற்கனவே வெளியிட்டுள்ள “ஆகாயத்தில் ஒரு ஒளி“ என்ற தீர்க்கதரிசனப் பகுதியில் இடம் பெற்றுள்ள 58-ம் தீர்க்கதரிசனத்தில் குறிப்பிட்ட ஒரு நிகழ்வு நடக்க உள்ளதாக 10-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.
 

    எல்லையில்லாத ஆனந்தத்தில் மக்கள் திளைத்திருக்கும்படியான ஒரு தெய்வீக நிகழ்வு ஒன்று சென்னையில் புறப்பகுதியில் உள்ள ஒரு  மலைக்குன்றில் நடக்க உள்ளதாகவும், அந்த மலைக்குன்று விமானம் ஓடும் பகுதியில் இடம் பெற்றுள்ள மலைக்குன்று என்று 10-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.

    சினிமா நடிகர்களுக்கு இது போதாத காலமாக மீண்டும் அமைய உள்ளதாகவும், அதுவும் இரு மூத்த நடிகர்களுக்கு இது போதாத காலமாக அமைய உள்ளதாக 10-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது. நகைச்சுவை நடிகர் ஒருவரின் மரணம் தற்போது இயற்கையாக நடக்க இருப்பதாகவும், அது நடந்து முடியும் 7-ம் தினத்தில் அரசியல்வாதியின் மரணம் ஒன்று நிகழ உள்ளதாக 10-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.


    செவ்வாய் கிரகத்திலிருந்து ஒரு சமிக்கை இந்திய விஞ்ஞானிகளுக்கு வரும் என்றும், இது உலக வரலாற்றில் இந்திய விஞ்ஞானிகளுக்கு கிடைக்க கூடிய மிகப்பெரிய வான் சம்பந்தப்பட்ட ஆய்வில் ஒரு மைல்கல்லாக அமையப் போகிறது என்றும், இதனை தொடர்ந்து வான் மண்டலத்தில் நமது இந்திய விஞ்ஞானிகளின் தேடுதல் ஒரு புதிய பரிணமாத்திற்கு கூட்டிச் செல்ல உள்ளதாக 10-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை இங்கு பதிவு செய்கிறது.


    உலகப் புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகர் ஒருவரின் மரணத்தில் பல திடுக்கிடும் சம்பவங்கள் மர்மங்களாக இடம் பெற்று இருப்பதை உளவு நிறுவனம் கண்டறிந்து வியப்படையும் என்றும், அவரின் இரகசிய அறையில் விஞ்ஞானமே வியக்ககூடிய அளவிற்கு ஒரு பொருள் இடம் பெற்றிருக்கும் என்றும், இதன் வழியாக உலக மக்கள் இதுவரை தேடும் புதிரான ஒரு புதிர் விஷயத்திற்கு இது விடைதேடும் ஒரு தூண்டிலாக அமையப் போகிறது என்று 10-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை இங்கு தெரிவிக்கிறது.


    “அம்மா“ என்ற அடைமொழிக்கு உரிய ஒருவரின் இரகசியங்கள் தற்போது இணையதளத்தில் உலாவ வரும் என்றும், இதனை மக்கள் கண்டு அதிர்ச்சி அடைவார்கள் என்றும், அதே சமயத்தில் யாரும் எதிர்பாராத அளவில் ஒரு செய்தி ஊடகம் அவரின் இரகசியத்தை அம்பலபடுத்தும் ஒரு நிகழ்வு உடனே நடக்க உள்ளதாக 10-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.


    “கல்பாக்கம்“ கவனத்தில் கொள்ள வேண்டிய பகுதி என்றும், அங்கு அருகே வசிக்ககூடிய கிராம மக்களிடையே ஒரு விசித்திரமான உலோகத்தின் பயன்பாடு கண்டறியப்படும் என்றும், இதனை உலகமே கண்டு ஆச்சரியப்படும் நிகழ்வு ஒன்று தற்போது நடக்க உள்ளதாக 10-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தெரிவிக்கின்றது.

    “முற்றம்“ கடல்பகுதி, காவேரிப்பட்டணம், சாத்தனூர், பூலாம்பட்டி, நெருப்பூர், அந்தியூர், பரிசல்பாடி, கண்ணம்பாடி இந்த கிராமங்களில் பல வினோத சம்பவங்கள் இனி நடக்க உள்ளதாகவும், மக்கள் பீதியில் ஆழ்ந்து போகும் பல சம்பவங்கள் இனி நடக்க உள்ளதாக 10-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.


    ஆதாம், ஏவாள் வாழ்ந்த நிலப்பரப்பை வரும் 2018-ம் ஆண்டில் உலகம் அறிந்து கொள்ளும் என்றும், அதன் நிலப்பரப்பில் பல அதிசய கல்வெட்டுகள், கருவிகள் கண்டெடுக்கப்படும் நிகழ்வு ஒன்று நடக்க உள்ளதாக 10-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது. இச்செய்திக்கும் இலங்கைக்கும் மிக, மிக நெருக்கம் உள்ளதாக 10-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.


    “சத்தியயுகத்தின் காலப் பயணம் தற்போது துவங்கி 60 நாட்கள் ஆயிற்று என்றும், இந்த சத்திய யுகத்தின் யுகப்புரட்சி ஒன்று இந்திய மண்ணில் தற்போது நடக்க உள்ளதாகவும், இதனை உலக மக்கள் வட நாட்டில் நடக்கும் மகா கும்பமேளா எனும் விழாவில் நடக்கவிருக்கக்கூடிய மர்மம் நிறைந்த ஒரு சம்பவத்தின் வாயிலாக அறிய முடியும் என்று 10-ம் தீர்க்கதரிசனம் இங்கு ஒரு அரிய குறிப்பை வெளிப்படுத்துகின்றது.

    “பிரபஞ்சம் வியக்கும் அதிசயங்களை“ இனி மக்கள் காண்பார்கள் என்றும், அது உண்மைகள் உறங்குவதில்லை என்ற நமது வருங்கால தீர்க்கதரிசனத்திற்கு மணி மகுடமாக விளங்கிடும் என்றும், அதுவரை நாம் காத்திருப்போம் என்று இப்பகுதி நமக்கு நிகழ உள்ள நிகழ்வுகளை சுட்டிக்காட்டுகின்றது.

 --உண்மைகள் தொடரும்--
ஆசிரியர். ஸ்ரீ யோகேஸ்வரன்

குறிப்பு :-

இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை. வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும். இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது. இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்டவெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள்ஒளியாக பிரகாசிக்கும். அன்று உறங்கும் உண்மைகள் வெளிப்படும்.

No comments:

Post a Comment